மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
கலப்படம் பெருகிவிட்ட இக்காலத்தில் நுகர்வோர் பாதிப்பு மற்றும் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட கவிதைகளை , துணுக்குகளை,திரைப்படப்பாடல்களை,நாட்டுப்புறப் பாடல்களை,நாடகங்களை,சிறுகதைகளை,தொகுத்து இத்தளத்தில் விழிப்புணர்வுக்காக வெளியிட்டு பொதுமக்களுக்கு உதவிட உள்ளேன்.சமூக அக்கறை மற்றும் ஆர்வம் உள்ள சான்றோர் உதவிட வேண்டுகிறேன்.
CONCERT அமைப்பின் பெருமை சேர்க்கும் "அன்னம்" கையடக்க பரிசோதனை KIT குறித்து விளக்கமளித்தார். உண்மையில் சிறிய விலையில், பல கலப்படங்கள் கண்டுபிடிக்க உதவிடும் அருமையான கருவிகள். அத்துடன், நாம் பருகும் நீர் தரமானதுதானா என பரிசோதிப்பது எப்படி என்பதையும் அதற்காக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் வடிவமைத்துள்ள பாட்டிலை கையாளும் விதம் குறித்தும் விளக்கினார். பாமரரும் பயன்படுத்தும் விதத்தில் அவை வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த KIT அனைத்து உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கும் அரசின் மூலம் வழங்க CAI எடுத்து வரும் முயற்சி பாராட்டிற்குரியது.
நன்றி http://www.unavuulagam.in வலைத்தளத்திற்கு....
கலப்படம்-நகைச்சுவை கவிதை
கேடு கெட்ட உலக வாழ்க்ககை வெறுத்ததால்
சாகவேண்டி தற்கொலை செய்ய முயற்சித்தான் முனுசாமி...
கடைக்கு சென்று தாம்புக் கயிறு வாங்கி
கதவடைத்து நாற்காலியின் மீதேறி....
உத்திரத்தில் சுருக்கிட்டு, தலையை உள்நுழைத்து
காலால் உதைத்தான் நாற்காலியை.....
அந்தோ... பரிதாபம் கயிறு அறுந்துவிட
முனுசாமி தரையில்விழுந்தான்.......
காரணம் கயிற்றில் கலப்படமாம்...!
மூட்டைப்பூச்சி மருந்து குடித்தால் சகலாம் -என்ற
ஒரு முதியவரின் அறிவுரை புத்தியில் மின்ன,
கடைக்குச் சென்று வாங்கி வந்து,
குளிர்பானம்போல் குடித்தான்...!
சிறு நேரம் வாந்தி, சிறிது நேரம் தலைச்சுற்றல்
ஆனால் அவன் சாகவில்லை....!
காரணம் மருந்திலும் கலப்படமாம்...!
மற்றொரு முயற்சியாய் மண்ணெண்ணெய்
ஊற்றி முயற்சித்தான் முடிவு வழக்கம் போல்....
உடலில் தீக்காயம்.... மருந்திட
மருத்துவமனைக்கு வந்தான்....!
முதலுதவியின் போதே மூர்ச்சையானான்...
சீரிய சிகிச்சையில் செத்தே விட்டான்...!
காரணம் மருந்திலும் கலப்படமாம்...!
No comments:
Post a Comment