Wednesday 5 November 2014

கலப்படம் தடுப்பிற்கு அரசிற்கு உள்ள கடமைகள்.

மரியாதைக்குரியவர்களே,
                     வணக்கம். 

                நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்..உணவுக்கலப்படம் தடுப்பதில் அரசாங்கத்திற்கு உள்ள கடமைகள் பற்றி காண்போம்.
 (1)உபயோகிப்பாளர்களுக்கு சுகாதாரமான மற்றும் கலப்படமில்லாத உணவுகளையும் , தரமான பொருட்களையும்,நிறைவான சேவையினையும் வழங்கும் பொறுப்பும் கடமையும் அரசாங்கத்திற்கு உள்ளது.
(2)நுகர்வோர் நலன்,உணவு மற்றும் பொதுவிநியோகத்திறை,சுகாதாரத்துறை,தரச்சான்று வழங்கும் துறை,கலப்படம் தடுப்பு பிரிவு உட்பட அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் தனது கடமை மற்றும் பொறுப்பு பற்றிய உணர்வு வேண்டும்.இதுபோன்ற சேவையினை தன் வாழ்நாளில் கிடைத்த வாய்ப்பாக எண்ணி,மக்கள் பணி செய்ய வேண்டும்.
(3)சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய மக்கள் மீதான அக்கறை வேண்டும்.சமுதாயக்கடமை உணர்வு வேண்டும்.
(4)சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறிப்பிட்ட இடைவெளியில் பொருட்களின் தரத்தை சோதிக்க வேண்டும். அவ்வப்போது கண்காணிக்க வேண்டும்.
(5)நாட்டின் சுகாதாரக்குறியீடுகளை கவனத்தில் கொண்டு பொருட்களின் தரத்தை சோதிக்க மாவட்டங்கள் தோறும் அல்லது தேவைக்கேற்ப வட்டங்கள் தோறும் சோதனைக்கூடங்களை நிறுவிஆய்வு மேற்கொள்ள  வேண்டும்.
(6)பேரம் படியாததால் வழக்கு தொடுப்பதை தவிர்த்து - முறைப்படி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(7)குறைபாடுள்ள பொருட்கள் கலப்படம் செய்யப்பட்ட பொருட்கள் கண்டறிந்தால் உடனே வழக்கு தொடுத்து கடும் தண்டனை கொடுக்க வேண்டும்.
(8) நுகர்தலுக்கேற்ப பகிர்தலை சமன்படுத்த வேண்டும்.அதற்கான நியாயமான கடைகளை வணிக நிறுவனங்களை உருவாக்க வேண்டும்.
(9) விருப்பப்படும் அரசு சாரா தன்னார்வ  அமைப்புகளுக்கு உரிய ஊக்கமளித்து சமூகப்பணியாற்ற அனுமதி கொடுக்க வேண்டும்.
(10) உணவு மற்றும் பொருட்கள் பற்றிய தரச்சான்று முத்திரைகள் பற்றிய விழிப்புணர்வுக் கையேடு அச்சடித்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். 
(11) கலப்படம் பற்றிய விழிப்புணர்வுப்பிரச்சாரங்கள்,கலைநிகழ்ச்சிகள்,தெருமுனைப்பிரச்சாரங்கள்,துண்டுப்பிரசுரங்கள் அச்சடித்து விநியோகிக்க வேண்டும்.அவ்வாறு செயல்பட ஆர்வமுள்ள அமைப்புகளுக்கு ஆதரவு கொடுத்து ஊக்கமளிக்க வேண்டும்.(எங்களைப்போன்ற ஆர்வலர்களை தடை செய்வது?வருந்தவேண்டிய விசயம்)
 இன்னும் தொடரும் 
என சமுக நலனில் அக்கறையுள்ள 
                                     அன்பன்.......
   

No comments:

Post a Comment