Thursday 26 March 2015

ஈரோடு மாவட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்-2015

         சத்தியமங்கலம் உட்கோட்ட காவல் துறைக்கு உட்பட்ட
                           பொது மக்கள் குறை தீர்க்கும் முகாம்

மரியாதைக்குரியவர்களே,
          வணக்கம்.
                      நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம். இன்று 26மார்ச் 2015 மாலை 5.00 மணிக்கு சத்தியமங்கலம் கொங்கு மஹால் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு காவல்துறை ஈரோடு மாவட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது.பத்திரிக்கையாளர்கள்,அரசு சாரா சமூக சேவை அமைப்புகள்,சமூக ஆர்வலர்கள்,மக்கள் பிரதிநிதிகள்,அரசியல் அமைப்பு பிரமுகர்கள்,மகளிர் அணியினர் உட்பட பொதுமக்கள் ஏராளமானவர்கள் கலந்துகொண்டு தங்களது குறைகளை நேரிலும்,மனுக்களாகவும் கொடுத்தனர்.அனைத்தையும் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
    திரு.காவல் ஆய்வாளர் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.

            திரு.எம்.ஆர்.சிபிசக்கரவர்த்தி.இ.கா.ப.அவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  தலைமை ஏற்று பொதுமக்கள் குறைகளை கேட்டறிந்தார்.பொதுமக்களிடம் குறை தீர்ப்பதற்கான  மனுக்களை பெற்றுக்கொண்டார்.

    திரு.எஸ்.மோகன் அவர்கள் காவல்துணை கண்காணிப்பாளர் சத்தி உட்கோட்டம் துவக்கவுரை நிகழ்த்தி மக்களின் நண்பன் காவல்துறை என நினைவுபடுத்தினார். மற்றும் சத்தி உட்கோட்டத்திற்குட்பட்ட காவல்துறை ஆய்வாளர்களின் அலைபேசி எண்களை அனைவருக்கும் அறிவித்து இருபத்திநான்கு மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என விழிப்புரை ஆற்றினார்.

பொது மக்கள் நலன் கருதி
 அன்பன் 
  C.பரமேஸ்வரன்
 சத்தியமங்கலம்
   
Wednesday 25 March 2015

மேச்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பாரக்கல்லூர் சேலம் மாவட்டம்.

சாலை பாதுகாப்பு வாசகம் அல்ல அது வாழ்க்கை முறை

SAFETY IS NOT JUST A SLOGAN IT IS WAY OF LIFE  (பதினாறு)

 மரியாதைக்குரியவர்களே,
              வணக்கம்    http://consumerandroad.blogspot.com
               நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
சேலம் மாவட்டம்,
மேச்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி - பாரக்கல்லூரில்  25 மார்ச் 2015 இன்று சாலை பாதுகாப்பு கல்வி விழிப்புரை நடைபெற்றது.

                     ஈரோடு மாவட்டம் - போக்குவரத்துக் காவல் நிலையம் -சத்தியமங்கலம் உட்கோட்ட காவல்துறை, நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு,   சத்தியமங்கலம் லோகு ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி  இணைந்து குழுவாக செயல்பட்டு   2015 இந்த ஆண்டு முதல்,அனைத்துப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருபால் மாணவர்களுக்காக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கொடுத்து வருகிறோம்.

தலைமை மற்றும் வரவேற்புரை;
திரு. வி.வெ.நல்லதம்பி,M.A.,B.Ed., தலைமை ஆசிரியர் அவர்கள் 

சிறப்பு விருந்தினருக்கு 
பொன்னாடை அணிவித்து 
நினைவுப்பரிசு புத்தகமாக வழங்கி கௌரவப்படுத்திய காட்சி..

 சாலை பாதுகாப்பு கல்வி விழிப்புரை; 
திரு.C.பரமேஸ்வரன் (ஈரோடு மாவட்டம்) அவர்கள்.

புகைத்தலின் தீங்கு பற்றிய செயல்விளக்கம்
 திரு. C.பரமேஸ்வரன் அவர்கள்.(தாளவாடி-ஈரோடு மாவட்டம்)

புகைத்தலின் தீங்கு பற்றிய செயல்விளக்கம்
 திரு. C.பரமேஸ்வரன் அவர்கள்.(தாளவாடி-ஈரோடு மாவட்டம்)

மேச்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி - வன்னியனூர்-சேலம் மாவட்டம்.2015

சாலை பாதுகாப்பு வாசகம் அல்ல அது வாழ்க்கை முறை

SAFETY IS NOT JUST A SLOGAN IT IS WAY OF LIFE  (பதினைந்து)

 மரியாதைக்குரியவர்களே,
              வணக்கம்    http://consumerandroad.blogspot.com
               நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
சேலம் மாவட்டம்,
மேச்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி - வன்னியனூரில் 25 மார்ச் 2015 இன்று சாலை பாதுகாப்பு கல்வி விழிப்புரை நடைபெற்றது.

