Wednesday, 23 April 2014

அனைத்திந்திய சாரதிகள் தினம்

மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்,

       
  
      

அனைவரையும் வரவேற்கிறேன்.வருகிற ஜூன் மாதம் 26 ஆம் தேதி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில்
 (1)அனைத்திந்திய சாரதிகள் தினவிழா,
(2)போலீஸ்காவலர்கள் மற்றும் பொதுமக்கள் நல்லுறவு தினவிழா,
(3)உலக போதைப் பொருள் ஒழிப்புதினவிழா 
                ஆகிய முப்பெரும் விழா அனைவரின் ஒத்துழைப்போடு நடைபெற உள்ளது.அதுசமயம் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள்,பள்ளி மற்றும் கல்லூரிகளில் நாட்டின் உயிரோட்டம் சாலைப் போக்குவரத்து என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி,அனைத்து அரசுத்துறை அலுவலர்கள்,சமூக ஆர்வலர்கள்,அனைத்து வகை வாகன உரிமையாளர்கள், கல்வித்துறை சான்றோர்கள்,லயன்ஸ் கிளப்,ரோட்டரி கிளப்,ஒய்ஸ்மென் கிளப் இன்னும் பல சமூக சேவை அமைப்புகள், என அனை வரும் பங்கேற்கும் - சாரதிகளின் மதிப்பு சமூகத்தில் இழப்பா? என்ற தலைப்பில் மாபெரும் கருத்தரங்கம் நடைபெற உள்ளன. கருத்தரங்கத்தில் தனி மனித வாழ்வு மற்றும் தொழில்முறை வாழ்வு உட்பட பல்வேறு பிரச்சினைகளையும்விவாதிக்க உள்ளோம்.
  மேலும் விபரங்களுக்கு
http://alldriversindia.blogspot.com வலைப்பக்கம் சென்று காணலாம். முகநூல் முகவரி alldriversindia மின்னஞ்சல் முகவரி alldriversindia@gmail.com , consumerandroad@gmail.com
 லோகு கனரக வாகன ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி மற்றும் லோகு புகை பரிசோதனை நிலையம் -(NATIONAL HIGHWAY-209 BANNARI ROAD) சத்தியமங்கலம்.ஈரோடுமாவட்டம்.

Saturday, 19 April 2014

தகவல் பெறும் உரிமைச் சட்ட மனுக்களை தபால் அலுவலகத்திலேயே கொடுக்கலாம்.

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.

