Tuesday, 1 October 2013

"போதையும்-மீட்பும்" கருத்து சேகரிப்பு-அக்-02

மரியாதைக்குரியவர்களே, 
                  வணக்கம்.


         இரண்டாவது நாளான  அக்டோபர்02ம் தேதி இன்று - இளைய சமுதாயம்''போதையும்-மீட்பும்'' பொதுமக்களிடையே கருத்து சேகரிப்பு

           காலை07-00 மணிக்கு விளையாட்டுத்திடல் (சத்தியமங்கலம் பேருந்து நிலையம் பின்புறம்)) இளைய சமுதாயம் ''போதையும்-மீட்பும்'' கருத்து சேகரித்தல்.

  காலை 08-00 மணிக்கு பால் உற்பத்தியாளர்கள் சங்கம்-கரட்டூர் கருத்து சேகரித்தல்.



  மரியாதைக்குரிய ஊர் பெரியவர் அவர்களிடம்  கருத்து சேகரித்தல்.




 ,திரு.முடி திருத்துனர் மற்றும் அங்கு குழுமியிருந்த பெரியோர்களிடம் போதையும்-மீட்பும் கருத்து சேகரித்தல்.




திரு.கிளை மேலாளர், அவர்கள்-சத்தியமங்கலம் கிளை -அவர்களிடம் போதையும்-மீட்பும் கருத்து சேகரிப்பு.




 சத்தியமங்கலம் வாடகைக்கார் உரிமையாளர்கள்&ஓட்டுனர்கள் பஸ் நிலையம்-கருத்து சேகரிப்பு.




 கோபி செட்டிபாளையம்-ஆட்டோ ஸ்டேண்ட் நண்பர்களிடம் கருத்து சேகரிப்பு.





 சத்தியமங்கலம் பேருந்து நிலையம்-ஆவின் பாலகம்-போக்குவரத்து தொழிலாளர்களிடம் கருத்து சேகரிப்பு.



கோபி செட்டிபாளையம் இந்திரா தியேட்டர் முன்புறம் வாடகை டெம்போ உரிமையாளர்கள்&ஓட்டுனர்களிடம் கருத்து சேகரிப்பு.





 சத்தி பேருந்து நிலையம் READ சமூக சேவை அமைப்பினர்களிடம் போதையும்-மீட்பும் கருத்து சேகரிப்பு.
   
  சத்தியமங்கலம் அம்மா குடிநீர் அங்காடியில் ''போதையும்-மீட்பும்'' கருத்து சேகரிப்பு.
என அன்பன்
பரமேஸ்வரன்.C,
செயலாளர்,
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-
தமிழ்நாடு.பதிவு எண்:26/2013
E-Mail: consumerandroad@gmail.com              

இளைய சமுதாயம்''போதையும்-மீட்பும்''கருத்து சேகரிப்பு.


Dispense drugs - and save ourselves
மரியாதைக்குரியவர்களே,

                                                                         வணக்கம்.நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
                    அக்-02ம் தேதி தேசப்பிதா காந்தியடிகள் பிறந்த நாள்விழா ஒருவார விழிப்புணர்வு இயக்கம்- இரண்டாம் நாள் இன்று பொதுமக்களிடம் -இளைய சமுதாயம் ''போதையும்-மீட்பும்'' கருத்து சேகரிப்பு நிகழ்ச்சிங்க.அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம் தேவைங்க!....
                     
     

                மேலே உள்ள படத்தை! சற்று உன்னிப்பாக கவனியுங்க! கையில் சிகரெட்டும்,மதுவும் பாருங்க!.இந்த நிலை அவசியமா?இக்குழந்தைக்கு என்ன வயது இருக்கும்?இதன் விளைவு எங்கு சென்று முடியும்?

                        
அதாவது,இன்றைய சூழலில் இளைய சமுதாயம் பல்வேறு தவறான மனப்பாங்கினால் தன் வாழ்க்கையை,தம் குடும்பத்தை,தன்னையே அழித்துக்கொள்ளும் அபாய நிலையான பல்வேறு போதை பழக்கத்திற்கு ஆளாகி,அடிமையாகி வருகின்றன.

