மரியாதைக்குரியவர்களே, வணக்கம் http://consumerandroad.blogspot.com நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம். 2015 இந்த ஆண்டு,போக்குவரத்துக் காவல் நிலையம் -சத்தியமங்கலம் உட்கோட்ட
காவல்துறை நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு
அமைப்பு சத்தியமங்கலம் லோகு ஓட்டுனர் பயிற்சிப் பள்ளியுடன் இணைந்து
அனைத்துப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருபால் மாணவர்களுக்காக சாலை
பாதுகாப்பு விழிப்புணர்வு கொடுத்து வருகிறோம்.
சாலை பாதுகாப்பு வாசகங்களில் சிலவற்றை படிப்போம். (1)நடைபாதையில் நடப்போம்! நலமுடனே பயணிப்போம்!! (2)பொறுமையாக ஓட்டுவோம்! பிறரை பொருட்படுத்தி ஓட்டுவோம்!! (3)விதிகளை மதிப்போம்! வேதனைகளை தவிர்ப்போம்!! (4)சிக்னலை மதிப்போம்! சிக்கலை தவிர்ப்போம்!! (5)கவனமாக ஓட்டுவோம்! காலமெல்லாம் வாழ்வோம்!! (6)வாகனத்தை நிறுத்தி செல்போன் பேசுவோம்! (7)தலைக்கவசம் அணிவோம்!சீட் பெல்ட் அணிவோம்!! (8)படியில் பயணம்! நொடியில் மரணம்!! (9)இடைவெளி காப்போம்! இன்னலை தவிர்ப்போம்!! (10)போதையில் பயணம்! பாதையில் மரணம்!! (11)வேகம் சோகத்தை தரும்! நிதானம் நிம்மதியை தரும்!! (12)வளைவில் முந்தினால் மரணம் வருவது உறுதி!! (13)தூக்கத்தில் ஓட்டினால்! துக்கமே வரும்!! (14)சாலையில் அலட்சியம்! சாவது நிச்சயம்!! (15)முறையான இயக்கம்! முத்தான பயணம்!! (16)பொறுப்புடன் ஓட்டுவோம்! சிறப்புடன் வாழ்வோம்!! (17)விதி மீறாமல் ஓட்டுவோம்!விதி மீறுபவர்களையும் வீழ்த்தாமல் ஓட்டுவோம்!! (18)பாதுகாப்பாக ஓட்டுவோம்! பிறரையும் பாதுகாத்து ஓட்டுவோம்!! (19)சாலையில் கவனமாக ஓட்டுவோம்! சந்திப்புகளிலும் கவனமாக ஓட்டுவோம்!! (20)பொறுமையுடன் ஓட்டுவோம்! பொறுமை இல்லாதவர்களையும் காப்போம்!! (21)அனுசரித்து ஓட்டுவோம்! அனைவரையும் காப்போம்!! (22)சகிப்புத்தன்மை கடைப்பிடிப்போம்! சண்டைக்காரர்களையும் திருத்துவோம்!! (23)எதிர்பார்த்து ஓட்டுவோம்! எந்த சூழலிலும் காப்போம்!! (24)மனமே கவனம்! மனது அறியாததை கண்களும் பார்ப்பதில்லை! காதுகளும் கேட்பதில்லை!! மூளையும் உணருவதில்லை!!! (25)மன நலமும்,உடல் நலமும் உயிருள்ளவரை அழியாத சொத்து! (26) மது,போதை, புகைப் பழக்கத்தை விட்டொழிப்போம்!மனதையும் உடலையும் காப்போம்!! (27)சாலைவிதிகளை மதித்தால், விபத்தில்லா பயணம் சாத்தியமே!! (28)சாலை பாதுகாப்பு! சமூகத்தின் கூட்டுப் பொறுப்பு!! (29)சாலை பாதுகாப்பு! நமது உயிர் பாதுகாப்பு!! (30)வாகன அறிவும்,சாலை அறிவும்! வாழ்நாள் பாதுகாப்பு!! (31)புத்தாக்கப்பயிற்சி பெறுவோம்! புதுப்பித்தல் கல்வி பெறுவோம்!! (32)பொது வாகனத்தை பயன்படுத்துவோம்! தனி வாகனத்தை தவிர்ப்போம்!! (33)காவலர்கள் நமக்கு தோழர்கள்! மதிப்போம் மனித நேயம் காப்போம்!! (34)முதலுதவி முக்கியமாக கற்போம்!! (35)ஆயுள் காப்பீடு,மருத்துவ காப்பீடு,வாகன காப்பீடு ,விபத்து காப்பீடு அனைவருக்கும் அவசியம்!! (36)ஓய்வின்றி ஓட்டாதீர்! உயிருடன் வாழ்வீர்!! (37)ஒற்றை விளக்குடன் ஓட்டாதீர்! ஒழுக்கத்தை கடைப்பிடிப்பீர்!! (38)இரவில் வெளிச்சத்தை தாழ்த்துவீர்! வாழ்நாளை நீட்டிப்பீர்!! (39மறைவுப்பகுதிகளிலும்,வளைவுப்பகுதிகளிலும் விழிப்புடன் பயணிப்பீர்!!
