மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
நுகர்வோர் நலன் மற்றும் சாலை பாதுகாப்பு இயக்கம் - வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் (State consumer Disputes Redressal Commission) இதனை மாநில ஆணையம் (State Commission) என்றும் கூறலாம்.
மாநில ஆணையத்தின் அமைப்பு;-
உயர்நீதிபதியாக இருக்கும் ஒருவர் அல்லது உயர்நீதிபதியாக இருந்த ஒருவர் மாநில ஆணையத்தின் தலைவர் ஆவார்.இவரை மாநில அரசு நியமிக்க வேண்டும்.ஆனால் உயர்மன்ற தலைமைநீதிபதியைக் கலந்தாலோசித்துதான் நியமிக்க வேண்டும்.
உறுப்பினர்களில் ஒருவரைப் பெண்மணியாக கொண்டதும் இரண்டிற்கும் குறையாத மற்றும் குறித்துரைக்கப்படலாகும் அத்தகு எண்ணிக்கைக்கும் மிகாத உறுப்பினர்களைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.அவர்கள் குறைந்தபட்ச வயது 35ஆக இருக்க வேண்டும்.இளங்கலைப் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.அதுவும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்று இருக்க வேண்டும்.
அவர்கள் பொருளாதாரம்,சட்டம்,வணிகம்,கணக்குப்பதிவியல்,தொழில்,பொதுவிவகாரம்,அல்லது நிர்வாகம் தொடர்பான பிரச்சினைகளை குறைந்தபட்சம் ஓராண்டு காலத்திற்கு கையாண்ட அனுபவத்தையும்,போதுமான அறிவையும்,திறமை,நேர்மை மற்றும் தகுநிலை உடையவர்களாக இருக்க வேண்டும்.
மரியாதைக்குரிய நண்பர்களே,வணக்கம்.
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் -தமிழ்நாடு - வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.நுகர்வோர் தகராறுகளைத் தீர்த்து வைக்க மூன்றடுக்கு அமைப்புகள் உள்ளன.
அவற்றில் ஒன்று மாவட்ட மன்றம் (District forum) என்னும் நுகர்வோர் தகராறுகளைத் தீர்த்துவைக்கும் மன்றம் (Consumer Disputes Redressal Forum)ஒன்று.இந்த மாவட்ட மன்றம் அடிப்படையானதும்,முதன்மையானதும் ஆகும்.
அமைப்பும்,அதிகார வரம்பும்;-
ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைந்திருக்கும்.மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றத்திற்கு மாவட்ட நீதிபதி (இருக்கிறவர்,இருந்தவர்,இருக்கத் தகுதியுடையவர்)தலைவர் ஆவார்.
அவருக்குக் கீழ் ஒருவரை பெண்மணியாகக் கொண்ட மற்ற இரண்டு உறுப்பினர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு 35 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.ஏதாவது ஒரு இளநிலை பட்டம் ஒன்று அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் பெற்றிருக்க வேண்டும்.அவர்கள் பொருளாதாரம்,சட்டம்,வணிகம்,கணக்குப் பதிவியல்,தொழில்,பொது விவகாரம் அல்லது நிர்வாகம் தொடர்பான பிரச்சினைகளை குறைந்த பட்சம் பத்து ஆண்டுகளாவதுகையாண்ட அனுபவத்தையும்,போதுமான அறிவையும் பெற்று இருக்க இருக்க வேண்டும்.கூடுதலாக திறமை,நேர்மை,மற்றும் தகுநிலை உடையவராக இருக்க வேண்டும்.
மாவட்ட மன்றத்தின் உறுப்பினர்கள் அலுவலகப் பொறுப்பிற்கான ஆண்டுகாலம் ஐந்து ஆண்டுகள் அல்லது 65 வயதுவரை இதில் எது முன்னதாக நிறைவடைகிறதோ அதுவரையில் பொறுப்பில் இருக்கலாம்.
