Wednesday, 5 November 2014

குணப்படுத்த முடியாத 51வியாதிகள்......

மரியாதைக்குரியவர்களே,
                    வணக்கம்.
            

              நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம். மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டம்   ஷெட்யூல் J-யில் ஆங்கில மருத்துவம் வைத்தியம் பார்க்கக் கூடாது என்று வரையறுக்கப்பட்டுள்ள 51 நோய்களின் விவரம்.....
“Drugs and Cosmetics Act, 1940, 1945, 1995, ‘Schedule J’ contains a list of 51 disease and ailments (by whatever name described) which a drugh may not purport to prevent or cure or make claims to prevent or cure”.

‘மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டம்’ 1940ல் இயற்றப்பட்டு பின்னர் 1945, 1995ல் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தில் ஷெட்யூல் - ‘J’ என்ற பிரிவின் கீழ் 51 வகை ஆங்கில மருத்துவத்தின் வியாதிகள் எழுதப்பட்டுள்ளன. இந்த வியாதிகள் ஆங்கில மருத்துவத்தின் மருந்துகளைக் கொண்டு குணப்படுத்த முடியும்!’ என்றோ, ‘மருந்துகளைக் கொண்டு குணப்படுத்திக் காட்டுகிறேன்!’ என்றோ கூறுதல் கூடாது என்று எச்சரிக்கிறது.                               உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுரையின் பேரில் நமது அரசாங்கமும் தகுந்த எச்சரிக்கையுடன் ஆங்கில மருந்துகளை ‘மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டத்தின்’, பிடியில் ஷெட்யூல் -J-யில் ஆங்கில மருத்துவம் வைத்தியம் பார்க்கக் கூடாது என்று 51 நோய்கள் அடங்கிய பட்டியலைச் சேர்த்திருக்கிறது.
                  ஷெட்யூல் J-யில் ஆங்கில மருத்துவம் வைத்தியம் பார்க்கக் கூடாது என்று வரையறுக்கப்பட்டுள்ள 51 நோய்களின் விவரம் வருமாறு.

1. எய்ட்ஸ்

2. நெஞ்சுவலி

3. ‘அப்பெண்டிஸைட்டிஸ்’ என்னும் குடல் வால் நோய்

4. இருதய இரத்தக் குழாய்களில் அடைப்பு

5. தலை வழுக்கை

6. கண்பார்வை அற்ற நிலை

7. ஆஸ்துமா

8. உடலில் தோன்றும் கட்டிகள் முதலாக புற்றுநோய் வரை

9. கண்புரை

10. தலைமுடி வளர, நரையை அகற்ற

11. கருவில் வளரும் குழந்தையை ஆணாகவோ, பெண்ணாகவோ மாற்றுவோம் என்று கூறுவது.

12. பிறவிக் கோளாறுகள்

13. காது கேளாமை

14. நீரிழிவு நோய்

15. கர்ப்பப் பை சம்பந்தமான அனைத்துக் கோளாறுகள்

16. வலிப்பு நோய் - மன நோய்கள் அனைத்தும்

17. மூளைக்காய்ச்சல்.

18. உடல் நிறம் கருப்பாக இருப்பினும் சிகப்பாக்குதல்.

19. மார்பக வளர்ச்சிக்கு

20. புரையோடிய புண்

21. மரபணு நோய்கள்

22. க்ளாகோமா எனும் கண்வலி நோய்

23. கழுத்து (தைராய்டு) வீக்கம்

24. ஹெர்னியா எனும் குடலிறக்க நோய்

25. அதிக மற்றும் குறைவான இரத்த அழுத்தம்

26. விரை வீக்கம்

27. பைத்தியம்

28. ஞாபக மறதி, ஞாபக சக்தியை அபிவிருத்தி செய்ய.

29. குழந்தையின் உயரத்தைக் கூட்ட.

30. சாதாரணமாக ஏற்படும் கண்பார்வைக் குறைபாடுகள் கிட்டப்பார்வை, தூரப்பார்வை.

31. ஆண் உறுப்பு வளர்ச்சி, வீரியம்.

32. பற்களை உறுதிப்படுத்த என்று, கால்ஷியம் மருந்துகள் மூலமாக வைத்தியம் பார்ப்பது.

33. மஞ்சள் காமாலை, கல்லீரல் மர்ம நோய் (ஹெபடைட்டிஸ்), மற்றும் கல்லீரல் சம்பந்தப்பட்ட எந்த நோய்களும்

34. இரத்தப் புற்றுநேரய்.

35. வெண் குஷ்டம்

36. உடலுறவில் வீரியம் அதிகப்படுத்துதல்.

37. மூளை வளர்ச்சிக்குறைவு.