மரியாதைக்குரியவர்களே, வணக்கம் http://consumerandroad.blogspot.com நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம். 2015 இந்த ஆண்டு,போக்குவரத்துக் காவல் நிலையம் -சத்தியமங்கலம் உட்கோட்ட
காவல்துறை நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு
அமைப்பு சத்தியமங்கலம் லோகு ஓட்டுனர் பயிற்சிப் பள்ளியுடன் இணைந்து
அனைத்துப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருபால் மாணவர்களுக்காக சாலை
பாதுகாப்பு விழிப்புணர்வு கொடுத்து வருகிறோம்.
சாலை பாதுகாப்பு வாசகங்கள் (1)தலைக்கவசம்! உயிர்க்கவசம்!! (2)ஹெல்மெட் அணிவது பாதுகாப்பு! இதுவே உனது உயிர்க்காப்பு!! (3)தலைக்கவசம் அணிவீர்! உயிரிழப்பைத் தவிர்ப்பீர்!! (4)உரிமம் வாங்க எட்டுப் போடு! உயிரைக்காக்க ஹெல்மெட் போடு!! (5)சாலையில் அலைபேசி! ஆபத்தாகும் நீ யோசி!! (6)சாலையில் போதை! மரணத்தின் பாதை!! (7)போதையில் பயணம்! பாதையில் மரணம்!! (8)சேமிக்க நினைத்தது சில நொடிகள்! சேதமடைந்தது பல உயிர்கள்!! (9)மிதமான வாகனப் பயணம்! மீதமாகும் வாழ்க்கைப் பயணம்!! (10)சாலையில் முந்தாதே! வாழ்க்கையில் முந்து!! (11)இரு சக்கர வாகனம்,இருவர் செல்ல மட்டுமே!! (12)அதிக பாரம்! ஆபத்தில் முடியும்!! (13)அதிக சுமை ஏற்றாதீர்! ஆபத்தில் சிக்கித் தவிக்காதீர்!! (14)படியில் பயணம்!நொடியில் மரணம்!! (15)ஓடும் பேருந்தில் ஏறாதே! உயிரைப்போக்கிடும் மறவாதே!! (16)ஓடும் பேருந்தில் இறங்காதே! உயிரைப் பணயம் வைக்காதே!! (17)சாலை ஞானம் வளர்ப்போம்! சாலை விபத்தைத்தடுப்போம்!! (18)சீட் பெல்ட் அணிந்தால் பாதுகாப்பு! இதுவே பயணத்தின் உயிர்காப்பு!! (19)வளைவில் முந்தாதே!வாழ்க்கையை தொலைக்காதே!! (20)மஞ்சள் கோட்டைத் தாண்டாதே! மரண எல்லையை தொடாதே!! (21)வாகனத்தில் வரும் புகை! வாழ்க்கைக்கு பெரும் பகை!! (22)அதிக சப்தம் எழுப்பாதே!மானிட ஆயுளை குறைக்காதே!! (23)மருத்துவமனை,பள்ளி,கல்லூரி அருகில் ஒலி எழுப்பாதே!! (24)சாலை விதிகளை மதிப்போம்! விபத்தில்லா தமிழகத்தை உருவாக்குவோம்!!
