Friday, 25 July 2014

ரெவின்யூ ஸ்டாம்ப் & பத்திரம்




மரியாதைக்குரியவர்களே,
           வணக்கம். ரெவின்யூ ஸ்டாம்ப் பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்வோம் வாங்க!



ரெவின்யூ ஸ்டாம்ப்
(Revenue Stamp)
இந்த ரெவின்யூ ஸ்டாம்புகள் இந்தியாவில் இரண்டே இரண்டு விஷயங்களுக்கு மட்டுமே உபயோகிக்கப் படுகிறது.

1)புராமிசரி நோட் கடன் வாங்கும்போது, கடன் வாங்கியவர் எழுதிக் கொடுக்கும் புராமிசரி நோட்டில் இந்த ஸ்டாம்பை ஒட்ட வேண்டும்.
2)எந்த பணத்தையாவது யாரிடமிருந்தாவது வாங்கும்போது அதற்கான ரசீது கொடுக்க வேண்டுமென்றால், அப்போதும் அந்த ரசீதில் இந்த ரூ.1/- ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டி, ரசீதை கொடுக்க வேண்டும்.

ரசீது (Receipts)
மாதச் சம்பளம் வாங்குபவர் இதை அதிகமாக உபயோகிப்பார்கள். அலுவலகங்களில் ரசீது கொடுக்கும்போது இந்த ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டிய ரசீதை கொடுப்பார்கள்.

மத்திய அரசின் சட்டப்படி, ரசீதுகளுக்கு (Receipts), அதாவது யாரிடமாவது எதற்காகவாது பணம் வாங்கினால், அதை ஒப்புக்கொண்டு எழுதிக் கொடுக்கும் ரசீதுகளுக்கு, இந்த சட்டப்படி ரூ.1/- மதிப்புள்ள ரெவின்யூ ஸ்டாம்பை ஒட்ட வேண்டும். அதுவும், அந்த பணமதிப்பு ரூ.5,000/-க்கு மேல் இருந்தால் அந்த ரசீதில் ரெவின்யூ ஸ்டாம்பை ஒட்ட வேண்டும். அதற்கு குறைவான மதிப்புள்ள தொகைக்கு ரசீது கொடுத்தால், அதற்கு ரெவின்யூ ஸ்டாம்பை ஒட்டத் தேவையில்லை. வெறும், ஸ்டாம்ப் இல்லாத ரசீதை கொடுக்கலாம். (இதற்கு முன்பு இருந்த பழைய சட்டப்படி ரூ.500/-க்கு மேல் உள்ள தொகைக்கே 20காசு ரெவின்யூ ஸ்டாம்பை ஒட்ட வேண்டும். அதனால், ரெவின்யூ ஸ்டாம்ப் அதிகமாக புழக்கத்தில் இருந்தது.)

ஸ்டாம்ப் ஒட்ட வேண்டிய ரசீதுக்கு, அதை ஒட்டாமல் வாங்கி இருந்தாலும், பரவாயில்லை. எங்காவது அதை சாட்சியமாக கொடுக்க நேர்ந்தால் அப்போது அதற்கு ரூ.10/- அபராதமாக கட்டி அதை சரிசெய்தும் கொள்ளலாம். சட்டப்படி அது செல்லும்.

புராமிசரி நோட்டு கடன் (Promissory Note)
புராமிசரி நோட் கடனுக்கு, கடன் எவ்வளவு தொகையாக இருந்தாலும், (கோடிக்குமேல் இருந்தாலும்), ஒரு ரூபாய் ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டினால் போதும். (அந்தச் சட்டத்தின்படி வெறும் 25 காசு ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டினால் போதும் என்று சட்டம் சொல்லி உள்ள போதிலும், அவ்வாறான 25 காசு ஸ்டாம்புகளை அரசு அச்சடிக்கவில்லை. எனவே ஒருரூபாய் ஸ்டாம்ப் ஒட்டி எழுதி வாங்கிக் கொள்ளலாம்.)

இந்த ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டாமல் வாங்கிய புரோநோட்டு சட்டப்படி செல்லாது. எந்த கோர்ட்டிலும் வழக்கும் போடவும் முடியாது. அபராதம் கட்டினாலும் அதை ஏற்க முடியாது. எனவே புரோநோட் விஷயத்தில் சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
thanks : advocate help centre
சட்டம் என்ன சொல்கிறது
ரெவின்யூ ஸ்டாம்ப்
(Revenue Stamp)
இந்த ரெவின்யூ ஸ்டாம்புகள் இந்தியாவில் இரண்டே இரண்டு விஷயங்களுக்கு மட்டுமே உபயோகிக்கப் படுகிறது.

1)புராமிசரி நோட் கடன் வாங்கும்போது, கடன் வாங்கியவர் எழுதிக் கொடுக்கும் புராமிசரி நோட்டில் இந்த ஸ்டாம்பை ஒட்ட வேண்டும்.
2)எந்த பணத்தையாவது யாரிடமிருந்தாவது வாங்கும்போது அதற்கான ரசீது கொடுக்க வேண்டுமென்றால், அப்போதும் அந்த ரசீதில் இந்த ரூ.1/- ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டி, ரசீதை கொடுக்க வேண்டும்.

ரசீது (Receipts)
மாதச் சம்பளம் வாங்குபவர் இதை அதிகமாக உபயோகிப்பார்கள். அலுவலகங்களில் ரசீது கொடுக்கும்போது இந்த ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டிய ரசீதை கொடுப்பார்கள்.

மத்திய அரசின் சட்டப்படி, ரசீதுகளுக்கு (Receipts), அதாவது யாரிடமாவது எதற்காகவாது பணம் வாங்கினால், அதை ஒப்புக்கொண்டு எழுதிக் கொடுக்கும் ரசீதுகளுக்கு, இந்த சட்டப்படி ரூ.1/- மதிப்புள்ள ரெவின்யூ ஸ்டாம்பை ஒட்ட வேண்டும். அதுவும், அந்த பணமதிப்பு ரூ.5,000/-க்கு மேல் இருந்தால் அந்த ரசீதில் ரெவின்யூ ஸ்டாம்பை ஒட்ட வேண்டும். அதற்கு குறைவான மதிப்புள்ள தொகைக்கு ரசீது கொடுத்தால், அதற்கு ரெவின்யூ ஸ்டாம்பை ஒட்டத் தேவையில்லை. வெறும், ஸ்டாம்ப் இல்லாத ரசீதை கொடுக்கலாம். (இதற்கு முன்பு இருந்த பழைய சட்டப்படி ரூ.500/-க்கு மேல் உள்ள தொகைக்கே 20காசு ரெவின்யூ ஸ்டாம்பை ஒட்ட வேண்டும். அதனால், ரெவின்யூ ஸ்டாம்ப் அதிகமாக புழக்கத்தில் இருந்தது.)
ஸ்டாம்ப் ஒட்ட வேண்டிய ரசீதுக்கு, அதை ஒட்டாமல் வாங்கி இருந்தாலும், பரவாயில்லை. எங்காவது அதை சாட்சியமாக கொடுக்க நேர்ந்தால் அப்போது அதற்கு ரூ.10/- அபராதமாக கட்டி அதை சரிசெய்தும் கொள்ளலாம். சட்டப்படி அது செல்லும்.
புராமிசரி நோட்டு கடன் (Promissory Note)
புராமிசரி நோட் கடனுக்கு, கடன் எவ்வளவு தொகையாக இருந்தாலும், (கோடிக்குமேல் இருந்தாலும்), ஒரு ரூபாய் ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டினால் போதும். (அந்தச் சட்டத்தின்படி வெறும் 25 காசு ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டினால் போதும் என்று சட்டம் சொல்லி உள்ள போதிலும், அவ்வாறான 25 காசு ஸ்டாம்புகளை அரசு அச்சடிக்கவில்லை. எனவே ஒருரூபாய் ஸ்டாம்ப் ஒட்டி எழுதி வாங்கிக் கொள்ளலாம்.)

இந்த ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டாமல் வாங்கிய புரோநோட்டு சட்டப்படி செல்லாது. எந்த கோர்ட்டிலும் வழக்கும் போடவும் முடியாது. அபராதம் கட்டினாலும் அதை ஏற்க முடியாது. எனவே புரோநோட் விஷயத்தில் சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
thanks : advocate help centre



             பத்திரம் என்பது நம் சௌகரியத்துக்காக சொல்வது. அப்படி ஒரு வார்த்தையே கிடையாது .ஒரு வெள்ளைப் பேப்பரில் ஏதாவது எழுதி ஒருவர் கையெழுத்திட்டார் அது முக்கிய ஆவணமாக கொள்ளப்படமாட்டாது. அதற்கு சாட்சிகள் வேண்டும் அது ஒரு அரசு ஊழியரால் அங்கீகரிக்கப்பட வேண்டும் அந்த ஊழியர் அந்த எழுத்து எந்தவகையானதோ அது சம்பந்தப்பட்டவராக இருக்கவேண்டும் . எழுதப்பட்ட உயில் சாட்சியமிடப்பட்டாலும் நீதிமன்றம்  ஒத்துக்கொள்ளவேண்டும் அப்போதுதான் அது உயில் ஆகும். இல்லையானால் இறந்த நபரின் அபிலாஷை என்றுதான் அர்த்தம் ஆகும் . இறந்த நபரின் அபிலாஷையைக் கூட நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளும்.



