Sunday, 26 April 2015

சங்க பேரவைக் கூட்டம்-2015

சங்கப் பேரவைக் கூட்டம்
நாள்;2015மே மாதம்24ந் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00மணி.
இடம்;SRN மெட்ரிக் பள்ளி (நீதிமன்றம் அருகில்)
 சத்தியமங்கலம்-638402,ஈரோடு மாவட்டம்.

மரியாதைக்குரியவர்களே,
          வணக்கம்.
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்- தமிழ்நாடு
 (பதிவு எண் 26/2013)   அரசு பதிவு பெற்ற தன்னார்வ சமூக நல அமைப்பு உறுப்பினர்களுக்கு அன்பான அழைப்பு,
         நேரிலும்,தபால் மூலமாகவும்,மின்னஞ்சல் வாயிலாகவும், தகவல் கிடைக்காத அன்பர்கள் இதனையே நேரில் அழைத்த விண்ணப்பமாக கருதி வாங்க.........

                     அரசியல்,சாதி,மதம்,இனம் ,மொழி வேறுபாடின்றி மனித சமூகத்திற்காக,
              கடந்த 2010 ஆம் ஆண்டு கற்கும் பாரதம் கல்விப் பிரச்சாரத்தில் தொடங்கி மக்கள் நலனுக்காக செயல்பட்ட  நாம் 
                முதலில் தேனீக்கள் தன்னார்வ அமைப்பு என்ற பெயரில் அரசு பதிவு பெற்று சமூகநலனுக்கான பல்வேறு  தளங்களில் மலைப்பகுதி மக்களுக்காகவும்,இளைய சமூகத்திற்காகவும்,செய்து வந்தோம்.

               பிறகு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஈரோடு மாவட்டத்தில் இணைந்து கல்வி மற்றும்  பயனுள்ள நல்ல பணிகளை செய்து வந்தோம்.

               அதன்பிறகு தற்போது
          நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு என்ற பெயரில் புதிய அமைப்பினை துவங்கி இரண்டாவது ஆண்டு முடியும் தருவாயில் உள்ளது .

          ஆண்டுதோறும் தவறாமல் நம்ம சங்கத்தினை புதுப்பித்துக்கொண்டும் வருகிறோம்.

         இந்த அமைப்பு தொடங்கி இரண்டு ஆண்டுகளில் அரசியல்,சாதி,மத,இன,மொழி வேறுபாடு இல்லாமல் மனித சமூகம் என்ற நோக்கத்தில் நாம் மாநில அளவில் பள்ளிகளிலும்,கல்லூரிகளிலும்,பொது இடங்களிலும்,மருத்துவ முகாம்,கண் சிகிச்சை முகாம்,போன்ற பல சேவைகளை மக்களுக்கு பயன் தரும் வண்ணம் முழுக்க நம்முடைய நிதியினை பங்களித்து யாரிடமும் நிதி பெறாமல் செய்து வருகிறோம்.

          குறிப்பாக நமது சங்கம் சார்பாக,
           சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு இயக்கம்,தேசிய கண்ணொளி விழிப்புணர்வு இயக்கம்,வாசிப்புத்திறனை அதிகரிக்கும் வகையில்  புத்தக கண்காட்சிகள்,புகைத்தல் மற்றும் போதைப்பொருட்களின் தீங்குகள் பற்றிய விழிப்புரை பிரச்சாரம்,மருத்துவத் தாவரங்கள் பாதுகாப்பு இயக்கம்,கல்வி வழிகாட்டுதல் இயக்கம்,கலாச்சார சீர்கேடும் மீளுவதும் பற்றிய இயக்கங்கள்,குழந்தைகள் பாதுகாப்போம் விழிப்புணர்வு இயக்கம்,பிளாஸ்டிக் தீங்குகள் மற்றும் வன வளம் பாதுகாப்பு இயக்கம் என பல்வேறு இயக்கங்கள் செய்து வருகிறோம்

                 http://consumerandroad.blogspot.com என்ற இந்த வலைப்பக்கத்தில் ஆரம்பம் முதல் பார்வையிட்டாலே தங்களுக்கு நமது பணிகளின் தன்மை புரியும்.

