Saturday 31 May 2014

தாளவாடியில் இம்மானுவேல் கண் நோய் இலவச சிகிச்சை முகாம் -2014

மரியாதைக்குரியவர்களே,
               வணக்கம். 
           நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.


    காலை எட்டு மணி முதல் மாலை மூன்று மணிவரை 254 நோயாளிகளுக்கு அயராது சிகிச்சையளித்த  மரியாதைக்குரிய கண் மருத்துவர் சாஜில் ஓமென் சக்கோ (SHAJIL OOMMEN CHACKO) அவர்களும் அவருக்கும் நோயாளிகளுக்கும் தமிழ் & கன்னட மொழி மாற்றி துணை புரிந்த மரியாதைக்குரிய D. குருபாதசாமி அவர்களும்.


       
   31-05-2014 சனிக்கிழமை  இன்று 
        ஈரோடு மாவட்டம் தாளவாடியில் 
ஈரோடு மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம்,
குன்னூர் மேட்டுப்பாளையம் இம்மானுவேல் கண் நோய் நிவாரணக் குழு, நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் சார்பில்  தாளவாடியில் உள்ள அசிஸி பொது மருத்துவமனையில் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது.

காலை 8 மணிக்கு துவங்கி மதியம் 3 மணி வரை நடந்த இம்முகாமிற்கு
திரு.C.பரமேஸ்வரன் அவர்கள்,செயலாளர் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு அவர்கள் தலைமை வகித்தார்.
திரு.A.P.ராஜூ அவர்கள்,செயற்குழு உறுப்பினர் முகாமை துவக்கி வைத்தார்.
  

 திரு.T.V.ஆனந்த நாராயணன் அவர்கள் -செய்தியாளர்,தாளவாடி ,திருS.ராஜேந்திரன் அவர்கள்,செயற்குழு உறுப்பினர் முன்னிலை வகித்தனர்.
இம்மானுவேல் கண் நோய் நிவாரணக் குழு மருத்துவர் திரு.ஷாஜில் ஓமென் சாக்கோ அவர்கள் தலைமையில் பதினைந்து மருத்துவக்குழுவினர் கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளித்தனர்.

               தாளவாடி மலைப்பகுதி சுற்றுவட்டாரங்களிலிருந்து 254 நோயாளிகள் கண் பரிசோதனை செய்து சிகிச்சை பெற்றனர். 

                            97 நோயாளிகள் கண் புரை முற்றிய நிலையில் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர்.அனைவரையும் இரு பிரிவுகளாக பிரித்து முதல் பிரிவு 45 நோயாளிகளும் அவர்களில் இருவருக்கு இரு கண்களும் தெரியாத நிலையில் துணைக்கு 6 பேரும் ஆக  இன்று 31-05-2014 குன்னூர் மேட்டுப்பாளையம் இம்மானுவேல் மருத்துவமனையான G.M.மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
      அடுத்த பிரிவினர் 52 நோயாளிகள் வருகிற 03 - 06-2014 செவ்வாய்கிழமை அன்று அழைத்து செல்லப்பட்டனர்.

        கண்மருத்துவ சிகிச்சைக்கான ஏற்பாட்டை 
முகாம் அமைப்பாளர் திரு.L.O.நடராஜன் அவர்கள் , நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் திரு.K.லோகநாதன் (லோகு டிரைவிங் ஸ்கூல்-சத்தியமங்கலம்)  ஆகியோர் செய்து இருந்தனர்.
 கண் அறுவை சிகிச்சைக்காக நோயாளிகள் பயணித்த காட்சி.
கண் புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டு வீடு திரும்பிய அனைத்து நோயாளிகளுக்கும் மறுபரிசோதனை..........
                     எங்களது வேண்டுகோளினை ஏற்று கண் மருத்துவக்குழுவினர் வருகிற 27 -06-2014 வெள்ளிக்கிழமை அன்று தாளவாடி மலைப்பகுதிக்கே வருகை புரிந்து கண் அறுவை செய்துகொண்ட நோயாளிகளை மறு பரிசோதனை செய்ய உள்ளனர்.