Thursday 20 June 2013

நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் - தமிழ்நாடு-நோக்கம்.


 மரியாதைக்குரிய நண்பர்களே,வணக்கம். 
     

               ''நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்                       -தமிழ்நாடு'' 
               -வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.நமது சங்கத்தின் முக்கிய நோக்கம் '' நீயும் வாழ்,மற்றவர்களையும் வாழவிடு'' என்பது ஆகும்.
         தலைவரின் ஒப்புதல் பெற்ற   இன்னும் சில நோக்கங்கள் மட்டும்  தங்களது கவனத்திற்காக பதிவிடப்பட்டுள்ளன.
    
நமது சங்கத்தின் நோக்கம்+

    (1)நுகர்வோர் நலன் மற்றும் மனித உயிர்களைப் பாதுகாக்க சாதி.மத.இன.மொழி,அரசியல் சார்பற்ற,இலாபநோக்கமற்ற பொதுநலச்சேவை அமைப்பாக செயல்படுவது.மாநில அளவில் சமூக ஆர்வமுள்ள,தன்னார்வம் உள்ள,விருப்பம் உள்ள பெரியோர்களை இனம் கண்டு நமது சங்கத்துடன் இணைத்து செயல்படுவது.நமது தேச ஒற்றுமைக்காகவும்,முன்னேற்றத்திற்காகவும் பாடுபடுவது.

    
       (2)மக்களிடையே நுகர்வோர் பாதுகாப்பு கல்வி மற்றும் சாலை பாதுகாப்பு கல்வி பரப்புரை செய்து விழிப்புணர்வு கொடுப்பது.முதல் கட்டமாக மலைப்பகுதிகளிலும் அடுத்து கிராமப்பகுதிகளிலும்,அடுத்து ஊராட்சி,பேரூராட்சி,வட்ட

 என்ற அடுக்குமுறையில் படிப்படியாக  அடுத்து பள்ளி,கல்லூரி வாயிலாக மாணவ சமுதாயத்திற்கு உதவும பொருட்டு பயிற்சிப்பட்டறை,கருத்தரங்கம் நடத்துவது.
   

     (3).வனப்பாதுகாப்பு,சுற்றுச்சூழல் பாதுகாப்பு,எயிட்ஸ்,மன அழுத்தங்களிலிருந்து மீளுவது பற்றி பரப்புரை செய்வது.

      (4)குடும்ப உறவு மற்றும் மனித உறவு மேம்பட,கலாச்சார சீர்கேடுகளில் இருந்து பாதுகாக்க

மது,போதை,புகையின் தீமைகள்,பற்றிய விழிப்புணர்வு கொடுப்பது சம்பந்தமான,பொதுக்கல்வி,வாழ்க்கைக்கல்வி, கொடுப்பது..



       (5)பலவகை விபத்துக்கள்,முதலுதவியின்அத்தியாவசியம் பற்றி பரப்புரை செய்வது.  பலவகை விபத்துக்கள்,ஏற்பட்டால்உடனடியாக மீட்பு நடவடிக்கைகளில் முனைப்புடன் செயல்படுவது.அதற்கான பயிற்சிகள் கொடுப்பது.

 (6)வாகனம் ஓட்டும் முறைகள் பற்றி,பாதுகாப்பான சாலைப்பயணம் செய்வது பற்றியும்,பலவகை விபத்துகள் பற்றியும் மக்களைத்தேடிச்சென்று விழிப்புணர்வு கொடுப்பது.மக்களுக்கு மக்களே வழிகாட்டி என தற்காப்புக்கான நினைவுபடுத்தும் பயிற்சிப்பட்டறை நடத்துவது.அடிக்கடி ஓட்டுனர்கள் மற்றும் சாலைப்பயனாளிகளுக்கு புத்தாக்கப்பயிற்சியும்,விழிப்புணர்வுப்பயிற்சியும்,
முதலுதவிப்பயிற்சியும் நடத்தி சாலைவிபத்துக்களைக் குறைக்க முனைப்புடன் செயலாற்றுவது.
      
    (6)அரசு பதிவு பெற்ற அல்லது பதிவு பெறாத சங்கங்களை இனம் கண்டு அவர்களையும் நமது சங்கத்துடன் கூட்டணி சேர்த்துக்கொண்டு சமூக நலன்களைச் செய்வது.அரசுத்துறைகளுடனோ,தன்னார்வம் உள்ளவர்களுடனோ இணைந்து அல்லது தனியாக செயல்படுவது.விருப்பமுள்ள அனைவரையும் சங்கத்தில் இணைத்துக்கொண்டு மாபெரும் மக்கள் சங்கமாக நம்பிக்கையுடன் செயல்படும் சங்கமாக இயக்குவது.

