Friday, 28 November 2014

Kamban Kalvi Nilaiyam Matric Higher Secondary School - Gobi chettipalayam-2014

               

கம்பன் கல்வி நிலையம்  மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி-
                                                கோபி செட்டிபாளையம்.

                   குடிமக்கள் நுகர்வோர் மன்றம் - துவக்கவிழா-
                     நாள்; 28-11-2014வெள்ளிக்கிழமை காலை 11.00மணி 
 

மரியாதைக்குரியவர்களே,
                         வணக்கம்.நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.

            கோபி கம்பன் கல்வி நிலையம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 'குடிமக்கள்
நுகர்வோர் மன்றம் - துவக்க விழா நடைபெற்றது.


கோபி கம்பன் கல்வி நிலையம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 'குடிமக்கள்
நுகர்வோர் மன்றம் - துவக்க விழா  பள்ளியின் செயலாளர் திருமதி. K.K.
ஜானகி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பள்ளி முதல்வர் திருமதி. K.K.விசாலாட்சி அவர்கள் மற்றும் துணை முதல்வர் திரு.M.தட்சிணாமூர்த்தி
அவர்கள் முன்னிலை வகித்தனர்.


திருமதி. P.உமாமகேஸ்வரி அவர்கள், பள்ளியின் குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தின்
ஒருங்கிணைப்பாளர், அனைவரையும் வரவேற்றார்.


             
சத்தியமங்கலம் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கத்தின்
செயலாளர் திரு. C.பரமேஸ்வரன் அவர்கள்  பள்ளியில் 'குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தை  - துவக்கி வைத்து, சர்வதேச நுகர்வோர் உரிமைகளான எட்டு உரிமைகளின்
அவசியம் குறித்து விளக்கினார். சந்தைக்கு அரசனான நுகர்வோர் ஏமாறாமல்
விழிப்புடன் பொருட்களை வாங்கும் முறை பற்றியும், சேவைக் குறைபாடுகள்  மற்றும் கலப்பட உணவுகளை கண்டறிவது பற்றியும் விளக்கினார். நுகர்வோர்  பாதுகாப்பு சட்டம்-1986  நுகர்வோர் காவலனாக இருப்பதையும், இந்திய
தரச்சான்று குறியீடுகள் அவற்றின்  நன்மைகள் பற்றியும் விளக்கினார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம் பற்றி வலியுறுத்தியபோது  பிளாஸ்டிக் பொருட்களின் குறியீடு எண்கள் மற்றும் மறுசுழற்சி செய்வது பற்றியும், புகை
பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் பற்றியும் செயல்விளக்கத்துடன்
மாணவர்கள்
முன்னிலையில் செய்து காட்டினார்.

 பிளாஸ்டிக் குறியீட்டு எண்களும் அவற்றின் விபரமும் விளக்கியபோது......

 தரச்சான்று முத்திரைகளும் அவற்றின் விளக்கமும் பற்றி விவரித்தபோது.......

  குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தின் துவக்க விழாவில் ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ,மாணவியர், மற்றும் நுகர்வோர்
பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கத்தின் பொறுப்பாளர்கள் அனைவரும்
கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். இவ்விழா முடிவில் பள்ளியின் குடிமக்கள் நுகர்வோர்
மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு.E. குமரேசன் அவர்கள் நன்றி கூறினார்.

                       என அன்புடன் தங்களது நலன் கருதி.......