Tuesday, 8 October 2013

போதை பொருட்களை தவிர்ப்போம்-நிறைவுவிழா-2013


Dispense drugs - and save ourselves
மரியாதைக்குரியவர்களே,
                                     வணக்கம்.
                               ''போதை பொருட்களை தவிர்ப்போம்-நம்மை நாமே காப்போம்''
           


                தேசப்பிதா காந்தியடிகள் பிறந்த நாள் விழா- ஒரு வாரம் பொது மக்களுக்கான விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து இன்று நிறைவு விழா இன்று கோபி கலை அறிவியல் கல்லூரியில் KMR நினைவு அரங்கத்தில் நடைபெற்றது.


தலைமையுரை;- Dr.R.செல்லப்பன் ,M.B.A.,M.Com.,M.Phil.,Ph.D.அவர்கள் கல்லூரி முதல்வர்  
முன்னிலை;திரு.P. கருப்பண்ணன்,B.A.B.L., அவர்கள்,கல்லூரி ஆட்சி மன்றக்குழு தலைவர்,மற்றும் திரு.K.M. நடராஜன்,B.A.B.L., அவர்கள், செயலர் மற்றும் தாளாளர், 
   

 அறிக்கை வாசிப்பு;-C.பரமேஸ்வரன் அவர்கள்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.(அறிக்கையின் விரிவாக்கம் கடைசியில் காணவும்.)
பாராட்டுரை;-அரிமா.K.லோகநாதன் அவர்கள்.,லோகு ஹெவி டிரைவிங் ஸ்கூல்-சத்தியமங்கலம்.மற்றும் ஒருங்கிணைப்பாளர்-நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்.-தமிழ்நாடு.
சிறப்புரை;-திரு.ஈரோடு கதிர் அவர்கள்,
பொன்னாடை அணிவித்து பாராட்டுதல்;
               கல்லூரி நிர்வாக சான்றோர்கள் ஒருவார விழிப்புணர்வு இயக்கத்தினை தொய்வின்றி இடைவிடாமல் நடத்தியமைக்காக நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கத்தின் நிர்வாகிகள் திரு.A.A.இராமசாமி,தலைவர் அவர்களுக்கும்,அரிமா K.லோகநாதன் ஒருங்கிணைப்பாளர் அவர்களுக்கும்,செயலாளர் C.பரமேஸ்வரன் அவர்களுக்கும் பொன்னாடை மற்றும் புத்தகங்கள் பரிசளித்து பாராட்டினர்.
                               சிறப்பு விருந்தினராக வருகை புரிந்து சிறப்புரை ஆற்றிய மரியாதைக்குரிய ஈரோடு கதிர் ஐயா அவர்களுக்கும் சிறப்பு பரிசு வழங்கி கௌரவித்தனர்.
நிறைவாக Dr.M.சுந்தர மூர்த்தி அவர்கள் நன்றியுரை கூறினார்.

        
       அறிக்கை வாசிப்பின் முழு விவரம்;-
    ''போதை பொருட்களை தவிர்ப்போம்-நம்மை நாமே காப்போம்''
             தேசப்பிதா காந்தியடிகள் பிறந்த நாள்விழா =ஒருவார விழிப்புணர்வு இயக்கத்தின் நிறைவு விழாவிற்கு   தலைமை ஏற்று நடத்திக்கொண்டிருக்கும் மரியாதைக்குரிய முதல்வர் ஐயா அவர்களே,முன்னிலை வகித்துள்ள சான்றோர்களான இக்கல்லூரி ஆட்சிமன்றக்குழு தலைவர் ஐயா அவர்களே,இக்கல்லூரி செயலர்&தாளாளர் மரியாதைக்குரிய ஐயா அவர்களே,சீர்மிகு விழாவில் சிறப்புரை ஆற்ற வருகை தந்துள்ள மரியாதைக்குரிய ஈரோடு கதிர் ஐயா அவர்களே,பாராட்டுரை வழங்க வருகை புரிந்துள்ள அரிமா K.லோகநாதன் ஐயா அவர்களே, சத்தியமங்கலம் காமதேனு கலை அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர் திரு.T.சரவணன், குடி மக்கள் நுகர்வோர் மன்றம் ஒருங்கிணைப்பாளர் அவர்களே,அனைவரையும் வரவேற்று உபசரித்த மரியாதைக்குரியK.ராஜேந்திரன் உதவிப்பேராசிரியர்  S.S.L.திட்ட அலுவலர்  ஐயா அவர்களே,நன்றியுரை வழங்க உள்ள மரியாதைக்குரிய Dr.M.சுந்தரமூர்த்திN.S.S.திட்ட அலுவலர் ஐயா அவர்களே,அனைத்து பேராசிரிய,பேராசிரியை பெருமக்களே,மாணவச்செல்வங்களே,பெற்றோர்களே,விடுபட்டுள்ள அனைத்து நல்ல மனது படைத்த பெரியோர்களே, அனைவருக்கும் நான் செயலாளராக உள்ள''நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு சார்பாக முதற்கண் வணக்கத்தினை தெரிவித்துக்கொள்கிறேன்.

