Sunday, 30 March 2014

தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள்-தமிழில்-2014

மரியாதைக்குரியவர்களே,
                   வணக்கம்.

              நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-            தமிழ்நாடு.   பதிவு எண்:26/2013 
   (அரசு பதிவு பெற்ற தன்னார்வ நுகர்வோர் அமைப்பு)  
         சார்பாக        அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.
  தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் தமிழில் இங்கு பதிவிடுகிறேன்.
வாக்களிப்பதன் அவசியம் குறித்து புதிய வாசகங்களை உருவாக்கிக் கொடுத்த 
         'கோபி கல்வி மாவட்டத்தின்' கல்வி நிறுவனங்களான,

 (1)கோபி கலை அறிவியல் கல்லூரி - கோபிசெட்டிபாளையம், 
 (2)சத்தி காமதேனு கலை அறிவியல் கல்லூரி - சத்தியமங்கலம்,  (3)ஸ்ரீராகவேந்திரா மேனிலை பள்ளி - சத்தியமங்கலம் ,
(4)அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளி - ஆசனூர், (5)டிவைன் மெட்ரிக் பள்ளி-தாளவாடி. 
ஆகியவற்றிற்கும் & மாணவ,மாணவியருக்கும்  சமூக ஆர்வலர்களுக்கும்
                   நன்றிகள் பல....
      