38. மாரடைப்பு நோய்

39. குண்டான உடம்பு மெலிய

40. பக்க வாதம்

41. உடம்பு முழுவதும் நரம்பு நடுக்க நோய்

42. மூல நோய் மற்றும் பவுத்திரம்

43. வாலிப சக்தியை மீட்க

44. குறைந்த வயதில் முதிர்ச்சியடைந்த தோற்றம்

45. குறைந்த வயதில் தலை நரை

46. ரூமாட்டிக் இருதய நோய்

47. ஆண்மைக்குறைவு, விரைவில் ஸ்கலிதம்

48. கழுத்து வலி, மற்றும் முதுகுத் தண்டில் ஏற்படும் அனைத்து வலிகளும்

49. திக்குவாய்

50. சிறுநீரகக் கற்கள், பித்தப்பை கற்கள், சிறுநீர்ப் பை கற்கள்

51. காலில் இரத்த நாளங்கள் வீக்கம் அடைந்து புடைத்துக் காணப்படுதல்.

                     ஆக, மேற்கண்ட இந்த ஷெட்யூல்-J-யில் பட்டியலிடப்பட்டுள்ள இந்த 51 வியாதிகளுக்கும் ஆங்கில மருத்துவம் தங்கள் மருந்துகளால் வைத்தியம் அளித்து வருவது குற்றச்செயல் என்று அரசாங்கம் சட்டப்பூர்வமாக எச்சரித்துள்ளது. இந்திய மருத்துவச் சங்கமும் (IMA) தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சிலும் (TMC) ஷெட்யூல் - J பற்றி பொதுமக்களுக்கு விளக்க வேண்டும்.  
         இன்னும் தொடரும் என அன்பன்...

                   

                 

தங்கம் ஆபரணத்திற்கான தர நிர்ணய முத்திரை விவரம்.

மரியாதைக்குரியவர்களே,
                       வணக்கம்.

                     நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
 பியூரோ ஆப் இந்தியன் ஸ்டேண்டேர்டு BIS - BUREAU OF INDIAN STANDARDS  என்னும் இந்திய தர நிர்ணய அமைவனத்தின் தங்கம்,வெள்ளி போன்ற ஆபரணத்திற்கான தரச்சான்று வழங்கும் தரநிர்ணய முத்திரை பற்றி காண்போம்.தங்கம் ஆபரணத்திற்கு BIS - HALLMARK  என்னும் தரச்சான்று முத்திரை வழங்கப்படுகிறது.இது ஐந்து முத்திரைகளைக்கொண்டு இருக்க வேண்டும்.இந்த ஐந்து முத்திரைகளில் ஒன்று குறைந்தாலும் தரச்சான்று பெற்றதாக கருதமுடியாது.

 (1)BIS Mark - LOGO -இந்திய தர நிர்ணய அமைவனத்தின் முத்திரை

(2)Fineness Grade -தங்கத்தின் தூய்மைத் தன்மை (நேர்த்தி தன்மை)
(அ) purity carat என்று பதிவிட்டிருந்தால் -24 காரட் தங்கம் எனவும்,
(ஆ) 958 என்று பதிவிட்டிருந்தால் 23 காரட் தங்கம் எனவும்,
(இ) 916 என்றால் 22காரட் தங்கம் எனவும்,
(ஈ) 875என்றால் 21 காரட் தங்கம் எனவும்,
(உ) 750 என்றால்18காரட் தங்கம் எனவும்,
(ஊ) 708என்றால் 17காரட் தங்கம் எனவும்,
(எ) 585 என்றால்14 காரட் தங்கம் எனவும்,
(ஏ) 417 என்றால் 10காரட் தங்கம் எனவும்,
(ஐ) 375 என்றால் 9 காரட் தங்கம் எனவும்,
(ஒ) 333 என்றால் 8காரட் தங்கம் எனவும் தெரிந்துகொள்ளுங்க.,

(3) Assaying & Hallmark Centre's Mark - ஹால்மார்க் மையத்தின் முத்திரை

(4)Year of Marking  - முத்திரையிடப்பட்ட ஆண்டுக்கான  குறியீடாக ஆங்கில எழுத்து பொறிக்கப்பட்டிருக்கும். அதாவது
  A எழுத்து பதிவிட்டிருந்தால் -2000 வது ஆண்டினையும், 
B எழுத்து-2001 வது ஆண்டையும், 
C எழுத்து-2002 வது  ஆண்டையும், 
D எழுத்து-2003 வது ஆண்டையும், 
E எழுத்து-2004 வது ஆண்டையும், 
F எழுத்து-2005 வது ஆண்டையும், 
G எழுத்து-2006 வது ஆண்டையும்,
 H எழுத்து-2007 வது ஆண்டையும்,
 I எழுத்து-2008 வது ஆண்டையும், 
J எழுத்து-2009 வது ஆண்டையும், 
K எழுத்து-2010 வது ஆண்டையும், 
L எழுத்து-2011 வது ஆண்டையும், 
M எழுத்து-2012 வது ஆண்டையும்,
 N எழுத்து-2013 வது ஆண்டையும், 
O எழுத்து-2014 வது ஆண்டையும்,
 P எழுத்து-2015 வது ஆண்டையும், 
Q எழுத்து-2016 வது ஆண்டையும், 
R எழுத்து-2017 வது ஆண்டையும், 
S எழுத்து- 2018 வது ஆண்டையும்,
T எழுத்து-2019 வது ஆண்டையும்,
U எழுத்து-2020 வதுஆண்டையும், 
V எழுத்து-2021 வதுஆண்டையும்,
 W எழுத்து-2022 வது ஆண்டையும்,
 X எழுத்து-2023 வது ஆண்டையும், 
Y எழுத்து-2024 வது ஆண்டையும், 
Z எழுத்து- 2025 வது ஆண்டையும். 
               தெரிவிக்கிறது என்பதைத்  தெரிந்து கொள்ளுங்க.

