Tuesday, 28 June 2016

N.S.S.BANNARI AMMAN INSTITUTE OF TECHNOLOGY SATHYAMANGALAM

பண்ணாரி அம்மன் தொழிற்நுட்பக் கல்லூரி - நாட்டு நலப்பணித் திட்டம்.

Bannari Amman Institute of Technology-N.S.S


மரியாதைக்குரியவர்களே,
           வணக்கம்.
                 சத்தியமங்கலம்  பண்ணாரி அம்மன் தொழிற்நுட்பக் கல்லூரியில்,நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக 'சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு' விழா-2017 ஜனவரி 7  ம் தேதி இன்று மதியம்2.00மணியளவில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. திட்ட அலுவலர் முனைவர்,V.N.விஜயகுமார் ஐயா அவர்கள் அனைவரையும் வரவேற்று தொடக்கவுரை நிகழ்த்தினார்..கருத்தாளர்களாக  அரிமா K.லோகநாதன் ,லோகு டிரைவிங் ஸ்கூல் அவர்களும், சமூக ஆர்வலர் C. பரமேஸ்வரன்,செயலாளர்-நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்,தமிழ்நாடு & விதைகள் வாசகர் வட்டம் சத்தியமங்கலம் அவர்களும் பங்கேற்று சிறப்புரையாற்றினார்கள். இரண்டு மணி நேரம் நடைபெற்ற இவ்விழாவில் நாட்டுநலப்பணித்திட்டத்தின் மாணவ,மாணவியரும்,பேராசிரியப்பெருமக்களும்,கல்லூரிப் பேருந்துகளின் ஓட்டுநர்களும் பங்கேற்றனர்.கல்லூரிப் பேருந்து ஓட்டுநரை மேடையேற்றி சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கச்செய்து பாராட்டு நல்கியதோடு ஓட்டுநர்களையும் கௌரவித்தனர்.அனைவருக்கும் ,'விதைகள் வாசகர் வட்டம்' மற்றும் 'லோகு டிரைவிங் ஸ்கூல்' சார்பாக சாலை பாதுகாப்பு கல்வி துண்டறிக்கை  வழங்கப்பட்டது. திட்ட அலுவலர் முனைவர்.R.பிரவீனா அம்மையார் அவர்கள்  அனைவருக்கும் நன்றி கூறினார். நாட்டுப்பண் இசையுடன் சாலை பாதுகாப்பு விழா-2017 இனிதே நிறைவு பெற சிறப்பு விருந்தினர்களுக்கு சிற்றுண்டி வழங்கி சிறப்பித்து வழியனுப்பி வைத்தனர்.
=================================
பண்ணாரி அம்மன் கல்லூரியின் CRS என்னும் சமுதாய வானொலி கேளுங்க!
 COMMUNITY RADIO  90.4MHZ அலைவரிசையில் தினமும் காலை6.00மணி முதல் காலை 10.00 மணி வரையிலும் மாலை4.00மணி முதல் இரவு 10.00மணி வரையிலும் சிறப்பாக ஒலிபரப்பாகிறதுங்க.
         உங்களுக்காக தினமும் உடல்நலம்,மனவளம்,இன்னிசை,ஆன்மீகம், கல்வி.நூலகத்தின் அவசியம்,,பொது அறிவு,வேளாண்மை,கால்நடை,திரைஇசைப்பாடல்கள்,வனவளம்,சுற்றுச்சூழல் காப்பது,தமிழர் பண்பாடு,கிராமியபாடல்,இளைஞர்களுக்கான வழிகாட்டுதல் உரை,இயற்கைவளம்,சித்த மருத்துவம்,ஆரோக்கியம்,இணையம்,வரலாறு,இலக்கியம்,என சமூகநலனுக்கான பல பயனுள்ள தகவல்களை உங்க ரேடியோவிலும், 
Direct-to-home television அதாவது DTH என்று சுருக்கமாக அழைக்கப்படுகின்ற  DISH TV, DD Free Dish, TaTaSky, SUN DIRECT, Airtel digital TV, Reliance digital Tv, Videocon d2z, ABS Free Dish,STC போன்ற தனியார் ஒளிபரப்புச்சேனல்களிலும் 90.4MHZஅலைவரிசையில் கேளுங்க.
(நாங்கள்  SUN DIRECT நெட்ஒர்க் சேவையில் துல்லியமாக கேட்டு மகிழ்கிறோம்.)

பிறக்கும்போது எதுவும் அறியாதவனாகவே மனிதன் பிறக்கிறான். வாசிப்பின் மூலமே அறிஞனாகிறான்; ஆராய்ச்சியாளனாகிறான். ஆம்! தொடக்கத்தில் அன்னையின் முகத்தை ஆவலோடு வாசிக்கிறான். அவள் சொல்லி, தந்தையின் முகத்தைப் படிக்கிறான். வண்ணங்களை வாசிக்கிறான். வானத்தை வாசிக்கிறான். மண்ணைப் படிக்கிறான். மனிதர்களை, அவர்களின் நாடியை, மனத்தை, குணத்தைப் படிக்கிறான். சுவையை, மணத்தை, ஒலியை, ஒளியை, நடையை… இவ்வாறு ஒவ்வொன்றையும் பார்த்து, தொட்டு, செவியுற்று, நுகர்ந்து படிக்கத் தொடங்கும் மனிதன் புத்தகத்தைப் படித்து, நூல்களை வாசித்து மேதையாகிறான்.