மரியாதைக்குரியவர்களே, வணக்கம் http://consumerandroad.blogspot.com நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம். 2015 இந்த ஆண்டு,போக்குவரத்துக் காவல் நிலையம் -சத்தியமங்கலம் உட்கோட்ட
காவல்துறை நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு
அமைப்பு சத்தியமங்கலம் லோகு ஓட்டுனர் பயிற்சிப் பள்ளியுடன் இணைந்து
அனைத்துப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருபால் மாணவர்களுக்காக சாலை
பாதுகாப்பு விழிப்புணர்வு கொடுத்து வருகிறோம்.
மரியாதைக்குரியவர்களே,வணக்கம். தற்போது நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டு இருக்கின்றன.தமிழகத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான வாகனங்கள் சாலையில் இயக்கப்பட்டு வருகின்றன.வாகனங்களின் அடர்த்தி,மக்கள் தொகைப் பெருக்கம் மற்றும் சாலைப்பயண அதிகரிப்பு,வாகன ஓட்டுனர்களின் அதிவேகம்,பயண நேரத்தைக் குறைத்து அதிக பலனைப் பெறலாம் என்ற தவறான கணிப்பு,ஓய்வின்றி உழைப்பு,மது மற்றும் போதைப்பொருட்கள் உட்கொண்டு வாகனம் ஓட்டுதல்,பழுதான மற்றும் பராமரிப்புக்குறைந்த வாகனங்களை சாலையில் இயக்குதல்,சாலை விதிகளை அலட்சியம் செய்தல்,அறியாமை,போன்ற காரணங்களால் சாலை விபத்துக்கள் தினசரி அதிகரித்து கொடுங்காயம்,ஊனம்,உயிரிழப்பு போன்ற துயரங்களுக்கும் ஆளாகி மற்றவர்களையும் பாதிப்புக்கு ஆளாக்கும் நிலை பெருகி வருகின்றன. இத்தகைய சூழலில் சாலையைப் பயன்படுத்தும் பாதசாரிகள்,பயணிகள்,இரு சக்கர வாகன ஓட்டுனர்கள்,கனரக மிதரக வாகன ஓட்டுனர்கள்,தொழில் சாராத ஓட்டுனர்கள்,என அனைவரின் பாதுகாப்பினை உறுதி செய்ய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கல்வி பெறுவோம்.அதன்படி நடப்போம். (1)சாலை விதிகளை மதிப்போம் - விபத்தினை தவிர்ப்போம். (2)ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டாதீர், (3)சாலையின் நடுக்கோட்டை ஒட்டிச்செல்லாமல் இடது புறமாக வாகனத்தை ஓட்டிச்செல்வீர், (4)எவ்வளவு அவசரமானாலும் எதிரில் வாகனம் வரும்போது விளக்கைப்போட்டுக்கொண்டு முந்தாதீர், (5)நம்மை பிற வாகனங்கள் முந்தும்போது வலது பக்கமாக வரக்கூடாது. (6)பேருந்து நிறுத்தங்களில் வாகனத்தை முந்தாதீர், (7)நிற்கும் வாகனத்தின் முன்னாலோ,பின்னாலோ சாலையை கடக்காதீர்,மறைவுப்பகுதி என உணர்வீர், (8)வலது பக்க இண்டிகேட்டரை போட்டு முந்திச்செல்ல அறிவுறுத்தாதீர், (9) ஓடும் வாகனத்தை முந்தும்போது எதிரே எந்த வாகனம் வந்தாலும் அவர்களுக்கு இடையூறாக முந்தாதீர், (10)நான்கு தடச்சாலைகளில் இடது பக்கமாகவே ஓட்டுவீர்,முந்தும்போது வலது பக்கமாகவே முந்துவீர். (11)குறுகிய பாலம்,சாலை வளைவுகளில்,ஓடும் வாகனத்தை முந்தாதீர், பார்வை மறைவுப்பகுதிகளில் கவனமாகச்செல்வீர், (12)நான்குபுறமும் எரியும் இண்டிகேட்டரை வாகனம் பழுதாகி நிற்கும்போது