(5) jeweller's Identification Mark -ஆபரண விற்பனையாளரின் அடையாள  முத்திரை
ஆக மொத்தம்  ஐந்து அடையாளங்கள் இருக்க வேண்டும்.
 இன்னும் தொடரும்....
என சமூக நலனில் 
அக்கறையுள்ள அன்பன்,

                   
      

BIS - இந்திய தர நிர்ணய அமைவனம்

மரியாதைக்குரியவர்களே,
                வணக்கம். 
          

                     நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
BIS -  BUREAU OF INDIAN STANDARDS
 இந்திய தர நிர்ணய அமைவனம் என்பது நுகர்வோர் நலன்,உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் ஆளுமைக்குட்பட்ட ஒரு இந்திய தர நிர்ணய அமைப்பு ஆகும்.
         இதன்அதாவது BIS-ன் தலைவராக நுகர்வோர் நலன்,உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர்  இருப்பார்.இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 1947 இல் தொழிற்துறையில் நாடு முன்னேற்றம் அடைய இந்திய தர நிர்ணய முறையை  இந்திய அரசு அமல்படுத்தியது.  இதன் பணி இந்திய நுகர்வுப்பொருட்களின் (1)தரத்தை நிர்ணயம் செய்வது.(2) பொருட்களின் தரத்திற்க்கேற்ப தக்க சான்று வழங்குவது.(3) பொருட்களின் தர மதிப்பை ஒழுங்குபடுத்துவது ஆகும்.
 குறிக்கோள்;
  உற்பத்திப்பொருட்களின் தரத்தை நிர்ணயம் செய்வதிலும்,பொருட்களின் தரத்தை மதிப்பிடலிலும்,பொருட்களுக்கு தரச்சான்று வழங்குவதிலும் இணக்கமான முன்னேற்றம் பெறுதல்..
          பொருட்களின் தர நிர்ணயத்திற்கும்,பொருட்களின் தரக்கட்டுப்பாட்டிற்கும் நம்பிக்கை ஏற்படுத்துதல்.
           பொருட்களின் தர மதிப்பிற்க்கேற்ப தேசிய வியூகம் உருவாக்கி பொருட்களின் உற்பத்தியிலும்,ஏற்றுமதியிலும் முன்னேற்றம் காணுதல் ஆகும்.இன்னும் தொடரும் என,
 என்றும் சமூக நலப்பணியில் உங்கள் அன்பன்...

  

கலப்படம் தடுப்பிற்கு அரசிற்கு உள்ள கடமைகள்.

மரியாதைக்குரியவர்களே,
                     வணக்கம். 

                நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்..உணவுக்கலப்படம் தடுப்பதில் அரசாங்கத்திற்கு உள்ள கடமைகள் பற்றி காண்போம்.
 (1)உபயோகிப்பாளர்களுக்கு சுகாதாரமான மற்றும் கலப்படமில்லாத உணவுகளையும் , தரமான பொருட்களையும்,நிறைவான சேவையினையும் வழங்கும் பொறுப்பும் கடமையும் அரசாங்கத்திற்கு உள்ளது.
(2)நுகர்வோர் நலன்,உணவு மற்றும் பொதுவிநியோகத்திறை,சுகாதாரத்துறை,தரச்சான்று வழங்கும் துறை,கலப்படம் தடுப்பு பிரிவு உட்பட அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் தனது கடமை மற்றும் பொறுப்பு பற்றிய உணர்வு வேண்டும்.இதுபோன்ற சேவையினை தன் வாழ்நாளில் கிடைத்த வாய்ப்பாக எண்ணி,மக்கள் பணி செய்ய வேண்டும்.
(3)சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய மக்கள் மீதான அக்கறை வேண்டும்.சமுதாயக்கடமை உணர்வு வேண்டும்.
(4)சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறிப்பிட்ட இடைவெளியில் பொருட்களின் தரத்தை சோதிக்க வேண்டும். அவ்வப்போது கண்காணிக்க வேண்டும்.
(5)நாட்டின் சுகாதாரக்குறியீடுகளை கவனத்தில் கொண்டு பொருட்களின் தரத்தை சோதிக்க மாவட்டங்கள் தோறும் அல்லது தேவைக்கேற்ப வட்டங்கள் தோறும் சோதனைக்கூடங்களை நிறுவிஆய்வு மேற்கொள்ள  வேண்டும்.
(6)பேரம் படியாததால் வழக்கு தொடுப்பதை தவிர்த்து - முறைப்படி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(7)குறைபாடுள்ள பொருட்கள் கலப்படம் செய்யப்பட்ட பொருட்கள் கண்டறிந்தால் உடனே வழக்கு தொடுத்து கடும் தண்டனை கொடுக்க வேண்டும்.
(8) நுகர்தலுக்கேற்ப பகிர்தலை சமன்படுத்த வேண்டும்.அதற்கான நியாயமான கடைகளை வணிக நிறுவனங்களை உருவாக்க வேண்டும்.
(9) விருப்பப்படும் அரசு சாரா தன்னார்வ  அமைப்புகளுக்கு உரிய ஊக்கமளித்து சமூகப்பணியாற்ற அனுமதி கொடுக்க வேண்டும்.
(10) உணவு மற்றும் பொருட்கள் பற்றிய தரச்சான்று முத்திரைகள் பற்றிய விழிப்புணர்வுக் கையேடு அச்சடித்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். 
(11) கலப்படம் பற்றிய விழிப்புணர்வுப்பிரச்சாரங்கள்,கலைநிகழ்ச்சிகள்,தெருமுனைப்பிரச்சாரங்கள்,துண்டுப்பிரசுரங்கள் அச்சடித்து விநியோகிக்க வேண்டும்.அவ்வாறு செயல்பட ஆர்வமுள்ள அமைப்புகளுக்கு ஆதரவு கொடுத்து ஊக்கமளிக்க வேண்டும்.(எங்களைப்போன்ற ஆர்வலர்களை தடை செய்வது?வருந்தவேண்டிய விசயம்)
 இன்னும் தொடரும் 
என சமுக நலனில் அக்கறையுள்ள 
                                     அன்பன்.......
   

கலப்படத்திலிருந்து நம்மை காப்பது எப்படி?

மரியாதைக்குரியவர்களே,
                    வணக்கம்.
     

   நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம். கலப்படத்திலிருந்து நம்மை காத்துக்கொள்வது பற்றி காண்போம்.
 மருந்தே விஷமானால் மனித உடல் படும்பாடு?இதை எப்படி விவரிப்பது???..
அதனால்தாங்க,
(1)நாம் விழிப்பாக இருந்தால் மட்டுமே கலப்படத்தை ஒழிக்க முடியும்,
(2)நமது எச்சரிக்கையால் போலிகளை ஒழிக்க முடியும்..
(3)தரமான பொருட்களை நேர்மையான வணிகர்களிடம் வாங்க வேண்டும்.
(4)நேர்மையான வணிகர்களை தேர்வு செய்து பாராட்டுவிழா எடுக்க வேண்டும்.
(5)நுகர்வோர் மற்றும் வணிகர் இணைந்த கருத்தரங்கு நடத்தி விவாதிக்க வேண்டும்.
(6)உபயோகிப்பாளர்களே குழுவாக இணைந்து உற்பத்தியாளர்களிடம் நேரில் சென்று பொருட்களை வாங்கலாம்.
(7)அரசு நிர்வாகிக்கும் சிந்தாமணி போன்ற கூட்டுறவுக்கடைகளில் பொருட்களை வாங்கலாம்.
(8)பருவகாலங்களில் எளிதாக கிடைக்கும் பொருட்களை மொத்தமாக வாங்கலாம்.
(9)புதிய வணிக நிறுவனங்களை ஏற்படுத்தி நமக்குள்ளேயே வணிகம் செய்துகொள்ளலாம்.இதனால் நம் பகுதி இளைய சமூகத்திற்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கலாம்.
(10)பள்ளிகளிலும்,கல்லூரிகளிலும் மாணவ,மாணவிகளுக்கு  கலப்படம் பற்றிய விழிப்புணர்வு கொடுத்து மக்களிடையே பரப்பலாம்.
(11)அரசு சாரா தன்னார்வ அமைப்புகளுக்கு ஊக்கமளித்து கலப்படத்தின் தீமைகளை விளக்கிடவும்,உபயோகிப்பாளர்களை பாதுகாத்திடவும் உதவ கோரலாம்.
(12)நமக்கும் சமுதாயக்கடமை உணர்வு வேண்டும்.
(13)கண்கவரும் வண்ணங்களிலிருந்து விழிப்புணர்வு பெற்று உண்மைநிலை ஆராயவேண்டும். 
        விழிப்புணர்வு கட்டுரை  இன்னும் தொடரும்...
 என அன்பன்..
                  

உணவு கலப்படத்தால் நுகர்வோர் அனுபவிக்கும் துன்பங்கள்

மரியாதைக்குரியவர்களே,
              வணக்கம்.
                