      (7) அரசுத்துறை சார்ந்த அல்லது சாராத அதாவது பாமர மக்களிருந்து குடியரசுத்தலைவர் வரை விருப்பமும்,உள்ள அனைவரையும் உறுப்பினர்களாகச் சேர்த்து அவர்களது ஆலோசனைகளையும்,வழிகாட்டுதலையும் பெற்று பொதுச்சேவை சங்கங்களுக்கே முன்னுதாரணமாகச் செயல்படுவது. 

     (8)சங்கம் முடங்கிக்கிடக்காமல் சுறுசுறுப்பாக செயல்படுத்துவது.அதற்கு அரசுத்துறையையும் பயன்படுத்திக்கொள்வது.

      (9)சங்கத்தின் செயல்பாடுகள் பற்றி அனைத்து உறுப்பினர்களுக்கும் தகவல் கொடுப்பது.ஒவ்வொரு பங்களிப்பின்போதும் நிர்வாக குழு ஒப்புதல் பெற்று செயல்படுவது.செயல்பாடுகள் பற்றி அனைத்து உறுப்பினர்களுக்கும் துண்டு அறிக்கைகள் மூலம் அச்சிட்டுக்கொடுத்து உறுப்பினர்களின் கண்காணிப்பில் செயல்படுவது.

     10) வங்கி கணக்கு துவங்கி வரவு,செலவு போன்ற நிதி நிர்வாகத்தை உறுப்பினர்களுக்கு வெளிப்படையாக தகவல் கொடுப்பது.குறைகளைச்சுட்டிக்காட்ட வலியுறுத்துவது.

     (11)மக்களைத்தேடிச் சென்று மேற்கண்ட அனைத்து நிகழ்வுகளையும் செயல்படுத்துவது.சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு அனுமதி பெற்று செயல்படுத்துவது.
  
 (12)தமிழ்நாடு நுகர்வோர் சங்கங்களின் கூட்டமைப்புடன் உறுப்பினராக இணைத்துக்கொண்டு அனைத்து சங்கங்களின் ஆலோசனைகளைப்பெற்று மக்களுக்காக செயல்படுவது.

நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு -உறுப்பினர்கள் விபரம்.

மரியாதைக்குரியவர்களே,வணக்கம். 

    

நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் - தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.நமது சங்கத்தின் உறுப்பினர்களின் பட்டியல் விபரம் தலைவரின் ஒப்புதல் பேரில் இங்கு வெளியிடப்படுகிறது.




நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-


   தமிழ்நாடு – பதிவு எண் = 26 / 2013- 
               நோக்கம்;- வாழு,வாழவிடு.


              அலுவலக முகவரி =

                      அன்பு இல்லம்,

                      சத்தியமங்கலம் – வட்டம்,

                     ஈரோடு மாவட்டம் – 638402.

                  
                    http;//www.consumerandroad.blogspot.com

                    
                     E-MAIL consumerandroad@gmail.com


      =======================================================           நிர்வாகக் குழு;-


 (1)தலைவர் =A.A. ராமசாமி – வியாபாரம் –சத்தி,

 (2)துணைத் தலைவர் =S. ரவி – விவசாயம் –கடம்பூர்,

 (3)செயலாளர் = C.பரமேஸ்வரன் – ஓட்டுனர் –சத்தி,

 (4)துணைச்செயலாளர் =V. ராஜன் – நடத்துனர் –காசிபாளையம்,

 (5)பொருளாளர் – V.பாலமுருகன் – சுய தொழில் –தாளவாடி,

 (6)ஒருங்கிணைப்பாளர் அரிமாK. லோகநாதன் –

      லோகு ஓட்டுனர் பயிற்சிப்பள்ளி –சத்தியமங்கலம்,

 (7)சட்ட ஆலோசகர் – Lawyer.S.L.வெங்கடேஸ்வரன் B.A.B.L.,–

     வழக்கறிஞர் –சத்தியமங்கலம்,

 (8)மருத்துவ ஆலோசகர்Dr.R. சின்னச்சாமிM.B.B.S.,M.R.H.S.,(LOND)

     மருத்துவர் –சத்தியமங்கலம்.


