Tuesday, 11 November 2014

நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் தோற்றமும்,வளர்ச்சியும்....


மரியாதைக்குரியவர்களே,
               வணக்கம். நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.
                            
               பொதுமக்களாகிய நமது தேவையின் அளவைப் பொறுத்து,நமது எதிர்பார்ப்பினைப் பொறுத்து,நமது விருப்பத்தினைப் பொறுத்து,நமது பயன்பாட்டினைப் பொறுத்துதான்    உலகில் உற்பத்தி செய்யும் மற்றும் விற்பனை செய்யும் அனைத்து 
(1)பொருட்களும்,அந்தப்பொருட்களைவைத்திருக்கவும்,பாதுகாக்கவும்,கொண்டு செல்லவும்,பயன்படுத்துவதற்கான 
(2)அடிப்படைப்பொருட்களும்.அதன் சம்பந்தமான 
(3)சேவைகளும்
( உதாரணமாக உணவு வழங்கல்,தங்குமிடவசதி, மின்சார வழங்கல்,மருத்து சேவை,காப்பீட்டு வசதி,போக்குவரத்து சேவை,வங்கி சேவை,தொலைத்தொடர்பு சேவை போன்றவை) 
 சந்தைப்படுத்தப்படுகின்றன.நமக்கு விலைக்கு விற்கப்படுகின்றன.

                       நமது உடல் நலனுக்காக உயிர் வாழ்வதற்காக,நாம் சந்தோசமாக இருக்க விலை கொடுத்து நமக்குத்தேவையான பொருட்களை  நேர்மையான உற்பத்தியாளர்களும்,நியாயமான விற்பனையாளர்களும்,பயன்பாட்டிற்காக நம்பகமான சேவை வழங்குனர்களும் சரியான விலைக்கு தரமான பொருட்களையும்,சேவைகளையும்  வழங்குகின்றனர்.

                 ஆனால் பணத்தாசை பிடித்த சில சுயநல வணிகர்கள்,உற்பத்தியாளர்கள்,அதிக வருமானத்திற்கான வஞ்சக குணம் கொண்ட வியாபாரிகள்,சுயநலமே குறிக்கோளாகக்கொண்டு பொதுமக்களாகிய நமது தேவையின் அளவையும்,நமது சூழ்நிலையையும்,நமது அறியாமையையும் அவர்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு மோசடி செய்து,வஞ்சகம் செய்து,ஏமாற்றுவழிகளை கடைபிடித்து,பதுக்கல் செய்து,பற்றாக்குறை என்னும் மாயத்தோற்றத்தை உருவாக்கி, தரம் குறைந்த பொருட்களை,தரமற்ற பொருட்களை,போலியான பொருட்களை,கெட்டுப்போன பொருட்களை,பயன்பாடு குறைவான பொருட்களை,காலாவதியான பொருட்களை,கலப்படம் செய்யப்பட்ட பொருட்களை,கெடுதலான பொருட்களை,நாம் விரும்பும்படியாக நமக்குத்தெரியாமல் அரசால் தடைசெய்யப்பட்ட தீங்கு தரக்கூடிய ரசாயனப்பொடிகளை கலந்து சாயமேற்றி,நறுமணத்தை கொடுத்து,சுவையூட்டி,மனதைக்கவரும்படியாக தோற்றத்தில் மினுமினுப்பை  ஏற்படுத்தி,தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கவர்ச்சியான விளம்பரத்தைக்கொடுத்து,அதற்காக நடிகர்களையும்,நடிகைகளையும் விலைகொடுத்து நடிப்பாலும் வசனங்களாலும் நம்மை  நம்பவைத்து,கனிவாக,இனிமையாக,தந்திரமாகப் பேசி,

                   உடலுக்கும்,மனதிற்கும் தீங்கினைக்கொடுக்கும் பொருட்களை விற்பனை செய்கிறார்கள்.மனதை கெடுக்கும் சேவைகளை வழங்குகிறார்கள்.

                  இதனால் நமது உயிர்வாழ,உடல்நலத்திற்காக,மனநிறைவுக்காக ,நமது தேவைக்காக விலை கொடுத்து வாங்கிய பொருட்களும்,சேவைகளும் நன்மை தருவதற்குப் பதிலாக நமது உடலுக்கும்,உயிருக்கும் கேடு உண்டாக்குகிறது,மன வேதனையைக்கொடுக்கிறது,மருத்துவமனைக்கும்,மருந்துக்கடைகளுக்கும் அலைந்து,,வீண் செலவழிக்க காரணமாகிறார்கள்.நம் உழைப்பும் முடங்கிவிடுகிறது.இதனால் நம் பணம் மற்றும் பொருளாதாரம் இழப்பதோடு சந்தோசத்தை பறிகொடுத்து பல தொல்லைகளுக்கும்,துன்பங்களுக்கும் ஆளாகி உயிரையே இழக்கும் பேராபத்திற்கும் காரணமாக இருக்கிறார்கள்.

