Thursday, 13 November 2014

நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.


  

மரியாதைக்குரியவர்களே,
              வணக்கம்.
              Consumer Protection And Road  Safety Organisation - Tamil Nadu -
             நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு அனைவரையும் இனிதே வரவேற்கிறோம்.

                 இந்த வலைப்பதிவில் நுகர்வோர் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வுக் கட்டுரைகளும்,சாலைப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வுக் கட்டுரைகளும் இடம் பெறும்.தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

நுகர்வோர் என்பவர் எதற்கு நுகர்வோர் ஆகிறார்?


மரியாதைக்குரியவர்களே,
                      வணக்கம்.
                              நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்ளை இனிதே வரவேற்கிறோம். இந்தப்பதிவில் நுகர்வோர் என்பவர் எதற்கு நுகர்வோர்? என்பது பற்றி காண்போம்.
        தன்னுடைய உபயோகத்திற்காக எந்தெந்த பொருட்களையெல்லாம் வாங்கி பயன்படுத்துகிறோமோ அந்தக்குறிப்பிட்ட பொருளுக்குத்தான் நுகர்வோர் அதாவது உபயோகிப்பாளர் ஆகிறோம்.இதை நன்றாக உணரவேண்டும்.விற்பனையாளர் நுகர்வோருக்கத்தேவையான பொருளை விற்பவர் ஆவார்.அதனால் விற்பனையாளரோ,அல்லது உற்பத்தியாளரோ அந்த பொருளுக்கு நுகர்வோர் ஆக மாட்டார்.ஆனால் அதே பொருளை உற்பத்தி செய்யவும்,விற்பனை செய்வதற்கு உதவியாக இருக்கும் பொருளுக்கு அவர்கள் நுகர்வோர் ஆகிறார்கள்....
                    நாம் உபயோகிக்கப்பயன்படுத்தும் பொருளுக்கும், அந்தப்பொருளைப் பயன்படுத்துவதற்காக உதவிடும் அடிப்படைப் பொருளுக்கும் அவ்வாறு  நாம் உபயோகிக்கும் பொருள் சம்பந்தமாக வழங்கப்படும் சேவையினையும் பயன்படுத்துவதால் சேவைக்கும்  நாம்தான் நுகர்வோர்......  
                உதாரணம் சமைத்த உணவுப்பண்டங்கள் பயன்படுத்தும் பொருள் ஆகும்.சமைப்பதற்கு உதவிடும் பிற பொருட்களும் (பானை,பாத்திரம்,தண்ணீர்,அரிசி,பருப்பு, மேசை,டம்ளர்,தட்டு, அடுப்பு ,போன்றவை) உபயோகிக்கும் பொருட்களே.இந்தப்பொருட்களை கடையிலிருந்து வீட்டிற்கு கொண்டுவர பயன்படுத்தும் போக்குவரத்து சேவைப்பயன்பாடு ஆகும்.இவ்வாறு தொலைத்தொடர்பு சேவை,வங்கி சேவை,காப்பீடு சேவை,மருத்துவ சேவை,கல்விச்சேவை,என சேவைகள் பல உள்ளன.