Monday 21 July 2014

காமதேனு கலை அறிவியல் கல்லூரி-சத்தியமங்கலத்தில் கண் தான விழிப்புணர்வு முகாம்.

மரியாதைக்குரியவர்களே,
                             வணக்கம்.



       சத்தியமங்கலம்,காமதேனு கலை அறிவியல் கல்லூரியில் கண் தான விழிப்புணர்வு முகாம்.
  சிவகாசி பட்டாஸ் நகர் அரிமா சங்கமும்,சத்தியமங்கலம் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடும் இணைந்து காமதேனு கலை அறிவியல் கல்லூரியில் வைத்து21.7.2014அன்று காலை கண் தான விழிப்புணர்வு முகாம் நடத்தினார்கள்.
         இந்த முகாமிற்கு கல்லூரியின் செயலாளர் திருமதி P.அருந்ததி அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி  துவங்கி வைத்தார்.கல்லூரியின் தாளாளர் திரு.R.பெருமாள்சாமி அய்யா அவர்கள் தலைமை தாங்கினார்கள்.கல்லூரியின் மாணவி செல்வி.A.ரோகிணி அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.KGR மருத்துவமனை Dr.K.G.ரங்கநாதன் அவர்களும்,கல்லூரியின் முதல்வர் திரு.K.செந்தில்குமார் அவர்களும்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர். திரு.C.பரமேஸ்வரன் அவர்களும்,ஒருங்கிணைப்பாளர் Lion.K.லோகநாதன் அவர்களும்,தலைவர் திரு.A.A.இராமசாமி அவர்களும்,கல்லூரியின் இணை செயலாளர் திருமதி.P.மலர் செல்வி அவர்களும்,சிவகாசி பட்டாஸ் நகர் அரிமா சங்கத்தின் தலைவர் அரிமா.K.ராஜ்குமார் அவர்களும்,செயலாளர் அரிமா.A.உலகராஜ் அவர்களும்,பொருளாளர் அரிமா,V.ஞானஸ்கந்தப்பன் அவர்களும் முன்னிலை வகித்தார்கள்.
                 சிவகாசி அரிமா சங்க பட்டய தலைவரும்,கண் தான மாவட்ட தலைவருமான  அரிமாDr.J.கணேஷ் MJF அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கண்தானத்தின் அவசியம் மற்றும் நன்மைகள் குறித்து சிறப்புரை ஆற்றினார்.கண் தானம் பற்றிய குறும்படம் திரையிட்டு காண்பிக்கப்பட்டது.கண் தான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும்,ஸ்டிக்கர்களும் விநியோகிக்கப்பட்டன.

            கண்தான மாவட்ட தலைவர் அரிமாDr.J.கணேஷ் MJF அவர்கள் கூறுகையில் அகத்துக்கு அழகு அளிப்பவை மட்டுமல்ல கண்கள் உலகத்தை நாம் காண உதவும் அற்புத உறுப்பு.கண்கள் இல்லாத வாழ்க்கை ஓர் இருண்ட உலகம்.இத்தகைய இருண்ட உலகத்தில் வாழ்பவர்களுக்கு ஒளிவிளக்காக  கிடைத்ததுதான் கண் தானம்.மனிதர்களுக்கு மரணம் உண்டு.ஆனால் கண்களுக்கு மரணம் இல்லை.எனவே மரணத்திற்குப்பிறகுஅனைவரும் கண் தானம் செய்யலாம்.கண்ணின் கருவிழியின் பாதிப்பால் ஏறக்குறைய 68லட்சம் இந்தியர் முற்றிலும் கண்ணொளி இழந்துள்ளனர்.மறைந்தவர் தானமாக கொடுக்கும் கண்களை கொண்டுஇவர்களில் பெரும்பாலானோர் வாழ்வில் ஒளியேற்ற முடியும்.ஆனால் நாம் ஆண்டுதோறும் பெறும் கண் கருவிழிகளோ  சில ஆயிரங்களே.சமுதாயத்தில் தொடர்ந்து விழிப்புணர்வை அதிகரிப்பதின் மூலம் இத்தகைய கண்தான சேவையை பன்மடங்கு உயர்த்த முடியும் என்றார்.

 கண்தான விழிப்புணர்வு பற்றிய கேள்விகளுக்கு பதில் அளித்த மாணவ,மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.காமதேனு கலை அறிவியல் கல்லூரியின் மாணவ,மாணவியர் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு அமைப்பின் உறுப்பினர்களும்,ஊர் பொதுமக்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.முகாமில் பங்கு பெற்ற மாணவ,மாணவிகளுக்கு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன.முகாமின்போது தேசிய கண்ணொளி விழிப்புணர்வு இயக்கம்,பயணிகள் பாதுகாப்பு சங்கம் ஆகிய சமுக நலனுக்கான அமைப்புகள் துவங்கப்பட்டன.


             அரிமா Dr.J. கணேஷ்MJF அவர்களுக்கு '' தேசிய கண்ணொளி விழிப்புணர்வு இயக்கம்'' சார்பாக ''கண்தான வழிகாட்டி - விருது'' வழங்கி கௌரவிக்கப்பட்டது.
முகாமிற்கான ஏற்பாடுகளை காமதேனு கலை அறிவியல் கல்லூரி மாணவ,மாணவியர் சிறப்பாக செய்து இருந்தனர்.கல்லூரியின் மாணவி செல்வி.J.பெனசிர் ரிஸ்வானா அவர்கள் நன்றி கூற முகாம் இனிதே நிறைவடைந்தது.

மாலை 3.30 மணியளவில் ''பார்வைக்கோர் பயணம்'' கண் தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.பேரணியில் தேசிய கண்ணொளி விழிப்புணர்வு இயக்கமும்,நாட்டு நலப்பணித் திட்ட மாணவ,மாணவியரும் கலந்து கொண்டனர்.பேரணியை சத்தியமங்கலம் காவல் ஆய்வாளர் (சட்டம்& ஒழுங்கு)அவர்கள் மற்றும் போக்குவரத்து ஆய்வாளர் அவர்கள் மற்றும் அரிமா.K.லோகநாதன் அவர்கள் துவக்கி வைத்தனர்.பேரணி சத்தியமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி முன்பு துவங்கி சத்தியமங்கலம் பேருந்து நிலையம் முன்பு நிறைவடைந்தது.