மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.
இன்று காலை10.00மணி முதல் மதியம்2.00 மணி வரை மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம்
SRNமெட்ரிக் பள்ளி தாளாளர் திரு.S.சசிக்குமார் B.E., அவர்கள் தலைமையில் ஈரோடு மாவட்டம்-சத்தியமங்கலத்தில் நடைபெற்றது.
200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இலவச பொது மருத்துவ சிகிச்சை பெற்றார்கள்.அறுபதுக்கும் மேற்பட்ட பயனாளிகள் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் ரேவதி மெடிக்கல் சென்டர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.இலவச மருத்துவ முகாமின் துவக்கமான
அறிமுகக் கூட்டத்தில்
SRN மெட்ரிக் தாளாளர் திரு.S.சசிக்குமார் B.E.,அவர்கள் தலைமை ஏற்க
SRN மெட்ரிக் பள்ளி நிர்வாக அலுவலர் திரு. சண்முகவேல் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.அரிமாK.லோகநாதன் அவர்கள் மற்றும் திரு. A.இராமசாமி அவர்கள்,தலைவர் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் முன்னிலை வகித்தனர்.இலவச பொது மருத்துவ முகாம் சத்தியமங்கலத்தில் நடத்துவதன் நோக்கம் பற்றி
திரு.C.பரமேஸ்வரன் அவர்கள்,செயலாளர்,
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் விளக்கினார்.
அது சமயம்SRN மெட்ரிக் பள்ளி சார்பாக
சத்தியமங்கலத்தின் மூத்த செய்தியாளர் உட்பட சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.
SRN மெட்ரிக் பள்ளி தாளாளர்.திரு.S.சசிக்குமார் B.E., அவர்கள் சத்தி நகர மூத்த செய்தியாளர் திரு. கோபால் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவப்படுத்திய காட்சி.
SRNமெட்ரிக் பள்ளி தாளாளர்.திரு.S.சசிக்குமார் B.E., அவர்கள்
REVATHI MEDICAL CENTRE பொது மருத்துவர் S.மகாராஜா அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவப்படுத்திய காட்சி.அருகில் அரிமாK.லோகநாதன் சத்தியமங்கலம் அவர்கள்.
SRNமெட்ரிக் பள்ளி நிர்வாக அலுவலர்.திரு.Pசண்முகவேல், அவர்கள்
திரு.A.இராமசாமி தலைவர் நுகர்வோர் மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவப்படுத்திய காட்சி.
SRNமெட்ரிக் பள்ளியில் திரு.C.பரமேஸ்வரன் அவர்கள்
REVATHI MEDICAL CENTRE முகாம் மேலாளர் திரு.சதீஷ் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவப்படுத்திய காட்சி.
திருப்பூர் ரேவதி மெடிக்கல் சென்டர்
பொது மருத்துவர் S.மகாராஜா அவர்கள் மற்றும்
மகளிர் சிறப்பு மருத்துவர் திருமதி உமாதேவி அவர்கள் தலைமையிலான
திருப்பூர் ரேவதி மெடிக்கல் சென்டர் மருத்துவர் குழு
பொது மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளித்து தேவைப்பட்டவர்களுக்கு மேல் சிகிச்சைக்காக திருப்பூர் தலைமை மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.
முகாம் ஏற்பாட்டினை திருப்பூர் ரேவதி மெடிக்கல் சென்டர் அறக்கட்டளை மற்றும் திரு.C.பரமேஸ்வரன் அவர்கள்,செயலாளர்,நுகர்வோர் மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் ஆகியோர் செய்து இருந்தனர்.