தமிழ் நாடு திருமணச் சட்டம் – 2009ன்
படி திருமணம் நடந்த 90
தினங்களுக்குள்
திருமணத்தை பதிவாளர்
அலுவலகத்துக்குச் சென்று பதிவுச
செய்யவேண்டும்.
திருமணம் முடிந்து 90 நாட்களுக்குள்
பதிவு செய்தால் கட்டணம் ரூ.100/-
மட்டுமே.
திருமணம் முடிந்து 91 முதல் 150
நாட்களுக்குள் பதிவு செய்தால் அபராத
கட்டணம் ரூ.50/-ம் சேர்த்து மொத்தம்
ரூ.150/- செலுத்தவேண்டும்.
திருமணம் முடிந்து 150
நாட்களுக்கு பிறகு தமிழ்நாடு திருமணச்
சட்டம்-2009-ன்படி பதிவு செய்ய
முடியாது.
150 நாட்களுக்கு பிறகும்
பதிவு செய்யாதவர்கள் மீது அந்த
பகுதி பதிவாளர் குற்ற
நடவடடிக்கை மேற்கொள்ள வேண்டும்
என சட்ட விதி முறை வகுக்கப்பட்டுள்
ளது. எனவே இனி திருமணம்
செய்து கொள்ளும் அனைவரும் 90
நாட்களுக்குள்
இச்சட்டப்படி திருமணத்தை பதிவு செய்து கொள்ளுங்கள்.
திருமணம் எங்கு நடந்ததோ அந்த
பகுதிக்கான பதிவாளர் அலுவலகத்தில்
மட்டுமே இச்சட்டப்படி திருமணத்தை பதிவு செய்ய
முடியும். (மூன்று வகையான
திருமணச் சட்டத்தில் திருமணம் நடந்த
பகுதி பதிவாளர் அலுவலகம்
அல்லது பெண் வீடு உள்ள
பகுதி பதிவாளர் அலுவலகம்
அல்லது மாப்பிள்ளை வீடு உள்ள
பகுதி பதிவாளர் அலுவலகத்தில்
பதிவு செய்து கொள்ளும் வகையில்
விதி முறை உள்ளது).
திருமணத்தன்று ஆணுக்கு வயது 21-ம்
பெண்ணுக்கு வயது 18-ம்
பூர்த்தியாகியிருக்க வேண்டும்.
திருமணம் நடந்ததற்கான ஆதாரமாக
கீழ்கண்ட ஏதேனும் ஒன்றை இணைக்க
வேண்டும்.
• திருமண பத்திரிக்கை.
• கோவில்/சர்ச்/பள்ளிவாசல் நிர்வாகம்
வழங்கிய திருமணம் நடந்ததாக
கொடுக்கும் ஆவணம்.
• திருமணம் நடந்ததிற்கான
வேறு ஆதாரங்கள் (நோட்டரி அபிடிவிட்,
போன்ற ஆவணங்கள்)
முகவரிக்கான ஆதாரமாக கீழ்க்கண்ட
ஒன்றில் ஏதேனும்
ஒன்று கொடுக்கப்படவேண்டும்.
• வாக்காளர் அடையாள அட்டை
• குடும்ப அட்டை
• ஓட்டுனர் உரிமம்
• பாஸ்போர்ட் அல்லது விசா
வயதுக்கான சான்றாக கீழ் கண்ட
ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்க
வேண்டும்.
• பிறப்புச் சான்று
• பள்ளி – கல்லூரிச் சான்று
• பாஸ்போர்ட்/விசா
மூன்று சாட்சிகள் கையெழுத்திட
வேண்டும். சாட்சிகள் ஏதேனும்
ஒரு அடையாள அட்டை காண்பிக்க
வேண்டும்.
பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கணவன்
-4, மனைவி 4 போட்டோக்கள் எடுத்துச்
செல்ல வேண்டும்.
தமிழ்நாடு திருமண பதிவுச்
சட்டம்-2009-ன் படி பதிவு செய்யத்
தனியாக விண்ணப்ப படிவம் உள்ளது.
http://www.tnreginet.net/english/
forms.asp என்ற இணைப்பிலிருந்து 4
பக்க விண்ணப்பத்தை பதிவிறக்கம்
செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
திருமணத்தை பதிவு செய்ய
புரோக்கர்கள் ரூ5 ஆயிரம் முதல் ரூ.10
ஆயிரம் வரை வாங்கிக் கொள்கிறார்கள்.
ரூ.100/- மட்டும்
செலுத்தி திருமணத்தை பதிவு செய்யுங்கள்



RESSING ROOM ல
கேமரா மறைத்து வைக்கப்பட்டு பெண்கள்
படம் பிடிக்க படுகின்றனர்..!
அதை தடுக்க ஒரு அருமையான
ஆலோசனை.

TRIAL ROOM ல் உங்களோட செல்
போன்ல
இருந்து யாருக்காவது கால்
பண்ணுங்கள்,
உங்கள் போனில் இருந்து கால்
பண்ண முடியவில்லை என்றால்
அங்கு கேமரா பொருத்தப்பட்டுள்ளது என்று அர்த்தம்'.
காரணம் FIBER OPTIC SIGNAL செல்
போன் சிக்னலை தடுக்க
கூடியது..!
அப்படி கால் பண்ண
முடியவில்லை என்றால்...
உஷார்..!!!
நீங்கள் நோட்டமிடபடுகிறீ
ர்கள்....!!!


ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கன நாணயச் சங்கத்தின் துணைவிதித்திருத்தம், துணைவிதிகள், தீர்மானம் போன்றவற்றை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரியதற்கு த்கவல் தர மறுக்கின்றனர்

முதல் அப்பீல் செல்லுங்கள்

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் நாம் எத்தகைய தகவல்களை வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம், ஆனால் சில தகவல்களை மட்டும் நாம் அரசிடம் இருந்து கோர முடியாது... அப்படிபட்ட விதிவிலக்கான தகவல்கள் கீழே
விதிவிலக்கு அளிக்கப்பட்ட தகவல்கள்[தொகு]
இந்திய குடிமக்கள் எவருக்கும் பிரிவு 8 (1)[1] இன் கீழ் பின்வரும் தகவல்களைக் கொடுக்கவேண்டிய அவசியமில்லை.
(அ) இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு நாட்டின் பாதுகாப்பு போர் யுக்திகள், நாட்டின் அறிவியல் மற்றும் பொருளாதார நலன், வெளி நாடுகளின் உறவு இவற்றைப் பாதிக்கும் குற்றம் புரியத் தூண்டுதலாக அமையும் தகவல்கள்,
(ஆ) நீதிமன்றம், தீர்ப்பாயம் இவை வெளிப்படையாகத் தடை செய்துள்ளத் தகவல்கள் அல்லது நீதிமன்ற அவமதிப்பை உண்டாக்கும் தகவல்கள்.
(இ) நாடாளுமன்றம் மற்றும் மாநில சிறப்புரிமைகளை மீறுமை செய்யும் தகவல்கள்.
(ஈ) வாணிக நம்பகத் தன்மை, வியாபார இரகசியங்கள், அறிவு சார் சொத்துடைமை இவை வெளிப்படுத்தப்பட்டால் அது மூன்றாம் தரப்பினரின் சந்தைப் போட்டிக்குக் குந்தகம் விளைவிக்கும் தகவல்கள். இத்தகவல்கள் பெரும்பான்மை மக்களுக்கு இன்றியமாயதது என்று தகுத வாய்ந்த அதிகார அமைப்பு மனநிறைவு அடைந்தாலன்றி அத்தகவல்களை வெளியிடக் கூடாது.
(உ) ஒருவருடைய பொறுப்புரிமை தொடர்பு உறவால் கிடைத்த தகவலை, பெரும்பான்மை மக்களின் நலனுக்கு இன்றியமையாதது என, தகுதிவாய்ந்த அதிகார அமைப்பு மனநிறைவு அடைந்தாலன்றி அத்தகவலை வெளியிடக்கூடாது.
(ஊ) வெளிநாட்டு அரசுகளிடமிருந்து இரகசியமாகப் பெற்றத் தகவல்கள்.
(எ) ஒரு நபரின் வாழ்வு அல்லது உடல் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படுத்துவதை, தகவலின் மூலத்தை அடையாளப்படுத்துவதை அல்லது சட்டம் நடைமுறைப்படுத்துவதை அல்லது பாதுகாப்பு நோக்கங்களுக்காக இரகசியமாக்கஃ கொடுக்கப்பட்ட உதவிக்கு ஆபத்து விளைவிப்பதை ஏற்படுத்தும் தகவல்கள்.
(ஏ) புலனாய்வை அல்லது குற்றவாளிகளைக் கைது செய்வதை அல்லது அவர்கள் மீது குற்ற வழக்குத் தொடர்வதைத் தடை செய்யும் தகவல்கள்.
(ஐ) அமைச்சரவை செயலர்கள் மற்றும் பிற அலுவலர்கள் (அதிகாரிகள்) கலந்தாய்வுகளின் பதிவேடுகள் உள்ளிட்ட அமைச்சரவை ஏடுகள் வெளிப்படுத்தப்படுவதிலிருந்து விலக்குப் பெறுகின்றன.
குறிப்பு-; அமைச்சரவை முடிவுகள் எடுத்த பின்னர், அம்முடிவுகள் அவற்றிற்கான காரணங்கள், பின்புலங்கள் இவைகள் தடை செய்யப்பட்ட தகவல்களாக இல்லாதிருந்தால் பொது மக்களுக்குத் தெரிவிக்கலாம்.
(ஒ) பொது செயல்பாட்டிற்கு, பொது நலனிற்கு தொடர்பில்லாத தனி நபரின் அந்தரங்கத்தில், நியாமற்ற முறையில் தலையீடு செய்யும் தனிநபரோடுத் தொடர்புடையத் தகவலைத் தெரிவித்தல் கூடாது.நாடாளுமன்றத்திற்கோ, மாநில சட்டப் பேரவைக்கோ மறுக்கப்படாத ஒரு தகவல் தனிநபருக்கும் மறுக்கப்படக் கூடாது.
 

பயனுள்ள இணையதளங்கள்...!


மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.