இழப்பீடு தொகை ரூபாய் இருபது இலட்சத்திற்கு மிகைப்படாமல் உள்ள நேர்வில் செய்யப்படும் புகார்களை மாவட்ட மன்றம் விசாரணை செய்வதற்கு அதிகார வரம்பு உடையது ஆகும்.
மதிப்பிற்குரிய நண்பர்களே,வணக்கம்.
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு - வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
1985-ஆம் ஆண்டு ஐ.நா.சபை - U.N.O.
உலக நுகர்வோர் உரிமைகளான
(1)பாதுகாப்பு உரிமை,
(2)தகவல் பெறும் உரிமை,
(3)தேர்ந்தெடுக்கும் உரிமை,
(4)முறையீட்டு உரிமை,
(5)நுகர்வோர் கல்வி பெறும் உரிமை,(நுகர்வோர் உரிமைகள் பற்றிய விவரங்கள் அறியும் உரிமை)
(6)நிவாரணம் பெறும் உரிமை,
(7)சுற்றுச்சூழல் பாதுகாப்பு உரிமை,
(8)அடிப்படைத் தேவைகளுக்கான உரிமை.
ஆகிய எட்டு உரிமைகளை 1985-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 09-ஆம் நாள் அங்கீகரித்து அதன் உறுப்பு நாடுகளுக்கு வழிகாட்டு நெறிகளாக அறிவித்தது.தற்போது சற்றேறக்குறைய 70 நாடுகளின் நுகர்வோர் குழுக்களை ஒருங்கிணைத்து நுகர்வோர் சர்வதேசியம் (Consumers International) அமைப்பு நுகர்வோர் நலன்களை ஐக்கிய நாடுகள் சபையில்(United Nations Organisation) எடுத்துச் சென்று ஒலிக்கிறது.
Consumers International என்னும் நுகர்வோர் சர்வதேசியம் - இதற்கு முன்னதாக நுகர்வோர் சங்கங்களின் சர்வதேச அமைப்பு International Organisation Of Consumer Unions என்ற பெயரில் செயல்பட்டு வந்தது.
மரியாதைக்குரிய நண்பர்களே,வணக்கம்.
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு -வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
இந்த பதிவில் இந்தியாவில் நுகர்வோர் குழுக்கள் விவரங்கள் பற்றி காண்போம்.
1970 களில் இருந்து தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளியில் நுகர்வோர் குழு செயல்பட்டு வந்துகொண்டு இருக்கிறது.அதில் பேராசிரியர் புஷ்பவனம்,திரு.முத்துவேலன்,பேராசிரியர் சீனிவாச நாராயணசாமி,வழக்கறிஞர் மீனாட்சி சுந்தரம், மற்றும் தினமலர் ஆசிரியர் திரு. கிருஷ்ணமூர்த்தி போன்ற பெருமக்கள் நுகர்வோர் குழுவில் ஈடுபட்டு இருந்தனர்.
தென் மாநிலங்களான தமிழ்நாடு,கேரளா,கர்நாடகா,ஆந்திரா ஆகிய மாநிலங்களில் நுகர்வோர் குழுக்கள்கிராம ப்புறங்களிலும் உருவாகி நன்கு செயல்பட்டு வருகின்றன.
இந்தியாவில் இன்று ஆயிரக்கணக்கான நுகர்வோர் பாதுகாப்பு குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்தியாவில் உள்ள அனைத்து நுகர்வோர் குழுக்களை இணைத்து இந்திய நுகர்வோர் குழுக்களின் பேரமைப்பு (confederation of indian consumer organisation ) CICO - சீகோ என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் தமிழ்நாடு நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு FEDCOT - Federation of Consumer Organisations in Tamil Nadu என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.இதை ஆரம்பித்த பெருமக்கள் திரு.தளவாய், திரு.தேசிகன், திரு.ஹென்றி டிஃபேன், திரு.சேவியர், பேராசிரியர் தங்கவேல் மற்றும் சிலராவர்.
