மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
CPARS.ORG - சங்கத்தின் வலைப்பூவிற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
துவக்கவிழாவிற்கு வருகை தந்துள்ள மரியாதைக்குரிய சத்தி வட்டாட்சியர் அவர்களையும், மற்றும்தாளவாடி துணை வட்டாட்சியர் அவர்களையும்,திரு.போரான்-மல்லன்குழி பஞ்சாயத்து முன்னாள் தலைவர்-தாளவாடி அவர்களையும் வரவேற்ற சங்கப்பிரதிநிதிகள்.
இன்று 07-07-2013 ஞாயிறு (ஜூலை மாதம் ஏழாம் தேதி) மாலை மூன்று மணிக்கு ஈரோடு மாவட்டம் (சத்தியமங்கலம் -லாரி உரிமையாளர்கள் சங்கம் அருகில் உள்ள)
புனித ஜேம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ''நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் - தமிழ்நாடு''.என்ற சமூக நல அமைப்பின் மாநில அமைப்பின் துவக்கவிழா நடைபெற்றது.
CPARS.ORG-சங்க துவக்கவிழாவின்போது- புனித ஜேம்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவிகள் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் போற்றினர்..
சத்தியமங்கலம் வட்டாட்சியர் மரியாதைக்குரிய K.கண்ணப்பன்M.Sc.,B.Ed.,B.L.,அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி சங்கத்தின் முதல் விழாவினைத் துவக்கி வைத்தார்.அருகில் சங்கத்தின் தலைவர் A.A.ராமசாமி மற்றும் துணைத்தலைவர் S. ரவி அவர்கள்.
தொடர்ச்சியாக, தாளவாடி துணை வட்டாட்சியர் மரியாதைக்குரிய S.ஆறுமுகம் அவர்களும்,புனித ஜேம்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவிகளும் மற்றும் மரியாதைக்குரிய ஜேம்ஸ் P. குணராஜ்M.A.,M.Ed., அவர்களும் குத்துவிளக்கு ஏற்றினர்.
சத்தியமங்கலம் வட்டாட்சியர் மரியாதைக்குரிய K.கண்ணப்பன்,M.Sc.,B.Ed.,B.L., அவர்களது தொடக்க உரையில் பின்வருமாறு பேசினார்.
பொதுமக்கள் - நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் உரிமை பற்றிய விழிப்புணர்வு இன்னும் நகர்ப்பகுதிகளில் கூட பெறவில்லை.அதேபோல சாலையில் பயணம் செய்யும் விதிமுறைகள் தெரியாத நிலையில்தான் விருப்பம்போல
போக்குவரத்து செய்கிறார்கள். எனவே நகர்ப்பகுதிகள் மக்களுக்கும்,பள்ளிக்கூடங்கள்,கிராமப்பகுதியினர்,மலைப்பகுதியினர் ஆகியோரும் நுகர்வோர் பாதுகாப்புகளையும்,சாலைப் பயணத்தில் கடைபிடிக்கவேண்டிய பாதுகாப்புவிதிமுறைகளையும் தெரிந்து கொள்ளவேண்டும்.
கலப்படம் என்பது யாருக்காவது தெரிய வந்தால் தகவல் கொடுக்கவேண்டும்.உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.என்றார்.
தாளவாடி துணை வட்டாட்சியர் மரியாதைக்குரிய S.ஆறுமுகம் -ஐயா அவர்கள் பெயர்ப்பலகையைத் திறந்து வைத்தார்.
வீர வணக்கம்;-
நமது பாதுகாப்பிற்காக இன்னுயிர் நீத்த தியாகிகள்,ராணுவ வீரர்கள்,மீட்புப்பணியினர்,காவல்துறையினர்களுக்காக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தி - வீர வணக்கம்! என நினைவு போற்றும் மரியாதை செலுத்தப்பட்டது.
உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி;-
மரியாதைக்குரிய K. கண்ணப்பன்M.Sc.,B.Ed.,B.L., அவர்கள் வட்டாட்சியர் -சத்தியமங்கலம். மற்றும் மரியாதைக்குரிய S.ஆறுமுகம் அவர்கள் துணை வட்டாட்சியர்- தாளவாடி, ஆகியோர் முன்னிலையில் சங்கத்தின் உறுதிமொழி அனைவராலும் உரக்க வாசித்து ஏற்கப்பட்டது.