       வாக்காளர் உணரவேண்டிய உண்மை;
 (1)வாக்குரிமை நமது அடிப்படை உரிமை,

(2) நமக்கு கிடைத்திருக்கும் தார்மீக உரிமை வாக்குரிமை,

(3) வாக்களிப்பது ஜனநாயக கடமை,

(4)வாக்களிப்பது நமது வாழ்வுரிமை,

(5)ஜனநாயகம் காக்க வாக்களிப்போம்,

(6)தவறாமல் வாக்களிப்போம்,சமுதாயத்தை மேம்படுத்துவோம்,

(7)நமது வாக்கு நாட்டின் போக்கு,

(8)வாக்கின் வலிமை தேசத்தின் வலிமை,

(9)நமது வாக்கு ஐந்து வருட ஆட்சியின் சக்தி,


(10)வாக்களிப்பது ஐந்தாண்டு ஆட்சியை தீர்மானிக்கும் உரிமை,

(11)வாக்களிப்போம் வாழ்வுரிமை காப்போம்,

(12)நல்லாட்சி அமைய வாக்களிப்போம்

(13)அனைவரும் வாக்களிப்போம் ஜனநாயகத்தை வலுப்படுத்துவோம்,

(14)சிந்திப்போம் சுயசிந்தனையில் வாக்களிப்போம்,

(15)சுதந்திரமாக வாக்களிப்போம்,சுதந்திரத்தை பேணி காப்போம்,

(16) யாருடைய தூண்டுதலும் இல்லாமல் வாக்களிப்போம்,

(17)மற்றவர்கள் சொல்வதை கேட்காமல் மனசாட்சிப்படி வாக்களிப்போம்,

(18)நல்லாட்சியை தேர்ந்தெடுப்பதே நமது முதல் கடமை,

(19)நமக்கு இருப்பது ஒரே ஓட்டு,தவறாமல் வாக்களிப்போம்,

(20)வாக்களிப்பு என்பது நம்மை ஆளவேண்டியருக்கு நாம் கொடுக்கும்  உத்தரவு,

(21)நமது வாக்கு நாட்டின் தலை எழுத்தையே மாற்றியமைக்கும்,

(22)வாக்களிப்போம் சமூகத்தை வளப்படுத்துவோம்,

(23)நயவஞ்சக பேச்சுக்களை நம்பாதீர்,நல்லவருக்கே வாக்களிப்பீர்,

(24)வாக்காளர் என்பதில் பெருமை வாக்களித்தால் மட்டுமே,

(25)நம்மை ஆள்பவரை நாமே தீர்மானிப்போம்,நியாயமாக வாக்களிப்போம்,

(26)எல்லோரும் இந்நாட்டு மன்னர்களே,அனைவரும் வாக்களிப்போம்,

(27)நமக்கு நாமே எஜமானர் நேர்மையாக வாக்களிப்போம்,

(28)ஓட்டுப் போடுவது நமது உரிமையும் கடமையும் ஆகும்,

(29)எவருக்கும் வாக்களிக்க விருப்பமில்லையா நோட்டா பட்டன் அழுத்துவோம்,

(30)எனது வாக்கு எனது உரிமை,

(31)விரல் நுனியில் தேசத்தின் தீர்ப்பை எழுதுவோம்,

(32)எனது வாக்கு விற்பனைக்கு அல்ல,

(31)காசு,பணம் வாங்காமல் கண்ணியமாக வாக்களிப்போம்,

(32)மனதில் உறுதி வேண்டும்,கையூட்டு பெறாமல் வாக்களிக்க வேண்டும்,

(33)எல்லோரும் இந்நாட்டு மன்னர்களே,எந்த இனாமும் வாங்காமல் வாக்களிப்போம்,

(34)ஓட்டுக்கு பணம் பெற்றால் ஒரு வருடம் ஜெயில் தண்டனை,

(35)வாக்களிக்க பணம் கொடுப்பதும் பணம் வாங்குவதும் குற்றம்,

(36)மதுபானம்,பிரியாணி,பணம் என ஒருநாள் கொண்டாட்டத்திற்கு ஐந்து வருட ஆட்சியை வீணடிக்கலாமா?

(37)நம் வாக்கினை விற்கலாமா - நல்லாட்சியை தொலைக்கலாமா?

(38)வாக்கை விற்க மாட்டேன்,எதிர்காலத்தை வீணடிக்க மாட்டேன்,

(39)விலை பெற்று வாக்களிக்க விட்டில்பூச்சிகளா நாம்,

(40)வலுவான ஜனநாயகத்திற்கு விறுவிறுப்பாக வாக்களிப்போம்,

(41)வாக்கின் வலிமை மறக்க நாம் என்ன கொம்பை மறந்த மாடுகளா?நன்றாக சிந்திப்போம்,நல்லவருக்கே வாக்களிப்போம்,

(41)நமது அடிப்படை உரிமைகளை வழங்குவது ஜனநாயகமே,அனைவரும் வாக்களிப்போம்,

(42)பணமோ,இனாமோ வாங்காமல் மனச்சாட்சிப்படி வாக்களிப்போம்,

(43)நம்மை ஆளவேண்டியவரை தீர்மானம் செய்வோம்,நல்லவருக்கே வாக்களிப்போம்,

(44)பணத்திற்கு ஆசைப்பட்டு உரிமையை இழக்கலாமா?

(45)அற்ப சுகத்திற்காக ஐந்து வருடத்திற்கு அடிமையாகலாமா?

(46)இன்று கை நீட்டி பணம் வாங்கினால்?  நாளை விரல் நீட்டி பேசமுடியாது,
               சிந்திப்பீர் நல்வாக்கினை அளிப்பீர்.

(47)வாக்களிப்பது இன்றியமையாத கடமை,

(48)மருத்துவமனை,ரேசன்கடை,இலவசங்கள்,மதுக்கடை,சினிமா,கேஸ் சிலிண்டர் பெற,கரண்ட் பில் கட்ட,எல்.ஐ.சி.பில் கட்ட,வங்கி கணக்கு கட்ட,கிரிக்கெட் பார்க்க,அன்றாடம் டி.வி. சீரியல் பார்க்கபொன்னான நேரங்களை வீண்டிக்கும் நாம் வாக்களிக்க மட்டும் சலிப்பு காட்டலாமா?வாக்களிப்போம் நமது தார்மீக உரிமையை உறுதிப்படுத்துவோம்,

(49)நம் வாக்கை விற்பது ஐந்து வருடங்களை விற்பதுபோலாகும்,

(50)வாக்களிப்பு பற்றிய புரிதல் அவசியமானது! எனவே,பொறுமை இல்லாமல் புறக்கணிப்பு செய்யாதீர்,
                    வாக்களிப்போம்,வாழ்வுரிமை காப்போம்.

(51)கட்சிகளையும்,தலைவர்களையும் மனதில் வைக்காதீர்!! மனசாட்சிப்படி வாக்களிப்பீர்,

(52)நமது வாக்கு தர்மத்தை நிலைநாட்டும்,

(53)நம் விரல் நுனியில் வைக்கும் அடையாள 'மை' - சமூக அழுக்கை சலவை செய்யும்,வாக்களிப்போம்.