                      நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கதிற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
                             உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வதால் வியாபாரிகளுக்கு அதிக இலாபம் கிடைக்கிறது.ஆனால் உபயோகிப்பாளர்களுக்கு ????????
 கலப்பட உணவுப்பொருட்களால் உடல்நலக்குறைவு ஏற்படுகிறது.கல்லீரல்,கணையம்,இதயம்,மண்ணீரல்,தண்டுவடம்,நரம்புமண்டலம்,தண்டுவடம்,
 இரத்தகுழாய்,சுவாசக்குழாய்,உணவுக்குழாய்,குடல்,வயிறு,இரைப்பை,சிறுநீரகம் போன்ற அனைத்து உறுப்புகளும் பாதிக்கப்படுகின்றன.புற்றுநோய் ஏற்படுகிறது.பார்வைக்குறைவு,பார்வைஇழப்பு ,மூளை பாதிப்பு,எலும்பு சம்பந்தப்பட நோய்,நரம்பு சம்பந்தப்பட்ட நோய்,முடக்குவாதம்,தோல் சம்பந்தப்பட்ட நோய்,காமாலை,பக்கவாதம்,கருச்சிதைவு,காமாலை,வைரஸ் காய்ச்சல்,டைபாய்டு என உடலுக்கு பல்வேறு நோய்களை கொடுக்கிறது. துன்பங்களை தருகிறது.சுகாதாரக்கேடு உண்டாகிறது.வீடுகளிலும்,மருத்துவமனைகளிலும் முடங்கிக்கிடக்கும் அவலநிலை ஏற்படுகிறது.உழைப்புக்காலம் பாதிக்கிறது.பொருளாதாரம் சிதைகிறது.தரமற்ற பொருட்களால் பணவிரயம் ஏற்படுகிறது.உழைப்பு வீணாகிறது.அலைச்சல் கொடுக்கிறது.உற்பத்தியை பாதிக்கிறது.முன்னேற்றத்தை பாதிக்கிறது.தரம்குறைந்த சேவைகளால் மன உளைச்சல் ஏற்படுகிறது.வேதனையும் துன்பமும் ஏற்படுகிறது.நோக்கமும்,குறிக்கோளும் தடுக்கப்படுகிறது.
இதனால் நாட்டின் முன்னேற்றம் தடுக்கப்படுகிறது.நாட்டின் பொருளாதாரமும் பாதிக்கப்படுகிறது. சுகாதாரக்கேடு உண்டாகிறது.
 அடுத்த பதிவில் இன்னும் தொடரும் 
                                                     என அன்பன்.
 

உணவுப்பொருட்களில் கலப்படம் செய்யக் காரணமும் விளைவும்.

மரியாதைக்குரியவர்களே,
                            வணக்கம்.

                           நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம். உணவுப்பொருட்களில் கலப்படம் ஏன் செய்கிறார்கள்? 
இதனால் யாருக்கு என்ன ஆதாயம்?
யார் மிகவும் பாதிப்புக்குள்ளாகிறார்கள்?
என்பதைப்பற்றி காண்போம்.
 கலப்படம் செய்வது ஏன்?
 (1)மனதை கவரும்படியான தோற்றத்தை ஏற்படுத்த,சுவை கூட்ட,மணம் கூட்ட,அதிக வருமானத்திற்காக, விரைவான விற்பனைக்காக கலப்படம் செய்கிறார்கள்.
(2)குறைந்த முதலீட்டில் அதிக வருமானத்தை பெற கலப்படம் செய்கிறார்கள்.
(3) குறைந்த விலையில் விற்று வியாபாரப்போட்டியில் வெற்றி பெற கலப்படம் செய்கிறார்கள்.
(4)குறைந்த முதலீட்டில் அதிக பொருள் இருப்பை வைக்க கலப்படம் செய்கிறார்கள்.
(5)குறைந்த விலையில் விற்பனையை அதிகரிக்க கலப்படம் செய்கிறார்கள்.
(6)குறைந்த முதலீட்டால் விரைவாக,எளிதாக,பெரிய பணக்காரர்களாக கலப்படம் செய்கிறார்கள்.
(7)சுயநலத்திற்காக அதாவது காசுக்காக மனித உயிர்களோடு மனச்சாட்சி இல்லாமல் விளையாடுகிறார்கள். அடுத்த  பதிவில் தொடரும்......
          என அன்பன்
        

உணவுப்பொருட்களில் கலப்படம்.

மரியாதைக்குரியவர்களே,
                     வணக்கம்.

