Tuesday, 27 May 2014

தாளவாடியில் இலவச கண் சிகிச்சை முகாம்-2014

மரியாதைக்குரியவர்களே,
                         வணக்கம்.நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
  
தாளவாடி வட்டார மரியாதைக்குரிய பொதுமக்களே,
           அனைவருக்கும் வணக்கம்.
     

ஈரோடு மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கமும்,குன்னூர் மேட்டுப்பாளையம் இம்மானுவேல் கண் நோய் நிவாரணக்குழுவும்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் -தமிழ்நாடு என்னும் அரசு பதிவு பெற்ற தன்னார்வ நுகர்வோர் மற்றும் சாலை பாதுகாப்பு அமைப்பும் இணைந்து நம்ம தாளவாடியிலுள்ள அசிஸி மருத்துவமனையில் வரும் 2014 மே மாதம் 31ஆம் தேதி சனிக்கிழமை அன்று காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை கண் நோய் இலவச பரிசோதனை மற்றும் இலவச சிகிச்சை அளிக்க உள்ளார்கள்.இலவசமாக நடக்க இருக்கும் கண் நோய் சிகிச்சை முகாமில் கண் புரை உண்டாகுதல்,கண்ணில் நீர் அழுத்தம்,கண்ணில் நீர்ப்பை  அடைப்பு,மாலைக்கண்,கிட்டப்பார்வை,தூரப்பார்வை மற்றும் கண் சம்பந்தப்பட்ட அனைத்து வியாதிகள் உட்பட எல்லா தொந்தரவுகளுக்கும் இலவசமாக பரிசோதனை செய்து இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும்.
 கண்ணில் புரை உண்டாகி இருந்தால் அன்றைய தினமே குன்னூர் மேட்டுப்பாளையம் இம்மானுவேல் மருத்துவமனைக்கு G.M.மருத்துவமனைக்கு இலவசமாக அழைத்து சென்று இலவசமாக உணவு,தங்குமிடம்,மருத்துவ சிகிச்சை,அறுவை சிகிச்சை பேருந்து போக வர இலவச வசதி அனைத்தும் செய்து தரப்படும்.கண்ணிற்குள் இலவசமாக IOL லென்ஸ் பொருத்தப்படும்.அறுவை சிகிச்சைக்கு வருபவர்கள் தங்களது ரேசன் கார்டு ஜெராக்ஸ் காப்பி அல்லது வாக்காளர் அடையாள அட்டை ஜெராக்ஸ் காப்பி எடுத்து வர வேண்டும்.தங்குவதற்கு தேவையான பொருட்களுடன் வரவேண்டும்.நம்ம தாளவாடி பகுதியில் கடந்த முப்பது ஆண்டுகளாக இலவச சிகிச்சை செய்து வரும் குன்னூர் மேட்டுப்பாளையம் இம்மானுவேல் கண் நோய் நிவாரணக்குழு இந்த முறையும் தாளவாடிக்கு வருகை தருகிறது.எனவே உங்களுக்கோ அல்லது உங்கள் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கோ,உங்களுக்கு தெரிந்தவர்களுக்கோ கண் சம்பந்தப்பட்ட தொந்தரவு ஏதாவது இருந்தால் மே மாதம் 31,2014 சனிக்கிழமை அன்று தாளவாடி அசிஸி மருத்துமனைக்கு காலை 8 மணிக்கு வருகை தந்து இலவசமாக பரிசோதனை செய்து இலவச சிகிச்சையும் பெற்று நிவாரணம் பெறுமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.மேலும் விவரங்களுக்கு http://consumerandroad.blogspot.com வலைப்பக்கத்தில் பார்வையிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.