               தகவல் பெறும் உரிமைச் சட்ட மனுக்களை தபால் அலுவலகத்திலேயே கொடுக்கலாம்.
உங்கள் ஊர் அஞ்சலகம் அந்தக் கடமையைச் செய்கிறதா?
தகவல் உரிமைச் சட்டத்தின்கீழ் மத்திய அரசிடம் ஏதாவது தகவல் கேட்க எண்ணுகிறீர்களா? ஆனால் அந்த அலுவலகத்தின் முகவரி தெரியவில்லையா அல்லது அதை நேரில் தேடிக் கண்டுபிடித்து அதற்கான மனுவை அனுப்ப அவகாசமில்லையா அல்லது அதற்கான பதிவுத் தபால் கட்டணத்தை மிச்சப்படுத்த எண்ணுகிறீர்களா?
நீங்கள் எங்கும் அலைய வேண்டாம். உங்களுக்கு அருகில் இருக்கும் தபால் நிலையங்களில் அந்த மனுவைக் கொடுத்து விட்டால் போதும். அவர்களே சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு அனுப்பி வைத்து விடுவார்கள்!
நம்ப முடியவில்லையா? சந்தேகமே வேண்டாம், சட்டம் அப்படித்தான் சொல்கிறது.
                   ஆனால் பல தபால் நிலையங்களில் நீங்கள் மனுவைக் கொண்டு கொடுத்ததும் வாங்க மறுப்பார்கள். ஏனெனில் அவர்களுக்கு அப்படி ஒரு விதிமுறை இருப்பதே தெரியாது. ‘புதிய தலைமுறை’ அஞ்சல்துறை அதிகாரிகளிடம் இதைப் பற்றி விசாரித்தபோது அவர்கள் சொன்ன பதில், ‘இப்படி ஒரு சுற்றறிக்கை இருப்பதே எங்களுக்குத் தெரியாது’.!
இதற்கான ஆணைகள் தகவல் உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்த 2005ம் ஆண்டு அக்டோபர் மாதமே பிறப்பிக்கப்பட்டு விட்டன. அஞ்சலகங்கள் மத்திய அரசு, மத்திய அரசின் அமைச்சகங்கள், அவை சார்ந்த துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றின் மத்திய உதவிப் பொதுத் தகவல் அதிகாரிகளாக (Central Assistant public information officers - CAPIO) செயல்பட வேண்டும் எனப் பிரதமர் ஆணையிட்டார். இதற்கான விரிவான சுற்றிக்கையை 17.10.2005 அன்று அஞ்சல் துறையின் துணை டைரக்டர் ஜெனரலாக இருந்த கல்பனா திவாரி, அப்போது தமிழ்நாடு வட்டத்தின் தலைமை அஞ்சல் அதிகாரியாக இருந்த திருமதி. வத்சலா ரகுவிற்கு அனுப்பியுள்ளார் (Do.No.3&38/05&PG). அவரும் (Chief Postmaster General) ’அவசரம்... கோட்ட அஞ்சல் அதிகாரிகளுக்கு இதைத் தெரியப்படுத்துங்கள்’ என்று 2005ம் ஆண்டு அக்டோபர் 24ம் தேதி குறிப்பெழுதியிருக்கிறார்.
சரி, அந்த சுற்றிக்கை சொல்வது என்ன?
1.மத்திய அரசிடம் தகவல் கோரி வரும் விண்ணப்பத்தின் மூன்று நகல்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும். விண்ணப்பம் சரியாக நிரப்பப்பட்டுள்ளதா எனச் சரி பார்க்க வேண்டும். மனு தெளிவாக இல்லை என்றால் அதைத் தெளிவாக எழுத உதவ வேண்டும்.
2.மூன்று நகல்களில் ஒரு நகலில் ஒப்புதல் அளித்து அப்போதே விண்ணப்பதாரரிடம் ஒப்படைத்துவிட வேண்டும்.