மரியாதைக்குரிய நண்பர்களே,வணக்கம்.
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு - வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.
இங்கு நுகர்வோர் உரிமைகள் வளர்ந்த விதம் பற்றி காண்போம்.
தொழிற்புரட்சி ஏற்பட்ட பிறகு தொழில் அமைப்புகளில் மாற்றம் உண்டானது.அதாவது உற்பத்தி பெருக்கமும்,நவீன சந்தை வளர்ச்சியும் வளர்ச்சி அடைந்தது.இந்த கால கட்டத்தில் பொருள்களைப் பயன்படுத்தும் நுகர்வோர்களை வழிநடத்தி,பாதுகாத்து, பொருட்களின் தரம்,அளவு,குணம் எதுவும் குறையாமல் கொடுத்த பணத்திற்கு ஏற்றவாறு நுகர்வோர் பெற்று அனுபவிக்க சில நெறிமுறைகள் தேவைப்பட்டன.இதற்காகத்தான் அமெரிக்காவில் 1899-ஆம் ஆண்டு நுகர்வோர் அமைப்பு உருவாக்கப்பட்டது.
மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் - தமிழ்நாடு - -வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
1899-ஆம் ஆண்டு அமெரிக்காவில் தேசிய நுகர்வோர் அமைப்பு உருவாக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து 1936-ஆம் ஆண்டு டாக்டர் 'கால்ரூ டன் வார்னன்' அவர்கள் அமெரிக்காவில் நுகர்வோர் ஒருங்கமைப்பு என்னும் நுகர்வோர் அமைப்பினை உருவாக்கினார்.இந்நிலையில் அமெரிக்க சனாதிபதி ஜான் எப்.கென்னடி அவர்கள் 1962-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15-ஆம் நாளன்று நுகர்வோர் உரிமைகள் சட்டத்தை அமெரிக்க காங்கிரஸில் நிறைவேற்றினார்.
இங்கு சர்வதேச நாடுகளுக்கான ஐக்கிய நாட்டு சபை அறிவித்துள்ள நுகர்வோர் உரிமைகள் எவை? என காண்போம்.
உலக நுகர்வோர் உரிமைகள் எட்டு.
(1)பாதுகாப்பு உரிமை,
(2)தகவல் பெறும் உரிமை,
(3)தேர்ந்தெடுக்கும் உரிமை,
(4)முறையீட்டு உரிமை,
(5)நுகர்வோர் கல்வி பெறும் உரிமை,(நுகர்வோர் உரிமைகள் பற்றிய விவரங்கள் அறியும் உரிமை)
(6)நிவாரணம் பெறும் உரிமை,
(7)சுற்றுச்சூழல் பாதுகாப்பு உரிமை,
(8)அடிப்படைத் தேவைகளுக்கான உரிமை.
ஆகியன ஆகும்.
மரியாதைக்குரிய நண்பர்களே,வணக்கம்.
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்- தமிழ்நாடு - வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
நுகர்வோரைப் பற்றி பல விசயங்களை அறிந்து கொள்ளும் முன்னர், நுகர்வோர் என்பதன் விளக்கத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். நுகர்வோர் என்பதற்கு விளக்கம்
நுகர்தல் என்பது உயிருள்ளவைகள் ஒவ்வொன்றுக்கும் முக்கியமான ஒன்றாகும்.இயல்பானதானதாகும்.ஆனால் மனிதன் மட்டுமே இயற்கையையும் தனது உழைப்பினால் இயற்கை படைக்கும் பொருட்களையும் நுகரும் ஆற்றல் பெற்றுள்ளான்.
நுகர்வோர் என்ற சொல்லுக்கு விளக்கம்,
(1)சமூக நோக்கத்திலிருந்தும்,
(2) சட்ட நோக்கத்திலிருந்தும்
இரண்டு வகைகளாக கூறலாம்.
