Monday, 23 December 2013

நெகிழி (பிளாஸ்டிக்) தீமைகள்-கோஷங்கள்.

 

மரியாதைக்குரியவர்களே,
                                      வணக்கம்.
                                 நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு வரவேற்கிறோம்.நெகிழி என்னும் பிளாஸ்டிக் தீமைகள் பற்றி கோஷங்கள் இந்த பதிவில் காண்போம்.
   சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்-வனப்பகுதியில் நெகிழி (பிளாஸ்டிக்) பொருட்களை தவிர்ப்போம்-சுற்றுச்சூழலை காப்போம் என்ற விழிப்புணர்வு பொதுமக்களுக்கான மூன்று நாட்கள் இயக்கத்தில் எழுப்பிய கோஷங்களின் தொகுப்பு.
 (1)அடுத்த தலைமுறைக்கு இயற்கைவளங்களை குன்றாமல் விட்டுச்செல்வோம்.
(2)இயற்கை வளங்களே தெய்வம்.
  (3)இன்றைய குறிக்கோள் இயற்கை வளங்களை காப்பதே.
  (4)இயற்கை வளங்களே நம் குழந்தைகளுக்கு சேர்த்து வைக்கும் சொத்து.
(5)உலக நன்மயை நினைப்போம்.
(6)உருவாக்கும் குப்பைகளை குறைப்போம்.
 (7)ஒருமுறை பயன்பாடு நெகிழிகளை தவிர்ப்போம்.
 (8)ஒருமுறை நெகிழி பயன்பாடு,உணர்ந்திடுவீர் அதன் கேடு.
 (9)வனங்களே பூமியின் நுரையீரல்.
(10)இந்திய அரசு வெளியிட்டுள்ளநெகிழி பொருட்களை கட்டுப்படுத்தும் சட்ட விதிகளை கடைப்பிடிப்போம்.
(11)சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு கொள்வோம்.
(12)நெகிழ பொருட்களின் தீமைகள் தெரிந்துகொள்வோம்.
(13)வன வளம் காப்போம்,மழை வளம் பெறுவோம்.
(14)தவிர்ப்போம்,குறைப்போம்,மீண்டும் பயன்படுத்துவோம்,மறு சுழற்சிக்கு உட்படுத்துவோம்-தாரக மந்திரத்தை கடைப்பிடிப்போம்.
 (15) பாலித்தீன் பைகளை வீசி எறிந்தால் அனைத்து உயிர்களுக்கும் பாதிப்பு.
(16)சாக்கடையை நெகிழியை போட்டு குப்பைத்தொட்டி ஆக்காதீர்.
(17)காடுகளை அழியாமல் பாதுகாப்போம்,காற்றினை மாசின்றி பெறுவோம்.
(18)துணிப்பை மற்றும் காகிதப்பைகளை பயன்படுத்துவோம்.
(19)பாலித்தீன் பைகளில் பார்சல் கட்டாதீர்,பலவித நோய்களுக்கு ஆளாகாதீர்.
(20)பாலித்தீன் பைகள் பயன்பாடு,பலவித நோய்கள் வரும் பாரு.
(21)துணிப்பை என்பது எளிதானது.தூர எறிந்தால் உரமாகும்,
நெகிழி என்பது அழகானது வீசி எறிந்தால் விஷமாகும்.
(22)நாகரீகத்துக்கான நெகிழி பயன்பாடு
   நமக்கு வருவதோ பெரும் கேடு.
(23)நெகிழி குப்பைகளை எரிக்காதீர்,
       நச்சு வாயுக்களை பரப்பாதீர்.
(24)பாலித்தீன் பைகளில் பேக்கிங் செய்யாதீர்,
   புற்று நோய்களுக்கு ஆளாகாதீர்.
(25)இனியாவது உணர்ந்திடுவோம்,
        இயற்கை வளங்களை காத்திடுவோம்.
(26)காடுகளை அழியாமல் காத்திடுவோம்,
காற்றினை மாசின்றி பெற்றிடுவோம்.
 (27)வனங்களே பூமியின் நுரையீரல்,
(28)மானிடரே விழித்திடுவீர்,மக்கும் பொருட்களை பயன்படுத்திடுவீர்,
(29)வனம் அழிந்தால் மனித இனம் அழியும்,
(30)வனம் காப்போம்,நாட்டின் வளம் காப்போம்.
(31)குப்பைகள் நம்மால் உருவாக்கப்படுகின்றன.உணர்ந்திடுவீர்.
(32)பசுமைச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை
    பல்லாண்டு வளமான வாழ்க்கை,
(33)நம் இருப்பிடமே சூழல் மாசு அடைய பிரதானம்.
(34)பசுமை வாழ்க்கை,கார்பன் சார்ந்த வாழ்க்கை பாகுபாடு கண்டிடுவீர்.
(35)சுற்றுச்சூழலுக்கு நண்பனாக இருப்பீர்,
    தேவையற்ற பொருட்களை தவிர்ப்பீர்.
(36)மின்சாரமே பெரும் பங்கு கார்பனை வெளியிடுகிறது.
(37)துணிப்பைகளை பயன்படுத்துவோம்,பாலித்தீன் பைகளை தவிர்ப்போம்.
(38)பயன்படுத்திய பொருட்களையே மீண்டும்,மீண்டும் பயன்படுத்துவோம்.
(39)தாவரங்களே  காற்றினை சுத்தம் செய்ய படைக்கப்பட்டவை.
(40)வேதிப்பொருட்கள் பயன்பாட்டினை நிறுத்துவோம்.
    வேதனைகளை தவிர்ப்போம்.
(41)வீட்டு உபயோகப்பொருட்கள் வெளியிடும் ஆக்ஸைடு, சூழலுக்கு தீங்கானது.
(41)சுற்றுச்சூழல் பற்றிய சிந்தனை கொள்வோம்.
(42)சாக்கடையை குப்புத்தொட்டி ஆக்காதீர்.
      சுகாதார கேடு உருவாக்காதீர்.
(43)வனத்தை காப்போம்,வறட்சியை தடுப்போம்.
(44)நெகிழி தவிர்ப்போம்,கெடுதி தவிர்ப்போம்.
(45)வனமே இயற்கையை சேமிக்கும் சொத்து.
 (46)வனமே பசுமையை காக்கும்.
(46)மரம் வளர்ப்போம்,மழை பெறுவோம்.
(47)மழைநீர்த்தொட்டி அமைப்போம்,நிலத்தடி நீர் சேமிப்போம்.
(48)வற்றாத இயற்கைவளங்களே நம் குழந்தைகளுக்கு சேர்த்துவைக்கும் சொத்து.
(49)கார்பன் குறைப்போம்,புவி வெப்பமயமாதலை தவிர்ப்போம்.
(50)மெல்லக்கொல்லும் விஷமாகும் நெகிழியின் பயன்பாடு.
   சமூக நலன் கருதி,
                         அன்பன் 
                      பரமேஸ்வரன்.C.
                       செயலாளர்,
  நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-
             தமிழ்நாடு.
 தொடர்புக்கு  #9585 600733 (குறுந்தகவல் அனுப்பலாம்)
(2421-பார்வை)

1 comment:

  1. வணக்கம்...

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : ஏஞ்சலின் அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காகித பூக்கள்

    வலைச்சர தள இணைப்பு : ஞாயிற்றுக்கிழமை, சுற்றுலா

    ReplyDelete