Make Money Online : http://ow.ly/KNICZ

மாணவர் நூலகம் -தாளவாடி

வாசிப்போம்,நேசிப்போம்,யோசிப்போம் இதுவே சுவாசிப்போம்.
         விழுந்தால் அழாதே . . . எழுந்திரு ! தோற்றால் புலம்பாதே . . . போராடு ! கிண்டலடித்தால் கலங்காதே . . . மன்னித்துவிடு ! தள்ளினால் தளராதே . . . துள்ளியெழு ! நஷ்டப்பட்டால் நடுங்காதே . . . நிதானமாய் யோசி ! ஏமாந்துவிட்டால் ஏங்காதே . . . எதிர்த்து நில் ! நோய் வந்தால் நொந்துபோகாதே . . நம்பிக்கை வை ! கஷ்டப்படுத்தினால் கதறாதே . . . கலங்காமலிரு ! உதாசீனப்படுத்தினால் உளறாதே . . உயர்ந்து காட்டு ! கிடைக்காவிட்டால் குதிக்காதே . . . அடைந்து காட்டு ! மொத்தத்தில் நீ பலமாவாய் . . . சித்தத்தில் நீ பக்குவமாவாய் . . . உன்னால் முடியும் . . . உயர முடியும் . . . உதவ முடியும் . . . உனக்கு உதவ நீ தான் உண்டு ! உன்னை உயர்த்த நீ தான் . . . நம்பு . . உன்னை மாற்ற நீ தான் . . . முடிவெடு . . . நீயே பாறை . . .நீயே உளி . . . நீயே சிற்பி . . .நீயே செதுக்கு . . . நீயே விதை . . .நீயே விதைப்பாய் . . . நீயே வளர்வாய் . . .நீயே அனுபவிப்பாய் . . . நீயே நதி . . . நீயே ஓடு . . . நீயே வழி . . . நீயே பயணி . . . நீயே பலம் . . . நீயே சக்தி . . . நீயே ஜெயிப்பாய் . எப்பொழுதும் நம்பிக்கை இழக்காதே!!! இவ்வாறாக தன்னம்பிக்கை வைத்து துணிந்து போராட தல்ல புத்தகங்களை வாசி,வாசி,வாசி...................
               அன்பன்,பரமேஸ்வரன்,செயலாளர்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் தமிழ்நாடு 9585600733

மாணவர் நூலகம்-தாளவாடி-ஈரோடு மாவட்டம்.

                                                        
                                           வாசிப்பே நமது சுவாசிப்பு!
                       
                                 வேலைக்கு உறுதுணை - பள்ளிப் படிப்பு!
                           வாழ்க்கைக்கு உறுதுணை -  புத்தக வாசிப்பு!!

மரியாதைக்குரியவர்களே,
       வணக்கம்.தாளவாடியில் வருகிற 2016 ஜூலை மாதம் 15 ந் தேதி காலை 10.00மணியளவில் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு சார்பாக ''மாணவர் நூலகம்'' துவக்கி  நடமாடும் இலவச சேவையாற்ற உள்ளோம்.அரசியல்,சாதி,மத,மொழி வேறுபாடின்றி செயல்படும் எங்களுடன் இணைந்து செயல்பட ஆர்வமுள்ள சமூக சேவை அமைப்புகளையும்,கல்வி நிறுவனங்களையும்,தன்னார்வலர்களையும் இரு கரம் கூப்பி அன்புடன் வரவேற்கிறோம்.

                    வருகிற 2016 ஜூலை மாதம் 09- ந் தேதி சனிக்கிழமை காலை 11.00மணியளவில் தாளவாடியிலுள்ள J.S.S.I.T.I.தொழிற்பயிற்சி மையத்தில் வாசிப்பு,நேசிப்பு,யோசிப்பு இதுவும் நமது சுவாசிப்பு என்பதை நினைவில் நிறுத்துவதற்காக   ''வாசிப்பே நமது சுவாசிப்பு'' தலைப்பில் நடைபெறும் கருத்தரங்கத்தில்  மாணவர் நூலகத்தின் நோக்கமாக  எந்தச்சூழலிலும் மாணவ,மாணவியர் தனி மனித ஒழுங்குடன் துணிந்து செயல்பட்டு தம் வாழ்க்கையில் முன்னேறுவதுடன் சமூக ஒற்றுமை காப்பதற்கான வழிகாட்டுதல் என்பதை வலியுறுத்தும் விவாதத்திலும் பங்கேற்று தங்களது மேலான கருத்துக்களை பதிவு செய்ய வருகை தருமாறு அன்புடன் அழைக்கிறோம்.                                         இப்படிக்கு, 
                         சமூக நலனில் அக்கறையுள்ள
                        C. பரமேஸ்வரன், 91 9585600733
                                              செயலாளர்,                                                                                    நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.