Sunday 22 June 2014

இருதின முப்பெரும் விழா-2014சிறப்பு விருந்தினர்கள்.

மரியாதைக்குரியவர்களே,

                  வணக்கம். நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் -தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
  ஈரோடு மாவட்டம் நம்ம சத்தியமங்கலத்தில் வருகிற 2014ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20 ஞாயிறு& 21திங்கள் ஆகியதேதிகளில்  இருதின முப்பெரும்விழா நடக்க உள்ளது.
  
  முப்பெரும் விழாவினை சமூக நலன் கருதி,
ம ழைநீர் சேமிப்போம்

   (1) போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டு விழா,
    (2)அனைத்திந்திய ஓட்டுநர்கள் தின விழா,
   (3) தேசிய கண்ணொளி விழிப்புணர்வு இயக்கம் துவக்க விழா 
  என நடத்த உள்ளோம்.
          அது சமயம் சிவகாசி பட்டாஸ் நகர் அரிமா Dr.J.கணேஷ் MJF ஐயா அவர்கள் தேசிய கண்ணொளி விழிப்புணர்வு இயக்கத்தை துவக்கி வைத்து கண்தானம் பற்றிய விழிப்புரை அளிக்க உள்ளார்கள்.அத்துடன் தேசிய கண்ணொளி விழிப்புணர்வு இயக்கத்திற்கு கௌரவ ஆலோசகராகவும் பொறுப்பு வகித்து நம்ம பகுதிக்கு கண்கள் பற்றிய விழிப்புணர்வு ஆலோசனை வழங்க இசைவு தெரிவித்து உள்ளார்கள்.
(திரு Dr.J.கணேஷ் MJF ஐயா அவர்களது நோக்கம் பற்றி கடைசியில் காண்க.)
  சேலம் கன்ஸ்யூமர் வாய்ஸ் நிறுவனத்தலைவர் திரு.J.M.பூபதி ஐயா அவர்களையும் சிறப்பு விருந்தினராக அழைக்க உள்ளோம்.சிலம்பாட்டம் பற்றிய காட்சி விளையாட்டு மற்றும் விழிப்புரை கொடுக்கவும் உள்ளோம்.

                            ( முனைவர்.ஜெ.கணேஷ் ஐயா அரிமா சங்க கண்தான மாவட்டத் தலைவர் அவர்களைப்பற்றி..............
                   Lion,Dr.J.கணேஷ் MJF ஐயா அவர்கள் விருதுநகர் மாவட்டம்,சிவகாசி பட்டாஸ் நகர் அரிமா சங்க கண்தான மாவட்டத்தலைவராக உள்ளார்.இவர் ஜெயா டிவியில் கண்தானம் பற்றிய விழிப்புணர்வு பேட்டி கொடுத்து உள்ளார்.இதுவரை சுமார் எட்டு நாளிதழ்களுக்கும் அதிகமாக கண்தானம் பற்றிய விழிப்புணர்வு பேட்டி கொடுத்து உள்ளார்.கடந்த எட்டு ஆண்டுகளில் 3100 ஜோடி கண்களை தானமாக பெற்று ஆறாயிரம் குடும்பங்களுக்கு பார்வை கொடுத்து உதவி இருக்கிறார்.பல்வேறு அமைப்புகளிடமிருந்து 180க்கும் அதிகமான விருதுகளை பெற்று இருக்கிறார்.1189 பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கண்தானம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தி உள்ளார்.மூன்று நாடுகள் மூன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவப்படுத்தி உள்ளன.சினிமா நட்சத்திரங்கள் உட்பட சினிமா கலைத்துறையினரை கண்தானம் பற்றிய பேட்டி எடுத்து காணொளியாக விளம்பரப்படுத்தி உள்ளார்.இவரது நோக்கம் பார்வையற்றோர் இல்லாத பாரதம் படைக்க வேண்டும் என்பதே