                          நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
 பணத்தாசை காரணமாக சிறிதும் மனசாட்சி இன்றி மனித உயிர்களோடு விளையாடுகிறார்கள்.
  இந்த பதிவில் உணவுப்பொருட்களில் கலப்படம் பற்றி காண்போம்.
 (1) பால்;
        பாலில் தண்ணீர்,மசித்த உருளைக்கிழங்கு போன்ற மாவுப்பொருட்கள்,யூரியா உரம்,சோப்பு பவுடர்,காஸ்டிக் சோடா,ரீபைண்டு ஆயில்,பார்லி கஞ்சி,மைதா மாவு,பாமாயில் என பல்வேறு வகையான உடல்நலத்திற்கு கேடான பொருட்கள் கலப்படம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் பால் அடர்த்தி காட்டப்படுகிறது.கெடாமல் இருக்க பயன்படுகிறது.நுரை வரும்,விற்பனையாளருக்கு வருமானத்தை பெருக்குகிறது.
(2)எண்ணெய் வகைகள்;
      தேங்காய் எண்ணெய்; இதில் பெட்ரோலியக்கழிவான மினரல் எண்ணெய் எனப்படும் கனிம ஆயில் ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய்க்கு ஒன்பது லிட்டர் வேக்ஸ் ஆயில் என்ற விகிதத்தில் கலப்படம் செய்யப்படுகிறது.மினரல் ஆயில் ஒரு லிட்டரின் விலை பதினைந்து ரூபாய் மட்டுமே...இந்த மினரல் ஆயில் நிறமோ மணமோ இல்லாதது..பிசுபிசுப்புத்தன்மை கொண்டது.எல்லா வகை எண்ணெய்களிலும் எளிதாக கலந்துவிடலாம்.கண்டுபிடிப்பது கடினம்...
உணவு எண்ணெய்கள்; இவற்றில் கனிம எண்ணெய்,ஆர்ஜிமோன் எண்ணெய்,பருத்திக்கொட்டை எண்ணெய்,ஆமணக்கு எண்ணெய்,முந்திரி எண்ணெய் என பலவகை எண்ணெய்கள் கலப்படம் செய்யப்படுகின்றன.
நெய்; இதில் மாட்டுக்கொழுப்பு,மிருகங்களின் கொழுப்பு,வனஸ்பதி,பனை எண்ணெய்,மெழுகு,வேதிப்பொருட்கள்,பூச்சிக்கொல்லி மருந்துகள்,பாமாயில்,சணல் எண்ணெய், இவைகளை கலப்படம் செய்கிறார்கள்.இத்துடன் ஜெர்மனியில் கிடைக்கும் ஒருவித எசன்ஸ் இதன் விலை ஒரு லிட்டர் நான்காயிரம் ரூபாய் மட்டும்.இதில் ஒரு துளி விட்டால்போதும்.ஒரிஜினல் நெய்ய்யை விட வாசனை தூக்கலாக இருக்கும்.இதனை போலியான அக்மார்க் தரச்சான்று முத்திரையுடன் வடநாட்டு பிரல நெய் விற்பனை நிறுவனங்களின் முகவரியில் விற்பனை செய்யபடுகின்றன.
 குளிர்பானங்கள்; பழரசங்கள்,காற்றடைக்கப்பட்ட பானங்கள்;
          இவைகள் கெட்டுப்போகாமல் இருக்கவும்,நரம்புத்தூண்டலை ஏற்படுத்தவும்,மனதை கவரும் வண்ணத்திற்கும்,சுவைக்காகவும்,செயற்கை இனிப்பூட்டிகள்,பூச்சிக்கொல்லி மருந்துகள்,அனுமதியில்லாத வண்ணங்கள்,மற்றும் சில வேதிப்பொருட்கள் கலப்படம் செய்யப்படுகின்றன.

