மரியாதைக்குரியவர்களே,
வணக்கம். நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
(1)ஒலி.........
ஒலியின் பண்புகள் அதிர்வெண்,வீச்சு,திசைவேகம்,நீளம் ஆகியன ஆகும்.
ஒலி பரவ மூலக்கூறுகள் அவசியமாகும்.வெற்றிடத்தில் பயணிக்காது.திட,திரவ,வாயு நிலைகளில் பயணிக்கும். ஒலி வேகம் ஒரு மாறிலி ஆகும். வெப்பமானது காற்றில் செல்லும் ஒலியின் வேகத்தை மாற்றும்.ஒலியானது 20 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் கடல்மட்டத்தில் காற்றில் ஒரு விநாடிக்கு 1230அடி தூரம் பயணிக்கும்.அதே 20 டிகிரி வெப்பமுள்ள நன்னீரில் ஒரு விநாடிக்கு 4940 அடி தூரம் பயணிக்கும்.இரும்பு எஃகு பொருளில் ஒரு விநாடிக்கு 19866.7அடி தூரம் பயணிகும்.அதாவது ஒலி செல்லும் ஊடகத்தில் உள்ள மூலக்கூறுகள் அடர்த்தி அதிகரிக்கும் அளவுக்கு ஒலியின் வேகமும் அதிகரிக்கும்.ஒலிமூலத்தை விட்டு விலக,விலக ஒலியின் அடர்த்தி குறையும்.ஒலிமூலத்தை நோக்கி அருகில் வர,வர ஒலியின் அடர்த்தி அதிகமாகும்.
(2) ஒளி............
ஒளி என்பது கண்களுக்குப் புலப்படும் அலைநீளம் கொண்ட மின்காந்த அலைகளாகும்.அதாவது அகச்சிவப்புக்கதிர்களுக்கும் புற ஊதாக்கதிர்களுக்கும் இடைப்பட்ட அலைநீளம் கொண்ட மின்காந்த அலைகளாகும்.
நாம் கண்ணால் காணும் ஒளியானது
380 நானோமீட்டர் முதல் 740 நானோமீட்டர் வரை அலைநீளத்தைக்கொண்டது.ஒளி துகள் மற்றும் அலை என்ற இரு பண்புகளைக்கொண்டது.அதனால் பல்வேறுபட்ட வண்ணங்களாக காண்கிறோம்.
ஒளி வேகம் ஒரு மாறிலி ஆகும். ஒளியானது நேர்கோட்டில்தான் பயணிக்கும்.வெற்றிடத்திலும் பயணிக்கும்.ஒளி ஊடுருவும் பொருட்களிலும் பயணிக்கும்.காற்றிலும் பயணிக்கும்.
ஒளிவேகத்தை C (Celerita) என்ற எழுத்தால் குறிப்பிடுகிறோம்.C - CELERITA என்ற இலத்தீன் சொல்லுக்கு தமிழில் வேகம் என்று பொருள் ஆகும்.ஒளி வெற்றிடத்தில் ஒரு விநாடிக்கு கடக்கும்தொலைவு 29,97,92,458 மீட்டர் (99,93,08,193அடி) தூரம்ஆகும்.
No comments:
Post a Comment