(54) இன்று நமக்கு தேவை!  வாக்களிப்பதற்கான பக்குவமும் அக்கறையுமே,

(55)சொந்த கரங்களால் ஓட்டு போடும் வாக்காளர்களே,   சொந்த சிந்தனையால் ஓட்டு போடுங்கள்,

(56)நாட்டில் வளர்ச்சி ஏற்படவும்,ஊழலை ஒழிக்கவும் ஓட்டு போடுங்கள்,

(57)வாக்காளர் என்பதில் பெருமை கொள்வோம்!,வாக்களிக்க தயார் ஆவோம்,

(58)நமது வாக்குப்பதிவு நம்ம கருத்துரிமை,

(59)போலியான வாக்குறுதிகளை நம்பாதீர்! பொறுப்பாக வாக்களிப்பீர்,

(60)பிடித்த கட்சி என்று பார்க்காதீர்! அதுவே நமக்கு பாதிப்பு,

(61)பழகிப்போன சின்னம் என்று பாராதீர்!,பாதகத்தை தேடாதீர்,

(62)தெரிந்த வேட்பாளர் என்று பாராதீர்!, எச்சரிக்கையாக வாக்களிப்பீர்,

(63) பழங்காலத்து கொள்கை என தயங்காதீர்!,தன்னிலை இழக்காமல் வாக்களிப்பீர்,

(64)நல்வாக்கு நாம் அளிப்போம்!,நல்லவருக்கே அதை அளிப்போம்,
(65)வாக்களிப்பது புனிதமான கடமை ஆகும்,

(66)MY VOTE - MY GOVERNMENT - MY INDIA 

(67)MY VOTE NOT FOR SALE

(68)பணத்திற்கு மயங்கி? பல நன்மைகளை இழக்கலாமா?

(69)எனக்கென இருப்பதுஒரே ஓட்டு!,அதை வீண்டிக்க மாட்டேன்,

(70)என் வாக்கு! என் எதிர்காலத்தின் குரல்,

(71)தேர்தலில் அதிருப்தியடைந்த மக்களே,'' நம்முடைய ஒரு வாக்குப்பதிவால் எல்லாம் சரியாகிவிடுமா?'' என்ற மனப்பான்மையில் வெறுப்புடன் வாக்களிக்க மறுக்க வேண்டாம்.நீங்களும் வாக்களிக்க ''எவருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை'' என்ற பட்டனும் உள்ளது.
     
           தேர்தல் நடத்தை விதிகள் 1961 ஆம் ஆண்டு 49 - ஓ விதியின்படி
எல்லா வேட்பாளர்களையும் நிராகரிக்க சட்டப்படி அனைவருக்கும் உரிமை உண்டு.
         அதனால் ''எவருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை'' என்ற வாக்கும் பதிவிடலாம்.. 
அதாவது ( NOTA -  None Of The Above)  'நோட்டா' என்னும் விருப்பத்தினையும் வாக்குப்பதிவு செய்யலாம்.
               இந்த ஆண்டு முதல் வாக்குப்பதிவு எந்திரத்திலேயே பொருத்தப்பட்டுள்ளது. 'எவருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை' என்ற 'நோட்டா'பட்டன் அனைத்து வாக்கு எந்திரங்களிலும் கடைசியில் இருக்கும்.
                                                இந்தப் பதிவு -  
           தேர்தல் மற்றும் வாக்குரிமை பற்றிய புரிதலுக்கான பதிவு.
               


Thursday, 13 March 2014

நோட்டா (NOTA) வாக்கு என்றால் என்ன?

மரியாதைக்குரியவர்களே,
                           வணக்கம்.
                 நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் -தமிழ்நாடு. வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
                      இந்த பதிவில் (NOTA) நோட்டா வாக்கு என்றால் என்ன? என்று தெரிந்துகொள்வோம்.
                  
               
                    நோட்டா பொத்தான் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். 
                            
