மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.''நுகர்வோர் பாதுகாப்பு மற்றும்
சாலை பாதுகாப்பு சங்கம் -தமிழ்நாடு'' வலைப்பக்கத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.
06 ஏப்ரல் 2014 இன்று மதியம் இரண்டு மணிக்கு தாளவாடி - சாம்ராஜ் நகரம் பிரதான சாலையில்
(தேர்தல் காரணமாக பயணியர் விடுதி வாடகைக்கு கிடைக்கவில்லை என்பதால் )
தனியார் அலுவலகத்தில் நுகர்வோர் தினவிழா,மற்றும் வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.
இந்த விழாவிற்கு
திரு.A.A..இராமசாமி -தலைவர் அவர்கள்
தலைமை ஏற்று தலைமையுரை ஆற்றினார்.
திரு.A.P.ராஜூ செயற்குழு உறுப்பினர் அவர்கள்
அனைவரையும் வரவேற்றார்.
திரு.S.ரவி துணை தலைவர் அவர்கள்
முன்னிலை வகித்து கருத்துரை வழங்கினார்.
திரு.C.பரமேஸ்வரன் செயலாளர்
அவர்கள் விழிப்புரை ஆற்றினார்.
திரு.V.பாலமுருகன் பொருளாளர்
அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.
கூட்டத்தில் தாளவாடி மலைப்பகுதி மக்களுக்கு கடைசி மனிதன் கிராமத்திலும் நுகர்வோர் விழிப்புணர்வு கொடுக்க வேண்டும் எனவும் அதற்காக பயிற்சி பட்டறை,கருத்தரங்கம்,விவாதக்களம் என பல்வேறு தளங்கள் வாயிலாக நுகர்வோருக்கான விழிப்புரை கொடுப்பது எனவும்,அதேபோல மக்களை மக்களே ஆட்சி செய்ய அதிகாரம் வழங்கும் வாக்குரிமையின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு கொடுத்து அனைவரையும் வாக்களிக்க வைத்து வலுவான ஜனநாயகத்தை அமைப்பது பற்றி பேட்ஜ் அணிந்து விழிப்புரை கொடுப்பது. நோட்டீஸ் விளம்பரம் கொடுப்பது. பேனர் கட்டி விழிப்புரை கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது.
(வாக்குரிமை பிரச்சார நோட்டீஸ் மாதிரி படம் கீழே).
வாக்காளர்களுக்கான விழிப்புரை பிரச்சாரம் செய்வதற்காக, ஈரோடு மாவட்டம் - தாளவாடி,கடம்பூர் மலைப்பகுதிகள் மற்றும் சத்தியமங்கலம் பகுதிகள் அடங்கிய பவானிசாகர் சட்டமன்றத் தொகுதி நீலகிரி பாராளுமன்றத்தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளதால் நீலகிரி பாராளுமன்றத் தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்களிடம் அனுமதி பெற வேண்டும் என்ற தகவலின் அடிப்படையில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 04-04-2014அன்று சென்று அனுமதி கேட்டபோது
அந்தந்த பகுதிக்குட்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்களே அனுமதி கொடுக்கலாம் என்றும் அதனால் ஈரோடு மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் சென்று (AD பஞ்சாயத்து ) உதவி தேர்தல் அலுவலர் அவர்களிடம் வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய அனுமதி பெறவும் என அறிவுறுத்தியதன்பேரில் 14 - 04 -2014க்குள் ஈரோடு மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் சென்று (AD பஞ்சாயத்து -திட்ட இயக்குநர்) உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்களிடம் அனுமதி பெறுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டம் துவக்கத்திற்கு முன்னதாக CPARS.Org மத்திய சங்க நிர்வாகிகள் ஆலோசனை செய்த காட்சிகளும்,நிகழ்ச்சி குறிப்புகள் தயாரித்த காட்சிகளும்........நேரம் காலை 11-00மணி.....