சான்றிதழ்கள் :-
1) பட்டா / சிட்டா அடங்கல்
http://taluk.tn.nic.in/edistrict_certificate/land/chitta_ta.html?lan=ta

2) அ-பதிவேடு விவரங்களை பார்வையிட
http://taluk.tn.nic.in/eservicesnew/land/areg_ta.html?lan=ta
3) வில்லங்க சான்றிதழ்
http://www.tnreginet.net/igr/webAppln/EC.asp?tams=0
4) பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/birth.pdf
http://www.tn.gov.in/appforms/death.pdf
5) சாதி சான்றிதழ் / வாரிசு சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/cert-community.pdf
6) இருப்பிட மற்றும் வருமான சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/cert-income.pdf
C. E-டிக்கெட் முன் பதிவு
1) ரயில் மற்றும் பஸ் பயண சீட்டு
http://tnstc.ticketcounters.in/TNSTCOnline/
http://www.irctc.co.in/
http://www.yatra.com/
http://www.redbus.in/
2) விமான பயண சீட்டு
http://www.cleartrip.com/
http://www.makemytrip.com/
http://www.ezeego1.co.in/
D. E-Payments (Online)
1) BSNL தொலைபேசி மற்றும் Mobile Bill கட்டணம் செலுத்தும் வசதி
http://portal.bsnl.in/portal/aspxfiles/login.aspx
2) Mobile ரீ- சார்ஜ் மற்றும் டாப் அப் செய்யும் வசதி
https://www.oximall.com/
http://www.rechargeitnow.com/
http://www.itzcash.com/
3) E.B. Bill கட்டணம் செலுத்தும் வசதி
http://www.itzcash.com/
https://www.oximall.com/
http://www.rechargeitnow.com/
4) NEFT / RTGS மூலம் பிறர் ACCOUNT ‘க்கு பணம் மாற்றும் வசதி
5) E-Payment செய்து வேண்டிய பொருள் வாங்கும் வசதி
http://www.ebay.co.in/
http://shopping.indiatimes.com/
http://shopping.rediff.com/shopping/index.html
6) Share Market – பங்குச் சந்தையில் On-Line வணிகம் செய்யும் வசதி
http://www.icicidirect.com/
http://www.hdfcsec.com/
http://www.religareonline.com/
http://www.kotaksecurities.com/
http://www.sharekhan.com/
E. கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்த சேவைகள் (Online)
1) மாணவர்கள் மேற்படிப்புக்கான வங்கிக் கடன் விவரங்கள் மற்றும் விண்ணப்பங்கள்
https://www.sbi.co.in/user.htm?action=viewsection&lang=0&id=0%2C1%2C20%2C118
http://www.indianbank.in/education.php
http://www.iob.in/vidya_jyothi.aspx
http://www.bankofindia.com/eduloans1.aspx
http://www.bankofbaroda.com/pfs/eduloans.asp
http://www.axisbank.com/personal/loans/studypower/Education-Loan.asp
http://www.hdfcbank.com/personal/loans/educational_loan/el_indian/el_indian.htm
2) பள்ளி மற்றும் கல்லூரி தேர்வு முடிவு / மதிப்பெண் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி
http://www.tn.gov.in/dge/
http://www.tnresults.nic.in/
http://www.dge1.tn.nic.in/
http://www.dge2.tn.nic.in/
http://www.Pallikalvi.in/
http://www.results.southindia.com/
http://www.chennaionline.com/results
3) சமச்சீர் கல்வி பாட புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய
http://www.tn.gov.in/dge
4) இணையதளங்கள் மூலமாக 10th, 12th Std பாடங்களை கற்றுக்கொள்ளும் வசதி
http://www.classteacher.com/
http://www.lampsglow.com/
http://www.classontheweb.com/
http://www.edurite.com/
http://www.cbse.com/
5) 10th & 12th வகுப்பிற்கான அரசு தேர்வு மாதிரி கேள்வி தாள்கள் மற்றும் பாடங்களை படிக்க அல்லது பதிவிறக்கம் செய்ய
http://www.kalvisolai.com/
6) UPSC/ TNPSC/ BSRB / RRB / TRB க்கான பயிற்சி, தேர்வு மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி
http://www.tnpsc.gov.in/
http://www.tnpsctamil.in/
http://www.upsc.gov.in/
http://upscportal.com/civilservices/
http://www.iba.org.in/
http://www.rrcb.gov.in/
http://trb.tn.nic.in/
http://www.tettnpsc.com/
7) உள் நாடு மற்றும் உலக நாடுகளில் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்து கொள்ளும் வசதி, பதிவு செய்து விண்ணப்பிக்கும் வசதி
http://www.employmentnews.gov.in/
http://www.omcmanpower.com/
http://www.naukri.com/
http://www.monster.com/
.இந்திய ராணுவத்தில் வேலை வாய்ப்புகள் அறிய
http://www.ssbrectt.gov.in/
http://bsf.nic.in/en/career.html
http://indianarmy.nic.in/
9) இந்திய கப்பல் படையில் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகள் அறிய
http://nausena-bharti.nic.in/
10) Face to Face chat / Interview நேர்காணல் செய்யும் வசதி
http://www.skype.com/
http://www.gmail.com/
http://www.yahoochat.com/
http://www.meebo.com/
F. கணினி பயிற்சிகள் (Online)
1) அடிப்படை கணினி பயிற்சி
http://www.homeandlearn.co.uk/
http://www.intelligentedu.com/
http://www.ehow.com/about_6133736_online-basic-computer-training.html
2) சிறார்களுக்கு கணினி பயிற்சி
http://www.ehow.com/video_5846782_basic-computer-training-children.html
3) இ – விளையாட்டுக்கள்
http://www.zapak.com/
http://www.miniclip.com/
http://www.pogo.com/
http://www.freeonlinegames.com/
http://www.roundgames.com/
4) ப்ரௌசிங், இ-மெயில், சாட்டிங், வெப் கான்ஃபெரென்ஸ், தகவல் தேடுதல் வசதி
http://www.google.com/
http://www.wikipedia.com/
http://www.hotmail.com/
http://www.yahoo.com/
http://www.ebuddy.com/
http://www.skype.com/
G. பொது சேவைகள் (Online)
1) தகவல் அறியும் உரிமை சட்டம்
http://rti.gov.in/
http://www.rtiindia.org/forum/content/
http://rti.india.gov.in/
http://www.rti.org/
2) சுற்றுலா மற்றும் முக்கிய தளங்கள் பற்றிய தகவல் பெறும் வசதி
http://www.incredibleindia.org/
http://www.india-tourism.com/
http://www.theashokgroup.com/
http://www.smartindiaonline.com/
3) திருமணம் புரிய விரும்புவோர் இணையதளங்கள் மூலமாக பதிவு செய்து தங்கள் வாழ்க்கை துணையை தேடி தேர்வு செய்யும் வசதி
http://www.tamilmatrimony.com/
http://kalyanamalai.net/
http://www.bharatmatrimony.com/
http://www.shaadi.com/
4) குழந்தைகளுக்கான தமிழ் பெயர்களை அர்த்தத்தோடு பார்க்கவும் மற்றும் தமிழ் அகராதி, தமிழ் புத்தகங்களை பார்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய
http://www.tamilcube.com/
5) ஜாதகம் மற்றும் ராசிபலனை அறிந்து கொள்ள
http://www.koodal.com/
http://freehoroscopesonline.in/horoscope.php
6) இணையதளம் மூலமாக இந்தியாவில் எந்த ஒரு மொபைலுக்கும் இலவசமாக SMS அனுப்பும் வசதி
http://www.way2sms.com/
7) இணையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான VIDEO படங்களை தேடி கண்டு மகிழலாம்
http://www.youtube.com/
இணையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான தொழில் / வர்த்தகம் மற்றும் ஸ்தாபனங்கின் முகவரி / தொலைபேசி தகவல்களை இலவசமாக தேடி தெரிந்து கொள்ளலாம்
http://www.justdial.com/
9) இணையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான மொழியில் தினசரி / வார நாளிதழ்களை இலவசமாக வாசித்து செய்திகளை அறியலாம்
http://www.tamilhindu.com/
http://www.dinamalar.com/
http://www.dinamani.com/
http://www.dailythanthi.com/
http://www.tamilnewspaper.net/
http://www.vikatan.com/
http://www.puthiyathalaimurai.com/
http://www.nakkheeran.in/
10) இணையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை நேரலையாக இலவசமாக கண்டு மகிழலாம்
http://puthiyathalaimurai.tv/new/
http://www.bbc.co.uk/
11) SPEED POST மூலமாக நீங்கள் அனுப்பும் தபால்களை இந்திய தபால் துறையின் இணையதளம் மூலமாக தபால் சேர்ந்த விவரம் அறியலாம்
http://services.ptcmysore.gov.in/Speednettracking/Track.aspx
12) இந்திய தபால் துறையின் INTERNATIONAL SPEED POST / ELECRTONIC MONEY ORDER / REGISTERED POST / EXPRESS PARCEL / E-VPP சேவைகளை தபால் துறையின் இணையதளம் மூலமாக விவரம் அறியலாம்.
http://www.indiapost.gov.in/tracking.aspx
H. மென்பொருள் (Software) பதிவிறக்கம் செய்ய
1) இணையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான மென்பொருளை இலவசமாக பதிவிறக்கம் செய்து உபயோகிக்கலாம்
http://www.filehippo.com/
I. வணிகம் (Economy)
1) தமிழ் நாட்டின் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலை விவரம் அறியலாம்
http://www.goldenchennai.com/
http://www.rates.goldenchennai.com/
http://www.bullionrates.in/p/live-bullion-rates.html
2) வெளிநாட்டின் பணமதிப்புக்கு இந்திய ரூபாயின் அன்றைய மாற்றத்தக்க மதிப்பை அறியலாம்
http://www.gocurrency.com/
http://www.xe.com/
H. அரசு சார்ந்த விண்ணப்ப படிவங்கள் (Online)
1) பாஸ்போர்ட் விண்ணப்பம்
http://www.passport.gov.in/
2) பட்டதாரிகள் அரசு வேலைவாய்ப்பிற்கு பதிவு செய்ய
http://www.tn.gov.in/services/employment.html
J. அரசு நலத் திட்ட படிவங்கள் (Online)
1) குடும்ப அட்டை
http://www.tn.gov.in/appforms/ration.pdf
2) மகளிர் சுய வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வங்கிக் கடன் பெறுவதற்கான விண்ணப்பம்
http://www.tn.gov.in/tamiltngov/appforms/socialwelfare/wses_bankloan_form.pdf
3) பெண்கள் திருமணத்திற்கு கோரப்படும் உதவித் தொகை விண்ணப்பம் மற்றும் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்
http://www.tn.gov.in/tamiltngov/appforms/socialwelfare/socialwelfareschemes.pdf
4) நலிந்தோர் குடும்ப நல நிதியுதவி பெருவதற்கான மனு
http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-drs.pdf
5) ஆதரவற்ற முதியோர் / விதவைகள் / கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் / உடல் ஊனமுற்றோர் உதவி தொகைக்கான மனு
http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-oap.pdf
http://www.tn.gov.in/schemes/swnmp/social_security_net.pdf
6) புல எல்லை அளந்து அத்து காட்டக் கோருவதற்கான விண்ணப்பம்
http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-boundary.pdf
7) திருமணப்பதிவிற்கான குறிப்பு ஆவணம் மற்றும் விண்ணப்ப படிவம்
http://www.tnreginet.net/english/Applforms/appln3.doc
http://www.tnreginet.net/english/Applforms/compulsory_marriage/Comp_Marriage_Application_Tamil.pdf
பட்டா பதிவு மாற்றம் கோருவதற்கான விண்ணப்ப படிவம் – சாதாரண பெயர் மாற்றம் / உட்பிரிவு மாற்றம்
http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-patta-transfer.pdf
K. விவசாய சந்தை சேவைகள் (Online)
1) தேசிய அளவிலான விற்பனை நிலவரம்
http://agmarknet.nic.in/
2) பதிவு செய்து தினசரி சந்தை விலைகளை பெறும் வசதி
http://indg.in/agriculture/e2030aci-nya2039-aea3153oiTM-moo2039/
3) தோட்டப்பயிரகளின் சந்தை நிலவரம்
http://nhb.gov.in/OnlineClient/categorywiseallvarietyreport.aspx
4) முக்கிய வியாபாரிகள் பற்றிய விவரம்
http://indg.in/agriculture/major-traders-database/
5) தமிழ்நாட்டில் உள்ள விவசாய அமைப்புகள் / சங்கங்கள்
http://indg.in/agriculture/database-of-growers-federations-farmers-associations-in-tamil-nadu/
6) கொள்முதல் விலை நிலவரம்
http://www.tnsamb.gov.in/price/login.php
7) ஒழுங்குமுறை விற்பனை கூடம்
http://www.tnsamb.gov.in/mktcom.php
தினசரி சந்தை விற்பனை விலை நிலவரம்
http://59.90.246.98/pricelist/
9) வானிலை செய்திகள்
http://services.indg.in/weather-forecast/
L. தொழில் நுட்பங்கள்
1) பயிர் சாகுபடி, பாதுகாப்பு மற்றும் பயிர் பெருக்கம்
http://www.agritech.tnau.ac.in/ta/Agriculture/agri_index_ta.html
http://www.agritech.tnau.ac.in/ta/crop_protection/crop_prot_ta.html
2) விதை கொள்முதல் செய்ய இருப்பு நிலை விவரம்
http://www.tnagrisnet.tn.gov.in/website/availabilityReports.php?type=Seed
3) உயிரிய தொழில்நுட்பம்
http://www.agritech.tnau.ac.in/ta/bio_tech/biotech_ta.html
4) அறுவடை பின்சார் தொழில் நுட்பம்
http://www.agritech.tnau.ac.in/ta/post_harvest/post_harvest_ta.html
5) உயிரி எரிபொருள்
http://www.agritech.tnau.ac.in/ta/bio_fuels/bio_fuels_ta.html
M. வேளாண் செய்திகள்
1) பாரம்பரிய வேளாண்மை
http://www.agritech.tnau.ac.in/ta/itk/indi_farm_ta.html
http://www.agritech.tnau.ac.in/ta/crop_protection/crop_prot_ta.html
2) வளம்குன்றா வேளாண்மை
http://www.agritech.tnau.ac.in/ta/sustainable_agri/susagri_ta.html
3) பண்ணை சார் தொழில்கள்
http://www.agritech.tnau.ac.in/ta/farm_enterprises/farm_enter_ta.html
4) ஊட்டச்சத்து
http://www.agritech.tnau.ac.in/ta/nutrition/nutrition_ta.html
5) உழவர்களின் கண்டுபிடிப்பு
http://www.agritech.tnau.ac.in/ta/farm_innovations/farm_innovations.html
N. திட்டம் மற்றும் சேவைகள்
1) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் திட்டங்கள் & சேவைகள்
http://www.tnrd.gov.in/schemes_states.html
2) வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான திட்டங்கள் & சேவைகள்
http://www.agritech.tnau.ac.in/ta/govt_schemes_services/govt_serv_schemes_ta.html
3) வட்டார வளர்ச்சி
http://www.agritech.tnau.ac.in/ta/dev_blocks/indextnmap_ta.html
4) வங்கி சேவை & கடனுதவி
http://www.agritech.tnau.ac.in/ta/banking/credit_bank_ta.htm
5) பயிர் காப்பீடு
http://www.agritech.tnau.ac.in/ta/crop_insurance/crop_ins_ta.html
6) Krishi Vigyan Kendra (KVK) | Agricultural Technology Management Agency (ATMA)
http://www.agritech.tnau.ac.in/ta/kvk/kvk_ta.html
http://www.agritech.tnau.ac.in/ta/atma/atma_ta.html
7) NGOs & SHGs
http://www.agritech.tnau.ac.in/ta/ngo_shg/ngo_shg_ta.html
அக்ரி கிளினிக்
http://www.agriclinics.net/
9) கிசான் அழைப்பு மையம்
http://www.agritech.tnau.ac.in/ta/kisan/kisan_ta.html
10) பல்லாண்டு மேம்பாட்டு குறிக்கோள்
http://www.agritech.tnau.ac.in/ta/mdg/mdg_ta.html
11) கேள்வி பதில்
http://www.agritech.tnau.ac.in/ta/faq_ta.html
12) பல்கலைக்கழக வெளியீடுகள்
http://www.agritech.tnau.ac.in/ta/tnau_publications/tnau_publish_ta.html
O. ஈ – வேளாண்மை செய்தி மற்றும் சேவைகள்
1) தோட்டக்கலை
http://www.agritech.tnau.ac.in/ta/horticulture/horti_index_ta.html
2) வேளாண் பொறியியல்
http://www.agritech.tnau.ac.in/ta/agrl_engg/agriengg_index_ta.html
3) விதை சான்றிதழ்
http://www.agritech.tnau.ac.in/ta/seed_certification/seedcertification_index_ta.html
4) அங்கக சான்றிதழ்
http://www.agritech.tnau.ac.in/ta/org_farm/orgfarm_index_ta.html
5) பட்டுபுழு வளர்ப்பு
http://www.agritech.tnau.ac.in/ta/sericulture/seri_index_ta.html
6) வனவியல்
http://www.agritech.tnau.ac.in/ta/forestry/forestry_tamil_index.html
7) மீன்வளம் மற்றும் கால்நடை
http://www.agritech.tnau.ac.in/ta/fisheries/fish_index_ta.html
தினசரி வானிலை, மழைப்பொழிவு மற்றும் நீர்த்தேக்க நிலைகள்
http://services.indg.in/weather-forecast/
9) விதை மற்றும் உரம் தயாரிப்பாளர் விபரம்
http://www.tnsamb.gov.in/seedcomp.html
http://www.tnsamb.gov.in/fertilizers.html
10) உரங்களின் விலை விபரம்
http://www.tnagrisnet.tn.gov.in/website/FertilizerPrice.php
P. போக்குவரத்து துறை
1) ஓட்டுனர் பழகுனர் உரிமம் மனு முன்பதிவு
http://www.tn.gov.in/appforms/form2.pdf
2) புகார்/கோரிக்கைப் பதிவு
http://transport.tn.nic.in/transport/registerGrievanceLoad.do
3) வாகன வரி விகிதங்கள்
http://www.tn.gov.in/sta/taxtables.html
4) புகார்/கோரிக்கை நிலவரம்
http://transport.tn.nic.in/transport/grievance_statusLoad.do
5) ஓட்டுனர் உரிமம் சேவை முன்பதிவு
http://tnsta.gov.in/transport/transportTamMain.do
6) தொடக்க வாகன பதிவு எண்
http://transport.tn.nic.in/transport/rtoStartNoListAct.do
மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.

மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வுக்காக செயல்படுத்தப்படும் அரசு நலத்திட்டங்கள்
திட்டம் தகுதி உதவி/இலவச உபகரணங்கள்
1. மூன்று சக்கர வண்டி வழங்குதல் இரண்டு கால்களும் செயல் இழந்து கைகளால் மட்டும் இயக்கக்கூடிய தகுதி, 12 முதல் 65 வயது வரை. 12 முதல் 15 வயது வரை சிறிய மூன்று சக்கர வண்டி. 16 முதல் 65 வயது வரை பெரிய மூன்று சக்கர வண்டி
2. சக்கர நாற்காலி வழங்குதல் இரண்டு கால்களும், இரண்டு கைகளும் செயல் இழந்தவர்கள். 5 முதல் 70 வயது வரை. சக்கர நாற்காலி
3.கால்தாங்கிகள் (காலிப்பர்) மற்றும் ஊன்றுகோல் வழங்குதல் மறுவாழ்வு முகாமில் தேர்வு செய்யப்பட்டவராய் இருக்க வேண்டும். காலிப்பர்- கிரட்சஸ் (ஊன்றுகோல்)
4. காதொலி கருவி வழங்குதல் 3 முதல் 70வயது வரை காதொலி கருவி
5. சூரிய ஒளியால் சக்தி பெறும் பேட்டரி வழங்குதல் காதொலி கருவி உபயோகப்படுத்துபவர்களாக இருக்க வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை சோலார் பேட்டரி
6. பார்வையற்றோர்களுக்கு கருப்பு கண்ணாடி, மடக்கு ஊன்றுகோல் வழங்குதல் இரண்டு கால்களும் பார்வை இல்லாமை, 12 வயதுக்கு மேல் உள்ளவர்கள். கருப்புக் கண்ணாடி, மடக்கு ஊன்றுகோல்
7. பார்வையற்றோர்களுக்கு பிரெய்லி கைக்கடிகாரம் வழங்குதல் சுயதொழில் செய்பவராகவோ, அமைப்பு சாரா நிறுவனங்களில் வேலை செய்பவராகவோ 10ஆம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணாக்கர்களாகவோ இருக்கலாம். பிரெய்லி கைக்கடிகாரம்
8. கால்கள் இழந்தவர்களுக்கு செயற்கைக்கால் வழங்குதல் மூன்று சக்கர வேண்டி வழங்குதல் விபத்தினாலோ பிற காரணத்தினாலேயோ லோ கால் துண்டிக்கப்பட்டவர்கள். செயற்கை;க கால்
9. பேட்டரியால் இயங்கும் மூன்று சக்கர வண்டி இலவசமாக மாணவர்களுக்கு வழங்குதல் கல்வி பயிலும் நிறுவனத்தின் சான்று பெற்று சமர்பிக்க வேண்டும். 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்மு;. மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும். பேட்டரியால் இயங்கும் மூன்று சக்கர வண்டி
திருமண உதவித்தொகை
10. அ. பார்வையற்றவரை திருமணம் செய்யும் நல்ல நிலையில் உள்ள நபருக்கு ரூ.25,000 மற்றும் 4 கிராம் தங்கம் வழங்குதல் அ. இருவருக்கும் இது முதல் திருமணமாக இருக்க வேண்டும். 21 வயது பூர்தியாகி இருக்க வேண்டும். அ. ரூ.12,500 ரொக்கமாகவும். ரூ.12,500 தேசிய சேமிப்பு பத்திரமாகவும் வழங்கப்படும.; (பார்வையற்றோர் திருமண உதவித் தொகை)
திட்டம் தகுதி உதவி
ஆ. பேசும் திறனற்ற காது கேளாத வரை திருமணம் செய்யும் நல்ல நிலையிலுள்ள நபருக்கு ரூ. 25,000 மற்றும் 4 கிராம் தங்கம் வழங்குதல் இருவருக்கும் இது முதல் திருமணமதக இருக்க வேண்டும். ஆரசின் திருமண உதவி ஏதும் பெற்றிருக்கக் கூடாது. 21 வயது பூர்த்திhகி இருக்க வேண்டும். ரூ.12,500 ரொக்கமாகவும் ரூ.12,500 தேசிய சேமிப்பு பத்திரமாகவும் வழங்கப்படும். (காது கேளாதோர் திருமண உதவித் தொகை)
இ) ஒரு கை (அல்லது) ஒரு கால் (அல்லது) இரண்டு அவயங்களும் முழுவதுமாக மாற்றுத்திறனாளியை திருமணம் செய்யும் நல்ல நிலையில் உள்ளவர்க்கு ரூ.25,000 மற்றும் 4 கிராம் தங்கம் வழங்குதல். இருவருக்கும் இது முதல் திருமணமாக இருக்க வேண்டும். அரசின் திருமண உதவி ஏதும் பெற்றிருக்கக் கூடாது. 21 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். ரூ.12,500 ரொக்கமாகவும் ரூ12500 தேசிய சேமிப்பு பத்திரமாகவும் வழங்கப்படும். (மாற்றுத் திறனாளி திருமண உதவித்தொகை)
ஈ) மாற்றுத்திறனாளியை மாற்றும் திறனாளி திருமணம் செய்யும் நபருக்கு உதவித்தொகை ரூ.25,000 மற்றும் 4 கிராம் தங்கம் வழங்குதல். இருவருக்கும் இது முதல் திருமணமாக இருக்க வேண்டும். அரசின் திருமண உதவி ஏதும் பெற்றிருக்கக் கூடாது. 21 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். ரூ.12,500 ரொக்கமாகவும் ரூ12500 தேசிய சேமிப்பு பத்திரமாகவும் வழங்கப்படும். (மாற்றுத் திறனாளி
திருமண உதவித்தொகை
உ) மேற்கண்ட நான்கு வகையான திருமண நிதியுதவி திட்டத்திலும் பட்டயம், பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு பயின்ற பெண்களுக்கு மட்டும் மூ.50,000 மற்றும் 4 கிராம் தங்கம் வழங்கப்படும். பட்டயம், பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு பயின்ற பெண்களுக்கு மட்டும் ரூ.25,000 ரொக்கமாகவும், ரூ.25,000 தேசிய சேமிப்பு பத்திரம் மற்றும் 4 கிராம் தங்கம் வழங்கப்படும். (மேற்கண்ட நான்கு வகையான திருமண நிதியுதவி திட்டம்)
கல்வி உதவித் தொகை
கல்வி உதவித் தொகை வழங்குதல் 8ஆம் வகுப்புக்கு மேல் அரசு பள்ளியிலோ அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளியிpலோ கல்வி நிறுவனங்களிலோ பயில வேண்டும். ஆண்டுக்கு ரூ.500 கல்வி உதவித்தொகை (1ம் வகுப்பு முதுல் 5ம் வகுப்பு வரை படிப்பவர்க்கு) ஆண்டுக்கு ரூ.1500 கல்வி உதவித் தொகை (6 ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிப்பவர்க்கு)
வங்கிக் கடன்
அ) சுயவேலை வாய்ப்பு வங்கிக் கடன் அரசு மானியம் வழங்குதல் மாற்றுத் திறனாளி என்பதற்கு அரசு அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும். 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். வங்கிகளில் ஏற்கெனவே கடன் பெற்று நிலுவைத் தொகை இல்லாதவராக இருக்க வேண்டும். வங்கிக் கடன் தொகையில் மூன்றில் ஒரு பங்கு அல்லது ரூ.3000 இதில் எது குறைவோ அது அரசு மானியமாக வழங்கப்படும்.
பயனச் சலுகை
அ) பேருந்து பயணச்சலுகை (பார்வையற்றோர்) பார்வையற்றோர் அரசு அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். நகர மற்றும் புறநகரப் பேருந்துகளில் மாவட்டம் முழுவதும் மட்டும் சென்றுவர இலவச பஸ் பாஸ் வழங்கப்படும்.
ஊனத்தை ஆரம்ப நிலையில் கண்டறிந்து பயிற்சி அளிக்கும் மையம்
1. ஆரம்ப ஊனத்தை கண்டறிதல் மனவளர்ச்சி குன்றிய இளம் சிறுவர்களுக்கான ஆரம்ப பயிற்சி மையம் (0-6 வருடங்கள்) மூளை முடக்கு வாதம், மனவளர்ச்சி குறைவு ஆட்டிஸம் போன்ற பாதிப்புள்ள குழந்தைகள் இலவச பயிற்சிக்கு தகுதி உடையவர்கள். இலவச தசைப்பயிற்சி, பேச்சு பியற்சி சிறப்புக் கல்வி மற்றும் சிற்றுண்டி வழங்கப்படும்.
பராமரிப்பு உதவித் தொகை
கடும் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் மூளைவளர்ச்சி பாதிக்கப்பட்டவர்கள் கடும் உடல் மாற்றுத் திறனாளிகள் (ஊனத்தின் அளவு 60மூக்கு மேல்) மாவட்ட தேர்வுக்குழு மூலம் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மட்டும் உதவித் தொகை வழங்கப்படும். மாதம் ரூ. 1000 வீதம் தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்படும். அதன்பனி;பு வட்டாச்சியர் அலுவலகங்களுக்கு பரிந்துரை செய்யப்படும்.
தேசிய அடையாள அட்டை
மாற்றுத்திறனாளிக்ளுக்கான தேசிய அடையாள அட்டை மாற்றுத்திறனாளிகள் தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவமனையில் வியாழன் கிழமைகளில் நடைபெறும் மருத்துவக்குழுவிலும் மற்றும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் செவ்வாய் கிழமை தோறும் நடைபெறும் மருத்துவக் குழுவில் ஊனத்தின் தன்மை மற்றும் அளவு குறிப்பிட்டு சான்று பெற வேண்டும். ஊனத்தின் சதவிகிதம் 40% மற்றும் அதற்கு மேல் உள்ளவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்படும். குடும்ப அட்டை நகல் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் நான்கு விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை வழங்கப்படும். (தமிழக அரசின் அனைத்து உதவிகளையும் பெற பயன்படும்.)
பாதுகாவலர் நியமனம்
மனவளர்ச்சி குன்றியவர், மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டவர் புற உலக சிந்தனையற்றவர் மற்றும் பலவைக மாற்றுத்திறனாளிகளுக்கு பாதுகாவலர் நியமன (கார்டியன்சிப்) சான்று வழங்குதல் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் குடும்ப அட்டை மற்றும் ஊனமுற்றவர்களுக்கு வழங்கப்படும் தேசிய அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். 18 வயது பூர்த்தியானவர்களுக்கு பாதுகாவலரை நியமிக்க பெற்றோர் அல்லது நிறுவனம் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு அறக்கட்டளை சட்டம் 199ன் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையிலான குழு மூலம் பாதுகாவலர் நியமனச் சான்று வழங்கப்படும். மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
தொழிற்பயிற்சிகள்
கை கால் ஊனமுற்ற காது கேளாத நபர்களுக்கு கணிணி பயிற்சி மாற்றுத்திறனாளிகள் 102 தேர்ச்சி கணிதம் பௌதீகம் இரசாயனம் தாவரவியல் விலங்கியல் ஆகிய பாடங்களில் தேர்ச்சி ஆய்வுக்கூடத்தில் தன்னிச்சையாகச் செயல்படும் மற்றும் பொருட்களை உபகரணங்கள் தானே சுயமாக எடுத்துப் பயன்படுத்தும் உடல் தகுதி. வருமானச் சான்று தேசிய அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரியில் இலவச இரண்டு வருட பயிற்சி அளிக்கப்படும். மாதம் ரூ. 300 உதவித்தொகை.
எலும்பு முறிவு மருத்துவர், மனநல மருத்துவர். காது மூக்கு தொண்டை மருத்துவர், செவிதிறன் அளவீடு, கண் பார்வைதிறன் அளவீடு, தேசிய அடையாள அட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலர், வருவாய்த்துறை மாற்றுத் திறனாளிக்ள உதவித்தொகை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, தாட்கோ அலுவலர், மகளிர் திட்ட சுயஉதவிக்குழு அமைத்தல்,. வேலைவாய்ப்புத்துறை,. பேருந்து பயண சலுகை ஆகிய துறைகள் மாற்றுத்திறனாலிகள் மறுவாழ்வு முகாமில் செயலாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
வந்தே மாதரம் மு. நாகேந்திர பிரபு
Source : http://www.kayalnews.com/islam/essays/1561-2012-02-17-12-02-59