மட்டும் உபயோகிப்பீர். (13)செல்போன் பேசிக்கொண்டோ,காது ஒலிப்பானை மாட்டிக்கொண்டோ வாகனத்தை ஓட்டாதீர், (14)குடிபோதையிலும்,மருந்துண்ட மயக்கத்திலும்,தூக்கக் கலக்கத்திலும்,தொடர்ச்சியாக ஓய்வின்றியும் ,வாகனத்தை ஓட்டாதீர், (15)எந்தச்சூழ்நிலையிலும் வாகனத்தை அதிவேகமாக ஓட்டாதீர், (16)கிளைச்சாலையிலிருந்து பிரதானச்சாலையில் நின்று நன்கு கவனித்து எச்சரிக்கையாக நுழைந்து செல்வீர், (17)முடிந்தவரை மற்ற வாகனங்களுக்கு பிரேக் அடிக்கும் வேதனை தராமல் சீராக ஓட்டுவீர், (18)முன் செல்லும் நெருங்கியவாறு பின்தொடராதீர், (19)ஆம்புலன்ஸ்,தீயணைப்பு,மீட்பு வாகனங்களுக்கு அதாவது அவசர வாகனங்களுக்கு வழிகொடுப்பீர், (20)போக்குவரத்துச் சின்னங்கள்,சாலைக் குறியீடுகள்,சைகைகள் சாலையின் குரலாகும் எனவே சாலையின் குரலை மதித்து நடப்பீர், (21)பேருந்து படியில் நின்றுகொண்டு பயணம் செய்யாதீர், (22)ஓடும் பேருந்தில் ஏறவோ,இறங்கவோ வேண்டாம், (23)ஓட்டுனரிடம் பேசிக்கொண்டோ,ஓட்டுனருக்கு இடையூறாக அமர்ந்துகொண்டு அல்லது சுமைகளை வைக்கவோ வேண்டாம். (24)நகர எல்லைக்குள் அதிவேகம் வேண்டாம்.கட்டுப்பாடான வேகம் தேவை.அதிக ஒலி கொண்ட ஒலிப்பானை தவிர்க்கவும். (25)ஓடும் பாதையில் வாகனத்தை நிறுத்தி இடையூறு செய்ய வேண்டாம்.ஆக்கிரமிப்பு செய்யாதீர். (26)இரவில் டிம் அடித்து முகப்பு விளக்கின் ஒளியை தாழ்த்திடுவீர். (27)பகலில் முகப்பு விளக்கு போட்டுக்கொண்டு ஓட்டாதீர், (28)பள்ளிக்கூடங்கள் மற்றும் மருத்துவமனைகள் அருகில் ஒலிப்பானை பயன்படுத்தாதீர், (29) பின் பக்கம் பார்க்கும் கண்ணாடி ஓட்டுனரின் மூன்றாவது கண் என்பதால் திசை திருப்பும் போது பின் பார்க்கும் கண்ணாடியை பார்த்து கவனமாக திருப்புவீர், (30)வாகனத்தை பின்னோக்கி இயக்கும்போது உதவியாளர் அல்லது நடத்துனர் உதவியுடன் ஓட்டுவீர். (31)சீட் பெல்ட் அணிந்து பயணிப்பீர். (32)தலைக்கவசம் அணிந்து கொண்டு இரு சக்கர வாகனத்தில் பயணிப்பீர், (33)இரு சக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் பயணிக்க வேண்டாம். (34)சரக்கு வாகனங்களில் பயணிக்காதீர், (35)சாலையை பயன்படுத்துபவர்களை அனுசரித்து வாகனத்தை ஓட்டுவீர், (36)சாலை அனைவருக்கும் பொதுவானது என்பதை உணர்வீர், (37)போக்குவரத்துச்சட்டங்களையும்,விதிகளையும் மதித்து நடப்பீர், (38) தான் என்ற ஆணவம் வாகன ஓட்டத்தின்போது வேண்டாம். (39)அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றாதீர், (40)இடையூறு ஏற்பட்டால் ஓட்டுனர் வாகனத்தை பிரேக் போட்டு நிறுத்த அதிக நேரம் ஆகும் ஆதலால் அதற்கேற்ற தூரம் சென்றுதான் நிற்கும் என்பதை உணர்வீர், (41)சராசரி மனிதனின் சிந்திக்கும் நேரமும் செயல்படும் நேரும் இரண்டரை வினாடி ஆகும்.