  மினரல் ஆயில் என்னும் கனிம எண்ணெய்;-
                                        இந்த எண்ணெய் பெட்ரோலியத்திலிருந்து பிரித்தெடுக்கும் 24வகையான பொருட்களுக்குப்பின்னர் கழிவாக கிடைக்கும் எண்ணெய் ஆகும்.மணமில்லாதது.நிறமில்லாதது.பிசுபிசுப்புத்தன்மையுடையது.அனைத்து வகையான உணவு எண்ணெய்கள்,பிரபல கம்பெனித்தயாரிப்பான தேங்காய் எண்ணெய் முதல் ஹெர்பல் என்னும் இமாலய கம்பெனிகள் வரை,குழ்ந்தைகளுக்கான ஜான்சன் பேபி ஆயில் முதல் பிரபலமான சோப்பு வகைகள் வரை என அனைத்திலும்  வஞ்சகமின்றி கலப்படம் செய்யப்படுகிறது.
(3) அரிசி; இதில் கல்,மண்கட்டிகள், பாலீஸ் செய்யப்பட்டு சன்ன ரகமாக்கப்பட்ட தரம் குறைந்த அரிசி ,போன்றவை கலப்படம் செய்யப்படுகின்றன.
(4)துவரம் பருப்பு; இதில் விலை குறைந்த கேசரிப்பருப்பு மற்றும் மெட்டானில் என்ற ரசாயனவண்ணம் சேர்த்து கலப்படம் செய்யப்படுகிறது.
(5)மஞ்சள் தூள்;
                    இதில் லீட் குரோமைட் என்னும் நிறம் கலப்படம் செய்யப்படுகிறது.
(6)கொத்துமல்லித்தூள் அதாவது தனியாப்பொடி; இதில் மரத்தூள்,மிருகங்களின் சாணப்பொடி,மாவு,கலப்படம் செய்யப்படுகிறது.
(7)மசாலாத்தூள்; மரத்தூள்,சாணப்பொடி,செங்கல் பொடி,நிறமேற்றிய சாம்பல் கலப்படம் செய்யப்படுகிறது.
(8)மிளகாய் வற்றல்; சல்ல சிவப்பான நிறமுடைய மிளகாய் வற்றலே தரமானது என்று நம்பியிருக்கும் மக்களின் கருத்தினை அறிந்துகொண்ட வணிகர்களில் சிலர் லாப நோக்கில் பிஞ்சு மிளகாய் மற்றும் கலர் தரம்குறைந்த மிளகாய்களை குறைந்த விலைக்கு வாங்கி அத்துடன் சிவப்பு நிறமேற்றுவதற்காக  ''சூடான் ரெட்'' என்னும் வேதிப்பொருளையும் கலந்து குடோனில் அடைத்து வைப்பதால் மிளகாய் வற்றல் அனைத்தும் நல்ல ரத்த சிவப்பாக மாறிவிடுகிறது.இவ்வாறு கலர் கிடைப்பதால் சந்தையில் கொள்ளை இலாபத்திற்கு விற்கிறார்கள்.
(9)டீத்தூள் ; பயன்படுத்திய தூள்,மரத்தூள்,உளுந்து முந்திரி நிலக்கடலை போன்றவற்றின் தோலை பொடி செய்த தூள்,புளியங்கொட்டைப்பொடி,இத்துடன் அனுமதிக்கப்படாத செயற்கை நிறமேற்றி கலப்படம் செய்து விற்கிறார்கள்.
(10)காபித்தூள்; சிக்கரித்தூள்,புளியங்கொட்டைத்தூள்,பேரீச்சங்கொட்டைத்தூள் இவற்றை கலக்கிறார்கள்.
(11)மிளகு ; இதில் உலர்ந்த பப்பாளிவிதையை கலப்படம் செய்கிறார்கள்.
(12)கடுகு; இதில் ஆர்ஜிமோன் விதை,சிறு கல்  கலப்படம் செய்கிறார்கள்,
(13)சீரகம்; இதில் நிலக்கரித்தூள் கலந்த புல்விதையை கலப்படம் செய்கிறார்கள்.
(14)பாக்குத்தூள்; இதில் மரத்தூள் கலப்படம் செய்கிறார்கள்.
(15)கிராம்பு;இதை எண்ணெய் எடுத்து விற்கிறார்கள்.
(16)ஏலக்காய்; இதை எண்ணெய் எடுத்து பிறகு முகப்பவுடர் கலப்படம் செய்கிறார்கள்.
(17)பச்சைப்பட்டாணி ; இதில் பச்சை கலர் சேர்த்து கலப்படம் செய்கிறார்கள்.
(18) ரவை; இதில் இரும்புத்தூள்,மாவு வகைகள்,தவிடு போன்றவற்றை கலப்படம் செய்கிறார்கள்.
(19)ஜவ்வரிசி;இதில்  மணல்,முகப்பவுடர் கலப்படம் செய்கிறார்கள்.
(20)குங்குமப்பூ; இதில் உலர்ந்த சோளத்தட்டுடன் நிறம் மற்றும் மணம் ஏற்றி கலப்படம் செய்கிறார்கள்.
(21)பெருங்காயம்; இதில் மரப்பிசின்,மண் போன்றவை கலப்படம் செய்கிறார்கள்.
(22)கம்பு; இதில் ஒருவித பூஞ்சை , அதே அளவு கற்கள் கலப்படம் செய்கிறார்கள்.
(23)ராகி; இதில் மண்,சிறு கற்கள் கலப்படம் செய்கிறார்கள்.
(24)உப்பு; இதில் சுண்ணாம்புத்தூள்,வெள்ளைக்கல் பொடி கலப்படம் செய்கிறார்கள்.
(25)அஸ்கா சர்க்கரை; இதில் ரவை,எலும்புத்தூள்,சுண்ணாம்புத்தூள் கலப்படம் செய்கிறார்கள்.