மின் திருட்டு என்றால் என்ன?
மின்சார ஒழுங்குமுறை ஆணைய விதிகளுக்கு அப்பாற்பட்டு மின்சாரத்தை தவறாகப் பயன்படுத்தும் அனைத்து முறைகளும் மின் திருட்டாகவே கணக்கில் கொள்ளப்படுகிறது.
எதெல்லாம் மின் திருட்டு?
டிரான்ஸ்பார்மர், தெருவோர மின் இணைப்புப் பெட்டி, மின் கம்பம் ஆகியவற்றில் கொக்கி போட்டு மின்சாரம் திருடுவது. ஒரு வீட்டில் இருந்து மற்றொரு வீடு அல்லது வணிகத்துக்கு மின்சாரம் தருவது, வீட்டு பயன்பாட்டுக்கு பெற்று வணிகப் பயன்பாடு போன்ற வேறு வகைக்கு பயன்படுத்துவது, மீட்டரை ஓடவிடாமல் காந்தம் போன்ற பொருளை வைப்பது, மீட்டரை
குறிப்பிட்ட நாட்களுக்கு துண்டித்து மின்சாரம் பயன்படுத்துவது, கட்டுமானத்துக்கு தற்காலிக இணைப்பு பெறாமல் ஏற்கனவே உள்ள இணைப்பில் இருந்து மின்சாரம் பெறுவது போன்றவை மின் திருட்டாகும்.
மின் திருட்டில் எத்தனை வகைகள் உள்ளன?
மீட்டரைத் திருத்துதல், மீட்டருக்கு செல்லாமல் மின்சாரத்தை மாற்றுவது, நேரடியாக கொக்கி போடுதல், மீட்டரில் போலி முத்திரை பதித்தல்,
வேறு கட்டண வீதத்துக்கு மின்சாரத்தை பயன்படுத்துதல், மின் இணைப்புத் துண்டிக்கப்பட்டால், மின் துறை ஊழியர்கள் அனுமதியின்றி, தானாகவே மின் இணைப்பை வயர் மூலம் மீட்டெடுத்தல் ஆகியவை மின் திருட்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
மின் திருட்டுக்கு தண்டனை என்ன?
மின் திருட்டில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட நுகர்வோருக்கு காப்புத் தொகை என்ற பெயரில், ஒரு ஆண்டுக்கு கணக்கிடப்பட்டு, இரண்டு மடங்கு பயன்பாட்டுத் தொகை அபராதம் விதிக்கப்படும். இந்த தொகையை கட்டிய பிறகு, சமரசத் தொகை என்று ஒரு கட்டணம் வசூலிக்கப்படும். கிரிமினல் வழக்கு தொடராமல் இருக்க, இந்த சமரசத் தொகையை நுகர்வோர் செலுத்த வேண்டும்.
மின் இணைப்பு துண்டிக்கப்படுமா?
மின் திருட்டைக் கண்டுபிடித்தவுடன், சம்பந்தப்பட்ட மின் இணைப்பை உடனடியாகத் துண்டித்து விடுவர். பின்னர் அபராதம் மற்றும் சமரசத் தொகைக் கட்டியவுடன் மறு இணைப்புக் கட்டணத்துடன், மறு இணைப்பு வழங்கப்படும்.
மின் திருட்டு குறித்து யாரிடம் புகார் அளிக்கலாம்?
தமிழகம் முழுவதும் மின் வாரிய சேர்மன் கட்டுப்பாட்டில் 18 பறக்கும் படைகளும், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களைக் கொண்ட படைகளும் கூடுதலாக உள்ளன. சென்னை 94458 57591, 044-2841 2906, மதுரை, 94430 37508, 0452-2537508, கோவை 94430 49456, 0422-2499560, திருச்சி 9443329851, 0431- 2422166 ஆகிய எண்களில் புகார் தரலாம். மற்ற பகுதியினர் சென்னை அலுவலகத்துக்கோ, அந்தந்த மண்டல தலைமைப் பொறியாளருக்கோ புகார் அளிக்கலாம்.


