Wednesday, 1 April 2015

PROTECT GIRLS- பெண் குழந்தைகளை பாதுகாப்போம்-2015


 மரியாதைக்குரியவர்களே,
  வணக்கம்.
  ஈரோடு மாவட்ட அளவில் பெண் குழந்தைகளை பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வு கலைப்பயணம் நிகழ்ச்சியை கடந்த 2015மார்ச் 30 ஆம் தேதி கோபி செட்டிபாளையத்தில் மதிப்புமிகு சப் கலெக்டர் அவர்கள் தொடங்கி வைத்தார்.


2015மார்ச் 31 ஆம் தேதி  இன்று காலை10.00மணியளவில்  சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் பெண் குழந்தைகளை பாதுகாப்போம் கலைக்குழு விழிப்புணர்வு நிகழ்வு தொடர்ந்தது.

          சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் திரு.கருப்புசாமி அவர்கள்,கல்வி உரிமைக்கான மேம்பாட்டு மைய இயக்குநர். மற்றும் திரு.C. பரமேஸ்வரன் அவர்கள்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர், மற்றும் திரு. பட்டதாரி ஆசிரியர் அவர்கள்,அரசு மாதிரி பள்ளி-தாளவாடி.மற்றும்  பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கலைக்குழுவினர் சென்னை.



          திரு.C.பரமேஸ்வரன் அவர்கள் பெண் குழந்தைகளை காப்பது பற்றிய துவக்கவுரை-பேருந்து நிலையம் சத்தியமங்கலம்.பெண் குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு கலைக்குழுவினை வரவேற்று பெண் குழந்தைகளின் இன்னல்களை கூறி அவர்களுக்கு தேவை படிப்புரவிளையாட்டு,ஓய்வு என துவக்கவுரை நிகழ்த்தினார்.
      திருமதி.R.தங்கமணி அவர்கள் தலைமை ஆசிரியை தலைமை ஏற்று துவக்கவுரை-நகராட்சி உயர்நிலை பள்ளி-ரங்கசமுத்திரம்-சத்தியமங்கலம்.
பெண்குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்த்தும் கலைக்குழுவினை பள்ளிக்கு வரவேற்று பெண்குழந்தைகளுக்கு தற்போதைய தேவை கல்வி மட்டுமே என உரை நிகழ்த்தினார்.
திருமதி.சரஸ்வதி சமூக நல விரிவு அலுவலர் அவர்கள்-ஊராட்சி ஒன்றியம் - சத்தியமங்கலம்.நகராட்சி உயர்நிலை பள்ளி ரங்கசமுத்திரம் சத்தியமங்கலத்தில் பெண்கள் பாதுகாப்பு பற்றிய விழிப்புரை நிகழ்த்தினார்.
திரு, C.பரமேஸ்வரன் அவர்கள்,செயலாளர்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் -தமிழ்நாடு அவர்களது பெண்குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புரை நகராட்சி உயர்நிலை பள்ளி -ரங்கசமுத்திரம் சத்தியமங்கலத்தில்.....

ஈரோடு மாவட்டம் தாளவாடி பேருந்து நிலையத்தில் பெண் குழந்தை திருமணம் குற்றம் என சுவற்றில் விளம்பரம் தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் தங்களது பார்வைக்காக....