(1)கருவறையில் இருக்கும் சிசு முதல் கல்லறைக்குச் செல்ல எதிர் நோக்கியிருக்கும் கிழவர்கள் வரை சாதாரண குடிமக்களிலிருந்து நாட்டின் முதல் குடிமகனான சனாதிபதி வரை சாதி,மத,இன,மொழி,பாலினம்,கட்சி,பொருளாதாரப் பாகுபாடு இன்றி அனைவரும் நுகர்வோரே.அதாவது கருவறை முதல் கல்லறை வரை ஒவ்வொரு மனிதனும் நுகர்வோரே.
(2) சட்டநோக்கில் ஒரு பொருளை அல்லது சேவையை பணம் கொடுத்து சொந்த உபயோகத்திற்காக பெறும் பயனாளிகள் அனைவரும் நுகர்வோரே.
நவீன நுகர்வோரியத்தின் தந்தை "ரால்ப் நாடர்" (Ralph Nader)அவர்கள் 'நுகர்வோர்' என்னும் சொல் 'குடிமகன்' என்னும் சொல்லுடன் சமன்செய்ய வேண்டும். நுகர்வோர் பாதுகாப்புச் சட்டமானது சமூக உரிமைகள் பாதுகாப்பின் ஒரு பகுதியாக கருதப்படவேண்டும் என்கிறார்.
அதாவது மனித சமுதாயம் என்பது மறைந்து நுகர்வோர் சமுதாயமாக மலர வேண்டும்.என்று கூறுகிறார்.
உற்பத்தி பொருட்கள் அனைத்தும் அடையும் இலக்கு நுகர்வோரே.அவர்களை நோக்கில் கொண்டே அவை தயாரிக்கப்படுகின்றன.எனவே உற்பத்தியாளர்களின் நலனிற்கு எப்பொழுது முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனில்,அவர் நுகர்வோரை மேம்படுத்துவதற்கு அவசியமானவற்றை செய்யும்போதுதான் என்பது அறிஞர் ஆடம் ஸ்மித் அவர்களது கூற்று ஆகும்.
பொருட்களை மீண்டும் விற்பதற்காகவோ,வணிக நோக்கிற்கோ வாங்குபவர் மற்றும் இன்றைய நிலையில் இலவச சேவைகள், ஒப்பந்தத்தின்கீழ் செய்யப்படும் பிரத்யேக தனிநபர் சேவைகள் ஆகியவற்றைப் பெறுபவர் நுகர்வோர் ஆக மாட்டார்.
அன்பார்ந்த நண்பர்களே,வணக்கம்.
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும்சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு- வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் உடல் நலக்குறைவு ஏற்படுவது இயல்பான ஒன்றாகும்.நோயின் தன்மைக்கேற்ப தகுந்த மருத்துவரை நாடி ஆலோசனை பெற்று அதன்படி நடப்பதுதான் சிறந்த மற்றும் பாதுகாப்பான முறை ஆகும். ஆனால் நாம் மருந்துக் கடைக்கு சென்று நமது நோயின் தன்மை அல்லது வலியின் வீரியத்தை மருந்துக்கடை ஊழியரிடம் கூறி தன் விருப்பம்போல ஆங்கில மருந்துகளை வாங்கி சாப்பிட்டு நோயைத் தணிக்கிறோம்.
அதற்கு முன்பாக சில ஆலோசனைகள் உங்களுக்காக;-
நாம் பிறக்கும்போதே இறப்பும் நிச்சயிக்கப்பட்டு விடுகிறது.ஆனால் இறப்பு தேதி எப்போது எனத் தெரியாது!?!. ஆனால் மருந்துகளுக்கோ அவை பிறக்கும்போதே அதாவது தயாரிக்கும்போதே அவைகளின் மரணத் தேதியும் தீர்மானிக்கப்படுகிறது.