           இந்த ஆண்டு இதுவரை செய்த வேலைகள் மற்றும் சமூக நலப்பணிகள் பற்றியும்,செலவு விவரங்கள்,நமக்கு தாமாக முன்வந்து உறுதுணையாக இருப்பவர்கள் பற்றியும் ,இனி வருங்காலங்களில் நம்ம சங்கம் செயல்பாடு பற்றியும், நிதி மற்றும் அனைவருக்கும் உறுப்பினர் அடையாள அட்டை வழங்குவது பற்றியும்,புதிய உறுப்பினர்களை சேர்க்கும் முறை பற்றியும் விவாதிப்பது மற்றும் சங்கத்தின்  ஆண்டறிக்கை சமர்ப்பிக்க  உள்ளதால் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

           பேரவைக்கூட்டத்திற்கு வருகை புரியும் உறுப்பினர்கள் எக்காரணம் கொண்டும் சங்கத்தின் செயல்பாடுகளை வாழ்த்தவோ,பாராட்டவோ கூடாது.

              நமது சேவைப்பணியிலுள்ள குறைகளையும்,தவறுகளையும்,தக்க ஆலோசனைகளையும்,வழிகாட்டுதல்களையும் மட்டுமே வழங்க வேண்டும்.
  செயலாளராகிய எனது பங்களிப்பினைப் பொறுத்தவரை ,உறுப்பினராகிய தாங்கள் ஒரு ரூபாய் செலுத்தி இருந்தாலும் அனைத்து தகவல்களையும் கேட்டறிய உரிமையுள்ளவர்களே. உங்களுக்கு சரியான தகவல்களை கொடுப்பது எனது கடமையும்,பொறுப்பும் ஆகும்.என்பதையும் மனதில் வைத்துக்கொள்ளுங்க..

புதிய உறுப்பினர்கள் சேர்க்கை பற்றி விவரம் தெரிந்துகொள்ள உடனே தொடர்பு கொள்ளுங்க..
(1)தலைவர் A.A.இராமசாமி- 9486708475
(2)துணை தலைவர் S.ரவி -  9442436165
(3)செயலாளர் C.பரமேஸ்வரன் - 9585600733  
(4)துணை செயலாளர் V. ராஜன் - 9786285405
(5) V.பாலமுருகன் - 9442819031
 என அன்பன்
 C.பரமேஸ்வரன்.
செயலாளர்,
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.
      Face Book / parameswaran driver
      

இலவச பொது மருத்துவ சிகிச்சை முகாம் -சாணார்பாளையத்தில்....மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

 2015ஏப்ரல் 26 ஞாயிற்றுக்கிழமை இன்று திருப்பூர் ரேவதி மெடிக்கல் சென்டர் மருத்துவமனையுடன் கோபி அச்சக உரிமையாளர்கள் ஒருங்கிணைப்புக்குழு இணைந்து மாபெரும் இலவச பொது மருத்துவ சிகிச்சையினை கொளப்பலூர் சாணார்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடத்தியது.
 சாணார்பாளையம் பொதுமக்கள் அனைவரின் ஒத்துழைப்புடன் சிறப்பாக நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் கொளப்பலூர்,தாழ்குனி,சிறுவலூர்,கெட்டிச்செவியூர் வட்டார பொதுமக்கள் வருகை தந்து சிகிச்சை பெற்றனர்.

 கொளப்பலூர் பேருந்து நிறுத்தத்திலிருந்து சாணார்பாளையம் மருத்துவ முகாம் வரை இலவச வாகன வசதியினை திருப்பூர் ரேவதி மெடிக்கல் சென்டர் மருத்துவமனை  ஏற்பாடு செய்து இருந்தது.

கடம்பூர் மலையில் இலவச கண் சிகிச்சை முகாம்-2015மரியாதைக்குரியவர்களே,
                           வணக்கம்.2015ஏப்ரல் 25 சனிக்கிழமை அன்று கடம்பூர் மலைப்பகுதியில் இலவச கண் சிகிச்சை முகாம் ஈரோடு மாவட்ட பார்வை இழப்புத் தடுப்புச் சங்கம் மற்றும் இம்மானுவேல் கண் நோய் நிவாரணக்குழுவுடன் இணைந்து நுகர்வோர் பாதுகாப்பு & சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு நடத்தியது.