 தேசப்பிதா காந்தியடிகள் பிறந்த நாள்விழா-ஒருவார விழிப்புணர்வு இயக்கமாக கோபி கலை அறிவியல் கல்லூரி-கோபிசெட்டிபாளையம்,காமதேனு கலை அறிவியல் கல்லூரி-சத்தியமங்கலம்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு இணைந்து ''போதை பொருட்களை தவிர்ப்போம்-நம்மை நாமே காப்போம்'' என போதையின் தீங்குகள் பற்றி பொதுமக்கள் விழிப்புணர்வுக்காக பல்வேறு தளங்களில் பரப்புரை செய்தோம்.
(1) அக்டோபர் முதல் நாள்(01ம் தேதி) , காமதேனு கலை அறிவியல் கல்லூரி-சத்தியமங்கலத்தில் மதியம் இரண்டு மணிக்கு சத்தியமங்கலம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மரியாதைக்குரிய ஐயா அவர்கள் துவக்கி வைத்து சிறப்புரை ஆற்usiqmf. காமதேனு கலை அறிவியல் கல்லூரியின் தாளாளர் மரியாதைக்குரிய ஐயா அவர்கள் தலைமை ஏற்றார்.அக்கல்லூரி செயலாளர் மரியாதைக்குரிய அம்மையார் அவர்களும்,அக்கல்லூரி முதல்வர் மரியாதைக்குரிய ஐயா அவர்களும்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.இயக்கத்தின் தலைவர் மரியாதைக்குரிய ஐயா அவர்களும் முன்னிலை வகித்தனர்.
மரியாதைக்குரிய உதவி பேராசிரியர் ஐயா குடி மக்கள் நுகர்வோர் மன்றம் ஒருங்கிணைப்பாளர் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.
   சத்தியமங்கலம் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மரியாதைக்குரிய ஐயா நிலை-ஒன்று&நிலை இரண்டு இருவரும்,சத்தியமங்கலம் உதவி தொடக்க கல்வி அலுவலர் மரியாதைக்குரிய அம்மையார் அவர்களும்,அரிமா லோகநாதன் லோகு ஹெவி டிரைவிங் ஸ்கூல்-சத்தி மற்றும் ஒருங்கிணைப்பாளர்-நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் தமிழ்நாடு -அவர்களும் வாழ்த்துரை வழங்கினர்.
    நன்றியுரை  C.பரமேஸ்வரன்-செயலாளர், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் தமிழ்நாடு அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார்.
(2)அக்டோபர் இரண்டாம் நாள்  தேசப்பிதா காந்தியடிகள் பிறந்த நாளன்று இளைய சமுதாயம்''போதையும்-மீட்பும்'' தலைப்பில் பொதுமக்களிடையே கருத்து சேகரிப்பு நடத்தினோம்.மாணவப்பருவத்தில் ஏறக்குறைய எல்லோருமே மது,போதையில் ஈடுபடுவதாக மகளிடையே கருத்து பரவி இருந்ததையும்,இதிலிருந்து மீள தனி மனித ஒழுக்கமே தேவை என்ற பிரதானமான கருத்து மக்களிடையே உள்ளது என்பதனையும் அறிந்து கொள்ள முடிந்தது.
(3)அக்டோபர் மூன்றாம் நாளன்று ஸ்ரீராகவேந்திரா மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவர்கள்,ஆசிரியர்கள்,ஆசிரியைகள் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கத்துடன் இணைந்து பள்ளி மாணவர்கள் பேரணி நடத்தினோம்.கோம்பு பள்ளம் தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு நிலைய அலுவலர் அவர்களும்,அரிமா லோகநாதன் அவர்களும் முன்னிலை வகிக்க தலைவர் இராமசாமி அவர்கள் தலைமையில் சத்தியமங்கலம் மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை இரண்டு அவர்கள் துவக்கி வைத்தார்.பள்ளி மாணவர்கள் நடை பயண பேரணி கோட்டுவீராம் பாளையம்,மணிக்கூண்டு,ஆற்றுப்பாலம்,வட்டாட்சியர் அலுவலகம்,ஊராட்சி ஒன்றியம் வழியாக ரங்கசமுத்திரம் நகராட்சி உயர் நிலை பள்ளியில் நிறைவடைந்தது.அப்பள்ளி தலைமையாசிரியர் திரு.மனோகரன் அவர்கள் பேரணியை பாராட்டி வரவேற்று நிறைவு செய்தார்.