உறுதிமொழி விவரம் கீழ்கண்டவாறு,
உறுதிமொழி;- (PLEDGE)- 07-07-2013
(1) நமது இந்திய நாட்டின் ஒற்றுமைக்காகவும், நமது முன்னேற்றத்திற்காகவும் -நாமும் ,நமது வருங்கால சந்ததியினரும் நாட்டின் ஒற்றுமைக்கான பண்புகளுடனும்,சமாதானத்துடனும்,மகிழ்ச்சியு
டனும்,வளத்துடனும், வாழ்வதற்காகவும் ஒத்துழைப்பேன்.
(2) அதற்காக ,சாதி,மத,இன,மொழி,அரசியல் வேறுபாடு இல்லாமல் இந்திய அரசியல் சட்டத்திற்கு கட்டுப்பட்டும், ஒன்றிணைந்து செயல்படுவேன்.
(3) நாட்டின் நன்மைக்காக தன்னையே
அர்ப்பணித்து உயிர்நீத்த சுதந்திர போராட்ட
தியாகிகளையும்,ராணுவத்தினரையும்,மீட்பு பணியினரையும்,காவலர்களையும்
நினைவில் வைத்து போற்றி வணங்குவேன்.
(4) நமது
விழிப்புணர்வுக்காக நுகர்வோர் கல்வி பெற்றும்,சாலைப்பயணத்தில்
பாதுகாப்பிற்காக சாலை பாதுகாப்பு கல்வி பெற்றும் அதனைக் கடைப்பிடித்து
நானும் வாழ்வேன். மற்றவரையும் வாழவிடுவேன் என்று உளமாறவும்,உண்மையுடனும்
உறுதி ஏற்கிறேன்.மேற்கண்டவாறு உறுதிமொழி அனைவராலும் ஏற்கப்பட்டு அமர்ந்த பிறகு,
சங்கத்தின் தலைவர் மரியாதைக்குரிய A.A.ராமசாமி அவர்கள் தலைமை உரை நிகழ்த்தினார்.அவரது உரையில் மக்களுக்காக எவ்வித சுயநலமும் இன்றி பொதுநோக்கினைக் கொண்டு செயல்படுவோம்.இந்த சங்கத்தை மாபெரும் மக்கள் சங்கமாக மாற்றுவோம்.அரசியல் கலப்பு இன்றி 'மக்களுக்கு மக்களே அரசன்' என்பதை வலியுறுத்துவோம் என்று கூறினார்.
சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் மரியாதைக்குரிய A.P.ராஜூ தாளவாடி அவர்கள் துவக்கவிழாவிற்கு வருகைதந்துள்ள அனைவரையும் வரவேற்றுப்பேசினார்.விழா மேடையில் மரியாதைக்குரிய சத்தியமங்கலம் வட்டாட்சியர் அவர்கள்,தாளவாடி துணை வட்டாட்சியர் அவர்கள்,சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு.லோகநாதன் அவர்கள்,சங்கத்தின் துணைத்தலைவர் திரு.ரவி அவர்கள்.
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கத்தின் உறுப்பினர் திரு.த.வேணுகோபாலன் அவர்கள் மரியாதைக்குரிய வட்டாட்சியர்-(சத்தியமங்கலம்)அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி உபசரிக்க அனைவரும் கைதட்டி வரவேற்றனர்.
சங்கத்தின் ஒருங்கிணைப்பாளரும்,சத்தியமங்கலம்-லோகு கனரக வாகன ஓட்டுனர் பயிற்சிப் பள்ளியின் நிர்வாகியுமான மரியாதைக்குரிய K.லோகநாதன் அவர்கள் வழிகாட்டுதல் உரை நிகழ்த்தினார்.அவரது உரையில் நுகர்வோர் பாதுகாப்பு மட்டும் போதாது.இன்றைய சூழலில் சாலைப்பாதுகாப்பும் அவசியம் என்றார். சாலைக்கல்வி கொடுக்க, லோகு ஓட்டுனர் பயிற்சிப்பள்ளியானது அனைத்து கல்லூரிகள், பள்ளிகள்,கிராமங்கள்,மலைப்பகுதிகள் என அனைத்து இடங்களிலும் பொதுமக்கள்,இளைஞர்கள் மற்றும் ஓட்டுனர்களுக்கு
இலவச புத்தாக்கப்பயிற்சி,மன அழுத்தம் நீங்குவதற்கான பயிற்சி கொடுக்கும்.இந்த சங்கத்தோடு இணைந்து அதற்கான செயல்பாடுகளில் மாதந்தோறும் செயல்படுத்தும் என்று கூறினார்.
