சாலை பாதுகாப்பு வாசகம் அல்ல,அது வாழ்க்கை முறை
மரியாதைக்குரியவர்களே,
வணக்கம் http://consumerandroad.blogspot.com
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
2015 இந்த ஆண்டு,போக்குவரத்துக் காவல் நிலையம் -சத்தியமங்கலம் உட்கோட்ட காவல்துறை நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு அமைப்பு சத்தியமங்கலம் லோகு ஓட்டுனர் பயிற்சிப் பள்ளியுடன் இணைந்து அனைத்துப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருபால் மாணவர்களுக்காக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கொடுத்து வருகிறோம்.
சாலை பாதுகாப்பு கல்வியில்
(1) சாலையில் பாதுகாப்பாக பயணிக்கும் முறை,
(2)சாலையின் தன்மை,பாகங்கள்,வகைகள்,
(3)வாகனங்களின் வகைகள்,பாகங்கள், இயக்கவிதிகள்,
(4)விபத்திற்கான பொதுவான காரணங்களும்,தவிர்க்கும் முறைகளும்,
(5) போக்குவரத்துச்சின்னங்கள்,கை சைகைகள்,விளக்கு சைகைகள்,(6)சாலைக்குறியீடுகள் என்னும் வரைகோடுகள்,
(7)வாகனங்களின் வகைகளும்,பாகங்களும்,பராமரிப்பு முறைகளும்,இயங்கும் தன்மைகளும்
(8) வாகனம் ஓட்டும் முறைகள்,இரவு நேரங்களில்,மலைப்பகுதிகளில்,மழைக்காலங்களில்,பனிக்காலங்களில் வாகனம் ஓட்டும் முறைகள்
(9)போக்குவரத்துச்சட்டங்களும்,குற்றங்களும்,தண்டனைகளும்,(10)முதலுதவி,உடல் நலமும்,மன நலமும் பாதுக்காப்பதின் அவசியம்,
(11)ஆயுள் காப்பீடு,வாகனக்காப்பீடு,விபத்துக்காப்பீடு,மருத்துவக்காப்பீடு பற்றிய விளக்கங்கள்,
(12)அவசர உதவிக்கு தொடர்பு எண்களும்,பயன்படும் முறைகளும் (13)ஓட்டுனர் பயிற்சிப் பள்ளிகளும்,புத்தாக்கப்பயிற்சியும்,புதுப்பித்தல் கல்வியும்,
(14)வாகன புகை மாசு பரிசோதனைகளும்,சுற்றுச்சூழல் காக்கும் முறைகளும்,
என அனுபவம் வாய்ந்த பயிற்சி ஓட்டுனர்கள் மற்றும் ஓட்டுனர் பயிற்சி பள்ளி ,மருத்துவர்கள்,முதலுதவிப்பயிற்சி ஆசிரியர்கள்,சம்பந்தப்பட்ட அரசுத்துறைகள்,சட்ட நிபுணர்கள்,காப்பீட்டு முகவர்கள்,
வாயிலாக
இலவசமாக சாலை பாதுகாப்பு கல்வி
பெற்று சாலையில் பாதுகாப்பான பயணத்தை மேற்கொண்டு விபத்தினை தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் விவரங்களுக்கு,
அரிமா.K.லோகநாதன் +919443021196,
A.A.இராமசாமி +919486708475,
C.பரமேஸ்வரன் +919585600733,
consumerandroad@gmail.com,
http://www.consumerandroad.blogspot.in
No comments:
Post a Comment