Saturday 18 January 2014

25வது சாலை பாதுகாப்பு வாரவிழா-2014

மரியதைக்குரியவர்களே,
              வணக்கம்.

     



                 நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு,வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
                     இன்று ஈரோடு மாவட்டம்,சத்தியமங்கலம் வட்டம்,தாளவாடி மலைப்பகுதியில் ,
                25-வது சாலை பாதுகாப்பு வாரவிழா  
            'சாலையில் செல்லும்போது எப்பொழுதும் சொல்லுவோம்
                  ''முதலிடம் உங்களுக்கே'' 
                 என்ற கருப்பொருளில் தாளவாடி பேருந்து நிலையம் அருகில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
  

              திருமிகு.A.P.ராஜூ அவர்கள்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்,அனைவரையும் வரவேற்றார்.
            திருமிகு.நஞ்சுண்ட நாயக்கர்,அவர்கள்
                      ஊராட்சி மன்ற தலைவர்,
             தாளவாடி ஊராட்சி மன்றம், தலைமை ஏற்று உரை நிகழ்த்தினார்.
   திருமிகு.சார்லஸ்,அவர்கள்
                காவல் துணை ஆய்வாளர்,
             தாளவாடி காவல் நிலையம் ,
               திருமிகு.A.பாபு அவர்கள் ,தலைவர்,
     தாளவாடிஒன்றியமனிதஉரிமைகள்கழகம்,
திருமிகு.பக்திகுமார்அவர்கள் ,தலைவர்,
          தாளவாடி வட்டார மோட்டார் வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் சங்கம்,
திருமிகு.வியானிஅவர்கள் ,
ரோட்டரி கிளப் ஆப் தாளவாடி
                    முன்னிலை வகித்து சாலை பாதுகாப்பு விழிப்புரை ஆற்றி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நோட்டீஸ் பிரச்சாரத்தினை துவக்கி வைத்தனர், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு,
            தமிழ்நாடு அறிவியல் இயக்கம்,தாளவாடி,
           மோட்டார் வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் சங்கம்-
     சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நோட்டீஸ்களை பெற்று பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்பு கொடுத்தனர்.
  திருமிகு.P.யேசுதாசன் அவர்கள்,
PALM2NGO- திட்ட ஒருங்கிணைப்பாளர் தாளவாடி ,
திருமிகு.சிவசாமி அவர்கள், ஒய்ஸ்மென் கிளப் ஆப் தாளவாடி முன்னாள் தலைவர்  விழிப்புரை ஆற்றினர்.
திருமிகு.V.பாலமுருகன் அவர்கள், பொருளாளர்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு 
           அனைவருக்கும் நன்றி கூறினார்.
              கூட்டத்தில் கருத்துவிவாதம் நடத்தப்பட்டது.
                      அப்போது திருமிகு.நஞ்சுண்ட நாயக்கர் அவர்கள் ,ஊராட்சி மன்ற தலைவர்,(தாளவாடி ஊராட்சி மன்றம்) 
       விவசாயிகள்  அறுவடை செய்த விளைபயிர்களை சாலையில் காயவைப்பதை தடை செய்யும் தீர்மானம் நிறைவேற்றி சாலை பாதுகாப்புக்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
  சாலை பாதுகாப்பு குழு ஒன்று அமைத்து சாலை விபத்துக்களை தடுக்கவும்,சாலை ஆக்கிரமிப்புகளை தவிர்க்கவும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.காவல்துறை உட்பட அனைத்து தரப்பு மக்களும்  ஆதரவு தெரிவித்தனர்.
         25வது சாலை பாதுகாப்பு வாரவிழாவிற்கான நிகழ்ச்சி ஏற்பாடுகளை நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு செய்து இருந்தது.