                              அனைவரும் வாக்களியுங்க.நாம் இந்நாட்டின் மன்னர் என்ற உரிமையை காப்பாற்ற நமது வாக்குப்பதிவுதாங்க சான்று.உங்களுக்கு யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லையா? அப்படியானாலும் வாக்களியுங்க,யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை! என்று...அதுதாங்க , நோட்டா (NOTA) என்ற பட்டனை அழுத்தும் விருப்பத்தேர்வு.  
                                    NOTA - None Of The Above 
                          (நோட்டா)  பட்டனை அழுத்துவதன் மூலம் இந்த வாக்குச்சாவடிக்கு உட்பட்ட தொகுதியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் நிராகரிக்கிறேன்.அல்லது அவர்களுக்கு எதிரான வாக்களிக்கிறேன் என்று அர்த்தம், என்பதை நினைவில் வைக்கவும்......... 
                
  இந்த நோட்டா பட்டன் வாக்குப்பதிவு மெஷினில் கடைசியில் இருக்கும்.
         
            நோட்டா பொத்தான் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.

நோட்டா வாக்களிக்கும் முறை அமெரிக்கா,ரஷ்யா,ஸ்பெயின்,போலந்து உட்பட உலக நாடுகளில் அமல் படுத்தி ஜனநாயகத்தை பாதுகாத்து வரும் வேளையில், 
                    தற்போதுதாங்க இந்தியாவில் இரகசியக்கொள்கையை முழுமையாக நடைமுறைப்படுத்தும்விதமாக, நோட்டா அதாவது யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்ற நோட்டா பட்டன் அழுத்தும் முறை நடைமுறைப்படுத்தப்படுகிறது..இந்த முறைக்கு உத்தரவிட்ட மாண்புமிகு உச்சநீதிமன்றத்திற்கும்,அதன் பலனாக (2014)இந்த ஆண்டு பாராளுமன்றத்தேர்தலில் இந்தியா முழுவதும் அமல்படுத்தும் தேர்தல் ஆணையத்திற்கும் பொதுமக்களின் சார்பாக நன்றிகள் பல.......

                      மக்கள் சட்டம்1951 பிரிவு 128ன் படி வாக்களிக்க இரகசிய பராமரிப்பு என்று ஒரு தனிப்பிரிவு உள்ளது.அதன்படி முந்தைய காலங்களில்  தமிழக மாநில தேர்தல் துறை 49 - (O) விதியின்படி வாக்குச்சாவடி அதிகாரியிடம் சென்று யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்று தெரிவித்து அதற்கான படிவம் (எண் 17 -A ) கேட்டு வாங்கி பூர்த்தி செய்து அதில் கைவிரல் ரேகை அல்லது கையெழுத்து போட்டு பிறகு ''வாக்களிக்க மறுத்துவிட்டனர்'' என்ற பதிவேட்டில் பதிவு செய்யவேண்டும்.அதுவரை  
                     அரசியல் கட்சியினரும் உள்ளூர் அதிகார வர்க்கமும்  விடுவார்களா? சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அதிகாரியே ''சிக்னல்'' கொடுத்து நம்ம எண்ணத்தை கெடுத்து மூளைச்சலவை செய்து  நமது விருப்பத்தையும் அடிமையாக்கிவிடுகின்றனர்.அதனால் இரகசியக்கொள்கை மீறப்பட்டுவந்தது.
                  ஆனால் தற்போது ''நோட்டா'' பட்டன் முறை அமல்படுத்தியதால்தான் வாக்களிப்பதற்கான இரகசியக்கொள்கை முழுமையாக காப்பாற்றப்பட்டு உள்ளது.

                             எனவே,
                தவறாமல் வாக்களிப்பது நமது உரிமை. யாருக்கும் வாக்களிக்கலாம்.நம்ம தொகுதியில் போட்டியிடும்  அனைத்து வேட்பாளர்களையும் நிராகரித்து வாக்களிக்கலாம்.அதாவது இரகசியமாக 'நோட்டா' பட்டனையும் தட்டலாம். இதனால் நாம் யாருக்கு வாக்களித்தோம் என்று யாருக்கும் தெரியாது.............
                    
              இனி நோட்டா என்பதன் விளக்கம் காண்போம்.

               ( விக்கிப்பீடியா வலைத்தளத்திற்கு நன்றிகள் பல.)

