Monday, 19 January 2015

சாலை பாதுகாப்பு வாசகங்கள்-2015


சாலை பாதுகாப்பு வாசகம் அல்ல,அது வாழ்க்கை முறை

                          SAFETY IS NOT JUST A SLOGAN IT IS WAY OF LIFE

மரியாதைக்குரியவர்களே,
              வணக்கம்    http://consumerandroad.blogspot.com
               நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
              2015 இந்த ஆண்டு,போக்குவரத்துக் காவல் நிலையம் -சத்தியமங்கலம் உட்கோட்ட காவல்துறை நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு அமைப்பு  சத்தியமங்கலம் லோகு ஓட்டுனர் பயிற்சிப் பள்ளியுடன் இணைந்து அனைத்துப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருபால் மாணவர்களுக்காக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கொடுத்து வருகிறோம்.
 சாலை பாதுகாப்பு வாசகங்களில் சிலவற்றை படிப்போம்.
(1)நடைபாதையில் நடப்போம்! நலமுடனே பயணிப்போம்!!
(2)பொறுமையாக ஓட்டுவோம்! பிறரை பொருட்படுத்தி ஓட்டுவோம்!!
(3)விதிகளை மதிப்போம்! வேதனைகளை தவிர்ப்போம்!!
(4)சிக்னலை மதிப்போம்! சிக்கலை தவிர்ப்போம்!!
(5)கவனமாக ஓட்டுவோம்! காலமெல்லாம் வாழ்வோம்!!
(6)வாகனத்தை நிறுத்தி செல்போன் பேசுவோம்! 
(7)தலைக்கவசம் அணிவோம்!சீட் பெல்ட் அணிவோம்!!
(8)படியில் பயணம்! நொடியில் மரணம்!!
(9)இடைவெளி காப்போம்! இன்னலை தவிர்ப்போம்!!
(10)போதையில் பயணம்! பாதையில் மரணம்!!
(11)வேகம் சோகத்தை தரும்! நிதானம் நிம்மதியை தரும்!!
(12)வளைவில் முந்தினால் மரணம் வருவது உறுதி!!
(13)தூக்கத்தில் ஓட்டினால்! துக்கமே வரும்!!
(14)சாலையில் அலட்சியம்! சாவது நிச்சயம்!!
(15)முறையான இயக்கம்! முத்தான பயணம்!!
(16)பொறுப்புடன் ஓட்டுவோம்! சிறப்புடன் வாழ்வோம்!!
(17)விதி மீறாமல் ஓட்டுவோம்!விதி மீறுபவர்களையும் வீழ்த்தாமல் ஓட்டுவோம்!!
(18)பாதுகாப்பாக ஓட்டுவோம்! பிறரையும் பாதுகாத்து ஓட்டுவோம்!!
(19)சாலையில் கவனமாக ஓட்டுவோம்! சந்திப்புகளிலும் கவனமாக ஓட்டுவோம்!!
(20)பொறுமையுடன் ஓட்டுவோம்! பொறுமை இல்லாதவர்களையும் 
காப்போம்!!
(21)அனுசரித்து ஓட்டுவோம்! அனைவரையும் காப்போம்!!
(22)சகிப்புத்தன்மை கடைப்பிடிப்போம்! சண்டைக்காரர்களையும் திருத்துவோம்!!
(23)எதிர்பார்த்து ஓட்டுவோம்! எந்த சூழலிலும் காப்போம்!!
(24)மனமே கவனம்! மனது அறியாததை கண்களும் பார்ப்பதில்லை! காதுகளும் கேட்பதில்லை!! மூளையும் உணருவதில்லை!!!
(25)மன நலமும்,உடல் நலமும் உயிருள்ளவரை அழியாத சொத்து!
(26) மது,போதை, புகைப் பழக்கத்தை விட்டொழிப்போம்!மனதையும் உடலையும் காப்போம்!!
(27)சாலைவிதிகளை மதித்தால், விபத்தில்லா பயணம் சாத்தியமே!!
(28)சாலை பாதுகாப்பு! சமூகத்தின் கூட்டுப் பொறுப்பு!!
(29)சாலை பாதுகாப்பு! நமது உயிர் பாதுகாப்பு!!
(30)வாகன அறிவும்,சாலை அறிவும்! வாழ்நாள் பாதுகாப்பு!!
(31)புத்தாக்கப்பயிற்சி பெறுவோம்! புதுப்பித்தல் கல்வி பெறுவோம்!!
(32)பொது வாகனத்தை பயன்படுத்துவோம்! தனி வாகனத்தை தவிர்ப்போம்!!
(33)காவலர்கள் நமக்கு தோழர்கள்! மதிப்போம் மனித நேயம் காப்போம்!!
(34)முதலுதவி முக்கியமாக கற்போம்!!
(35)ஆயுள் காப்பீடு,மருத்துவ காப்பீடு,வாகன காப்பீடு ,விபத்து காப்பீடு அனைவருக்கும் அவசியம்!!
(36)ஓய்வின்றி ஓட்டாதீர்! உயிருடன் வாழ்வீர்!!
(37)ஒற்றை விளக்குடன் ஓட்டாதீர்! ஒழுக்கத்தை கடைப்பிடிப்பீர்!!
(38)இரவில் வெளிச்சத்தை தாழ்த்துவீர்! வாழ்நாளை நீட்டிப்பீர்!!
(39மறைவுப்பகுதிகளிலும்,வளைவுப்பகுதிகளிலும் விழிப்புடன் பயணிப்பீர்!!

No comments:

Post a Comment