(26)நாட்டுச்சர்க்கரை மற்றும் கட்டிவெல்லம்; இவற்றில் சுண்ணாம்பு,மண்,சோடா உப்பு,யூரியா உரம்,அமோனியா கலப்படம் செய்கிறார்கள்.
(27)தேன்; இதில் சர்க்கரைப்பாகு கலப்படம் செய்கிறார்கள்.
(28)புளி; இதில் மண்,தண்ணீர்,புளியங்கொட்டை,நார்,புளியந்தோல் கலப்படம் செய்கிறார்கள்.
(29)மைதா ; இதில் மரவள்ளிக்கிழங்குமாவு,கலப்படம் செய்கிறார்கள்.
(30)பழவகைகள் பழுக்கவைக்க; 
            மா,வாழை,பப்பாளி போன்ற பழவகைகளை முதிர்ந்த பிறகு அறுவடை செய்து இயற்கைமுறையில் புகைமூட்டம் கொடுத்து பதமாக சூடுபடுத்தி இரண்டு  அல்லது மூன்று நாட்கள் காத்திருந்து பழுக்கவைப்பார்கள்.இதுவே பழங்கால ஆரோக்கியமான பழுக்கவைக்கும் முறையாகும்.ஆனால் அத்தனை நாட்கள் காத்திருக்க இன்றைய வியாபாரிகள் தயாராக இல்லை.பழங்களையும் முதிர்வடையும் முன்பே அறுவடை செய்துவிடுகிறார்கள்.அதனால் சீக்கிரமாக பழுக்கவைத்து கண் கவரும் நிறத்தை வரவழைத்து விற்று வருமானத்தை பார்க்கவேண்டும் என்பதால் இவற்றை பழுக்கவைக்க ''கார்பைடு''  என்னும் ரசாயன பொருளை பயன்படுத்தி வேதிப்பொருளால் பழுக்கவைக்கிறார்கள்.இந்த கார்பைடு வேதிப்பொருள் கடந்த காலத்தில் போபாலில் விஷவாயு ஏற்படுத்தி பெரும் ஆபத்தை ஏற்படுத்திய பொருள் என்பதை மனதில் வையுங்கள்.
(31)ஆப்பிள்; இது நமது கண்களுக்கு அழகான தோற்றத்தை கொடுப்பதற்காக மெழுகு என்னும் ரசாயனப்பொருளை மேல் பூச்சு செய்து விற்கிறார்கள்.
(32)மிட்டாய் போன்ற இனிப்புகள்; இவற்றில் அனுமதியில்லாத வண்ணங்கள் சேர்க்கப்படுகின்றன.ரசாயன சுவைகள் சேர்க்கப்படுகின்றன.
(33) பிஸ்கட் ;இவற்றில் தவிடு போன்ற கழிவுகள் கலப்படம் செய்யப்படுகின்றன.
(34)சாலையோர உணவகங்கள்; இவற்றில் சாலையோர மாசு கலப்படம் ஆகின்றன.அதாவது தெருவோர தூசிகள்,மண்புழுதி,வாகனப்புகை போன்ற மாசு நிறைந்த காற்று கலப்படம் ஆகிறது.உணவு,குடிநீர்,பாத்திரம் இவை சுகாதாரமாக இருப்பதில்லை.தொற்றுநோய் ஏற்படுத்தும் கிருமிகள் சேர்கின்றன.பழைய உணவுகளை கலப்படம் செய்கிறார்கள்.சுவைக்காகவும்,மணத்திற்காகவும்.நிறத்திற்காகவும் தடை செய்யப்பட்ட ரசாயனப்பொருட்களை கலப்படம் செய்கிறார்கள். உணவு எண்ணெய் வகைகளை குறைந்த விலையில் கலப்படத்தை வாங்கி அதையே சிக்கனம் கருதி மீண்டும் மீண்டும் கொதிக்க வைத்து பயன்படுத்துகிறார்கள்.இதனால் ''டிரான்ஸ்'' என்னும் தீங்கு விளைவிக்கும் கொழுப்பு உற்பத்தியாகின்றது.இது இரத்தகுழாய்களை அடைத்து மாரடைப்பு போன்ற நோய்களை தருவிக்கிறது.
 இறைச்சிகளை சீக்கிரமாக  வேகவைக்க பாராசிட்டாமால் மாத்திரைகளை பயன்படுத்துகிறார்கள்.மென்மைத்தன்மையாக்க தடைசெய்யப்பட்ட ரசாயனப்பொருட்களை கலப்படம் செய்கிறார்கள்.
கலப்படத்தால் மனிதர்களுக்கு நேரிடும் ஆபத்தை அடுத்த பதிவில் காண்போம். 
         என அன்பன்.

 

மனைவியின் சிறப்பு..

மரியாதைக்குரியவர்களே,
                                   வணக்கம்.

   இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றுமில்லை
இல்லாளும் இல்லாளே ஆமாயின் - இல்லாள்
வலி கிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்வில்
 புலி கிடந்த தூராய்விடும்.

                     பொருள் ; மனைவியானவள்  வீட்டில் இருந்தால் இல்லாதது என்று ஒன்றுமே இல்லை!.அதே மனைவி இல்லத்தில் இல்லாதபோது மனைவியால் வீடு பெரும் மாற்றத்தை அடைந்து அங்கு கானகத்தில் புலி வசிக்கும் புதரைப்போன்று ஒன்றுமே அவ்விடத்தில் இல்லாமல் போய்விடும்...

 மனைவியின் சிறப்பினை கூறும் நாலடியார் பாடலின் கருத்தினை உணர்ந்து மனைவியிடம் அன்பு காட்டுங்கள்.........