மருந்தின் வீரியம் என்பது அதன் வாழ்நாளையும்,அது எப்படி பாதுகாக்கப்படுகிறது என்பதைப் பொறுத்தே! என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
சில மருந்துகள் கனிம வேதிப்பொருட்களால் ஆனவை.எனவே அவை நெடுங்காலம் சிதையாமல் இருக்கலாம்.ஆனால் பெரும்பாலான மருந்துகள் கரிம வேதிப்பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன.கரிம வேதிப்பொருட்களால் ஆன மருந்துகள் வெப்பம்,உப்புத்தன்மை,ஈரத்தன்மை,போன்றவற்றால் பாதிக்கப்பட்டு சிதைவுறும் வாய்ப்புகள் அதிகம்.அதோடு ஒளி,உலோக அழுக்குகள்,ஆக்ஸிஜன்,ஆக்ஸிகரணிகள் போன்றவை எளிதில் சிதைத்து அதிக பாதிப்புக்கு ஆளாகுகின்றன.அதுமட்டுமல்ல,மருந்துகள் சிதைய மிக மிகச் சிறிய ஆக்ஸிஜன் அல்லது உலோக அயனி கூட போதுமானது.
எனவே,மருந்தை தயாரிக்கும்போதே அதன் வீரியம்,தரம் மற்றும் தூய்மையை நிர்ணயித்து மருந்தின் வாழ்நாள் அல்லது காலாவதியாகும் தேதியை முன்கூட்டியே தீர்மானம் செய்து,அதனை மருந்தின் மேலுறையில் குறிப்பிட வேண்டியது அவசியம்.
மருந்தின் மேலுறையில் குறிக்கப்படும் மருந்தின் ஆயுட்காலம் என்பது அலமாரிக்குள் பாதுகாப்பாக,திறக்காத கொள்கலத்தில் மருந்து உள்ள காலம் அதாவது மருந்துக்கடையில் பாதுகாப்பாக வைக்கபட்டுள்ள காலத்தையே குறிக்கிறது. நுகர்வோர் வீட்டிற்கு வாங்கி வந்த பிறகு அல்ல.
பொதுவாக மருந்துகள் கெடாமல் இருக்க ஒளி புகாத பெட்டிக்குள் அடைக்கப்பட வேண்டும்.எனவேதான் வெப்பத்தால் சிதைவுறும் மருந்துகள் கரும்பழுப்பு நிறப் பாட்டில்களில் அடைக்கப்படுகின்றன.நம் வெப்பமண்டல சீதோஷ்ண நிலை மருந்துகளை எளிதில் சிதைவுறச் செய்கிறது. எனவே குளிர்சாதனப்பெட்டிக்குள் வைக்க வேண்டும்.அடிக்கடி மூடித் திறந்தால் குறிப்பிட்ட ஆயுளைவிடக் குறைந்த காலத்திலேயே கெட்டுவிடும்.
கண் மற்றும் காது சொட்டு மருந்துகள் 10மி.லி.பாட்டில்களில் இருக்கும். அவற்றை மூடியைத் திறந்த 30 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும் என்ற எச்சரிக்கைக் குறிப்பும் அதில் குறிப்பிட்டு இருக்கும். எனவே மூடியைத் திறந்த முப்பது நாட்களுக்குள் பயன்படுத்திவிட்டு தூக்கி எறிய வேண்டும். ஆனால் நம்மில் பெரும்பாலானோர் அதனைப் பத்திரப்படுத்தி ஆறுமாத காலத்திற்கு பயன்படுத்துகிறோம்.அதனை நமது சுற்றுப்புறத்தில் உள்ள நண்பர்களுக்கும் ,உறவினர்களுக்கும் கொடுக்கிறோம்.
