Thursday, 26 March 2015

ஈரோடு மாவட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்-2015

         சத்தியமங்கலம் உட்கோட்ட காவல் துறைக்கு உட்பட்ட
                           பொது மக்கள் குறை தீர்க்கும் முகாம்


மரியாதைக்குரியவர்களே,
          வணக்கம்.
                      நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம். இன்று 26மார்ச் 2015 மாலை 5.00 மணிக்கு சத்தியமங்கலம் கொங்கு மஹால் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு காவல்துறை ஈரோடு மாவட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது.பத்திரிக்கையாளர்கள்,அரசு சாரா சமூக சேவை அமைப்புகள்,சமூக ஆர்வலர்கள்,மக்கள் பிரதிநிதிகள்,அரசியல் அமைப்பு பிரமுகர்கள்,மகளிர் அணியினர் உட்பட பொதுமக்கள் ஏராளமானவர்கள் கலந்துகொண்டு தங்களது குறைகளை நேரிலும்,மனுக்களாகவும் கொடுத்தனர்.அனைத்தையும் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
    திரு.காவல் ஆய்வாளர் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.


            திரு.எம்.ஆர்.சிபிசக்கரவர்த்தி.இ.கா.ப.அவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  தலைமை ஏற்று பொதுமக்கள் குறைகளை கேட்டறிந்தார்.பொதுமக்களிடம் குறை தீர்ப்பதற்கான  மனுக்களை பெற்றுக்கொண்டார்.

    திரு.எஸ்.மோகன் அவர்கள் காவல்துணை கண்காணிப்பாளர் சத்தி உட்கோட்டம் துவக்கவுரை நிகழ்த்தி மக்களின் நண்பன் காவல்துறை என நினைவுபடுத்தினார். மற்றும் சத்தி உட்கோட்டத்திற்குட்பட்ட காவல்துறை ஆய்வாளர்களின் அலைபேசி எண்களை அனைவருக்கும் அறிவித்து இருபத்திநான்கு மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என விழிப்புரை ஆற்றினார்.


பொது மக்கள் நலன் கருதி
 அன்பன் 
  C.பரமேஸ்வரன்
 சத்தியமங்கலம்