Sunday, 12 January 2014

சாலை பாதுகாப்பு வாரம்-ஜனவரி11 முதல் 17வரை.-2014

மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.

                நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை வரவேற்கிறோம்.
                      சாலை பாதுகாப்பு வாரவிழா ஆண்டுதோறும் ஜனவரி முதல் தேதி தொடங்கி ஏழாம் தேதி வரை நடப்பது வழக்கம்.ஆனால் இந்த ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதிவரை மாற்றி விட்டது நம்ம மத்திய அரசு.
                     இந்த தேதி மாற்றம் எல்லா மாநிலங்களுக்கும் பொருந்தும். ஆனால் நம்ம தமிழ்நாட்டிற்கு சொல்லொண்ணா துயரம்.?.

                     ஏனென்றால் ஜனவரி 11 முதல் 17 வரையிலான இடைப்பட்ட காலத்தில்தாங்க,தமிழரின் தனிச்சிறப்பு வாய்ந்த திருநாளாம்,உலகெங்கும் பெரும்பாலான தமிழர்களால் சாதி,சமயத்திற்கு அப்பாற்பட்டு அனைவரும் ஒன்றுபட்டு கொண்டாடும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் மூன்று நாட்கள் கொண்டாட்டம் வருகிறது.

           சாலைப்பாதுகாப்பு பற்றி  பொதுமக்களுக்கு நல்ல முறையில் விழிப்புணர்வு கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள நிலையில், இந்த தேதி மாற்றம் விழிப்புணர்வு என்ற ஆர்வத்திலிருந்து விலகி விளம்பரத்திற்கு! என்ற பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டு விடும்.அரசாங்கம் தக்க நடவடிக்கை எடுத்து வேறு தேதிக்கு மாற்றம் செய்ய வேண்டும்.இது அனைவரின் விருப்பமுங்க!.
என அன்பன் சி.பரமேஸ்வரன்.