                   சுயநலம் ஒன்றே குறிக்கோளாக கொண்ட சில வணிகர்களின் பணத்தாசை மற்றும் பேராசையால் மனச்சாட்சியே இல்லாமல் நம் உயிரோடு விளையாடுகிறார்கள்.கி.பி.1800களிலேயே அமெரிக்காவில் இவ்வாறு பாதிக்கப்பட்ட நுகர்வோரில் விழிப்படைந்த சிலர்  ,நுகர்வோர் பாதுகாப்பு குழுக்களை அமைத்து பல போராட்டங்களையும்,அதனால் பொதுமக்களுக்கு விழிப்புணர்வையும் கொடுத்து  நுகர்வோரை காப்பாற்ற பல தீர்மானங்களை தயாரித்து அரசாங்கத்திடம் கோரிக்கையாக வைத்தார்கள்.

                     எனக்கு தெரிந்தவரை கி.பி.1899ஆம் ஆண்டு அமெரிக்காவில் தேசிய நுகர்வோர் இயக்கம் ஒன்றை உருவாக்கினார்கள். அமெரிக்காவில் கி.பி.1936 ஆம் ஆண்டு 'டாக்டர், கால்ரூ டன் வார்டன்' அவர்கள் 'நுகர்வோர் ஒருங்கமைப்பு' ஒன்றினை நிறுவினார்.அதன் பிறகு நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு பரிணாம வளர்ச்சியினைப் பெற்று மேம்பாடு அடைந்தது.  
               
                அமெரிக்காவில் கி.பி.1950ஆம் ஆண்டு ரால்ப் நடார் என்பவர்  நவீன நுகர்வோர் இயக்கத்தை தொடங்கினார்.இவரே நவீன நுகர்வியலின் தந்தை எனப் போற்றப்படுகிறார்.
                    
            அதன்பிறகுகி.பி.1962 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் தேதி அமெரிக்க காங்கிரஸில் திருமிகு.ஜான்.எப்.கென்னடி (அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி) அவர்கள் நுகர்வோருக்கான ஆறுஅடிப்படை உரிமைகளை அறிவித்தார்.அதன் அடிப்படையில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
               
              கி.பி.1948ஆம் ஆண்டு செப்டெம்பர் 1ஆம் தேதி உருவாக்கப்பட்ட உலக சுகாதார அமைப்பு WHO என்னும் World Health Organisation  மற்றும் கி.பி. 1945ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் தேதி உருவாக்கப்பட்ட  உணவு மற்றும் வேளாண் அமைப்பு Food and Agricultural Organisation இரண்டும் நுகர்வோர் இயக்கத்தை மேம்படுத்தின.

                     அதன் பிறகு கி.பி.1973ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் தேதி முதல் உலக நுகர்வோர் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 15ஆம் தேதி பொதுமக்களுக்கு நுகர்வோர் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு கொடுக்கப்பட்டு வருகிறது.

               ஐ.நா.சாசனத்தின்கீழ் அமைக்கப்பட்ட ஆறு பிரிவுகளில் ஒன்று பொருளாதார மற்றும் சமூக்ககுழு ஆகும்.
               இந்தக்குழுவின் பணி சர்வதேச பொருளாதாரம்,சமூகம்,கலாச்சாரம்,கல்வியியல்,சுகாதாரம் மற்றும் அவை சம்பந்தப்பட்ட துறைகளை அமைத்து அவற்றை மேற்பார்வை செய்வதே ஆகும்.
                     இந்தக்குழு 'மக்களின் பொருளாதாரம் மற்றும் சமூகம் வளர நுகர்வோர் பாதுகாப்பு மிக முக்கியம்' என நுகர்வோர் பாதுகாப்பின் அவசியத்தை உணர்ந்தது.
                      இந்த அமைப்பு 1977 ஆம் ஆண்டு நுகர்வோரியம் குறித்து பல நாடுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள அமைப்புகள் மற்றும் சட்டங்கள் குறித்து ஆய்வு செய்யுமாறு ஐக்கிய நாடுகளின் சபையின் பொதுச்செயலாளரை கேட்டுக்கொண்டது.அதன்படி ஐக்கிய நாடுகள் சபையானது பல நாடுகளின் அரசாங்கங்களையும்,பல்வேறு சர்வதேச அமைப்புகளையும் கலந்து ஆலோசித்து நுகர்வோர் பாதுகாப்பிற்கான 'வரைவு காட்டும் நெறிகளை' தயாரித்தது.

