Thursday, 3 April 2014

2014தேர்தல்-வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு பிரச்சாரம்.

மரியாதைக்குரியவர்களே,
                   வணக்கம். நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் - தமிழ்நாடு.பதிவு எண் ;- 26 / 2013(அரசு பதிவு பெற்ற தன்னார்வ நுகர்வோர் சங்கம்) வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.

                  ''அனைவரும் வாக்களிப்போம் -வலுவான ஜனநாயகம் ''அமைப்போம் என வருகிற 24 - 04 -2014 பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு ஒருவார வாக்காளர்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்த உள்ளோம்.வாக்காளப் பிரச்சாரமானது 
        1)பேட்ஜ் அணிந்து தம் பணியினை செய்தல்.பேட்ஜ் அணிந்தமைக்கான காரணம் கேட்பவர்களிடம்  ''அனைவரும் ஓட்டுப்போடுங்க''.என வாக்காளர் உரிமையினை எடுத்துக்கூறுதல்.
  (2)நோட்டீஸ் பிரச்சாரம் செய்தல்,
 (3)சைக்கிள் பிரச்சாரம் அல்லது மோட்டார்சைக்கிள் பிரச்சாரம் அல்லது தெருமுனை பிரச்சாரம் செய்தல்
,(4)பேருந்துகள் உட்பட வாகனங்களில் நோட்டீஸ் ஒட்டி பிரச்சாரம் செய்தல்,
(5)சத்தியமங்கலம் பேருந்து நிலையம் மற்றும்மலைப்பகுதிகளான  தாளவாடி பேருந்து நிலையம் மற்றும் கடம்பூர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் வாக்காளர் விழிப்புணர்வு பேனர்களை கட்டி அனைவரையும் வாக்களிக்க கோருதல்.
                   என வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு கொடுத்து அனைவரையும் வாக்களிக்க ஆர்வமூட்டி வலுவான ஜனநாயகத்தை அமைக்க முயற்சி செய்வோம்.
                         அதற்கான அனுமதி வாங்கஇன்று (03 - 04 - 2014)காலை சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகம் சென்றோம்.
               சம்பந்தப்பட்ட  தேர்தல் பொறுப்பு அதிகாரிகள் சத்தியமங்கலம் வட்டம் உள்ளடங்கிய பவானிசாகர் சட்டமன்றத்தொகுதி  நீலகிரி பாராளுமன்றத்தொகுதிக்கு உட்பட்டதால்,
                       நீலகிரி பாராளுமன்றத்தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும்  நீலகிரி மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் சென்று அனுமதி பெற வேண்டும் என அறிவுறுத்தினர்.
                 அதன்படி  நாளை காலை (04 -04 - 2014) ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திலிருந்து உதகமண்டலம் சென்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்து அனுமதி வாங்கிவர உள்ளோம்.
                                                           என 
                             சங்க உறுப்பினர்களுக்காக 
                            தகவல்கொடுக்கும் அன்பன்
             

No comments:

Post a Comment