                     ஈரோடு மாவட்டம் - போக்குவரத்துக் காவல் நிலையம் -சத்தியமங்கலம் உட்கோட்ட காவல்துறை, நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு,   சத்தியமங்கலம் லோகு ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி  இணைந்து குழுவாக செயல்பட்டு   2015 இந்த ஆண்டு முதல்,அனைத்துப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருபால் மாணவர்களுக்காக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கொடுத்து வருகிறோம்.

 திரு. ச.சிவக்குமார்,M.A.,B.Ed.,M.Phil., தலைமை ஆசிரியர் அவர்கள் மேச்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி- வன்னியனூர்.சேலம் மாவட்டம்.

  தலைமை மற்றும் வரவேற்புரை;
திரு. ச.சிவக்குமார்,M.A.,B.Ed.,M.Phil., தலைமை ஆசிரியர் அவர்கள்

 சிறப்பு விருந்தினருக்கு பொன்னாடை அணிவித்து கௌரவப்படுத்தும் ஆசிரியச்சான்றோன் அவர்கள்.

  சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவப்படுத்தும் ஆசிரியச்சான்றோன் அவர்கள்.

 சாலை பாதுகாப்பு கல்வி சிறப்புரை திரு.C.பரமேஸ்வரன்,அவர்கள்,செயலாளர்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.
 சாலை பாதுகாப்பு கல்வி சிறப்புரை திரு.C.பரமேஸ்வரன்,அவர்கள்,

 புகைத்தலின் தீங்கு பற்றிய செயல் விளக்கம்
          திரு C.பரமேஸ்வரன் அவர்கள்(தாளவாடி - ஈரோடு மாவட்டம்)

 புகைத்தலின் தீங்கு பற்றிய செயல் விளக்கம்
          திரு C.பரமேஸ்வரன் அவர்கள்(தாளவாடி - ஈரோடு மாவட்டம்)

 புகைத்தலின் தீங்கு பற்றிய செயல் விளக்கம்
          திரு C.பரமேஸ்வரன் அவர்கள்(தாளவாடி - ஈரோடு மாவட்டம்)
 மாணவர்களிடையே கருத்து கேட்டறிதல்.

      திரு C.பரமேஸ்வரன் அவர்கள்(தாளவாடி - ஈரோடு மாவட்டம்)

          உத்தரவுச் சின்னம் - மாணவர் அணி PUMS - VANNIYNUR
           எச்சரிக்கைச் சின்னம் - மாணவர் அணி PUMS - VANNIYNUR
        தகவல் சின்னம் - மாணவர் அணி PUMS - VANNIYNUR

இணையத்தில் தமிழை வளர்ப்போம் 
கருத்தரங்கம்
மேச்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி - வன்னியனூர்.சேலம் மாவட்டம்.

Tuesday 24 March 2015

சாலை பாதுகாப்பு கல்வி பள்ளிகளுக்கு தேவையா?அழையுங்க..

ROAD SAFETY LIFE SAFETY -சாலை பாதுகாப்பு நமது கூட்டுப் பொறுப்பு

மரியாதைக்குரியவர்களே,
                  வணக்கம்.நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம். சாலை பாதுகாப்பு கல்வி அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வழங்க வேண்டும் என்ற தீர்மானப்படிபோக்குவரத்துக் காவல்நிலையம்-சத்தியமங்கலம் உட்கோட்ட காவல்நிலையம்,லோகு டிரைவிங் ஸ்கூல் சத்தியமங்கலம்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு இணைந்து பள்ளிகளுக்கு சாலை பாதுகாப்பு கல்வி கொடுத்து வருகின்றன.(தேதி 24.மார்ச்.2015)

Thursday 19 March 2015

ஊத்துக்குளி ரயிலடி /.ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி -2015

சாலை பாதுகாப்பு வாசகம் அல்ல அது வாழ்க்கை முறை

SAFETY IS NOT JUST A SLOGAN IT IS WAY OF LIFE  (பதிநான்கு)

 மரியாதைக்குரியவர்களே,
              வணக்கம்    http://consumerandroad.blogspot.com
               நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.

             ஈரோடு மாவட்டம் ,போக்குவரத்துக் காவல் நிலையம் -சத்தியமங்கலம் உட்கோட்ட காவல்துறை, நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு,   சத்தியமங்கலம் லோகு ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி  இணைந்து குழுவாக செயல்பட்டு 2015 இந்த ஆண்டு முதல் அனைத்துப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருபால் மாணவர்களுக்காக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கொடுத்து வருகிறோம்.

2015மார்ச் 19 ஆம் தேதி இன்று  ஊத்துக்குளி ரயிலடி.
பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளியில் 

காலை10.30மணியளவில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவக்கி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கல்வி நடத்தப்பட்டது. காலை11.30முதல் 12.40வரை வினாடிவினா நிகழ்ச்சி நடைபெற்றது.மதியம்1.30 மணி முதல்3.00மணி வரை  கலந்துரையாடல் நடைபெற்றது.நன்றியுரை மற்றும் நாட்டுப்பண் இசைத்து நிறைவு பெற்றது.மாலை3.00மணி முதல் மாலை 4.20மணி வரை கணினி பயிற்சி நடைபெற்றது.
  