                  முதலில் விளையாட்டாகவோ,சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கான சம்பிரதாயமாகவோ குடிக்க,போதை பழக்கத்தை ஆரம்பித்து காலப்போக்கில் அடிமையாகி சமூக சீரழிவு ஏற்படும் அபாயகரமான சூழல்நிலை நம் தேசத்தை ஆட்கொண்டுள்ளது.அந்த அபாயத்திலிருந்து மீட்டெடுக்க 
                 இளைய சமுதாயம் போதை பழக்கத்தில்  வீழ்வது எப்படி? அவ்வாறு போதை பழக்கத்திற்கு அடிமையாகும் இளைஞர்களை மீட்டெடுப்பது எப்படி? 
        என  தங்களது கருத்துகளை தாங்களே சிந்தனை செய்தும் கூறலாம்.தங்களது குடும்ப உறவுகளிடம்,நட்பு வட்டங்களிடம்,சுற்றத்தினரிடம்  கேட்டறிந்து கூறலாம்.,பேருந்து நிலையங்கள்-போன்ற கூட்டம் நிறைந்த இடங்களில்,மது விற்பனையாளர்களிடம்,மது அருந்துபவர்களிடம் கேட்டு கூறலாம். அறிஞர் பெருமக்களிடம்,கல்வியாளர்களிடம்,சான்றோர்களிடம்,
அரசுத்துறையினரிடம்,
நீதியரசர்களிடம், வழக்கறிஞர்களிடம்,அறிவியல் அறிஞர்களிடம்,சமூக ஆர்வலர்களிடம்,தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம்,தமிழ்நாடு அறிவியல் இயக்கம் போன்ற மக்கள் சேவை இயக்கங்களிடம்,மாணவர்களிடம்,கல்லூரி விடுதிகள்,பள்ளி விடுதிகள்,தங்கும் விடுதிகள்,அரசு நிறுவனங்களிடம்,அரசியல் நண்பர்களிடம்,என நமது சமூகம் எங்கெங்கு நிறைந்துள்ளதோ,அங்கெல்லாம் சிறிதும் வெட்கப்படாமல்,தடுமாற்றம் இல்லாமல், சமூக நலனுக்காக பத்து நிமிடங்களை ஒதுக்கி -
           நமது இன்றைய இந்திய செல்வங்களாம் இளைஞர் வளத்தை பாதுகாக்க,
                 போதையில் சிக்குண்டவர்களை மீட்டெடுக்க,எதிர்கால இந்தியாவை பாதுகாக்க,மொத்தத்தில் இந்தியாவின் வளம் மிக்க இளைஞர்களை நல்வழிப்படுத்தி கற்பனை மிகுந்த இளமைவளத்தை,கண்டுபிடிப்புகளுக்கு உகந்த இளமை வளத்தை,வேகம் மிக்க இளமை வளத்தை 
                        தனி மனித குடும்ப நலனுக்காக,நாட்டின் நலனுக்காக,நம் சந்ததியினரின், வருங்கால தலைமுறையினரின் நலனுக்காக,நம் வழித்தோன்றல்களை பாதுகாக்க,அடுத்த தலைமுறையினரை சீர்படுத்த,அறிவாற்றல்மிகுந்த சிறப்பு மிகு பாரதத்தை உருவாக்க ஏற்றநிலையில்நமது இளையசமுதாயத்தை பண்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