   (4)அக்டோபர் நான்காம் நாளன்று தாளவாடி ஒன்றியம் ஆசனூர் மலைப்பகுதியில் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலை பள்ளியில் போதை பொருட்களை தவிர்ப்போம்-நம்மை நாமே காப்போம்'' தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தினோம்.அப்பள்ளி தலைமையாசிரியை மரியாதைக்குரிய R.கலைவாணி அம்மையார் அவர்கள் தலைமை வகித்தார்.திரு.A.P.ராஜூ அவர்கள் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் முன்னிலை வகித்தார்.அப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் மரியாதைக்குரிய  ரமேஷ்  ஐயா அவர்கள் வரவேற்புரை மற்றும் விளக்கவுரை நிகழ்த்தினார்.அப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் திரு.பிரான்சிஸ் ரிச்சர்டு பிரபு அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.திரு.இரா.ஈஸ்வரன் தியணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை நிலைய அலுவலர் போக்குவரத்து அவர்கள் சிறப்புரை ஆற்றினார். நன்றியுரை அப்பள்ளி ஆசிரியர் திரு.பிரபு அவர்கள் வழங்கினார்.அப்பள்ளியின் அனைத்து ஆசிரியர்களும் புகை,மது,போதை பொருட்களை பயன்படுத்துவதில்லை என்ற விவரத்தினை நாங்கள் அறிந்தோம்.பிறகு அப்பகுதி மக்களுக்கு போதையின் தீங்குகள் பற்றிய துண்டு பிரசுரம் வழங்கி பிரச்சாரம் செய்தோம்.
 அக்டோபர் ஐந்தாம் நாள் மற்றும் ஆறாம் நாளன்று வாகன ஒலிபெருக்கி பிரச்சாரம் நடத்தினோம்.கோபி ஒன்றியம்,சத்தியமங்கலம் ஒன்றியம்,நம்பியூர் ஒன்றியம் பகுதிகளில் திரு.மனோஜ் அவர்களும்,திரு.P.S.பெரியசாமி அவர்களும் பிரச்சாரம் செய்ய உதவி புரிந்தனர்.இப்பிரச்சாரத்திற்கு பெரியசாமியின் பங்கு பாராட்டுதலுக்குரியது.
அக்டோபர் ஏழாம் நாளன்று ,கோபி கலை அறிவியல் கல்லூரி மாணவர்களும்,சத்தி காமதேனு கலை அறிவியல் கல்லூரி மாணவர்களும் இணைந்து முப்பது கிமீ சைக்கிள் பேரணி நடத்தினோம்.அரிமா K. லோகநாதன் அவர்கள் தலைமை வகித்தார்.திரு.A.A.இராமசாமி அவர்கள் தலைவர்- முன்னிலை வகித்தார்.சத்தியமங்கலம் வட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவரும் சட்ட ஆலோசகருமான S.L.வெங்கடேஸ்வரன் அவர்கள் துவக்கி வைத்தார்.காலை எட்டு மணிக்கு புறப்பட்ட சைக்கிள் பேரணிக்கு பாதுகாப்பாக கோபி கலை அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியர்களான திரு.K.ராஜேந்திரன்  S.S.L.திட்ட அலுவலர் அவர்களும்,முனைவர் M.சுந்தர மூர்த்தி N.S.S.திட்ட அலுவலர் அவர்களும் மாணவர்களுடன் சைக்கிளில் பயணித்தனர். அரியப்பம்பாளையத்தில் தலைவர்A.A. இராமசாமி அவர்களது குடும்பத்தார் காலை உணவு கொடுத்து வாழ்த்தி வழியனுப்பினர்.