சங்கத்தின் செயலாளர் திரு.C.பரமேஸ்வரன் அவர்கள் சங்கத்தின் பெயர் விளக்கம் மற்றும் நோக்கங்கள் பற்றி விளக்கினார்.நோக்கங்களில் முக்கியமானவைகளான (1) CPARS.ORG சங்கம் பதிவு அனுமதி பெற்ற ஜூன் மாதம் பத்தாம் தேதி ஒவ்வொரு வருடமும் 'மாணவர் தினவிழா' மற்றும் 'ஓட்டுனர் தினவிழா' அனுசரிப்பது.(2) துவக்கவிழா நடைபெறும் இன்றைய தேதியான ஜூலை மாதம் ஏழாம் தேதி - ஒவ்வொரு ஆண்டும் 'பாதசாரிகள் & பயணிகள் தினவிழா' மற்றும் 'நடத்துனர் தினவிழா' அனுசரிப்பது.(3)மக்கள் நலனுக்கான சேவையில் தனியாகவோ,அரசுத்துறைகளுடன் இணைந்தோ,பிற சமூக சேவை அமைப்புகளுடன் இணைந்தோ,தனிநபரான தன்னார்வலர்களுடன் இணைந்தோ செயல்படும். பொது மக்களுக்கு 'நுகர்வோர் கல்வி மற்றும் சாலைப் பாதுகாப்பு கல்வி' கொடுக்க 'Mobile Library' என்னும் 'நடமாடும் நூல்நிலையம்' அமைத்து மக்கள் போக்குவரத்து மிகுந்துள்ள பேருந்து நிலையங்கள்,ஆட்டோ நிறுத்தங்கள்,முக்கிய சந்திப்புகள்,கடைவீதிகள்,பள்ளிகள்,கல்லூரிகள்,திருவிழாக்கூட்டங்கள்,
பொதுவிழாக் கூட்டங்கள்,கிராமப்பகுதிகள்,மலைப்பகுதிகள் ஆகிய இடங்களில் குறிப்பிட்ட கால வேளையில் தொடர்ந்து செயல்படுத்துவது ஆகும். என்று சங்கத்தின் குறிக்கோளை எடுத்துக் கூறினார்.
முன்னிலை வகித்த புனித ஜேம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் நிர்வாகி மரியாதைக்குரிய ஜேம்ஸ் P.குணராஜ்,M.A.,M.Ed.,அவர்கள் வாழ்த்துரை வழங்கும்போது , பொதுமக்கள் சேவைக்காக செயல்பட புனித ஜேம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி. என்றும் தயாராக உள்ளதாகக் கூறினார்.
நிறைவாக சங்கத்தின் பொருளாளர் திரு.V.பாலமுருகன்,B.B.A., அவர்கள் விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்த அனைவருக்கும் மற்றும் சங்கத்தின் அடையாளக்குறியீடு (LOGO) வடிவமைப்பு மற்றும் அழைப்பிதழ் வடிமைப்பு செய்து உதவிய நமது செயற்குழு உறுப்பினர் திரு.P.S.பெரியசாமி-ஸ்ரீபாலாஜு ரப்பர் ஸ்டாம்ப் ஒர்க்ஸ் -கோபி செட்டிபாளையம் அவர்களுக்கும் நன்றி கூறினார்.
முடிவில் புனித ஜேம்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவியர் நாட்டுப்பண் இசைக்க துவக்கவிழா இனிதே நிறைவு பெற்றது..
சிறந்த ஓட்டுனர் தேர்வு;-
அனுசரிப்பு,பொறுமை ஆகிய குணங்களுக்கான பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் கனரக சரக்கு வாகன ஓட்டுனர் திரு.மூர்த்தி அவர்களுக்கு துணை வட்டாட்சியர் அவர்கள் பொன்னாடை போர்த்தி வாழ்த்திய காட்சி.
சிறந்த ஓட்டுனர் தேர்வு;-
அனுசரிப்பு,பொறுமை ஆகிய குணங்களுக்கான பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் கனரக சரக்கு வாகன ஓட்டுனர் திரு.சலீம் பாய் - அவர்களுக்கு மரியாதைக்குரிய வட்டாட்சியர் அவர்கள் பொன்னாடை போர்த்தி வாழ்த்திய காட்சி.
இந்தக்கூட்டத்தின்போது சிறந்த ஓட்டுனர்களாகத் தேர்வு செய்யப்பட்ட தனியார் கனரக சரக்கு வாகன ஓட்டுனர்களான திரு.சலீம் பாய், மற்றும் திரு.மூர்த்தி ஆகிய இரண்டு ஓட்டுனர்களையும் மரியாதைக்குரிய வட்டாட்சியர் -சத்தியமங்கலம் அவர்களும்,மரியாதைக்குரிய துணை வட்டாட்சியர்-தாளவாடி அவர்களும் பாராட்டினர்.
