Thursday, 4 December 2014

நியூட்டன் விதிகள் மூன்றும் மோட்டார் வாகனஇயக்கம் தொடர்பானவையே.



மரியாதைக்குரியவர்களே,
            வணக்கம்.
           நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.


    ஒரு பொருள் அல்லது வாகனம் திடீரென வேகமான இயக்கத்தைப்பெறவோ அல்லது திடீரென நிற்கவோ இயலாது.இயற்கைவிதிப்படி குறிப்பிட்ட கால அளவு எடுத்துக்கொண்டு படிப்படியாகத்தான் மாறுபாடு ஆகும்.அதாவது நிற்கவோ,இயங்கவோ நிகழும்.நியூட்டன் ஈர்ப்புவிதிப்படிதான் கோள்கள்,விண்மீன் திரள்கள்,மோட்டார் வாகனங்கள்,எறியப்படும் பொருட்கள்,விழும் பொருட்கள்,நீங்கள்,நான் என அனைத்து அசைவுகளுமே நிகழ்கின்றன.அவைகளின் வேகத்தைப் பொறுத்து மற்றும்  பலத்தை பொறுத்து அசைவு என்னும் இயக்கத்தில் மாற்றம் அடையும்.

வாகன இயக்கம் தொடர்பான நியூட்டனின் மூன்று விதிகள்;
(1) முதல் இயக்க விதி;
         முடத்துவம் INTERIA 
                  அதாவது பொருளின் நிலையான இயக்கத்திற்கும் விசைக்கும் உள்ள தொடர்பு,
 ஒரு பொருள் புறவிசை எதுவும் தள்ளாதபோது நிற்கும் அல்லது நேர்கோட்டில் சீரான வேகத்தில் செல்லும்.அதாவது விசை FORCE கொடுத்தால் இயங்கும்.விசை FORCE கொடுத்து தடுத்தால் நிற்கும்.
(2)இரண்டாவது இயக்க விதி; 
         வளர்வேகக் கோட்பாடு (PRINCIPAL OF ACCELERATION) 
        விசையின் அளவு மற்றும் திசையைப்பற்றிய வரையறை (இயல்பு) ஒருபொருளின் நகர்ச்சி வேக மாறுபாடு அதன் நிறைக்கு எதிர் விகிதத்திலும்,தள்ளும் விசைக்கு மற்றும் செல்லும் திசைக்கு நேர் விகிதத்திலும் இருக்கும்.அதாவது விசை கொடுக்கும்வரை பொருளின் இயக்க வேகம் அதிகமாகும்.விசையை குறைக்கும்வரை பொருளின் இயக்க வேகம் குறையும்.ஒரு பொருளின் நிறைக்கு ஏற்றவாறு விசையானது வேக வளர்ச்சியை நேர்விகிதத்தில் அந்தப்பொருளில் உண்டாக்கும்.
              உதாரணமாக, 
              நின்றுகொண்டிருக்கும் மோட்டார் வாகனம்  மீது ஓடுகின்ற ஒரு வாகனம் மோதினால் நிற்கும் வாகனம் மோதிய வாகனத்தின் வேகத்திற்கேற்ப வேக மாற்றத்துடன் இயங்கும்.அதுவும் மோதிய திசையில்  நகரும்.அதே சமயம் நிற்கும் வாகனத்தின் நிறையும் (எடையும்) முக்கியமானது.நின்றுகொண்டிருக்கும் வாகனத்தின் நிறை (எடை) அதிகமாக இருக்கும் அளவு மோதிய வாகனத்தின் நிறையும் (எடையும்) வேகமும் அதிகமாக இருந்தால் மட்டுமே நின்றுகொண்டிருக்கும் வாகனத்தில் பாதிப்பு ஏற்படும்.இதைத்தான் 
  'ஒரு பொருளின்மீது செயல்படும் விசைகள் சமன்செய்யப்படாதபோது' என்று கூறுகிறோம்.அதாவது பொருள்களின் வேக மாற்றமானது நிகரவிசையில் ஏற்படும்..
உதாரணமாக, 
            நின்றுகொண்டிருக்கும் கார் மீது ஒரு வண்ணத்துப்பூச்சி மோதினால் காரின் வேக மாற்றம் எதுவும் நிகழாது.காரணம் வண்ணத்துப்பூச்சியின் விசை அனைத்தும் காரின் அதிகப்படியான நிறையால் சமன் செய்யப்பட்டுவிடும்.
          இதுவே F = MA சமன்பாடு உருவாக உதவியது.