கடம்பூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில்
         இலவச கண் சிகிச்சை முகாம்...25.04.2015சனிக்கிழமை.

        யானையால் தாக்கப்பட்டு வலது கண் இழந்த நிலையில் இடது கண்பார்வையும் சரியில்லை என சிகிச்சை பெற வருகை புரிந்துள்ள பழங்குடி இனத்தின் பெரியவர்.


 கண் மருத்துவர் நோயாளி ஒருவரின் கண்ணைப் பரிசோதித்தபோது.........
        கடம்பூர் மலையில் கண் சிகிச்சை அளிக்க வருகை புரிந்துள்ள மருத்துவக்குழுவுடன் துணை தலைவர் S. ரவி அவர்கள்..

        கடம்பூர் மலையில் கண் சிகிச்சை அளிக்க வருகை புரிந்துள்ள மருத்துவக்குழுவுடன்  S.ரவி துணைத்தலைவர் மற்றும்  
         C. பரமேஸ்வரன்,செயலாளர் அவர்கள்..

கடம்பூர் மலையில் கண் சிகிச்சை அளித்தபின்னர் திரும்பியபோது......

Sunday, 19 April 2015

மருத்துவத் தாவரங்கள் பாதுகாப்பு இயக்கம்-தமிழ்நாடு.


மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.நம் முன்னோர்கள் மிக எளிதில் கிடைக்கும் தாவரங்களின் மருத்துவப் பயன் அறிந்து வைத்தியம் செய்து கொடிய நோய்களையும் குணமாக்கினார்கள்.ஆனால் நமது அறியாமையினாலும்,ஆர்வமின்மையாலும்,அத்தகைய மருத்துவத்தாவரங்களை நாம் களைகளாகவும்,வீணான புதர்களாகவும் நினைத்துக்கொண்டிருக்கிறோம்.தாவரங்களின் மருத்துவ சிகிச்சைகளால் பக்க விளைவுகள் ஏதும் இல்லை.எளிமையாக கூற வேண்டுமானால் உணவே மருந்து எனலாம்.அத்தகைய தாவரங்களை கண்டறிந்து சேகரித்து தொகுத்து வளர்த்து பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகும்.
               நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு ஆகிய நமது அமைப்பானது மருத்துவத்தாவரங்களையும் பாதுகாக்க உறுதி ஏற்றுள்ளது.அதாவது தாளவாடி மலை,கடம்பூர் மலை,பர்கூர் மலை,உதகை மற்றும் கொல்லிமலை போன்ற மலைப்பகுதிகள் உட்பட அனைத்து சித்த மருத்துவர்களையும்,அரசு சித்த மருத்துவர்களையும்,நாட்டு வைத்தியர்களையும்,நாட்டு மருந்துக்கடைகளையும்,கல்வித்துறையையும்,வனத்துறையையும்,
வேளாண்மைத்துறையையும்,பழங்குடிஇனத்தவர்களையும்,நர்சரி அமைத்துள்ளவர்களையும்,தோட்டக்கலைத்துறையையும்,
விவசாயிகளையும்,தன்னார்வலர்களையும் ஒருங்கிணைத்து  மருத்துவத்தாவரங்களுக்கான மாபெரும் இயக்கமாக செயல்படுத்திட முடிவு எடுத்து........
           அதன் துவக்கமாக தாளவாடியில் உள்ள ஈரோடு மண்டலம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் கிளையில் 2015ஏப்ரல்19 ஆம் தேதி இன்று திரு. T.ஆறுமுகம் கிளை மேலாளர் அவர்களால் கற்பூரவள்ளி செடி நட்டு மூலிகைப்பண்ணை துவக்கி வைத்தார்.திரு.C.பரமேஸ்வரன் செயலாளர் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு அவர்கள் மருத்துவத்தாவரங்கள் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்றுள்ளார்.
அடுத்த பண்ணை 
    சத்தியமங்கலத்திலுள்ள  SRN மெட்ரிக்குலேசன் பள்ளி யில் 10சென்ட் இடம் ஒதுக்கப்பட்டு அதில் மருத்துத்தாவரங்கள் பண்ணை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருகின்றன.
தொடர்பு கொள்ள .........
    கைப்பேசி எண்    +919585600733 மற்றும்
    மின்னஞ்சல் முகவரி consumerandroad@gmail.com