                 இது நம் ஒவ்வொருவரின் சட்டத்தில் எழுதப்படாத அவசியக் கடமையும் ஆகும்.மற்றும் ஒப்பற்ற சமூகப்பணியும் ஆகும். 
         இந்த வேண்டுகோள் அறிவிப்பு - தவறாகவோ,குறைகள் மிகுந்தவையாகவோ,தேவையற்றதாகவோ,விமர்சனத்திற்கு உட்பட்டதாகவோ,கண்டனத்திற்கு உட்பட்டதாகவோ,தாங்கள் கருதினால் அந்த கருத்துக்களையும் அனுப்பி வைக்கலாம்.அதனால் தங்கள் மீது தவறான மனப்பான்மையோ,கோபமோ, எவ்வித எதிர்ப்போ,வழக்கோ தொடுக்கமாட்டோம்.அதேசமயம் தங்களது எண்ணங்களை ஆய்வு செய்து  சமூக நலனுக்காக,இளைய சமுதாய நலனுக்காக தேவையான சான்றோர்கள் துணையுடன் சரியான முடிவு எடுப்போம்.
 எனவே சிரமம் பாராமல் நான்கு வரிகளாவோ,நாற்பது வரிகளாவோ தங்களது கருத்துக்களை சேகரித்து தொகுத்து அனுப்பி சமூகப்பணியில் ஈடுபட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
               தங்களது மேலான கருத்துக்களை
     (1) நேரிலோ,
      (2) நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.பதிவு எண்;26/2013 மாநில மையம்;அன்பு இல்லம்,கதவு எண்5,அன்பு இல்லம்,முருக முதலியார் வீதி,அரியப்பம்பாளையம் (அஞ்சல்),சத்தியமங்கலம்-638402,ஈரோடு மாவட்டம்.என்ற முகவரிக்கு தபால்வழியாகவோ,  
 (3) consumerandroad@gmail.com 
  என்றமின்னஞ்சலுக்கோ,
 (4) consumerandroad.blogspot.com -என்னும் இந்த வலைப்பக்கத்தில் பின்னூட்டமாகவோ,
   (5) parameswarandriver என்ற ஃபேஸ்புக் விலாசத்திற்கோ -
    (6) parameswarndriver என்ற Google+ சமூக தளத்திற்கோ
                 2013 அக்டோபர் ஏழாம் தேதி வரை அனுப்புங்கள்.கோபி கலை அறிவியல்கல்லூரி-கோபி செட்டிபாளையம் மற்றும் காமதேனு கலை அறிவியல் கல்லூரி-சத்தியமங்கலம் மற்றும் நமது சிபர்ஸ்ஆர்க் அமைப்பு இணைந்து  தங்களது மேலான கருத்துக்களை சமுதாய நலனுக்கேற்ப திருத்தம் செய்து,சுருக்கி,எளிமைப்படுத்தி அதனை அரசுக்கு ஆவணமாக அனுப்ப உள்ளோம்.இந்த வலைப்பக்கத்திலும் பதிவிடப்படும்.
தங்களது கருத்துக்களை,

