Tuesday, 28 June 2016

மாணவர் நூலகம்-தாளவாடி-ஈரோடு மாவட்டம்.

                                                        
                                           வாசிப்பே நமது சுவாசிப்பு!
                       
                                 வேலைக்கு உறுதுணை - பள்ளிப் படிப்பு!
                           வாழ்க்கைக்கு உறுதுணை -  புத்தக வாசிப்பு!!

மரியாதைக்குரியவர்களே,
       வணக்கம்.தாளவாடியில் வருகிற 2016 ஜூலை மாதம் 15 ந் தேதி காலை 10.00மணியளவில் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு சார்பாக ''மாணவர் நூலகம்'' துவக்கி  நடமாடும் இலவச சேவையாற்ற உள்ளோம்.அரசியல்,சாதி,மத,மொழி வேறுபாடின்றி செயல்படும் எங்களுடன் இணைந்து செயல்பட ஆர்வமுள்ள சமூக சேவை அமைப்புகளையும்,கல்வி நிறுவனங்களையும்,தன்னார்வலர்களையும் இரு கரம் கூப்பி அன்புடன் வரவேற்கிறோம்.

                    வருகிற 2016 ஜூலை மாதம் 09- ந் தேதி சனிக்கிழமை காலை 11.00மணியளவில் தாளவாடியிலுள்ள J.S.S.I.T.I.தொழிற்பயிற்சி மையத்தில் வாசிப்பு,நேசிப்பு,யோசிப்பு இதுவும் நமது சுவாசிப்பு என்பதை நினைவில் நிறுத்துவதற்காக   ''வாசிப்பே நமது சுவாசிப்பு'' தலைப்பில் நடைபெறும் கருத்தரங்கத்தில்  மாணவர் நூலகத்தின் நோக்கமாக  எந்தச்சூழலிலும் மாணவ,மாணவியர் தனி மனித ஒழுங்குடன் துணிந்து செயல்பட்டு தம் வாழ்க்கையில் முன்னேறுவதுடன் சமூக ஒற்றுமை காப்பதற்கான வழிகாட்டுதல் என்பதை வலியுறுத்தும் விவாதத்திலும் பங்கேற்று தங்களது மேலான கருத்துக்களை பதிவு செய்ய வருகை தருமாறு அன்புடன் அழைக்கிறோம்.



                                         இப்படிக்கு, 
                         சமூக நலனில் அக்கறையுள்ள
                        C. பரமேஸ்வரன், 91 9585600733
                                              செயலாளர்,                                                                                    நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.
                    
                                                                                                  
                       




         

No comments:

Post a Comment