Thursday, 7 January 2016

KCT MATRICULATION SCHOOL - THALAVADI,ROAD SAFETY AWARNESS-2016

                              சாலை பாதுகாப்பு வாரவிழா-2016
                           KCT மெட்ரிக் பள்ளி, தாளவாடி-638461

மரியாதைக்குரியவர்களே,
      வணக்கம்."சாலைப் பாதுகாப்பு – செயல்பாட்டிற்கான தருணம்" என்ற கருப்பொருளை மையப்படுத்தி 27-வது சாலைப் பாதுகாப்பு வார விழா 10.1.2016 முதல் 16.1.2016 வரை கடைப்பிடிக்கப்பட உள்ள இந்த வேளையில், ஈரோடு மாவட்டம் தாளவாடியில்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் சார்பாக பள்ளியுடன் இணைந்து சாலை பாதுகாப்பு வாரவிழா மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வு நடத்தியது.


 KCT MATRIC SCHOOLஎன்னும் கொங்கு சாரிட்டபிள் டிரஸ்ட் மெட்ரிகுலேசன் பள்ளி தாளாளர் திருமிகு. சுரேஷ்குமார் அவர்கள் தலைமை ஏற்று  உரையாற்றினார்.


 நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு அமைப்பைச் சேர்ந்த திரு.A.P. ராஜூ அவர்களும் திரு.C.பரமேஸ்வரன் அவர்களும் கருத்தாளர்களாக பங்கேற்று மாணவர்களுக்காக சாலை பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு  வழங்கினர்.


 அது சமயம் கோபி காசிபாளையம் குருதிக்கொடை நண்பர்கள் சங்கம் வழங்கிய சாலை பாதுகாப்பு வேகக்கணிப்பீடு,நேரக்கணிப்பீடு,தூரக்கணிப்பீடு மற்றும் வாகன ஓட்டங்கள் யாவும் இயற்கைவிதிகளுக்குட்பட்டே இயங்குகின்றன என்ற விதிமுறை துண்டறிக்கைகள் பள்ளிக்கு வழங்கப்பட்டது.