மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு அனைவரையும் இனிதே வரவேற்கிறேன்.
பணம் என்பது நமது அரசாங்கத்தால் அங்கீகாரம் செய்து நம் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு இடையீட்டுக்கருவி ஆகும்.பண்டங்களை பெற மதிப்பீட்டுப்பொருளாகும்.ஒரு பொருளை வாங்கவும் கொடுக்கவும் உரிய மதிப்புடைய பொருளாக பயன்படுகிறது.பேருந்தில் பயணத்திற்கான அத்தாட்சியாக உள்ள ஆதாரமான பயணச்சீட்டைப்போன்று பணமும் அத்தாட்சியான பொருள் ஆகும்.ரிசர்வ் வங்கியின் கடன் பத்திரம் ஆகும்.
அதனால்தாங்க அழுக்கடைந்தாலும்,மதிப்பு குறைவதில்லைங்க.பிணத்தின் மீது கிடந்தாலும்,சாக்கடையில் விழுந்தாலும்,புதைகுழியில் விழுந்தாலும் மதிப்பு மாறாமல் குளிப்பதுமில்லை சுத்தப்படுத்துவதும் இல்லை ஆனால் அப்படியே எயிட்ஸ் இருந்தால் என்ன? தொற்றுநோய் இருந்தால் என்ன? நமது பீரோக்களிலும்,வங்கிகளிலும் பத்திரமாக அடைக்கலம் புகுந்து பாதுகாப்பாக இருக்கிறதுங்க...அதே பணம் மதிப்பு இழந்துவிட்டது?.இனி செல்லாது! என்று ரிசர்வ் வங்கி கூறட்டும்.பிறகு எங்கே பறக்கிறது! என்று எல்லோருக்குமே தெரியும்!?!......
பணம் பற்றிய பொன்மொழிகள்:-
பணம் பந்தியிலே,குணம் குப்பையிலே.-இந்தியா.
பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால், யாருக்கும் உன்னைத் தெரியாது.
-ஸ்மித்.
பணக்காரனாய் சாக வேண்டும் என்பதற்காக வறுமையில் வாழ்வது வடிகட்டிய முட்டாள்தனம்
- ஜீவெனால்.
பணக்காரன் ஆக வேண்டுமா? அதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டியது இல்லை. தேவைகளைக் குறைத்துக் கொள்.
-வீப்பர்.
நாம் பணக்காரர்களாக இருக்க கடமைப்பட்டிருக்கவில்லை. ஆனால் ஒழுக்கமுள்ளவர்களாக இருக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.
-பெர்னார்ட்ஷா.
பணப்பிரச்சனை என்றால், எல்லோரும் ஒரே மதத்தினர்தான்.
- வால்டேர்.
பணம் ஒன்றே வாழ்வின் இலட்சியம் என்றால் அது தவறான வழியிலேதான் தேடப்படும். -ரஸ்கின்.
பணத்திற்குக் கடல் நீரின் குணம் ஒன்று உண்டு. கடல் நீரைக் குடிக்கக் குடிக்கத் தாகம் அதிகமாகும்.
- ஷோப்பன் ஹொபர்.
சிலர் பணத்தை வெறுப்பதாகக் கூறுவர். ஆனால், அவர் வெறுப்பது பிறரிடமுள்ள பணத்தை!
- கோல்ட்டஸ்.
பணம் தலைகுனிந்து பணியாற்றும் அல்லது தலைகுப்புறத் தள்ளிவிடும்.
- ஆலிவர் வெண்டல்.
பணத்தைச் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக ஒழுக்கத்தை விற்று விடாதே.
- தாமஸ் பெயின்.
பணத்தின் உண்மையான மதிப்பு பிறரிடம் கடன் கேட்கும் போதுதான் தெரியும்.
- பிராங்க்ளின்.
பணமும் இங்கித நடவடிக்கையும் ஒரு கனவானை உருவாக்குகின்றன.
- தாமஸ் புல்லர்.
பணத்தை அடிக்கடி குறை கூறுவார்கள். ஆனால் அதை யாரும் மறுப்பதில்லை
- டென்மார்க் பழமொழி.
பணத்தை வைத்திருப்பவனுக்குப் பயம். அது இல்லாதவனுக்குக் கவலை
- பாரசீகப் பழமொழி.
பணமும் மகிழ்ச்சியும் பரம விரோதிகள். ஒன்றிருக்குமிடத்தில் மற்றொன்று இருப்பதில்லை
- ஆஸ்திரேலியாப் பழமொழி.
No comments:
Post a Comment