3.விண்ணப்பத்தோடு தகவல் பெற செலுத்தப்படும் கட்டணம் வங்கி வரைவோலையாகவோ, போஸ்டல் ஆர்டராகவோ, நீதிமன்ற ஸ்டாம்ப்பாகவோ இருக்கலாம். அவை எல்லாமே ஏற்றுக் கொள்ளத்தக்கவை. அதனால் கட்டணம் இப்படித்தான் செலுத்தப்பட்டிருக்க வேண்டும் எனச் சொல்லி அலைக்கழிக்கக் கூடாது
4.மற்றொரு நகலை எந்த அலுவலகத்திற்கு அனுப்பி விட வேண்டுமோ அந்த அலுவலகத்திற்கு பதிவு அஞ்சல் மூலம் அஞ்சல் அலுவலகமே அனுப்பிவிட்டு விண்ணப்பதாரருக்கு அந்தத் தகவலைத் தெரிவிக்க வேண்டும். இதற்காக அஞ்சல் அலுவலகம் தனிப்பதிவேடுகளையும் விண்ணப்பதாரரால் ஒப்படைக்கப்பட்ட மூன்று நகல்களில் ஒரு நகலையும் பராமரிக்க வேண்டும்.
5.இதே நடைமுறையில் முதல் மேல்முறையீடு விண்ணப்பதையும் புதுடெல்லியில் இயங்கும் மத்திய தகவல் ஆணையத்திற்கு இரண்டாவது மேல்முறையீடு விண்ணப்பத்தையும் அஞ்சல் அலுவலகத்திலேயே ஒப்படைத்துவிடலாம். இந்தப் பணிகள் எதற்கும் கூடுதல் கட்டணம் ஏதும் அஞ்சல் அலுவலகத்திற்கு செலுத்த வேண்டியது இல்லை.
அஞ்சல் அலுவலகங்கள் செய்தாக வேண்டிய இந்த மக்கள் சேவை மக்களுக்குத் தெரியாது. ஏன், அஞ்சல் துறையில் பணியாற்றும் 70 சதவிகித அதிகாரிகளுக்குத் தெரியாது. கோட்ட, மண்டல, மாநில அளவிலான தலைமை அஞ்சல் அலுவலகங்களில் எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் சின்னத்திரையில் எல்லாவற்றையும் காட்டும் அஞ்சல்துறை இதை மட்டும் இன்றுவரை ஒளிபரப்பு செய்ததே இல்லை.
“95 சதவிகித அஞ்சல் அலுவலகங்களில் இப்படி ஒரு சுற்றறிக்கை எங்களுக்கு வரவில்லை. ஆகவே நாங்கள் தகவல் உரிமைச் சட்ட விண்ணப்பத்தை வாங்க மாட்டோம் என மிக எளிதாகச் சொல்லி முகத்தில் அடிக்கிறார்கள். இது இந்தச் சட்டத்தின் உயர் நோக்கத்திற்கு எதிரான செயல்” என்கிறார், இந்தியன் குரல் சட்ட விழிப்புணர்வு அமைப்பின் நிறுவன உறுப்பினர் எம்.சிவராஜ்.
ஆனால் வேலூரில் உள்ள தலைமை தபால் நிலையம் இந்தச் சேவையை செய்து கொண்டிருக்கிறது இதைக் குறித்து வேலூர் தலைமை தபால் அலுவலகத்தில் விசாரித்தபோது, “மாதத்திற்கு நான்கு, ஐந்து விண்ணப்பங்களைப் பெற்று உரிய பொதுத்தகவல் அலுவலருக்கு அனுப்பி வைக்கிறோம். சிறு கிராமங்களில் இருந்து பெற்று கூட அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு அனுப்பிவிடுவார்கள். அங்கிருந்து உரிய இடங்களுக்கு அஞ்சல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இதற்கான பதிவேடுகளையும் பராமரித்து வருகிறோம்” என்கின்றனர்.
ஒவ்வொரு அஞ்சல் அலுவலகத்திலும் இதனை தெளிவுபடுத்தும் விதமாக போர்டு ஒன்று ஏன் வைக்கக் கூடாது?
ஒருவேளை அஞ்சல்துறையிடம் இந்த போர்டு வைப்பதற்கு பணம் இல்லை என்றால், ஆங்காங்கு உள்ள தொண்டு நிறுவனங்களை இத்தகைய போர்டுகளை வைக்க அனுமதிக்கலாமே!

