Thursday, 25 June 2015

WEAR HELMET AWARNESS -தலைக்கவசம் அணிவோம் நம் உயிர் காப்போம்.

 தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகனத்தில் பயணிப்போம்....

மரியாதைக்குரியவர்களே,
                                  வணக்கம்.
 ஹெல்மெட் விழிப்புணர்வு நோட்டீஸ் விநியோகம்..இரு சக்கர வாகனத்தில் உடன் உதவி செய்த Er.சற்குணன் அவரது இரு சக்கர வாகனத்துடன் கெம்ப நாயக்கன் பாளையம் பா சுந்தரம் செட்டியார் நினைவு அரசு மேல்நிலைப் பள்ளியில்........


               இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து பயணிப்போம் என விழிப்புணர்வு நோட்டீஸ் பத்தாயிரம் எண்ணிக்கையில் விநியோகம்.




         முதல் நாளான ஜூன் 19 ந்தேதி அன்று தாளவாடி மற்றும் அதன்சுற்றுவட்டாரங்களில் பொதுமக்களுக்கும் அரசு அலுவலர்களுக்கும்  கொடுத்து பிரச்சாரம் செய்யப்பட்டது. 

                 இரண்டாம் நாளான ஜூன் 20 ந்தேதி சென்னை கலைமகள் நகர்,ஈக்காட்டுத்தாங்கல்,கோயம்பேடு பேருந்து நிலையம்,புதிய தலைமுறை தொலைக்காட்சி நிலைய வளாகம்,உட்பட பல இடங்களிலும் பேருந்துகளிலும்  இரண்டாயிரம் நோட்டீஸ்கள் விநியோகம் செய்யப்பட்டன.

                    மூன்றாம் நாளான ஜூன் 21 ந்தேதி சத்தியமங்கலம் P.V.லாட்ஜ் கலையரங்கத்தில் நடைபெற்ற அருந்ததிய இன மாணவ,மாணவியருக்கான பாராட்டுவிழாவில் ஐநூறு நோட்டீஸ்களுக்கும் அதிகமாக கொடுத்து விழிப்புரை செய்யப்பட்டது. 
             
          நான்காம் நாளான ஜூன் 22 ந் தேதி தாளவாடிகாவல்நிலையம் உட்பட கோடிபுரம்,பனகஹள்ளி ,திகனாரை,அருள்வாடி உட்பட பல இடங்களில் நோட்டீஸ்கள் வழங்கி விழிப்புரை செய்யப்பட்டன.

              ஐந்தாம் நாளான ஜூன்23 ந் தேதி ஆசனூர் காவல்நிலையம் உட்பட தேவர்நத்தம்,கோட்டாடை,அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி உட்பட பல இடங்களில் நோட்டீஸ் வழங்கி விழிப்புரை செய்யப்பட்டன.

                    ஆறாம் நாளான ஜூன்24ந் தேதி சத்தியமங்கலம் பேருந்து நிலையம்,அரசு போக்குவரத்துக்கழகத்தின் அலுவலகம்,போக்குவரத்துக்காவல்நிலையம்,தாளவாடி பேருந்து நிலையம்,அரசு போக்குவரத்துக்கழகம் தாளவாடி கிளை  உட்பட பல இடங்களில் நோட்டீஸ் வழங்கி விழிப்புரை செய்யப்பட்டன. 

                      ஏழாம் நாளானஜூன் 25ந் தேதி சத்தியமங்கலம் காமதேனு கலை அறிவியல் கல்லூரி,பண்ணாரி அம்மன் பொறியியல் கல்லூரி,அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,மாடல் பள்ளி,தொடக்கக்கல்வி உதவி அலுவலர் அலுவலகம்,ஜான் டி பிரட்டோ பள்ளி ,மற்றும் மகளிர் பள்ளி,அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி,நகராட்சி உயர்நிலை பள்ளி,லிட்டில் பிளவர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,எஸ்ஆர்என் மெட்ரிக் பள்ளி சத்தியமங்கலம்  நூலகம்,பெரிய கொடிவேரி நூலகம்,புனித பிரான்சிஸ் சேவியர் மேல்நிலைப் பள்ளி கொடிவேரி,துவக்கப்பள்ளி கொடிவேரி,DGபுதூர் அரசு உயர்நிலைப்பள்ளி,பாரதி மெட்ரிக் பள்ளி,பா.சுந்தரம் செட்டியார் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி,கெம்பநாயக்கன் பாளையம் என அனைத்து பள்ளிகளுக்கும் இருசக்கர வாகனத்தில் சென்று நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன.

GANDHI POLITECHNIC COLLEGE - VINNAPPALLI,SATHYAMANGALAM

                      தலைக்கவசம் நம் உயிர்க் கவசம்.
மரியாதைக்குரியவர்களே,
       வணக்கம். 
        சத்தியமங்கலம்  காந்தி பாலிடெக்னிக் கல்லூரி விண்ணப்பள்ளி  இருபால் மாணவ,மாணவியர் இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து உயிருக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என 24ந்தேதி புதன்கிழமை சத்தியமங்கலம் நகரில் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.