Saturday, 11 April 2015

SRN மெட்ரிக் பள்ளி-சத்தியமங்கலம்.2015


மரியாதைக்குரியவர்களே,
                  வணக்கம். 


                                               இன்று காலை10.00மணி முதல் மதியம்2.00 மணி வரை  மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் 

 SRNமெட்ரிக்  பள்ளி தாளாளர் திரு.S.சசிக்குமார் B.E., அவர்கள் தலைமையில் ஈரோடு மாவட்டம்-சத்தியமங்கலத்தில் நடைபெற்றது.

200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இலவச பொது மருத்துவ சிகிச்சை பெற்றார்கள்.அறுபதுக்கும் மேற்பட்ட பயனாளிகள் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் ரேவதி மெடிக்கல் சென்டர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.இலவச மருத்துவ முகாமின் துவக்கமான 
அறிமுகக் கூட்டத்தில்

SRN மெட்ரிக் தாளாளர் திரு.S.சசிக்குமார் B.E.,அவர்கள் தலைமை ஏற்க  

SRN மெட்ரிக் பள்ளி நிர்வாக அலுவலர் திரு. சண்முகவேல் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.அரிமாK.லோகநாதன் அவர்கள் மற்றும் திரு. A.இராமசாமி அவர்கள்,தலைவர் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் முன்னிலை வகித்தனர்.இலவச பொது மருத்துவ முகாம் சத்தியமங்கலத்தில் நடத்துவதன் நோக்கம் பற்றி 

திரு.C.பரமேஸ்வரன் அவர்கள்,செயலாளர்,
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் விளக்கினார்.
               அது சமயம்SRN மெட்ரிக் பள்ளி சார்பாக
         சத்தியமங்கலத்தின் மூத்த செய்தியாளர் உட்பட சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.
  SRN மெட்ரிக் பள்ளி தாளாளர்.திரு.S.சசிக்குமார் B.E., அவர்கள் சத்தி நகர மூத்த செய்தியாளர் திரு. கோபால் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவப்படுத்திய காட்சி.
 SRNமெட்ரிக் பள்ளி தாளாளர்.திரு.S.சசிக்குமார் B.E., அவர்கள் 
REVATHI MEDICAL CENTRE பொது மருத்துவர் S.மகாராஜா அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவப்படுத்திய காட்சி.அருகில் அரிமாK.லோகநாதன் சத்தியமங்கலம் அவர்கள்.
  SRNமெட்ரிக் பள்ளி நிர்வாக அலுவலர்.திரு.Pசண்முகவேல், அவர்கள் 
திரு.A.இராமசாமி தலைவர் நுகர்வோர் மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவப்படுத்திய காட்சி.
SRNமெட்ரிக் பள்ளியில் திரு.C.பரமேஸ்வரன்  அவர்கள் 
REVATHI MEDICAL CENTRE முகாம் மேலாளர் திரு.சதீஷ் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவப்படுத்திய காட்சி.
திருப்பூர்  ரேவதி மெடிக்கல் சென்டர் 

பொது மருத்துவர் S.மகாராஜா அவர்கள் மற்றும்

மகளிர் சிறப்பு மருத்துவர் திருமதி உமாதேவி அவர்கள் தலைமையிலான

திருப்பூர் ரேவதி மெடிக்கல் சென்டர் மருத்துவர் குழு 

பொது மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளித்து தேவைப்பட்டவர்களுக்கு மேல் சிகிச்சைக்காக திருப்பூர் தலைமை மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.