Wednesday, 16 April 2014

வாக்குரிமை நமது அடிப்படை உரிமை.

மரியாதைக்குரியவர்களே,

                         வணக்கம்.நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் -தமிழ்நாடு.வலைப்பக்கத்திற்கு அனைவரையும் இனிதே வரவேற்கிறோம்.


                     

Thursday, 10 April 2014

ஆர்.டி.ஓ.அலுவலகங்களின் குறியீடு எண்கள் விவரம்.


மரியாதைக்குரியவர்களே,
            

            வணக்கம்.நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் -தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.தமிழ்நாடு வாகன பதிவுக்கான வட்டார போக்குவரத்து அலுவலகங்களின் குறியீடு எண்கள் மற்றும் பகுதிநேர அலுவலகங்களின் குறியீடு எண்கள் விவரம் இங்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. நேரம் உள்ளபோது தமிழில் பதிவிட வேண்டும். தற்போது சில பகுதி அலுவலகங்கள் நீக்கப்பட்டும் எண்கள் திருத்தப்பட்டும் உள்ளன. 132 பதிவு எண் RTO அலுவலகங்கள் உள்ளன.மற்றும் .TN99 கோயமுத்தூர் மேற்கு என  இதுவரை தற்போது உள்ளதால் திருத்தங்கள் செய்ய வேண்டும். அதுவரை பொறுத்தருளவும்.
 1 TN01 - CHENNAI(CENTRAL)
2 TN02 - CHENNAI(NORTH-WEST)
3 TN03 - CHENNAI(NORTH-EAST)
4 TN04 - CHENNAI(EAST)
5 TN05 - CHENNAI(NORTH)
6 TN06 - CHENNAI(SOUTH-EAST)
8 TN09 - CHENNAI(WEST)
9 TN10 - CHENNAI(SOUTH-WEST)
10 TN11 - RTO TAMBARAM
11 TN11Z - SOLLINGANALLUR
12 TN16 - RTO, TINDIVANAM
13 TN18 - REDHILLS
14 TN18Z - AMBATTUR
15 TN19 - CHENGALPATTU
16 TN19Z - MADURANTAKAM
17 TN20 - TIRUVALLUR
18 TN20Y - POONAMALLE
19 TN21 - KANCHEEPURAM
20 TN21W - SRIPERUMBUDUR
21 TN22 - MEENAMBAKKAM
22 TN23 - VELLORE
23 TN23T - GUDIYATHAM
24 TN23Y - VANIYAMBADI
25 TN24 - KRISHNAGIRI
26 TN25 - TIRUVANNAMALAI
27 TN25Z - ARANI
28 TN28 - NAMAKKAL
29 TN28Y - PARAMATHIVELLORE
30 TN28Z - RASIPURAM
31 TN29 - DHARMAPURI
32 TN29W - PALACODE
33 TN29Z - HARUR
34 TN30 - SALEM(WEST)
35 TN30W - OMALUR
36 TN31 - CUDDALORE
37 TN31U - CHIDAMBARAM
38 TN31V - VIRUDHACHALAM
39 TN31Y - NEYVELI
40 TN32 - VILLUPURAM
41 TN32W - KALLAKURICHI
42 TN32Z - ULUNDURPET
43 TN33 - ERODE
44 TN34 - TIRUCHENCODE
45 TN36 - GOBICHETTIPALAYAM
46 TN36W - BHAVANI
47 TN36Z - SATHIYAMANGALAM
48 TN37 - COIMBATORE(SOUTH)
49 TN38 - COIMBATORE(NORTH) -
50 TN39 - TIRUPPUR(NORTH)
51 TN39Z - AVINASHI
52 TN40 - METTUPALAYAM
53 TN41 - POLLACHI
54 TN42 - TIRUPUR(SOUTH)
55 TN42Y - KANGAYAM
56 TN43 - OOTY
57 TN43Z - GUDALUR
58 TN45 - TRICHIRAPPALLI
59 TN45Y - THIRUVERUMBUR
60 TN45Z - MANAPPARAI
61 TN46 - PERAMBALUR
62 TN47 - KARUR
63 TN47Z - KULITHALAI
64 TN48 - SRIRANGAM
65 TN48Z - THURAIYUR
66 TN49 - THANJAVUR
67 TN49Y - PATTUKOTTAI
68 TN50 - THIRUVARUR
69 TN50Z - MANNARGUDI
70 TN51 - NAGAPATTINAM
71 TN51Z - MAYILADURAI
72 TN52 - SANGARI
73 TN52Z - METTUR
74 TN54 - SALEM(EAST)
75 TN55 - PUDUKOTTAI
76 TN55Z - ARANTHANGI
77 TN56 - PERUNDURAI
78 TN57 - DINDIGUL
79 TN57R - OTTANCHATRAM
80 TN57V - VADASANDUR
81 TN57Y - BATALAGUNDU
82 TN57Z - PALANI
83 TN58 - MADURAI(SOUTH)
84 TN58Z - THIRUMANGALAM
85 TN59 - MADURAI(NORTH)
86 TN59V - VADIPATTI
87 TN59Z - MELUR
88 TN60 - THENI
89 TN60Z - UTHAMAPALAYAM
90 TN61 - ARIYALUR
91 TN63 - SIVAGANGA
92 TN63Z - KARAIKUDI
93 TN64 - MADURAI(South)
94 TN65 - RAMANATHPURAM
95 TN65Z - PARAMAKUDI
96 TN66 - COIMBATORE(CENTRAL)
97 TN67 - VIRUDHUNAGAR
98 TN67U - SIVAKASI
99 TN67Z - SRIVILIPUTHUR
100 TN68 - KUMBAKONAM
101 TN69 - TUTICORIN
102 TN69Y - TIRUCHENDUR
103 TN69Z - KOVILPATTI
104 TN70 - HOSUR
105 TN72 - TIRUNELVELI
106 TN72V - VALLIOOR
107 TN73 - RANIPET
108 TN73Z - ARAKONAM
109 TN74 - NAGERCOIL
110 TN75 - MARTHANDAM
111 TN76 - TENKASI
112 TN76V - AMBASAMUTHIRAM
113 TN76Z - SANKARANKOIL
114 TN77 - ATTUR
115 TN77Z - VALAPADI
116 TN78 - DHARAPURAM
117 TN78Z - UDUMALPET


Sunday, 6 April 2014

உலக நுகர்வோர் தினவிழா மற்றும் வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம்


மரியாதைக்குரியவர்களே,
            வணக்கம்.''நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் 
           சாலை பாதுகாப்பு சங்கம் -தமிழ்நாடு'' வலைப்பக்கத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.
          06 ஏப்ரல் 2014 இன்று மதியம் இரண்டு மணிக்கு தாளவாடி - சாம்ராஜ் நகரம் பிரதான சாலையில்
          (தேர்தல் காரணமாக பயணியர் விடுதி வாடகைக்கு கிடைக்கவில்லை என்பதால் )
               தனியார் அலுவலகத்தில்  நுகர்வோர் தினவிழா,மற்றும் வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.