                     அதன் அடிப்படையில் 1983 ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் திருமிகு.புட்ரோஸ் காலி அவர்கள்  ''நுகர்வோர் பாதுகாப்பு-ஐக்கிய நாடுகளின் அமைப்பிற்கான சர்வதேச கூட்டுறவு மற்றும் ஒருங்கிணைப்பு'' என்ற தலைப்பின் கீழ் தயாரித்த  அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபையின்  பொதுக்குழு மற்றும் பொருளாதாரம் மற்றும் சமூகக்குழுவின் முன் சமர்ப்பித்தார்.
   
              அந்த அறிக்கை பற்றி அனைத்து உறுப்பு நாடுகளும் 1983ஆம் ஆண்டிலிருந்து 1985ஆம் ஆண்டு வரை இரண்டு ஆண்டுகள் ஆழமாகவும்,தீவிரமாகவும் நுகர்வோர் பாதுகாப்பு பற்றி விவாதித்து ஒன்றுக்கொன்று பேச்சுவார்த்தை நடத்தின.

                   பின்னர் 1985ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9 ஆம் தேதி ''நுகர்வோர் பாதுகாப்பு-ஐக்கிய நாடுகளின் அமைப்பிற்கான சர்வதேச கூட்டுறவு மற்றும் ஒருங்கிணைப்பு''என்ற தலைப்பிலான நுகர்வோர் குறித்த வழிகாட்டும் நெறிகளை ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக்கொண்டது.

                        1985ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி நுகர்வோர் பாதுகாப்பு உரிமைகளாக எட்டு உரிமைகளை அங்கீகரித்து அதன் உறுப்பு நாடுகளுக்கு  வழிகாட்டும் நெறிகளாக அறிவித்தது.

 சர்வதேச நுகர்வோர் பாதுகாப்பு உரிமைகள் விவரம் பின்வருமாறு;-
(1) நுகர்வோர் பாதுகாப்பு உரிமை,(குறைபாடுள்ள பொருட்கள் மற்றும் சேவைகளிலிருந்தும்,மோசடி வணிகம்,ஏமாற்று வர்த்தகம் போன்றவற்றிலிருந்தும் நமது உடல் நலனையும் உயிரையும் பாதுகாத்தல்).
(2)தகவல் அறியும் உரிமை,(பொருள் மற்றும் சேவை பற்றிய முழு தகவல்களைக்கேட்டு அறிதல்).
(3)தேர்ந்தெடுக்கும் உரிமை,(நமது விருப்பத்திற்க்கேற்றவாறு பொருட்களை மற்றும் பயன்பாட்டிற்கான சேவைகளை தேர்வு செய்துகொள்ளுதல்).
(4)முறையீட்டு உரிமை,(நாம் பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் சேவையில் உத்திரவாதம் முன்பே குறைபாடு கண்டறிந்தால் விற்பனையாளரிடம் சென்று முறையிட்டு பழுது நீக்கிப்பெறுதல்,புதியதாக வேறு பொருளை பெறுதல்,அதற்குரிய துகையினை திரும்பப்பெறுதல்).
(5)நுகர்வோர் பற்றிய கல்வி பெறும் உரிமை,(பாதுகாப்பு,தகவல் பெறுதல்,தேர்ந்தெடுத்தல்,முறையீடு செய்து நிவாரணம் பெறுதல் இவை பற்றிய முழு விவரங்கள் பற்றி உபயோகிப்பவர்களாகிய பொதுமக்கள் அனைவரும் விழிப்புணர்வு கல்வி பெறுதல்).
(6)நிவாரணம் பெறும் உரிமை,(விற்பனையாளர் அல்லது உற்பத்தியாளர் பொருட்களிலுள்ள குறைகளை சரி செய்து கொடுக்க மறுத்தால் குறைதீர் மன்றங்களில் மேல்முறையீடு செய்து உரிய நிவாரணம் இழப்பீட்டுத்தொகையுடன் பெறுதல்).
(7)சுற்றுச்சூழல் பாதுகாப்பு உரிமை,(நம்மைச் சுற்றியுள்ள காற்று,தண்ணீர்,பூமி,இயற்கை வளங்கள்,இவைகள் மாசுபடாதவாறு பாதுகாத்தல்).
(8)அடிப்படைத்தேவைகளுக்கான உரிமை,(தனி மனித உரிமை,சுதந்திரம்,உணவு,உடை.இருப்பிடம்,பாதுகாப்பு,சுகாதாரம், ஆரோக்கியம் ஆகியன தடையின்றிப்பெறுதல்).
               ஆகிய எட்டு உரிமைகளும் உலக நுகர்வோர் பாதுகாப்பு உரிமைகள் ஆகும்.