            முகாம் ஏற்பாட்டினை திருப்பூர் ரேவதி மெடிக்கல் சென்டர் அறக்கட்டளை மற்றும் திரு.C.பரமேஸ்வரன் அவர்கள்,செயலாளர்,நுகர்வோர் மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் ஆகியோர் செய்து இருந்தனர்.


Wednesday, 8 April 2015

SRN MATRIC SCHOOL-SATHYAMANGALAM ERODE Dt.

மரியாதைக்குரியவர்களே,
       வணக்கம்.வருகிற 11.04.2015அன்று நம்ம சத்தியமங்கலத்திலுள்ள SRN மெட்ரிக் பள்ளியில் ரேவதி மெடிக்கல் சென்டர் இணைந்து மாபெரும் இலவச பொது மருத்துவ சிகிச்சை முகாம் நடத்துகிறது.அனைவரும் வருக பயன் பெறுக.


Wednesday, 1 April 2015

PROTECT GIRLS- பெண் குழந்தைகளை பாதுகாப்போம்-2015


 மரியாதைக்குரியவர்களே,
  வணக்கம்.
  ஈரோடு மாவட்ட அளவில் பெண் குழந்தைகளை பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வு கலைப்பயணம் நிகழ்ச்சியை கடந்த 2015மார்ச் 30 ஆம் தேதி கோபி செட்டிபாளையத்தில் மதிப்புமிகு சப் கலெக்டர் அவர்கள் தொடங்கி வைத்தார்.


2015மார்ச் 31 ஆம் தேதி  இன்று காலை10.00மணியளவில்  சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் பெண் குழந்தைகளை பாதுகாப்போம் கலைக்குழு விழிப்புணர்வு நிகழ்வு தொடர்ந்தது.

          சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் திரு.கருப்புசாமி அவர்கள்,கல்வி உரிமைக்கான மேம்பாட்டு மைய இயக்குநர். மற்றும் திரு.C. பரமேஸ்வரன் அவர்கள்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர், மற்றும் திரு. பட்டதாரி ஆசிரியர் அவர்கள்,அரசு மாதிரி பள்ளி-தாளவாடி.மற்றும்  பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கலைக்குழுவினர் சென்னை.          திரு.C.பரமேஸ்வரன் அவர்கள் பெண் குழந்தைகளை காப்பது பற்றிய துவக்கவுரை-பேருந்து நிலையம் சத்தியமங்கலம்.பெண் குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு கலைக்குழுவினை வரவேற்று பெண் குழந்தைகளின் இன்னல்களை கூறி அவர்களுக்கு தேவை படிப்புரவிளையாட்டு,ஓய்வு என துவக்கவுரை நிகழ்த்தினார்.
      திருமதி.R.தங்கமணி அவர்கள் தலைமை ஆசிரியை தலைமை ஏற்று துவக்கவுரை-நகராட்சி உயர்நிலை பள்ளி-ரங்கசமுத்திரம்-சத்தியமங்கலம்.
பெண்குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்த்தும் கலைக்குழுவினை பள்ளிக்கு வரவேற்று பெண்குழந்தைகளுக்கு தற்போதைய தேவை கல்வி மட்டுமே என உரை நிகழ்த்தினார்.
திருமதி.சரஸ்வதி சமூக நல விரிவு அலுவலர் அவர்கள்-ஊராட்சி ஒன்றியம் - சத்தியமங்கலம்.நகராட்சி உயர்நிலை பள்ளி ரங்கசமுத்திரம் சத்தியமங்கலத்தில் பெண்கள் பாதுகாப்பு பற்றிய விழிப்புரை நிகழ்த்தினார்.
திரு, C.பரமேஸ்வரன் அவர்கள்,செயலாளர்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் -தமிழ்நாடு அவர்களது பெண்குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புரை நகராட்சி உயர்நிலை பள்ளி -ரங்கசமுத்திரம் சத்தியமங்கலத்தில்.....

ஈரோடு மாவட்டம் தாளவாடி பேருந்து நிலையத்தில் பெண் குழந்தை திருமணம் குற்றம் என சுவற்றில் விளம்பரம் தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் தங்களது பார்வைக்காக....