அரசூர்,கொடிவேரி பிரிவு,பகுதிகளில்எலத்தூர் சிதம்பரம் என்ற தனி மனித ஆர்வலர் அனைவருக்கும் குளிர் பானம் கொடுத்து வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.காசிபாளையத்தில் திரு.செல்வம்- பண்ணாரி அம்மன் ஸ்டுடியோ அவர்கள் குடும்பத்தார் அனைவருக்கும் குளிர்பானம் கொடுத்து வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.கோபி கலை அறிவியல் கல்லூரி சார்பாக கரட்டடிபாளையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.கோபி சீதா கல்யாண மண்டபத்தில் கோபி அச்சக உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பாக வரவேற்று பேரணியை நிறைவு செய்தனர்.மதிய உணவுக்கான ஏற்பாடு கோபி அச்சக உரிமையாளர்கள் சங்கமும்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கமும் செய்திருந்தனர்.
             முக்கியமாக கவனத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டியது.
                       இரு கல்லூரி மாணவர்கள் முப்பது கி.மீ.சைக்கிள் பேரணி என்றாலும் அவர்கள் கோபி-சத்தி போக -வர என அறுபது கி.மீ அதே நாளில் சைக்கிள் ஓட்டி உள்ளனர்.எனவே இதனை அறுபது கி.மீ சைக்கிள் பேரணி என்று கூறுவதே சரியானதாகும்.மாணவர்களோடு மாணவராக உதவிப் பேராசிரியர் அவர்களும் சைக்கிளில் வந்து மாணவர்களுக்கு ஊக்கமளித்தது பாராட்ட வேண்டியதாகும்.
ஒருவார விழிப்புணர்வு இயக்கம் வெற்றி பெற (.1)சத்தியமங்கலம் காமதேனு கலை அறிவியல் கல்லூரி.(2)கோபி கலை அறிவியல் கல்லூரி,(3)அரிமா k.லோகநாதன் அவர்கள்,(4)அரசு போக்குவரத்துக்கழகம்-ஈரோடு மண்டலம்-தாளவாடி கிளை அனைத்து தொழிலாளர்கள்,(5)சத்தியமங்கலம்U.G.M.கணிப்பொறி அச்சகம்,(6)ஸ்ரீபாலாஜி ரப்பர் ஸ்டாம்ப் ஒர்க்ஸ்&பிரிண்டர்ஸ் உரிமையாளர் திரு.P.S.பெரியசாமி அவர்கள்,(7)ஸ்வஸ்திக் ஏஜென்சீஸ் தையல் மிஷின் விற்பனை மற்றும் சர்வீஸ்-கோபி, உரிமையாளர் திரு இளங்கோ அவர்கள்,(8)சபரி பிரிண்டர்ஸ்-கோபி அவர்கள்,(9)நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு அனைத்து உறுப்பினர்கள்,(10)இணையதள நண்பர்கள்,மற்றும்(11) சமூக நலனில் அக்கறையுள்ள தன்னார்வலர்கள் பங்களிப்பாகும்.
  ஒருவார விழிப்புணர்வு இயக்கம் தாளவாடி ஒன்றியம்,சத்தியமங்கலம் ஒன்றியம்,கோபி செட்டிபாளையம் ஒன்றியம்,நம்பியூர் ஒன்றியங்களில் நடத்தப்பட்டன.விழிப்புணர்வு பிரசுரங்கள் 10,000எண்ணிக்கையும்,கதவு ஒட்டிகள்(ஸ்டிக்கர்)இரண்டாயிரமும்,பேனர்கள் 16 எண்ணிக்கையும், வாசக தட்டிகள் 100ம்,சைக்கிள்கள் 32ம்,இரு சக்கர மோட்டார் வாகனங்கள் உட்பட வாகனங்கள்10ம்,ஒலிபெருக்கி சாதனங்களும்,தொலை தொடர்பு சாதனங்களும்,இணையதளங்களும்,சமூக வலைதளங்களும்,மின்னஞ்சல்களும் பயன்படுத்தப்பட்டன.
 என அன்பன்
 பரமேஸ்வரன்.C.
செயலாளர்,
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.
     பதிவு எண்:26/2013