அங்கும் இங்கும் அலையாமல் இலகுவாக இணையதளத்திலேயே தகவல் பெறும் உரிமை சட்டம் மூலம் அமைச்சர்களிடம் தகவல் கேட்க முடியும். 37 துறைகளுக்கு மட்டுமே தற்போது Onlineல் விண்ணப்பம் செய்ய முடியும்.
கீழே உள்ள லிங்க் ஐ கிளிக் செய்து
https://rtionline.gov.in/request/request.php
வரும் Website ல் "Select Ministry/Department/Apex body" என்பதன் கீழ் உங்களுக்கு தேவையான துறைகளை தேர்வு செய்து RTI ல் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.
செலுத்த வேண்டிய கட்டணம் ரூ 10 ஐ ஏதாவது ஒரு வங்கியின் வழியாக (INTERNET TRANSACTION) செய்யலாம்.
பயன் படுத்திக்கொள்ளவும்

மரியாதைக்குரியவர்களே,
                      வணக்கம்.
                        இந்திய ரிசர்வ் வங்கியின் ஒபட்ஸ்மேன் திட்டம்.

               இந்தியாவில் அனைத்து வங்கிகளையும் தனது கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கும் RBI (இந்தியன் நடுவண் வங்கி) யின் "ஒபட்சு மேன்" (Ombudsman)  என்ற திட்டம் பயனாளர்களுக்கு மிகுந்த சாதகமாகாவும், அசுர வேகத்தில் வாடிக்கையாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்து சிறப்பாக செயலாற்றுகிறது என்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கும் உண்மை.

                      XXXX (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற வாடிக்கையாளர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு உடமையாக்கப்பட்ட வங்கி கணக்கிலிருந்து ரூபாய் 3000/- பணம் எடுபதற்கு ATM சென்று உள்ளார். அப்போது பணம் வராமல் உங்கள் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டுவிட்டது என்ற குறுந்தகவல் (SMS ) வந்துள்ளது. உடனே அந்த வாடிக்கையாளர் வங்கியை அணுகி உள்ளார். வங்கியில் ஒரு கடிதம் எழுதி கொடுங்கள் பணம் தருகிறோம் மேலும் அந்த பணம் எடுத்த சீட்டை இதோடு இணைத்து தாருங்கள் என்று கூறியுள்ளனர். இவரும் கடிதம் கொடுத்து காத்திருந்து பலமுறை வங்கியை முறையிட்டும் எந்த பலனும் இல்லை.
சம்பவம் நடந்த நாள் ஏப்ரல் 10 ம் தேதி, வாடிக்கையாளர்  மே 10ம் தேதி வரை காத்திருந்து பலன் இல்லாமல் கடைசியாக பொறுமை இழந்த XXXXXXX என்ற வாடிக்கையாளர்  பின்னர்  தனியார் வங்கியில் வேலை செய்யும் தனது நண்பரிடம் கூறி உள்ளார். அவர் தான் முதன் முதலில் "ஒபட்சு மேன்" {Ombudsman } பற்றி சொல்லி உள்ளார்.
அதே நாளில் தனது அவலத்தை பின்வரும் இணையம் வாயிலாக https://secweb.rbi.org.in/BO/ComplaintToNodalOfficer.html ஆதங்கமாக தெரிவித்துள்ளார். மே 29 அன்று ரூபாய் 3000/- வங்கி கணக்கில் சேர்ந்துள்ளது. பின்னர் ஜூன் 18ம் தேதி அவருக்கு நஷ்ட ஈடு தொகை ரூபாய் 525/-ம் செலுத்தி உள்ளனர்.
அந்த சம்பந்த பட்ட வங்கி பலமுறை தொலைபேசியில் தொடர்புகொண்டு நேரில் அழைத்து கைப்பட கடிதமும் வாங்கி உள்ளனர். மேலும் சகல மரியாதையும் செய்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. இனி உங்கள் வங்கியும் இதுபோன்ற தவறுகளை செய்தால் நீங்களும் யோசிக்காமல் "ஒபட்சுமேன் {Ombudsman} https://secweb.rbi.org.in/BO/ComplaintToNodalOfficer.html சொடுக்கி உங்கள் குற்றங்களை பதிவு செய்யுங்கள்.
நீங்கள் கூறும் குற்றம் உண்மை என்று நிருபணம் செய்யபட்டால் சமந்தப்பட்ட அதிகாரி பணியிடை நீக்கம் செய்யபடும் அளவிற்கு "ஒபட்சு மேன்" க்கு { Ombudsman } அதிகாரம் உள்ளது. மேலும் வங்கி அதிகாரிகளின் குற்றம் தொடர்ந்து அதிகமாக இருந்தால் சமந்தப்பட்ட வங்கி கிளை மூடப்படும் அளவிற்கு "ஒபட்சு மேன்" அதிகாரம் உள்ளது.
PL CLICK THIS LINK TO LOG YOUR COMPLAINTS https://secweb.rbi.org.in/BO/ComplaintToNodalOfficer.html
மரியாதைக்குரியவர்களே,
                      வணக்கம்.பெண்களுக்கு உதவும் எண்கள்.

