Wednesday 4 February 2015

SAFETY IS NOT JUST A SLOGAN IT IS A WAY OF LIFE - 2015



சாலை பாதுகாப்பு வாசகம் அல்ல,அது வாழ்க்கை முறை

                          SAFETY IS NOT JUST A SLOGAN IT IS WAY OF LIFE

மரியாதைக்குரியவர்களே,
              வணக்கம்    http://consumerandroad.blogspot.com
               நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
              2015 இந்த ஆண்டு,போக்குவரத்துக் காவல் நிலையம் -சத்தியமங்கலம் உட்கோட்ட காவல்துறை நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு அமைப்பு  சத்தியமங்கலம் லோகு ஓட்டுனர் பயிற்சிப் பள்ளியுடன் இணைந்து அனைத்துப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருபால் மாணவர்களுக்காக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கொடுத்து வருகிறோம்.




போக்குவரத்துக் காவல்துறை-சத்தியமங்கலம் உட்கோட்டம்-ஈரோடு மாவட்டம்.

                      SAFETY IS NOT JUST A SLOGAN IT'S A WAY OF LIFE
              சாலை பாதுகாப்பு வாசகம் அல்ல-அது வாழ்க்கை முறை.

  மரியாதைக்குரியவர்களே,
                        வணக்கம்.
                நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம். 'சாலை பாதுகாப்பு -வாசகம் அல்ல,-அது வாழ்க்கை முறை'  என நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு (அரசு பதிவு பெற்ற தன்னார்வ அமைப்பு) 
 போக்குவரத்துக் காவல்துறை- சத்தியமங்கலம் உட்கோட்டம் (ஈரோடு மாவட்டம்).மற்றும் 
லோகு ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி-சத்தியமங்கலம் (ஈரோடு மாவட்டம்) உடன் இணைந்து சாலை பாதுகாப்பு கல்வி விழிப்புணர்வு கொடுத்து வருகிறோம்.
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
 தேதி;4.2.2015

சாலை பாதுகாப்பு வாசகம் அல்ல,அது வாழ்க்கைமுறை-

         
                   SAFETY IS NOT JUST A SLOGAN IT IS WAY OF LIFE(ஆறு)

மரியாதைக்குரியவர்களே,
              வணக்கம்    http://consumerandroad.blogspot.com
               நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
              2015 இந்த ஆண்டு,போக்குவரத்துக் காவல் நிலையம் -சத்தியமங்கலம் உட்கோட்ட காவல்துறை நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு அமைப்பு  சத்தியமங்கலம் லோகு ஓட்டுனர் பயிற்சிப் பள்ளியுடன் இணைந்து அனைத்துப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருபால் மாணவர்களுக்காக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கொடுத்து வருகிறோம்.
   
           03.02.2015செவ்வாய்க்கிழமை இன்று  நம்ம தாளவாடி ஒன்றியம்
 அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளி-
                                      தலமலை  (தாளவாடி-ஈரோடு மாவட்டம்)

               பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கல்வி வழங்கும் நிகழ்ச்சி,
                திருமதி.ர.ஷீலாராணி அவர்கள் உதவி ஆசிரியை அனைவரையும் வரவேற்று துவக்கவுரை நிகழ்த்தினார்.

திரு.தி.முரளீதரன் அவர்கள் உதவி தலைமையாசிரியர் தலைமை ஏற்று நோக்கம் பற்றி கூறினார்.
        

           திரு.C.பரமேஸ்வரன் அவர்கள்,செயலாளர்,சாலை பாதுகாப்பு கல்வி வழங்கினார்.
               சாலை சந்திப்பு எண்ணிக்கைகளுக்கேற்ப மோதலின் வாய்ப்புகள் அதிகம் .அதாவது N(N-1) சூத்திரப்படி விபத்துக்களின் எண்ணிக்கையை கரும்பலகையில் எழுதி விளக்கியபோது...
 

         சாலையின் வளைவுப்பகுதி ஒரு வட்டத்தின் ஆரப்பகுதி, ஆதலால் பக்கவாட்டு விசையால்  ஓடும் வாகனம் வெளியே தள்ளப்பட்டு  கவிழ்ந்து விபத்து ஏற்படும். எனவே ''வளைவில் மெதுவாக நுழைந்து வேகமாக வெளியேறு'' விதியை கடைப்பிடிக்க வேண்டும் என்று கரும்பலகையில் சாலை வளைவுப்படம் வரைந்து விளக்கியபோது.. 
              
             புகைத்தலின் தீங்குகள் பற்றி செயல் விளக்கம் காட்டிய காட்சி கீழே உள்ள படங்கள்....

  பாட்டிலை நுரையீரலாக நினைத்துக்கொள்ளுங்க,பாட்டிலில் தண்ணீரை நிரப்புங்க!..
 பாட்டிலின் தலைப்பகுதியில் ஒரு சிகரெட்டை பற்ற வையுங்க!...
        இனி பாட்டிலில் நிரப்பிய தண்ணீரை வெளியேற்றுங்க..பாட்டில் இப்போது  சிகரெட்டுப் புகையை உள்ளிழுத்துக் கொள்ளும்....
        புகை நிரப்பிய பாட்டிலின் மூடியை கழட்டிவிட்டு பேப்பரால் மூடிக்கொண்டு பாட்டிலுள்ள  சிகரெட்டுப் புகையை ஊதி வெளியேற்றுங்க.....
       இப்போது பேப்பரில் படிந்துள்ள நிக்கோட்டின் உட்பட விஷக்கழிவுகள் படிந்துள்ளதைப் பாருங்க..
 இதோ ஒரு பில்டர் சிகரெட்டின் புகையிலேயே இத்தனை மோசமான விஷப்படிமங்கள்! என்றால்????????????.........
                   புகை பிடிக்காதீங்க,உடலைக் காப்பாத்துங்க.....
        அனைவருக்கும் பொது சொத்து உடல் நலமும் மன நலமும்தாங்க! எனவே உடலை பாதுகாக்க வேண்டும் என்றுரை நிகழ்த்தியபோது புகைத்தலின் தீங்கு பற்றி செயல்விளக்கம் செய்து காட்டியபோது....

         செல்வன்.ர.சுந்திரன் அவர்கள்,பட்டதாரி அறிவியல் ஆசிரியர் அனைவருக்கும் நன்றி கூறி கருத்தரங்கத்தை நிறைவு செய்தார்.
      தங்கள் பள்ளி அல்லது  சமூக நல அமைப்புகள் மற்றும் விழிப்புணர்வுக்கூட்டங்களில் தமிழகம் மட்டுமின்றி எங்கும்   சாலை பாதுகாப்பு கல்வியினை இலவசமாக நடத்த,தமிழில் விழிப்புணர்வு பெற உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்க..
எங்களது மின்னஞ்சல் முகவரி;consumerandroad@gmail.com