                இந்த விழாவிற்கு 
                              திரு.A.A..இராமசாமி -தலைவர் அவர்கள்

                              தலைமை ஏற்று தலைமையுரை ஆற்றினார். 
                                
                             திரு.A.P.ராஜூ செயற்குழு உறுப்பினர் அவர்கள் 

                                        அனைவரையும் வரவேற்றார்.

                                   திரு.S.ரவி துணை தலைவர் அவர்கள் 

                            முன்னிலை வகித்து கருத்துரை வழங்கினார்.

திரு.C.பரமேஸ்வரன் செயலாளர் 

அவர்கள் விழிப்புரை ஆற்றினார்.

                                              திரு.V.பாலமுருகன் பொருளாளர் 
                   
அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.
        
          கூட்டத்தில் தாளவாடி மலைப்பகுதி மக்களுக்கு கடைசி மனிதன் கிராமத்திலும் நுகர்வோர் விழிப்புணர்வு கொடுக்க வேண்டும் எனவும் அதற்காக பயிற்சி பட்டறை,கருத்தரங்கம்,விவாதக்களம் என  பல்வேறு தளங்கள் வாயிலாக நுகர்வோருக்கான விழிப்புரை கொடுப்பது எனவும்,அதேபோல மக்களை மக்களே ஆட்சி செய்ய அதிகாரம் வழங்கும் வாக்குரிமையின்  முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு  கொடுத்து அனைவரையும் வாக்களிக்க வைத்து வலுவான ஜனநாயகத்தை அமைப்பது பற்றி பேட்ஜ் அணிந்து விழிப்புரை கொடுப்பது. நோட்டீஸ் விளம்பரம் கொடுப்பது. பேனர் கட்டி விழிப்புரை  கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது.
           
             (வாக்குரிமை பிரச்சார நோட்டீஸ் மாதிரி படம் கீழே).

       வாக்காளர்களுக்கான விழிப்புரை பிரச்சாரம் செய்வதற்காக,  ஈரோடு மாவட்டம் - தாளவாடி,கடம்பூர் மலைப்பகுதிகள் மற்றும் சத்தியமங்கலம் பகுதிகள் அடங்கிய பவானிசாகர் சட்டமன்றத் தொகுதி நீலகிரி பாராளுமன்றத்தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளதால் நீலகிரி பாராளுமன்றத் தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்களிடம் அனுமதி பெற வேண்டும் என்ற தகவலின் அடிப்படையில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 04-04-2014அன்று சென்று அனுமதி கேட்டபோது
           அந்தந்த பகுதிக்குட்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்களே அனுமதி கொடுக்கலாம் என்றும் அதனால் ஈரோடு மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் சென்று (AD பஞ்சாயத்து ) உதவி தேர்தல் அலுவலர் அவர்களிடம்  வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய அனுமதி பெறவும் என அறிவுறுத்தியதன்பேரில் 14 - 04 -2014க்குள்  ஈரோடு மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் சென்று (AD பஞ்சாயத்து -திட்ட இயக்குநர்) உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்களிடம்  அனுமதி பெறுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

                    கூட்டம் துவக்கத்திற்கு முன்னதாக CPARS.Org  மத்திய சங்க  நிர்வாகிகள் ஆலோசனை செய்த காட்சிகளும்,நிகழ்ச்சி குறிப்புகள் தயாரித்த காட்சிகளும்........நேரம் காலை 11-00மணி.....


Saturday, 5 April 2014

தாளவாடியில் உலக நுகர்வோர் தினவிழா மற்றும் தாளவாடி கிளை துவக்கவிழா மற்றும் வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம்

     
மரியாதைக்குரியவர்களே,
                வணக்கம்.நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.06 ஏப்ரல் 2014ஆம் தேதி நாளை மதியம் 2-00மணிக்கு தாளவாடி பேருந்து நிலையம் அருகில்  உலக நுகர்வோர் தினவிழா மற்றும் தாளவாடி கிளை துவக்கவிழா மற்றும் வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் என  நடைபெற உள்ளது.ஆதலால் அனைவரும் கலந்து கொண்டு சமூக நலனுக்கான கருத்துக்களையும்,ஆலோசனைகளையும் வழங்குமாறு  அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
                                                     இப்படிக்கு,
                                                சமூக நலன் கருதி அன்பன்.