             நோட்டா (None of the Above -     NOTA;   புதிதாக வாக்கு)  
                              அனைவருக்கும் எதிரான வாக்கு என்று பொருள். 
       இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்தில் மக்கள் அனைவருக்குமான உரிமையே இந்த நோட்டா    பட்டன் என்பதாகும். 

               தான் எந்த ஒரு வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பாத எந்த ஒரு இந்தியரும் நோட்டா பட்டனை அழுத்துவதின் மூலம் அந்த தொகுதியில் நிற்கும் வேட்பாளரை அல்லது வேட்பாளர்களை நிராகரிக்கிறேன்  என்று அர்த்தம் கொள்ளப்படும். 
              
              இச்சட்டம் உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 27 ஆம் தேதி அளித்த தீர்ப்பின்படி நோட்டா பட்டன் வாக்கு எந்திரத்தில் பொருத்தப்படுள்ளதாக தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நடைமுறை

                    நவம்பர் 11 முதல் டிசம்பர் 4 வரை நடைபெற்ற டெல்லி, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம் உள்பட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் இந்தியாவிலேயே முதன் முறையாக நோட்டா பட்டன் முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முதன்முறையாக

நோட்டா பட்டன் வசதி தமிழகத்தில் முதன் முறையாக ஏற்காடு இடைத்தேர்தலில் அறிமுகப்படுத்தியுள்ளது.
      நோட்டா பொத்தான் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.

                      For other uses, see None of the above (disambiguation).
                                   None of the above 
                   None of the Above (NOTA), also known as "against all" or a "scratch" vote, is a ballot option in some jurisdictions or organizations, designed to allow the voter to indicate disapproval of all of the candidates in a voting system. It is based on the principle that consent requires the ability to withhold consent in an election, just as they can by voting no on ballot questions.
Entities that include "None of the Above" on ballots as standard procedure include India ("None of the above"), Greece (λευκό, white, but unrelated to a political party of the similarly sounding name-however it is symbolic only), the U.S. state of Nevada (None of These Candidates), Ukraine (Проти всіх), Spain (voto en blanco), and Colombia (voto en blanco). Russia had such an option on its ballots (Против всех) until it was abolished in 2006. Bangladesh introduced this option (না ভোট) in 2008. Pakistan introduced this option on ballot papers for the 2013 Pakistan elections but later the Election Commission of Pakistan rejected this.
When None of the Above is listed on a ballot, there is the possibility of NOTA receiving a majority or plurality of the vote, and so "winning" the election. In such a case, a variety of formal procedures may be invoked, including having the office remain vacant, having the office filled by appointment, re-opening nominations or holding another election (in a body operating under parliamentary procedure), or it may have no effect whatsoever, as in the state of Nevada, where the next highest total wins regardless.

Sunday, 9 March 2014

சங்க உறுப்பினர்களுக்கான அறிவிப்பு-மார்ச் 2014

மரியாதைக்குரியவர்களே,
                                                 வணக்கம்.
                  ''நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு''வலைப்பக்கத்திற்கு அனைவரையும் வரவேற்கிறோம்.நம்ம சங்கத்தின் உறுப்பினர்கள் அறிவது.என்னவெனில் வருகிற மார்ச் 15 ம் தேதி சர்வதேச நுகர்வோர் தினம் அனுசரிப்பையொட்டி நம்ம சங்கத்தின் சார்பாக மார்ச் மாதம் 30ம் தேதி தாளவாடியில் நுகர்வோர் தினவிழா மற்றும் சால் பாதுகாப்பு இயக்கம் துவக்க விழா நடத்தி பொதும க்களுக்கு விழிப்புணர்வு கொடுக்க உள்ளோம்.அதுபற்றிய ஆலோசனைக் கூட்டம் சத்தியமங்கலம்- லோகு கனரக ஓட்டுனர் பயிற்சிப்பள்ளி மற்றும் வாகன புகை பரிசோதனை நிலைய வளாகத்தில் 14-03-214 வெள்ளிக்கிழமை அன்று காலை 10-00 மணிக்கு நடைபெற உள்ளது.அது சமயம் அனைத்து உறுப்பினர்களும் தவறாது கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.
                      என  
           நிர்வாகிகள்,
       நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்
    தமிழ்நாடு. பதிவு எண் 26/2013.GOBI
   மாநில மையம்
தொடர்புக்கு; # 9585600733