       தமிழக அரசின் பெண்கள் அவசர உதவி எண். 4423452365,1091:இந்த எண் பயன்பாடு   திடீர் ஆபத்துக்கள் வரும்போது பெண்கள் இந்த எண்ணைத் தொடர்புகொள்ளலாம். எங்கோ ஓர் இடத்தில் தனித்துவிடப்பட்டு விட்டாலும் அல்லது தங்க இடமில்லாதபோதும் இந்த நம்பருக்கு தொடர்புகொள்ளலாம்! இந்த எண் எடுக்கப்படவில்லை என்றால் 044-23452365 என்கிற எண்ணைத் தொடர்புகொள்ளலாம்! 
             பெண் குழந்தைகள் என்றால் 1098 என்கிற எண்ணைத் தொடர்புகொள்ளலாம்!
         பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்டு ஆதரவற்ற நிலையில் இருக்கும் வயதான பெண்கள் என்றால் 1253-ஐ தொடர்புகொள்ளலாம்.
04428551155:
குடும்பத்தில் கணவன் மூலம் வன்கொடுமைக்கு ஆளானாலோ அல்லது வேலை செய்யுமிடத்திலோ, கல்லூரியிலோ பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டாலோ 044-28551155 என்கிற தமிழ்நாடு மகளிர் ஆணையத்தின் எண்ணுக்கும், 044-25264568 என்ற எண்ணுக்கும் அழைத்து ஆலோசனைகள் பெற்றுக்கொள்வதோடு புகாரும் கொடுத்து உங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்குத் தீர்வும் காணலாம்.
04426530504, 26530599:
மனரீதியாக பாதிக்கப்பட்ட பெண்களை, ஆதரவற்ற பெண்களைப் பாதுகாக்க 044 - 26530504, 044-26530599- என்கிற எண்களைத் தொடர்புகொள்ளலாம். இது, சென்னை முகப்பேரிலுள்ள பெண்களுக்கான விழுதுகள் தொண்டு நிறுவனத்தின் எண்!    மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
04426184392, 9171313424:
வாடகைத் தாய்களாகப் போய் புரோக்கர்களிடம் ஏமாறும் பெண்கள் 044-26184392, 9171313424 என்கிற உலக வாடகைத் தாய்களின் உரிமைகள் அமைப்பு எண்ணைத் தொடர்புகொண்டு வாடகைத்தாய் என்றால் என்ன? அவர்களுக்கான உரிமைகள், விதிமுறைகள் என்ன என்பனவற்றை அறியலாம்.
04425353999, 90031 61710:
ரயில் பயணங்களின்போது பெண்களுக்கு ஆபத்து ஏற்பட்டால் புகார் தெரிவிக்க ரயில்வே போலீஸ் நம்பரான 044-25353999, 90031 61710, 99625 00500 எண்களைத் தொடர்புகொள்ளலாம்.
95000 99100:
சென்னைக் கல்லூரிகளில் ராக்கிங் என்றால் 95000 99100 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். கொடுத்தால் போதும்,உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்கும்.
04424749002, 04426744445:
ஆட்டோவில் அளவுக்கதிகமான குழந்தைகளை ஏற்றிச்சென்றால் 044-24749002 மற்றும் 044-26744445 என்கிற எண்களைத் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம்.
04428592828, 94454 64748:
பொருட்கள் வாங்கும் கடைகளில் ஏமாற்றப்படுகிறீர்கள் என்று உணர்ந்தால் மாநில நுகர்வோர் புகார்களுக்கான டோல் ஃப்ரீ எண் 180011400, 94454 64748, 72999 98002, 72000 18001, 044- 28592828 ஆகிய எண்களைத் தொடர்புகொண்டு புகார் கொடுப்பதோடு ஆலோசனைகளையும் பெறலாம்.
93833 37639:
பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர் மீதி சில்லரையைக் கொடுக்காதது அல்லது குடித்துவிட்டோ, செல்போன் பேசிக்கொண்டோ ஓட்டுநர் பேருந்தை ஓட்டுவது போன்ற புகார்களுக்கு 93833 37639 என்கிற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பலாம்.
மாற்றம்வேண்டும்..மாற்றவேண்டும்..
மாற்றத்திற்கு தோள்கொடுப்போம்....
நன்றி;
https://www.facebook.com/pages/Loksatta-Party-Madurai-District/474034309363000
லோக்சத்தா கட்சி மதுரை மாவட்டம்....


சுதந்திர தினத்தன்று பிளாஸ்டிக் தேசியக் கொடியை பயன்படுத்தினால் 3 ஆண்டு சிறை...
இந்தியாவின் 68–வது சுதந்திர தினம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 15–ந்தேதி நாடெங்கும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
இந்த கொண்டாட்டத்தின் போது பேப்பரில் தயாராகும் மூவர்ண தேசியக் கொடிகளையே பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் தேசிய கொடிகளை பயன்படுத்த கூடாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய உள்துறையின் பொதுப்பிரிவு இயக்குனர் சியாமளாமோகன் இது தொடர்பாக எல்லா மாநிலங்களுக்கும் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–
அரசு மற்றும் தனியார் நடத்தும் முக்கிய விழாக்களில் பேப்பர் தேசியக் கொடிக்கு பதிலாக பிளாஸ்டிக்கில் தயாராகும் தேசியக் கொடிகளை பயன்படுத்துகிறார்கள். பிளாஸ்டிக் தேசியக் கொடிகள் எளிதில் மக்காது. இதனால் சுற்றுச்சூழல் மாசு பாதிப்பு ஏற்படும்.
மேலும் பிளாஸ்டிக் தேசியக் கொடிகளை கவுரவமான முறையில் அகற்றுவதும் பெரும் பிரச்சினையாக உள்ளது. எனவே அனைத்து விழாக்களிலும் பிளாஸ்டிக் தேசியக் கொடிகளை பயன்படுத்த மாநில அரசுகள் அனுமதிக்க கூடாது.
பேப்பர் தேசியக் கொடிகளை பயன்படுத்த மக்களிடம் மாநில அரசுகள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் அந்த உத்தரவில் கூறியுள்ளார்.
பிளாஸ்டிக் தேசியக் கொடியை விற்பவர்கள், வாங்குபவர்கள் மற்றும் பயன்படுத்துபவர்கள் மீது தேசிய கவுரவம் இழிவு படுத்தப்படுவதை தடுக்கும் சட்டம்–1971–ன் கீழ் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில் பிளாஸ்டிக் தேசிய கொடியை பயன்படுத்துபவர்கள் மீது 3 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை விதித்து நடவடிக்கை எடுக்க முடியும்.



                பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா ? சொத்து பரிமாற்றம் என்பது, ஏதோ இரு நபர்களுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கல் நிகழ்வாக மட்டுமில்லாமல், அது நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய அளவுகோலாக பார்க்கப்படும் வகையில் முக்கியத்துவம் பெற்றுவிட்டது.
எனவேதான், இத்தகைய பரிமாற்றங்களுக்கு சட்ட பாதுகாப்பு அளிக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.மன்னராட்சி காலத்தில் இருந்தே சொத்து பரிமாற்றங்களை ஆவணபடுத்துவது தொடர்பான பணிகள் நடைபெற்றுள்ளன.
கல்வெட்டுகள், செப்பு பட்டயங்கள், ஓலைச் சுவடிகள், காகிதங்கள் என, இதற்கு பயன்படுத்தப்பட்ட பொருள்களை போலவே இதற்கான மொழி வழக்குகளும் காலந்தோறும் மாறிவந்துள்ளன. தொடர்ந்து மாறியும் வருகின்றன.இதற்கான சட்ட பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக 1864ம் ஆண்டு பதிவுத்துறை ஏற்படுத்தப்பட்டது. 1899ம் ஆண்டு இந்திய ஸ்டாம்ப் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து பதிவு சட்டம் 1908ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதில் உள்ள குறைபடுகளை சரி செய்யும் வகையில், அடுத்தடுத்து பல்வேறு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு பத்திரப்பதிவு தொடர்பான பணிகள் முறைபடுத்தப்பட்டு வருகின்றன.
தமிழகம் முழுவதும் உள்ள 574 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு ஆண்டுக்கு சராசரியாக 1.5 கோடி பேர் வந்து செல்கின்றனர். இதன்மூலம் ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 30 லட்சம் ஆவணங்கள் பதிவு செய்யபடுகின்றன.இவ்வாறு பதிவு செய்வதற்கு, ஆவணங்களை எழுதுவது என்பதே ஒரு முக்கிய கட்டமாக உள்ளது. 30 ஆண்டுகள் முன்பு அனைத்து பிரிவு மக்களும் குறிப்பிட்ட சில பிரிவினரையே சார்ந்திருந்தனர். அரசு அங்கீகாரம் பெற்ற ஆவண எழுத்தர்கள் வரவை அடுத்து, இதில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. இதனால், ஆவணங்கள் எழுதும் முறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
பொதுவாக வீடு, மனை, வாங்கும் பலரும், அது தொடர்பான ஆவணங்களை பிறரிடம் அளித்தே சரி பார்க்கின்றனர். ஆனால் இந்த ஆவணங்களை வாங்குபவரும் விற்பவரும் முழுமையாக படிக்க வேண்டும் என்பதே வல்லுனர்களின் ஆலோசனையாக உள்ளது.இத்தகைய ஆவணங்களை எழுதுவோர் வழக்கமாக பயன்படுத்தி வரும் வாசகங்களில்
இடம்பெறும் குறிப்பிட்ட சில வார்த்தைகள் இன்னமும் புரியாதவையாகவே உள்ளன.
இதில், ஆவணங்கள் அடிக்கடி பயன்படுத்தப்படும் சில வார்த்தைகளும், அவற்றின்
விளக்கங்கள் விவரம்:
பட்டா: ஒரு நிலம் இன்னார் பெயரில் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் வருவாய்துறை அளிக்கும் சான்றிதழ்.
சிட்டா: குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு அதன் பயன்பாடு, யாருடைய கட்டுபாட்டில் உள்ளது என்பது தொடர்பான விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.
அடங்கல்: நிலத்தின் பரப்பு, பயன்பாடு, கிராமத்தின் மொத்த நிலத்தில் இது எந்த பகுதயில் உள்ளது என்ற விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.
கிராம நத்தம்: ஒவ்வொரு கிராமத்திலும் குடியிருப்பு பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலம்.
கிராம தானம்: கிராமத்தின் பொது பயன்பாட்டுக்காக நிலத்தை ஒதுக்குவது.
தேவதானம்: கோவில் பயன்பாட்டுக்காக குறிப்பிட்ட நிலத்தை தானமாக அளித்தல்.
இனாம்தார்: பொது நோக்கத்துக்காக தனது நிலத்தை இலவசமாக அளித்தவரை குறிக்க பயன்படுத்தும் சொல்.
விஸ்தீரணம்: நிலத்தின் பரப்பளவு. எல்லைகளை குறிப்பது.
ஷரத்து: பிரிவு.
இலாகா: துறை.
கிரயம்: நிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்வதை ஆவணபடுத்துதல்.
வில்லங்க சான்று: ஒருநிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்த அதன் உரிமையாளர், அதனை மறைத்துவிட்டு, அதே நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது மோசடி. இந்த விவரத்தை அறிந்து கொள்ள உதவும் பதிவுத்துறை ஆவணம்.
புல எண்: நில அளவை எண்.
இறங்குரிமை: வாரிசுரிமை.
தாய்பத்திரம்: ஒரு குறிப்பிட்ட நிலம், இப்போதைய உரிமையாளருக்கு முன்னர் யாரிடம் இருந்தது என்பதை அறிய உதவும் முந்தய பரிவர்த்தன ஆவணங்கள்.
ஏற்றது ஆற்றுதல்: குறித்தவகை பொறுப்பை நிறைவற்றுவதற்கு உறுதி அளித்தல்.
அனுபவ பாத்தியதை: நிலத்தை பயன்படுதிகொள்ளும் உரிமை.
சுவாதீனம் ஒப்படைப்பு: நிலத்தின் மீதான உரிமையை ஒப்படைத்தல்.
ஜமாபந்தி: வருவாய் தீர்வாயம்.
நன்செய்நிலம்: அதிக பாசன வசதி கொண்டநிலம்.
புன்செய்நிலம்: பாசன தேவைக்கு மழையை நம்பியுள்ள நிலம்.
குத்தகை: ஒரு நிலத்தை பயன்படுத்தும் உரிமையை குறிப்பிட்ட காலத்துக்கு சில நிபந்தனைகளுடன் அளிப்பது அல்லது பெறுவது.
இந்த வார்த்தைகளின் பயன்பாடு சமீபகாலமாக படிப்படியாக குறைந்து வருகிறது என பதிவுதுரையினர் தெரிவித்தனர்.23 வகை மாதிரி ஆவணங்கள்ஒருவர் தன்னிடம் உள்ள சொத்தை, வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது தொடர்பான ஆவணங்களை எழுத மூன்றாவது நபர் ஒருவரை சார்ந்திருக்கும் நிலையை மாற்ற வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வந்தது.
இதை ஏற்ற, சொத்து விற்பனை, அடமானம், ஒப்பந்தம், பொது அதிகார ஆவணம், ரத்து செய்யும் ஆவணம், உள்ளிட்ட 23 வகையான ஆவணங்களின், ஆங்கிலம் மற்றும் தமிழ் மாதிரி படிவங்களை பதிவுத்துறை வெளியிட்டுள்ளது.
பதிவுதுறையின் www.tnreginet.net என்ற இணையத்தளத்தில் இருந்து இவற்றை இலவசமாக பதிவிறக்கம் செய்து, பெயர், முகவரி, சொத்து விவரங்களை மட்டும் பூர்த்தி செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.... நன்றி : உழவன்


தங்கநகை வாங்கப்போகிறீர்களா?
ஹால்மார்க் என்பது ஆபரணத்தங்கத்தில் உள்ள தங்கத்தின் சுத்தத்தன்மையை அளவிடுவதற்கான அதிகாரப்பூர்வ முத்திரை.நகைகளின் தரத்தை உறுதிசெய்யும்பொருட்டு இந்திய தரநிர்ணய அமைவனம்(BIS) 2000 ம் ஆண்டு முதல் வழங்கிவருகிறது.ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட நகைகள் வாங்குவதன் மூலம் மாற்றுக்குறைவான நகைகள் வாங்கி ஏமாற்றம் அடைவதை தவிர்க்கலாம்.
• ஹால்மார்க் தரமுத்திரைத்திட்டம் கட்டாயம் இல்லை.விண்ணப்பிக்கும் வியாபாரிகளுக்கு மட்டுமே வழங்குகிறார்கள்.(BIS Act 1986)
• சுத்தத்தன்மைக்கு உத்தரவாதம் ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட நகைகள்தான்.நாம்தான் தேர்ந்தெடுக்கவேண்டும்.
• ஹால்மார்க் முத்திரையுள்ள நகைகள் சிறியதாக இருந்தாலும் அதில் ஐந்து முத்திரைகள் இருக்கும்.1.பி.ஐ.எஸ் முத்திரை,2.நேர்த்தித்தன்மை முத்திரை,3.அஸேயிங்& ஹால்மார்க் மையத்தின் முத்திரை,4.ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட ஆண்டு.5.நகை விற்பனையாளர் முத்திரை.
• ஹால்மார்க் உரிமம் பெற்ற விற்பனையாளர் கண்டிப்பாக பூதக்கண்ணாடி வைத்திருக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.நாம் நகை வாங்கும்போது பூதக்கண்ணாடி கேட்டுவாங்கி 5 முத்திரைகளையும் சரிபார்த்து வாங்கவேண்டும்.
• நகைகளில் 916 அல்லது 916&KDM அல்லது 916&BIS முத்திரை மட்டுமே இருந்தால் அது உண்மையான ஹால்மார்க் முத்திரை அல்ல!5 முத்திரைகள் இருக்கவேண்டும்.
• கேரட் மீட்டர்கள் மேற்புற சுத்தத்தனமையை மட்டுமே சோதித்துக்காட்டும்.(20 மைக்ரான் அளவு மட்டுமே).இதை முழுமையாக நம்பவேண்டாம்.
• 916(22காரட்) மட்டுமே ஹால்மார்க் என்பதில்லை.958-23காரட்,916-22காரட்,875-21காரட்,750-18காரட்,708-17காரட்,585-14காரட்,375-9காரட் இவ்வாறு அனைத்து நகைகளிலும் ஹால்மார்க் முத்திரை உண்டு.
• கேடியம்(KDM) என்பது கேட்மியம் மோனாக்ஸைடு உலோகத்தைக்குறிக்கிறது.சுத்தமானது என்றோ நேர்த்தியானது என்றோ பொருள் அல்ல.
• நகை செய்யும்போது எளிதாக தங்கத்தை பற்றவைப்பதற்காகப் பயன்படுத்தப்படும் பொடிதான் கேட்மியம்.
• கேட்மியம் பயன்படுத்துவது புற்றுநோய்வாய்ப்பை அதிகரிக்கும் என்பதால் ஹால்மார்க் செய்யப்பட்ட நகைகளில் சேர்க்க அனுமதி இல்லை.கேடியம் சுத்தமானது என்று எண்ணி ஏமாறவேண்டாம்.
• ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட நகைகள் விலை அதிகம் என்பது உண்மையல்ல!எவ்வளவு எடை கொண்ட நகையானாலும் ஹால்மார்க் முத்திரை பெற 18 ரூபாய் மட்டுமே செலவாகிறது.
• தங்கநகை வாங்கும்போது வியாபாரி தரும் எஸ்டிமேட் மட்டுமே வாங்காமல் முறையான பில்வாங்கவேண்டும்.
ஹால்மார்க் நகைகளில் குறை இருந்தால் பி.ஐ.எஸ் நிறுவனத்தில் புகார் தெரிவிக்கலாம்.
நன்றி : INDIAN CONSUMER & HUMAN RIGHTS FOUNDATION