சங்கத்தின் நோக்கங்கள் என பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்ட அச்சிட்ட பிரதியின் விவரம் கீழ்கண்டவாறு,
சிபர்ஸ்ஆர்க்- சங்கத்தின் நோக்கங்களில் சில,
மக்களின் பார்வைக்கு;-
(1) நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் சமூக நலனைக் காக்க- சாதி,மத,இன,மொழி,அரசியல் சார்பற்ற,இலாப நோக்கமற்ற,பொதுநலச்சேவை அமைப்பாக செயல்படுவது.நமது தேச ஒற்றுமைக்காகவும்,முன்னேற்றத்திற்காகவும் பாடுபட நமது சங்கத்தை மாபெரும் மக்கள் இயக்கமாக மாற்றுவது.
(2) மக்களிடையே நுகர்வோர் பாதுகாப்பு கல்வி,சாலை பாதுகாப்பு கல்வி கொடுப்பது.இதற்காக பொதுக்கூட்டம்,பிரச்சாரம்,கருத்தரங்கம்,பயிலரங்கம்,.கலந்துரையாடல், விவாதமேடை,பயிற்சிப்பட்டறை,வழிகாட்டி மையம் அமைத்து செயல்படுத்துவது.
(3) வாகன ஓட்டிகள்,பொதுமக்கள் அனைவருக்கும் இலவச புத்தாக்கப்பயிற்சி மற்றும் மனநலப்பயிற்சி கொடுப்பது.மது,போதை,புகை,கலாச்சார சீர்கேடு,எயிட்ஸ்,காசநோய்,போன்ற தீமைகள் பற்றி விழிப்புணர்வு கொடுப்பது.
(4) நூலகம் அமைப்பது. வாசிப்புத்திறனை மேம்படுத்த நடமாடும் நூலகம் ஏற்படுத்தி செயல்படுத்துவது.
(5) மலைவாழ் மக்கள்,கிராமப்பகுதி மக்கள்,இளைஞர்கள் நலனுக்காக பாடுபடுவது.
(6) கல்வி வழிகாட்டி முகாம் நடத்துவது.கல்வி சம்பந்தமான கண்காட்சி, போட்டித்தேர்வுகள்,சிவில் சர்வீஸ் தேர்வுகள்,நுழைவுத்தேர்வுகள்,பொது அறிவுத்தேர்வுகள்,அதற்கான ஆலோசனை வழங்குவது.பயிற்சிகள் கொடுப்பது.வழிகாட்டி மையம் அமைப்பது.வேலைவாய்ப்பு முகாம் நடத்துவது.
(7) பலவகை விபத்துக்கள்,முதலுதவி பயிற்சிகள்,மன நலம்,உடல் நலம்,சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு கொடுப்பது.
(8) பலவகை விபத்துக்கள்,இயற்கைச்சீற்றத்தினால் ஏற்படும் பேராபத்துகளின் போது தனியாகவோ,அரசுத்துறைகளுடன் மற்றும் சமூக சேவை அமைப்புகளுடன் இணைந்தோ உதவுவது.மக்கள் நலனுக்காக காவல்துறை மற்றும் மீட்பு பணித்துறையுடன் இணைந்து செயல்படுவது.
(9) மேற்கண்ட மக்கள் நலனுக்காக புத்தகங்கள்,அச்சுப்பிரதிகள்,சுற்றறிக்கைகள்,விளம்பங்கள் வாயிலாக பரப்புரை செய்வது.
துவக்கவிழாவிற்கு வருகை தந்து இருந்த பொதுமக்கள் அனைவருக்கும்
துவக்கவிழாவிற்கு வருகை தந்து இருந்த பொதுமக்கள் அனைவருக்கும்
சங்கத்தின் உறுதிமொழியும் & நோக்கங்களின் முக்கிய பகுதிகளும் அச்சிட்ட பிரதியாக வழங்கப்பட்டன.
அதன் பிறகு சங்கத்தின் பொதுக்குழு கூட்டமும்,தொடர்ந்து செயற்குழு கூட்டமும் நடைபெற்றன.அதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
என,
சங்கத்தின் தலைவர் அவர்களது ஒப்புதலுடன்,
C.பரமேஸ்வரன்,
செயலாளர்,
சிபர்ஸ்ஆர்க் (CPARS.Org),
மாநில மையம்,
தமிழ்நாடு.