Sunday, 8 December 2013

வனத்தை காப்போம்-பிளாஸ்டிக் தவிர்ப்போம்.

மரியாதைக்குரியவர்களே,
                        வணக்கம்.
                                 நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.பதிவு எண்;-26/2013.வலைப்பதிவுக்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.தாளவாடி கொங்கள்ளி கோவில் சுற்றுப்புறம் மற்றும் வனப்பகுதியில் விழிப்புணர்வு இல்லாத மக்களால் போடப்பட்டுள்ள பிளாஸ்டிக் பேப்பர்,பாட்டில்களை அப்புறப்படுத்திவிட்டு ''வனத்தை காப்போம்-பிளாஸ்டிக் தவிர்ப்போம்'' என்ற தலைப்பில் கருத்தரங்கம்-விழிப்புணர்வு வாகனப் பிரச்சாரம்-பொதுக்கூட்டம்-கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்போடு வனப்பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து அழிப்பது.போன்ற சமுதாய நலனுக்கான இரண்டு நாட்கள் சேவை செய்ய திட்டங்கள் வகுக்கப்பட்டு அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.கோபி கலை அறிவியல் கல்லூரி மற்றும் உள்ளூர் மக்கள் பிரதிநிதிகளிடமும் ,வனத்துறையினரிடமும் கலந்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.வருகிற 2013 டிசம்பர்21 மற்றும் 22 ம் தேதிகளில் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.சுமார் ஐநூறுக்கும் அதிகமான நபர்களை திரட்டி செயல்படுத்தவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
                       12/8/2013 இன்று முதல் அவ்வப்போது  இங்கு பதிவிட்டு தங்கள் அனைவருக்கும் தெரியப்படுத்தப்படும்.தங்களது மேலான ஆலோசனைகளை தெரியப்படுத்த அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
 என 
C.பரமேஸ்வரன்,
செயலாளர்,
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-
தமிழ்நாடு.(பதிவு எண் #26/2013)