                       1986ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி நுகர்வோர் பாதுகாப்பிற்கான சில நடவடிக்கைகளை பரிந்துறை செய்து தீர்மானம் ஒன்றை ஏற்றது.

                        அதன்பிறகு 1988ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள் அனைத்தும் 1983ஆம் ஆண்டின் வழிகாட்டு நெறிகளை ஏற்று அவற்றை செயல்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தது.

                    நமது இந்திய அரசாங்கம் 1983ஆம் ஆண்டின் வழிகாட்டும் நெறிகளைப்பின்பற்றி நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் ஒன்றை தயாரித்து மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம்,மாநில நுகர்வோர் குறை தீர் மன்றம்,தேசிய நுகர்வோர் குறைதீர் மன்றம் என மூன்றடுக்கு குறைதீர் மன்றங்களை அமைத்து 1986ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதியன்று அமல்படுத்தியது.

             அதாவது ஐக்கிய நாடுகள் சபையின் வேண்டுகோளான 1988ஆம் ஆண்டின் இரண்டு வருடங்களுக்கு முன்னதாக 1986ஆம் ஆண்டே  செயல்படுத்தியது.

  ஐக்கிய நாடுகள் பொதுச்சபை பற்றி ...................
                   உலக மக்களின் நன்மை மற்றும் பாதுகாப்பிற்காக பன்னாட்டு சபை என்னும் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை 1945ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26ஆம் தேதி ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சான்பிரான்சிஸ்கோ நகரிலுள்ள சான் பிரான்சிஸ்கோ போர் நினைவகம் மற்றும் நிகழ்த்து கலையரங்கத்தில் உறுப்பினர் நாடுகளாக விளங்கிய 51நாடுகளில் 50  நாடுகள் கையொப்பமிட்டு  ஐக்கிய நாடுகள் நிறுவனத்தை உருவாக்கினர்.

              அதே 1945ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதி முதல் செயலுக்கு வந்தது.இன்று 192 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

                      நிர்வாகத்தின் நலன் கருதி ஆறு அங்கங்களாக பிரித்து நிர்வாகம் செய்யப்படுகிறது.அவை
 (1) ஐக்கிய நாடுகள் பொதுச்சபை-UN General Assembly,
(2)ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை-UN Security Council,
(3)ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக சபை-UN Economic and Social Council,
(4)ஐக்கிய நாடுகள் பொறுப்பாட்சி மன்றம்-UN Trusteeship Council,(1994க்கு பிறகு செயலற்றுவிட்டது)
(5)ஐக்கிய நாடுகள் செயலகம்-UN Secretariat,
(6)அனைத்துலக நீதிமன்றம்-International Court of Justice 
                       ஆகியன ஆகும்.

                       இந்த ஆறு அங்கங்களில் ஐக்கிய நாடுகள் பொறுப்பாட்சி மன்றம்   1994ஆம் ஆண்டு  ஐக்கிய நாடுகள் அவையின் கடைசிப் பொறுப்பாட்சிப்பகுதியான 'பலோ' சுதந்திரம் பெற்ற பிறகு செயலற்றுவிட்டது.தற்போது ஐந்து அமைப்புகள் மட்டுமே உள்ளன.இவற்றில் அனைத்துலக நீதிமன்றம் 'ஹேக்' நகரில் அமைந்துள்ளது.மீதி நான்கு அமைப்புகளும் நியூயார்க் நகரில் அமைந்துள்ளன.

                      இவை தவிர இத்தாலி நாட்டில் ரோம் நகரில் ஐக்கிய நாடுகளின்  உணவு மற்றும் வேளாண் அமைப்பு உள்ளது.
   ஜெனீவாவில்    ஐக்கிய நாடுகளின்  உலக சுகாதார அமைப்புWORLD HEALTH ORGANISATION,, செஞ்சிலுவை சங்கம்,உலக வாணிக அமைப்பு,அணு ஆராய்ச்சிக்கான ஐரோப்பிய அமைப்பு (CERN) அமைந்துள்ளன.