செயற்குழு உறுப்பினர்கள்;-


(1)  V.இளங்கோ – மெக்கானிக் –கோபி செட்டிபாளையம்,

(2)  A.P.ராஜூ – நடத்துனர் –தாளவாடி,

(3)  S.பரமேஸ்வரன்L.I.C. – முகவர் –கோபி செட்டிபாளையம்,

(4)  P.முத்துக்குமார் PGDCA– கணினி இயக்குனர் –அவினாசி,

(5)  P.S.பெரியசாமி (BALAJI RUBBERS)– சுயதொழில் –கொளப்பலூர்,

(6)  S.ராஜேந்திரன் – நடத்துனர் –சத்தி.



சங்க உறுப்பினர்கள்=

(1) S.K.சத்தியமூர்த்தி – வியாபாரம் –தாளவாடி,

(2)N.மனோகரன் – விவசாயம் –தாளவாடி,

(3)P.ஈஸ்வரன் – டீசல் பம்ப் மெக்கானிக் –சத்தி,

(4)B.கணேசமூர்த்தி(Videos) – த.நா.மி.வா. திருப்பூர்,

(5) P.தனபாலன் - ஆட்டோ ஓட்டுனர் –சத்தி பேருந்து நிலையம்,

(6)K.துரைராஜ் – ஆசிரியர் - கரளையம்,

(7) R.கோதண்டராமன்,M.B.A., – நிர்வாக அலுவலர் –இருட்டிப்பளையம்,

(8)D.குருபாதசாமி – நடத்துனர் –தாளவாடி,

(9) R.மாதேஷ்,M.A.B.Ed., தலைமை ஆசிரியர் – தாளவாடி,

(10)R. மாதேஸ்வரன் (U.G.M).– சுயதொழில் –சத்தி,

(11)T. வேணுகோபாலன் – விவசாயம். கடம்பூர்.



 மேலும் விபரங்களுக்கு;-

   C.பரமேஸ்வரன் (சிபிசாரதி)

    செயலாளர் –

நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்

தமிழ்நாடு – 638402 – பதிவு எண் = 26 / 2013
             http;//consumerandroad.blogspot.com

               consumerandroad@gmail.com

           E-MAIL-  paramesdriver@gmail.com

           FACEBOOK ID= parameswarandriver

             http;//konguthendral.blogspot.com

            

========================================================================

பொது மக்களின் ஆட்சேபனை மற்றும் ஆலோசனை கேட்பு அறிவிப்பு.





மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.

நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.
         வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
     நமது சங்கம் அனுமதி பெற்றது.பதிவு எண்=26 / 2013 ஆகும்.
 நமது சங்கத்திற்கு இலச்சினை அதாவது LOGO உருவாக்கிக்கொடுத்தவர்.

              இவர்  நமது சங்கத்தின் செயற்குழு உறுப்பினரும்-கோபி செட்டிபாளையம் கிரிராம் சைக்கிள் கடை அருகில் அமைந்துள்ள  ஸ்ரீபாலாஜி ரப்பர் ஸ்டாம்ப் ஒர்க்ஸ் நிர்வாகியுமான திரு.P.S.பெரியசாமி அவர்களுக்கு நமது சங்கத்தின் சார்பாக நன்றிகள் பல தெரிவித்துக்கொள்கிறோம்.அவரது கற்பனையில் உருவான எளிமையான, அதே சமயம் கருத்தாழமிக்க இலச்சினையின் மாடல் கீழே வெளியிடப்பட்டுள்ளது. 

                            இதில் இன்னும் மாற்றங்கள் ஏதாவது செய்தால் சிறப்பாக இருக்கும் என்று ஆர்வமும்,விருப்பமும் உள்ள தன்னார்வலர்கள் தங்களது கருத்துக்களை
 consumerandroad@gmail.com 
என்ற நமது சங்க மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்க.அல்லது லோகோ இலவசமாக உருவாக்கி மேற்கண்ட முகவரிக்கு அனுப்பி வையுங்க.


    மேற்கண்ட வண்ணமயமான லோகோ கணினிக்கும்,இணையத்திற்கும் பயன்படுத்தவும்,கீழே கண்டுள்ள லோகோ ரப்பர் ஸ்டாம்ப் மற்றும் லெட்டர் பேடு- பதிவுக்கும் என  நமது சங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
      இன்னும் ஒருவாரத்தில் (27-06-2013க்குள்) தங்களது விருப்பத்தினைத் தெரிவிக்க நமது சங்கத்தின் சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இதில் ஆட்சேபம் தெரிவிப்பவர்களும் ஆட்சேபனை தெரிவிக்கலாம்.ஏனென்றால் இந்த சங்கம் மக்கள் சங்கம். 
   என 
 (தலைவர் அவர்களின் ஒப்புதல் பேரில்)
C.பரமேஸ்வரன் (சிபிசாரதி)
செயலாளர், 
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-
            தமிழ்நாடு.