அதற்கேற்ற தூரம் சென்றுதான் வாகனம் நிற்கும். (42)பாதசாரி நடைவேகம் ஒரு வினாடிக்கு இரண்டடி ,ஓடும் வேகம் ஐந்து அடி ஆகும். (43)ஓட்டுனர் பயிற்சிப்பள்ளியில் புத்தாக்கப்பயிற்சி பெறுவீர், (44)சாலை அறிவும்,வாகன அறிவும் பெறுவீர்,விபத்தினை தவிர்ப்பீர். (45)இடதிற்க்கேற்ப வாகனத்தை உரிய வேகத்தில் ஓட்டுவீர், (46) இரவு நேரத்தில் ஒற்றை முகப்பு விளக்குடன் ஓட்டாதீர், (47)வலது பக்கம் செல்பவருக்கே முன்னுரிமை கொடுத்து பாதுகாப்பாக ஓட்டுவீர், (48)உடல் நலமும்,மன நலமும் அத்தியாவசிய சொத்து என்பதை மறவாதீர். (49)தனி மனித ஒழுக்கம் பேணுவீர்,பொது வாகனம் பயன்படுத்தி.தனி வாகனப்பயன்பாட்டைக்குறைப்பீர், (50)புகைப்பரிசோதனை செய்வீர்,சுற்றுச்சூழலைக் காப்பீர்,
மரியாதைக்குரியவர்களே, வணக்கம் http://consumerandroad.blogspot.com நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம். 2015 இந்த ஆண்டு,போக்குவரத்துக் காவல் நிலையம் -சத்தியமங்கலம் உட்கோட்ட
காவல்துறை நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு
அமைப்பு சத்தியமங்கலம் லோகு ஓட்டுனர் பயிற்சிப் பள்ளியுடன் இணைந்து
அனைத்துப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருபால் மாணவர்களுக்காக சாலை
பாதுகாப்பு விழிப்புணர்வு கொடுத்து வருகிறோம்.
சாலை பாதுகாப்பு கல்வியில் (1) சாலையில் பாதுகாப்பாக பயணிக்கும் முறை, (2)சாலையின் தன்மை,பாகங்கள்,வகைகள், (3)வாகனங்களின் வகைகள்,பாகங்கள், இயக்கவிதிகள், (4)விபத்திற்கான பொதுவான காரணங்களும்,தவிர்க்கும் முறைகளும், (5) போக்குவரத்துச்சின்னங்கள்,கை சைகைகள்,விளக்கு சைகைகள்,(6)சாலைக்குறியீடுகள் என்னும் வரைகோடுகள், (7)வாகனங்களின் வகைகளும்,பாகங்களும்,பராமரிப்பு முறைகளும்,இயங்கும் தன்மைகளும் (8) வாகனம் ஓட்டும் முறைகள்,இரவு நேரங்களில்,மலைப்பகுதிகளில்,மழைக்காலங்களில்,பனிக்காலங்களில் வாகனம் ஓட்டும் முறைகள் (9)போக்குவரத்துச்சட்டங்களும்,குற்றங்களும்,தண்டனைகளும்,(10)முதலுதவி,உடல் நலமும்,மன நலமும் பாதுக்காப்பதின் அவசியம், (11)ஆயுள் காப்பீடு,வாகனக்காப்பீடு,விபத்துக்காப்பீடு,மருத்துவக்காப்பீடு பற்றிய விளக்கங்கள், (12)அவசர உதவிக்கு தொடர்பு எண்களும்,பயன்படும் முறைகளும் (13)ஓட்டுனர் பயிற்சிப் பள்ளிகளும்,புத்தாக்கப்பயிற்சியும்,புதுப்பித்தல் கல்வியும், (14)வாகன புகை மாசு பரிசோதனைகளும்,சுற்றுச்சூழல் காக்கும் முறைகளும், என அனுபவம் வாய்ந்த பயிற்சி ஓட்டுனர்கள் மற்றும் ஓட்டுனர் பயிற்சி பள்ளி ,மருத்துவர்கள்,முதலுதவிப்பயிற்சி ஆசிரியர்கள்,சம்பந்தப்பட்ட அரசுத்துறைகள்,சட்ட நிபுணர்கள்,காப்பீட்டு முகவர்கள், வாயிலாக இலவசமாக சாலை பாதுகாப்பு கல்வி பெற்று சாலையில் பாதுகாப்பான பயணத்தை மேற்கொண்டு விபத்தினை தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். மேலும் விவரங்களுக்கு, அரிமா.K.லோகநாதன் +919443021196, A.A.இராமசாமி +919486708475, C.பரமேஸ்வரன் +919585600733, consumerandroad@gmail.com, http://www.consumerandroad.blogspot.in