ஜெனீவாவைத் தலைமையகமாகக் கொண்டவை:

 ECE – Economic Commission for Europe

IBE – International Bureau of EducationCC – International Computing Centre

ILO – International Labour Organization

ITC – International Trade Centre

ITU – International Telecommunication Union

JIU – Joint Inspection Unit

OCHA – Office for the Coordination of Humanitarian Affairs

UNAIDS – Joint United Nations Programme on HIV/AIDS

UNHCHR – Office of the United Nations High Commissioner for Human Rights

UNHCR – Office of the United Nations High Commissioner for Refugees

UNCC – United Nations Compensation Commission

UNCTAD – United Nations Conference on Trade and Development

UNIDIR – United Nations Institute for Disarmament Research

UNITAR – United Nations Institute for Training and Research

NGLS – United Nations Non-Governmental Liaison Service

UNOPS – United Nations Office for Project Services

UNOSDP – United Nations Office on Sport for Development and Peace

UNFPA – United Nations Population Fund

UNRWA – United Nations Relief and Works Agency for Palestine Refugees in the Near-East

UNRISD – United Nations Research Institute for Social Development

CEB – United Nations System Chief Executives Board for Coordination

UNV – United Nations Volunteers Programme

WHO – World Health Organization

WIPO – World Intellectual Property Organization

WMO – World Meteorological Organization


IAEA – International Atomic Energy Agency (Headquarters are in Vienna)
UNEP – United Nations Environment Programme (Headquarters are in Nairobi)
UNESCO – United Nations Educational, Scientific and Cultural Organization (Headquarters are in Paris)
UNIDO – United Nations Industrial Development Organization (Headquarters are in Vienna)
WFP – World Food Programme (headquarters are in Rome)

       
 வியன்னாவில்   அகில உலக சாலை போக்குவரத்து பயண நடமாட்டத்தையும்,பாதுகாப்பையும் மேம்படுத்துவதற்கான ஒப்பந்தம் போடப்பட்டது.இந்த உடன்படிக்கையின் படி அகில உலக சாலை அடையாளங்கள், போக்குவரத்து விளக்குகள், சாலை குறியீடுகள் தரப்படுத்தப்பட்டன. இந்த உடன்படிக்கை United Nations Economic and Social Council ஆல் வியன்னாவில் 7 October 1968 to 8 November 1968 காலப்பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட UNESC Conference on Road Traffic ஏற்றுக்கொள்ளப்பட்டு 6 June 1978 அமுலுக்கு வந்தது.

                         நைரோபியில், ஐக்கிய நாடுகள் நைரோபி அலுவலகம் (United Nations Office at Nairobi, UNON) ஐநாவின் நான்கு முதன்மை அலுவலக வளாகங்களில் ஒன்றாகும். கென்யாவின் நைரோபியில் அமைந்துள்ள இவ்வளாகத்தில் பல்வேறு ஐநா அமைப்புகளும் முகமைகளும் அலுவலகங்களைக் கொண்டுள்ளன. இங்கு ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம், UN-HABITAT திட்டங்களின் தலைமையகம் அமைந்துள்ளன.
 ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் தலைமையகம்,ஐக்கிய நடுகளின் குடிசார் அமைப்பு தலைமையகம்,ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு,பன்னாட்டு குடிமை வான் பயண நிறுவனம்,பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு,பன்னாட்டு கடல்சார் அமைப்பு,பன்னாட்டு நாணய நிதியம்,கூட்டு ஐக்கிய நாடுகள் HIV/ AIDSதிட்டம்,ஐக்கிய நாடுகள் மண்டல மேம்பாட்டு மையம்ஆப்பிரிக்க அலுவலகம்.,ஐக்கிய நாடுகள் மகளிர் மேம்பாட்டு நிதியம்,ஐக்கிய நாடுகள் வளர்ச்சி நிதியம்,ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம், ஐக்கிய நாடுகள் மருந்துக்கட்டுப்பாடு திட்டம், ஐக்கிய நாடுகள் கல்வி,அறிவியல்,பண்பாட்டு நிறுவனம்,அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம்,ஐக்கிய நாடுகள் தொழில் மேம்பாட்டு நிறுவனம்,ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம்,ஐக்கிய நாடுகள் பொதுவான் சேவைகள்,மனிதநேய விவகாரங்களுக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகம்,திட்டப்பணிகளுக்கான ஐக்கிய நாடுகள் அலுவலகம்,சோமாலியாவிற்கான ஐக்கிய நாடுகள் அரசியல் அலுவலகம், ஐக்கிய நாடுகள் மக்கள தொகை நிதியம்,உலக வங்கி,உலக உணவுத்திட்டம்,உலக சுகாதார அமைப்பு ஆகியன அமைந்துள்ளன.

       இவை தவிர ஐக்கிய நாடுகள் அவையுடன் தொடர்புடைய பல அமைப்புகள் உலகின் பல்வேறு இடங்களில்  உள்ளன.

No comments:

Post a Comment