ஆவலுடன் எதிர் நோக்கும்,
 அன்பன்,
C.பரமேஸ்வரன்,

 அலைபேசி எண்;-09585600733 அல்லது+919585600733
செயலாளர்,
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-

தமிழ்நாடு.பதிவு எண்;-26/2013 
E-Mail: consumerandroad@gmail.com
========================================================================
( viewer:1435இதுவரை)

போதை பொருட்களை தவிர்ப்போம்-நம்மை நாமே காப்போம்.


Dispense drugs - and save ourselves
மரியாதைக்குரியவர்களே,
                                                                       வணக்கம்.நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
        2013 ஆம் ஆண்டு அக்டோபர் 01.இன்று காமதேனு கலை அறிவியல் கல்லூரியில் தேசப்பிதா காந்தியடிகள் பிறந்த நாள் விழா-ஒருவார விழிப்புணர்வு இயக்கம்-துவக்கவிழா நடைபெற்றது.
    
  
                  துவக்கி வைத்தவர்;-  
            திரு.இரா.தா.முத்து மாணிக்கம்M.A.,D.Pharm.,அவர்கள்,
ஈரோடு மாவட்ட சத்தி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அவர்கள் துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.


    வரவேற்புரை;-திரு.T.சரவணன்,M.Com.,M.Phil., அவர்கள்,உதவி பேராசிரியர் மற்றும் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர்-குடி மக்கள் நுகர்வோர் மன்றம்-காமதேனு கலை அறிவியல் கல்லூரி அவர்கள்  அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

    தலைமையுரை;- திரு.R.பெருமாள்சாமி அவர்கள்,தாளாளர்-காமதேனு கலை அறிவியல் கல்லூரி சத்தியமங்கலம்.தலைமை ஏற்று உரை நிகழ்த்தினார்.
     

  முன்னிலை;-திருமதி.P. அருந்ததி,B.E.,M.S.,அவர்கள்-செயலாளர், காமதேனு கலை அறிவியல் கல்லூரி,சத்தியமங்கலம்.மற்றும்,


           Dr.S.மோகன்தாஸ், M.Sc.,M.Phil.,Ph.D.,அவர்கள்- முதல்வர், காமதேனு கலை அறிவியல் கல்லூரி,சத்தியமங்கலம். மற்றும்,
            


                திரு.A.A.இராமசாமி அவர்கள்-தலைவர்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு. முன்னிலை வகித்தனர்.
   
    

         நோக்கம்;-திரு.K.இராஜேந்திரன் அவர்கள்-உதவி பேராசிரியர் மற்றும் திட்ட அலுவலர், சமுதாய சேவை கூட்டமைப்பு-கோபி கலை அறிவியல் கல்லூரி-கோபி செட்டிபாளையம்.ஒருவார விழிப்புணர்வு இயக்கத்தின் நோக்கம் பற்றி விளக்கவுரை ஆற்றினார்.

   

     வாழ்த்துரை;-திரு.N.சரவணபவன்.B.E.,அவர்கள்-மோட்டார் வாகன ஆய்வாளர்,நிலை-ஒன்று.சத்தியமங்கலம்.
     

  திரு.M.R. முகுந்தன்,B.E., அவர்கள்-மோட்டார் வாகன ஆய்வாளர்,நிலை-இரண்டு.சத்தியமங்கலம்.



 திருமதி.R.ராஜம்மாள் அவர்கள்,உதவி தொடக்க கல்வி அலுவலர்-சத்தியமங்கலம்.
    

   அரிமா.K.லோகநாதன் அவர்கள்,லோகு டிரைவிங் ஸ்கூல்-சத்தியமங்கலம் &,ஒருங்கிணைப்பாளர்- நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு. வாழ்த்துரை வழங்கினர்.
               அடுத்து விருந்தினர்களை கௌரவப்படுத்தும் நிகழ்ச்சியாக,

                     திருமிகு.R.பெருமாள்சாமி ஐயா ,தாளாளர்-காமதேனு கலை அறிவியல் கல்லூரி சத்தியமங்கலம்.அவர்களுக்கு
                 திரு.K.இராஜேந்திரன் -உதவி பேராசிரியர் மற்றும் திட்ட அலுவலர், சமுதாய சேவை கூட்டமைப்பு-கோபி கலை அறிவியல் கல்லூரி-கோபி செட்டிபாளையம்.அவர்கள் கதராடை அணிவித்து சிறப்பித்தார்.


               திருமதி.P. அருந்ததி,B.E.,M.S.,-செயலாளர், காமதேனு கலை அறிவியல் கல்லூரி,சத்தியமங்கலம்,அவர்களுக்கு
திருமதி.R.ராஜம்மாள் ,உதவி தொடக்க கல்வி அலுவலர்-சத்தியமங்கலம்,அவர்கள் கதராடை அணிவித்து சிறப்பித்தார்.

             திருமிகு.இரா.தா.முத்து மாணிக்கம் ஐயா,சத்தியமங்கலம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர், அவர்களுக்கு திரு.K.லோகநாதன் ,லோகு டிரைவிங் ஸ்கூல்-சத்தியமங்கலம் &,ஒருங்கிணைப்பாளர்- நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.,அவர்கள் கதராடை அணிவித்து சிறப்பித்தார்.