(3)மூன்றாவது இயக்க விதி' 
 விசையின் தன்மைக்கேற்ப எதிர்விசை உண்டு.
          அதாவது ஒவ்வொரு நேர் உந்துதலுக்கும் எதிராக அதற்கு சமமான எதிர் உந்துதல் இருக்கும்.
      (இந்தவிசையில் கவனிக்கவேண்டியவை;  ஒரே பொருளின் மீது செயல்விசையும் எதிர்ச்செயல் விசையும் செலுத்தப்படுவது இல்லை.அவை செயல் மற்றும் எதிர்ச்செயலில் ஈடுபடும் இரு வெவ்வேறு பொருள்களின் மீது செலுத்தப்படும்.இவ்விரு விசைகளும் கால அவகாசமின்றி ஒரே நேரத்தில் செயல்படும்.)

 மூன்றாவது விதிக்கு நியூட்டன் ஆறு துணை விதிகள் எழுதியுள்ளார். நமது புரிதலுக்காக கீழே உள்ள உதாரணங்களைத்  தெரிந்துகொள்ளுங்க,
(ஒன்று) - 
                   உள்ளங்கையை சுவர்மீது வைத்து அழுத்தினால் அதாவது செயல்படுத்தினால் உள்ளங்கை வடிவம் சிறிது மாறும்.காரணம் சுவர் நம் கைமீது சமவிசையை அதாவது எதிர்ச்செயலை செயல்படுத்தும்.
(இரண்டு)-
        நீந்துபவர் குறிப்பிட்ட விசையுடன்(செயல்) தண்ணீரை பின்னோக்கி தள்ளும்போது அதற்கு சமமான எதிர்விசையை (எதிர்ச்செயல்)தண்ணீர் நீந்துபவர் மீது செலுத்தி முன்னோக்கித்தள்ளும்.
(மூன்று)-  
           ஒருவர் படகிலிருந்து கரைக்கு தாவும்போது படகின் மீது விசையை(செயல்) செயல்படுத்துவதால் படகு இயக்கம் பெற்று பின்னோக்கித் தள்ளப்படுகிறது.இதனால் படகு அவர்மீது எதிர்விசை செயல்படுத்தி(எதிர்ச்செயல்) கரையை நோக்கி தாவுவதற்கு (அவரது எதிர்ச்செயல் இயக்கத்திற்கு) காரணமாகிறது.
(நான்கு)
                    எதிர்ச்செயல் விசை இல்லையென்றால் நம்மால் நடக்கக்கூட முடியாது.நடக்கும்போது நாம் நமது கால்பாதத்தை தரையில் அழுத்தி தரைமீது  செயல் என்னும் விசையை செலுத்துகிறோம்.இதற்கு சமமான எதிர்ச்செயல் என்னும் எதிர்விசையை தரையானது நமது கால்பாதத்தின்மீது செயல்படுத்துகிறது.இந்த எதிர்விசை புவிப்பரப்பிற்கு சாய்வாக உள்ளது.அப்போது எதிர்விசையின் செங்குத்துக்கூறு நமது உடல் எடையை சமப்படுத்துகிறது.கிடைத்தளக் கூறு நம்மை முன்னோக்கி நடக்க உதவுகிறது.
(ஐந்து)
              துப்பாக்கியிலிருந்து குண்டு வெளியேற்ற செயல் என்னும்  குறிப்பிட்ட விசையை செலுத்துகிறோம்.அப்போது அந்தவிசைக்கு சமமான எதிர்ச்செயல் என்னும் எதிர்விசை துப்பாக்கி மீது செயல்பட்டு நமது தோள்பட்டையில் பின்னோக்கித்தள்ளும்.
(ஆறு)
             பறக்கும்போது பறவையின் இறக்கைகள் காற்றை கீழ்நோக்கித் தள்ளும் (செயல்).அப்போது வளிமண்டலத்தில் பரவியுள்ள காற்றானது பறவையை மேல்நோக்கித் தள்ளுவதால்  ( எதிர்ச்செயல்) பறந்து செல்ல உதவுகிறது.இந்தப்பதிவில் குறைகளோ அல்லது பிழைகளோ இருந்தால் தயவுசெய்து கீழ்கண்ட எனது தொடர்பு எண்ணுக்கு தகவல் கொடுத்து உதவ வேண்டுகிறேன். என அன்பன்- பரமேஸ் டிரைவர்.

    ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் 1905 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ள பொருண்மை மற்றும் ஆற்றல் சமன்பாடு பற்றியும் அறிந்துகொள்வோம்.

No comments:

Post a Comment