வரவேற்புரை; .து.ஜோதிகா (பள்ளி மாணவி)

தலைமையுரை.திரு.லோ. பூபாலன் அவர்கள்,தலைமை ஆசிரியர்.

விழிப்புரை.திரு.C.பரமேஸ்வரன் அவர்கள்,செயலாளர்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.

 சிறப்பு விருந்தினர் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தல்

சிறப்பு விருந்தினர் அவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கல்.

தலைமை ஆசிரியர் அவர்களுக்கு நினைவுப்பரிசு (மருந்தின் மரணம் புத்தகம்) வழங்கல்.
புகைத்தலின் தீங்கு பற்றிய செயல்விளக்கம்.

சாலை பாதுகாப்பு கல்வி -
        வினாடிவினா நிகழ்ச்சியில்ஆர்வமுடன்  பங்கு பெற்ற மாணவர் குழுக்களின் பெயர்கள் விவரம்...மிக  விறுவிறுப்பாக இருந்தது...

                  மேலே  உத்தரவுச்சின்னம் மாணவரணியினரும் அடையாள அட்டையும்.

மேலே எச்சரிக்கைச் சின்னம் மாணவரணியினரும் அடையாள அட்டையும்.

          மேலே தகவல் சின்னம் மாணவரணியினரும் அடையாள அட்டையும்.
சாலை பாதுகாப்பு வினாடி வினா நிகழ்ச்சியில் சிறந்த மாணவ,மாணவியருக்கு பாராட்டு தெரிவித்து பரிசு வழங்கல்.

சாலைப் பாதுகாப்பு வினாடி வினா....
சாலைப் பாதுகாப்பு வினாடி வினா....
சாலைப் பாதுகாப்பு வினாடி வினா....
சாலைப் பாதுகாப்பு வினாடி வினா....
        
             சாலை பயணத்தில் (1)பாதசாரிகள் பிரிவு,(2)மிதிவண்டி ஓட்டுபவர்கள் பிரிவு,(3) பெற்றோருடன் மேட்டார் சைக்கிள் வாகனத்தில் பயணிப்பவர்கள் பிரிவு,(4)பேருந்துகளில் பயணிப்பவர்கள் பிரிவு என நான்கு பிரிவுகளாக பிரித்து மாணவர்கள் சாலைப் பயணத்தின்போது சந்தித்த பிரச்சினைகளும்,பாதிப்புகளும் பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சி .சிந்தனைக்குரிய நிகழ்ச்சி.....

சாலைப் பயணத்தில் சந்திக்கும் பிரச்சினைகள் ...

 நன்றியுரை;மு.கார்த்தி (பள்ளி மாணவன்)

                  இந்த பள்ளி மாணவ,மாணவிகளின் பயணத்தில் சந்தித்துவரும் பிரச்சினைகளை கேட்கும்போது மிகவும் மன வேதனை அடைகிறது.
         மாற்றுக்கருத்து உள்ள நண்பர்கள் போக்குவரத்து கழகத்தின் நண்பர்களாக இருந்தாலும் சரிங்க,ஆட்சித்துறை அலுவலர்களாக இருந்தாலும் சரிங்க,மாவட்ட ஆட்சியராக இருந்தாலும் சரிங்க,அவசியம் ஊத்துக்குளி ரயிலடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு சென்று  சாலைப்பயணத்தில் ,பேருந்துப்பயணத்தில் மாணவ,மாணவிகள் சந்தித்துவரும் அவலநிலையை கேட்டறிந்து தகுந்த பாதுகாப்பு கொடுக்க வேண்டுகிறேன்.உதாரணமாக பேருந்தில் நடத்துநர்கள் மாணவிகளை அடித்துவிடுவதாக கூறுகின்றனர்.பாதிக்கப்படும் மாணவிகள்  ஒரு பெரிய மனிதர்களின் குழந்தைகளாக இருந்தால் விடுவார்களா? பாவம் அந்த ஏழைக் குழந்தைகள்....இதை எப்படிங்க சகித்துக்கொள்ள முடியும்? 

     கணினி பயிற்சி இணையமும் தமிழில் தட்டச்சுதலும் கருத்தரங்கம்.
தமிழ்'99 ஒலிப்பியல் முறை மிக எளிதானது.தமிழிலேயே சிந்தித்து,இலக்கணப்பிழையின்றி எழுதலாம்.உயிரெழுத்து 12 உம் மெய்யெழுத்து 18 உம் பதிந்துள்ள விசைகள் மட்டும் நினைவில் வைத்திருந்தால் போதுமானது.ஷிப்டு அழுத்தம் வடமொழி எழுத்துக்களுக்கு மட்டுமே பயன்படும்.