Thursday, 3 April 2014

2014தேர்தல்-வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு பிரச்சாரம்.

மரியாதைக்குரியவர்களே,
                   வணக்கம். நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் - தமிழ்நாடு.பதிவு எண் ;- 26 / 2013(அரசு பதிவு பெற்ற தன்னார்வ நுகர்வோர் சங்கம்) வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.

                  ''அனைவரும் வாக்களிப்போம் -வலுவான ஜனநாயகம் ''அமைப்போம் என வருகிற 24 - 04 -2014 பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு ஒருவார வாக்காளர்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்த உள்ளோம்.வாக்காளப் பிரச்சாரமானது 
        1)பேட்ஜ் அணிந்து தம் பணியினை செய்தல்.பேட்ஜ் அணிந்தமைக்கான காரணம் கேட்பவர்களிடம்  ''அனைவரும் ஓட்டுப்போடுங்க''.என வாக்காளர் உரிமையினை எடுத்துக்கூறுதல்.
  (2)நோட்டீஸ் பிரச்சாரம் செய்தல்,
 (3)சைக்கிள் பிரச்சாரம் அல்லது மோட்டார்சைக்கிள் பிரச்சாரம் அல்லது தெருமுனை பிரச்சாரம் செய்தல்
,(4)பேருந்துகள் உட்பட வாகனங்களில் நோட்டீஸ் ஒட்டி பிரச்சாரம் செய்தல்,
(5)சத்தியமங்கலம் பேருந்து நிலையம் மற்றும்மலைப்பகுதிகளான  தாளவாடி பேருந்து நிலையம் மற்றும் கடம்பூர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் வாக்காளர் விழிப்புணர்வு பேனர்களை கட்டி அனைவரையும் வாக்களிக்க கோருதல்.
                   என வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு கொடுத்து அனைவரையும் வாக்களிக்க ஆர்வமூட்டி வலுவான ஜனநாயகத்தை அமைக்க முயற்சி செய்வோம்.
                         அதற்கான அனுமதி வாங்கஇன்று (03 - 04 - 2014)காலை சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகம் சென்றோம்.
               சம்பந்தப்பட்ட  தேர்தல் பொறுப்பு அதிகாரிகள் சத்தியமங்கலம் வட்டம் உள்ளடங்கிய பவானிசாகர் சட்டமன்றத்தொகுதி  நீலகிரி பாராளுமன்றத்தொகுதிக்கு உட்பட்டதால்,
                       நீலகிரி பாராளுமன்றத்தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும்  நீலகிரி மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் சென்று அனுமதி பெற வேண்டும் என அறிவுறுத்தினர்.
                 அதன்படி  நாளை காலை (04 -04 - 2014) ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திலிருந்து உதகமண்டலம் சென்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்து அனுமதி வாங்கிவர உள்ளோம்.
                                                           என 
                             சங்க உறுப்பினர்களுக்காக 
                            தகவல்கொடுக்கும் அன்பன்
             

Tuesday, 1 April 2014

தாளவாடியில் சங்க கிளை துவக்கவிழா

மரியாதைக்குரியவர்களே,
        வணக்கம்.
 நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் தமிழ்நாடு.வலைப்பக்கத்திற்கு தங்களை வரவேற்கிறோம்.
 வருகிற 06- 04 - 2014 ஞாயிறு காலை 09- 00 மணிக்கு தாளவாடியில் நுகர்வோர் தினவிழா, நமது சங்கத்தின் கிளைத் துவக்கவிழா,வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சார தொடக்கவிழா,  என சமூக நலனுக்கான விழா நடைபெற உள்ளது.அது சமயம் அனைத்து சமூக ஆர்வலர்களும்,நமது சங்க உறுப்பினர்களும் தவறாமல் கலந்து கொண்டு  ஜனநாயகம் வலுப்பெற வாக்களிக்க போதிய தகவல்களை பெற கேட்டுக்கொள்கிறோம்.