          Dr.S.மோகன்தாஸ், M.Sc.,M.Phil.,Ph.D.,- முதல்வர், காமதேனு கலை அறிவியல் கல்லூரி,சத்தியமங்கலம்,அவர்களுக்கு திரு.S.ரவி துணை தலைவர்-நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.அவர்கள் கதராடை அணிவித்து சிறப்பித்தார்.

             திரு.N.சரவணபவன்.B.E.,-மோட்டார் வாகன ஆய்வாளர்,நிலை-ஒன்று-சத்தியமங்கலம்.அவர்களுக்கு
திரு.T.சரவணன்,M.Com.,M.Phil., உதவி பேராசிரியர் மற்றும் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர்-குடி மக்கள் நுகர்வோர் மன்றம்-காமதேனு கலை அறிவியல் கல்லூரி அவர்கள் கதராடை அணிவித்து சிறப்பித்தார்.

                  திரு.K.இராஜேந்திரன் -உதவி பேராசிரியர் மற்றும் திட்ட அலுவலர், சமுதாய சேவை கூட்டமைப்பு-கோபி கலை அறிவியல் கல்லூரி-கோபி செட்டிபாளையம்.அவர்களுக்கு
திருமிகு.R.பெருமாள்சாமி ஐயா ,தாளாளர்-காமதேனு கலை அறிவியல் கல்லூரி சத்தியமங்கலம்.அவர்கள் கதராடை அணிவித்து சிறப்பித்தார்.



   திரு.M.R. முகுந்தன்,B.E., -மோட்டார் வாகன ஆய்வாளர்,நிலை-இரண்டு.சத்தியமங்கலம்.அவர்களுக்கு


 திரு.K.லோகநாதன் ,லோகு டிரைவிங் ஸ்கூல்-சத்தியமங்கலம் &,ஒருங்கிணைப்பாளர்- நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.,அவர்கள்
திரு.A.A.இராமசாமி -தலைவர்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.அவர்கள் கதராடை அணிவித்து சிறப்பித்தார். 


  திருமதி.R.ராஜம்மாள் ,உதவி தொடக்க கல்வி அலுவலர்-சத்தியமங்கலம். அவர்களுக்கு திருமிகு.P. அருந்ததி,B.E.,M.S.,செயலாளர், காமதேனு கலை அறிவியல் கல்லூரி,சத்தியமங்கலம்.அவர்கள்-கதராடை அணிவித்து சிறப்பித்தார்.


          மரியாதைக்குரிய காவல் துணை கண்காணிப்பாளர் அவர்கள் திரு.C.பரமேஸ்வரன்- செயலாளர்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு அவர்களுக்கு கதராடை அணிவித்து பாராட்டினார்.



        நன்றியுரை;-திரு.C.பரமேஸ்வரன்,அவர்கள் செயலாளர்-நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.,


    நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு ;- காமதேனு கலை அறிவியல் கல்லூரி-சத்தியமங்கலம்,பேராசிரியர்கள் மற்றும் பேராசிரியைகள் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு செய்தனர். 
  

           ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ,மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வு பெற்றனர்.
 ஒருவார விழிப்புணர்வு இயக்கத்தின் முதல்நாள் நிகழ்வு இது.
    இரண்டாவது நாளாக -நாளை அக்-02 ம்தேதி இளையசமுதாயம்''போதையும்-மீட்பும்'' பொதுமக்கள் கருத்து சேகரிப்பு.அனைவரும் கருத்து கேட்பு நடத்தலாம்.இளைய சமுதாயம் போதைப்பழக்கதிற்கு காரணம் மற்றும் மீட்புக்கான வழிமுறைகளும்  தெரிவிக்கலாம்.
பொது நலன் கருதி ;;;--
               என அன்பன்,

        பரமேஸ்வரன்.சி,
  செயலாளர்,
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-
தமிழ்நாடு.பதிவுஎண்;-26/2013. 
E-Mail: consumerandroad@gmail.com