Monday, 7 October 2013

சைக்கிள் பேரணி-அக்டோபர் ஏழாம் நாள்


Dispense drugs - and save ourselves
மரியாதைக்குரியவர்களே,
      வணக்கம்.
                    ''போதை பொருட்களை தவிர்ப்போம்-நம்மை நாமே காப்போம்''காந்தியடிகள் பிறந்த நாள்விழா-ஒருவார விழிப்புணர்வு இயக்கத்தின் -ஏழாம் நாள் இன்று
             சத்தியமங்கலம் -அரசு மகளிர் மேல்நிலை பள்ளி முன்பு  கோபி கலை அறிவியல் கல்லூரி-கோபிசெட்டிபாளையம் மற்றும் காமதேனு கலை அறிவியல் கல்லூரி-சத்தியமங்கலம் கல்லூரி மாணவர்கள் சைக்கிள் பேரணியை நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கத்தின் சட்ட ஆலோசகரும் சத்தியமங்கலத்தின் வழக்கறிஞர்கள் சங்க தலைவருமான வழக்கறிஞர்.S.L.வெங்கடேஸ்வரன் அவர்கள்  கொடியசைத்து துவக்கி வைத்தார். நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கத்தின்ஒருங்கிணைப்பாளர் அரிமா K.லோகநாதன் அவர்கள் முன்னிலை வகித்து வாழ்த்தி வழியனுப்பினார். நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் திரு.A.A.இராமசாமி அவர்கள் ,துணை தலைவர் திரு.S.ரவி அவர்கள் செயலாளர் திரு.C.பரமேஸ்வரன் அவர்கள் மாணவர்கள் பேரணியுடன் கோபி சீதா கல்யாண மண்டபம் வரை சென்றனர். கோபி கலைஅறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியர்களான திரு.K.ராஜேந்திரன் - அவர்கள் Social Service Leage சமுதாய சேவை கூட்டமைப்பு-திட்ட அலுவலர் மற்றும் உதவிப் பேராசிரியர் Dr.M.சுந்தரமூர்த்தி அவர்கள் National Service Scheme நாட்டு நலப்பணித் திட்டம்-திட்ட அலுவலர் அவர்கள் கல்லூரி மாணவர்கள் பாதுகாப்பிற்காக உடன் சென்றனர்.


    சத்தியமங்கலம் அரசு மகளிர் மேல்நிலை பள்ளி முன்பு காலை எட்டு மணிக்கு தயாராக உள்ள காட்சி.நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர்  அரிமா.K.லோகநாதன் அவர்கள்,சட்ட ஆலோசகர் வழக்கறிஞர்.S.L.வெங்கடேஸ்வரன் அவர்கள்,தலைவர்திரு. A.A.இராமசாமி அவர்கள்,துணை தலைவர் S.ரவி அவர்கள் அருகில் உள்ளனர்.



                  மாணவர்கள் சைக்கிள் பேரணிக்கு, ஒருங்கிணைப்பாளர்.அரிமாK.லோகநாதன் அவர்கள் முன்னிலை வகிக்க - வழக்கறிஞர்S.L.வெங்கடேஸ்வரன் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைக்கிறார்.



  கல்லூரி மாணவர்கள் சைக்கிள் பேரணி உற்சாகப் பயணம் சத்தியமங்கலத்திலிருந்து (முப்பது கிலோமீட்டர்).கோபி சீதா கல்யாண மண்டபம் வரை.

 

                       சைக்கிள் பயண மாணவர்களுக்கு காலை உணவு வழங்குகிறார்.திருமதி அம்மையார் அவர்கள் A.A. ராமசாமி தலைவர் அவர்களின் துணைவியார்.அனைவரின் காலை சிற்றுண்டி செலவு தலைவர் அவர்கள் பெறுப்பேற்றார்.

                   காலை உணவு அளிக்கும் பொறுப்பேற்ற தலைவர் திரு.A.A.இராமசாமி அவர்களும் அவரது துணைவியார் திருமதி அம்மையார் அவர்களும்.அருகில் துணை தலைவர் S.ரவி அவர்கள்.
                    கல்லூரி மாணவர்கள் பாதுகாப்பிற்காக பொறுப்பேற்று சைக்கிள் பேரணி உடன் சென்ற கோபி கலை அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியப் பெருமக்கள் இருவரும் சூழ்நிலை கருதி மரத்தடியிலேயே  சிற்றுண்டி அருந்தி மாணவர்களுக்கு ஊக்கமளித்த காட்சி.
                         சைக்கிள் பேரணி இரு கல்லூரி மாணவர்களுக்கு கொடிவேரி அணைக்கட்டு  வாயிலின் முன்புதிரு.சிதம்பரம் அவர்கள் (எலத்தூர் கிராமம்) குளிர் பானம் கொடுத்து வாழ்த்திய காட்சி.
              எலத்தூர் கிராமம்  திரு.சிதம்பரம் அவர்களின் தனி மனித ஆர்வத்தை பாராட்டிய கோபி கல்லூரி உதவிப் பேராசிரியர்களும்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கத்தின் தலைவரும்,துணை தலைவரும் அருகில்  கல்லூரி மாணவர்கள்.
                    கோபி- காசிபாளையத்தில் திரு.செல்வம் அவர்கள் குடும்பத்தாருடன் பண்ணாரி அம்மன் போட்டோ ஸ்டுடியோ அவர்கள் குளிர்பானம் கொடுத்து வாழ்த்திய காட்சி.
                      சத்தியமங்கலத்தில் புறப்பட்டு வந்த இரு கல்லூரி மாணவர்களைகோபி கலை அறிவியல் வாயில் முன்பு கல்லூரி முதல்வர் சார்பாக வரவேற்று வாழ்த்திய காட்சி.அருகில் உதவிப் பேராசிரியர் திரு.K.ராஜேந்திரன் அவர்கள் ,உதவிப் பேராசிரியர்Dr.M. சுந்தரமூர்த்தி அவர்கள் மற்றும் சத்தியமங்கலம்- காமதேனு கலை அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் திரு.T.சரவணன் அவர்கள்,தலைவர் திரு. A.A.இராமசாமி அவர்கள்,துணை தலைவர்S. ரவி அவர்கள்.
       சைக்கிள் பேரணியை வெற்றிகரமாக நிறைவு செய்த இருகல்லூரி மாணவர்களை கோபி அச்சக உரிமையாளர்கள் ஒருங்கிணைப்புக் குழுவினர் வரவேற்று உபசரித்தனர். உற்சாகம் மிகுதியுடன் கல்லூரி மாணவர்கள், இரு கல்லூரி உதவிப் பேராசிரியப் பெருமக்கள் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு பொறுப்பாளர்கள்.



          கோபி அச்சக உரிமையாளர்கள்ஒருங்கிணைப்புக் குழு-கோபி செட்டிபாளையம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு(பதிவு எண்:26/2013)ஆகியோர் அனைவரின்  மதிய உணவு பொறுப்பேற்றனர்.
       என
அன்புடன்
பரமேஸ்வரன்.C,
செயலாளர்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.பதிவு எண்;26/2013