பாராசிட்டாமால் காய்ச்சலுக்கு கொடுக்கப்படும் மருந்து.இந்தியாவில் கிட்டத்தட்ட பதினெட்டு கம்பெனி பெயர்களில்விற்பனைக்கு வருகிறது பாராசிட்டாமால் மருந்து. பாராசிட்டாமால் உட்கொண்ட பிறகு வயிற்றுப்பிரச்சினையையோ,அல்சர் எனப்படும் குடல் புண்களையோ உண்டாக்குவதில்லை.மாறாக நேரடியாக மைய நரம்பு மண்டலத்தின் மேல் ஆதிக்கம் செலுத்துகிறது.மைய நரம்பு மண்டலம் என்பது மூளையும் முதுகுத் தண்டுவடமும் ஆகும்.நரம்பு மண்டலத்தின் விரிவாக்கம் பின்னர் பதிவிடப்படும்.
நன்றிங்க!
தகவல்-
திருமிகு. பேரா.மோகனா அம்மையார் அவர்கள் -
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.
பழனி.
அன்பார்ந்த நண்பர்களே,வணக்கம்,
நுகர்வோர் நலன் மற்றும் சாலை பாதுகாப்பு இயக்கம் - ( consumer welfare and road safety organisation - Tamil nadu ) வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
இந்த இடுகையில் சமச்சீர் உணவு பற்றி காண்போம்.
சரிவிகித உணவு என்பது தினமும் நாம் உண்ணும் உணவில் இருந்து நமது உடலுக்குத்தேவையான சக்தியில்-
கார்போஹைட்ரேட் 60 முதல் 70 சதமும்,
புரோட்டீன் 10முதல் 20சதமும்,
கொழுப்பு 20முதல் 25 சதமும்
கிடைக்க வேண்டும்.
நார்ச்சத்தும்,வைட்டமின்களும்,தாதுப்பொருட்களும் உடலுக்கு சக்தியைத் தராவிட்டாலும் உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு பெரிதும் துணைபுரிகின்றன.ஆதலால் இவைகளும் சரிசம அளவில் இருக்க வேண்டும்.
சூரிய ஒளி,காற்று,தண்ணீர்,நடைப் பயிற்சி மற்றும் சரியான ஓய்வு இவைகள் ஆறும் நமக்கு செலவில்லாத இலவச மருத்துவர்கள்.
காற்றில்
அன்புள்ள நண்பர்களே,
வணக்கம்.
நுகர்வோர் நலன் மற்றும் சாலைப்பாதுகாப்பு இயக்கம் -
(consumer welfare and road safety organisation-tamil nadu )
வலைப்பக்கத்திற்கு பார்வையிட தங்களை இனிதே வரவேற்கிறோம்.இந்த இடுகையில் நார்ச்சத்துகள் பற்றி சிறிது காண்போம்.
நார்ச்சத்துக்கள் இருவகைப்படும்.அவை
(1)நீரில் கரையும் நார்ச்சத்துக்கள்
(2) நீரில் கரையாத நார்ச்சத்துக்கள்
(1) நீரில் கரையும் நார்ச்சத்துக்கள் (soluble fiber) இரத்தத்தில் உள்ள கொழுப்பினைக் குறைத்து இரத்தத்தின் பிசுபிசுப்புத்தன்மையை தடுக்கிறது. இதனால் இரத்தக்குழாய் அடைப்பு ஏற்படாமல் சீரான ரத்த ஓட்டம் நடைபெறும்.இதனால் இரத்த அழுத்த வியாதி வராது.இதய நோய் வராது. இரத்தத்தின் சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படுகிறது.
(2) நீரில் கரையாத நார்ச்சத்துக்கள் (Insoluble fiber ) குடலினுள் அதிக நீரை கிரகித்து செரிமான மண்டலத்தின் வேலையை எளிதாக்கி உணவின் செரிமானத்தைத் தூண்டுகின்றன.மலச்சிக்கல் வராமல் தடுக்கின்றன.
இரைப்பை மற்றும் சிறுகுடல் பகுதியில் உள்ள கார்போஹைட்ரேட் சத்து குளுகோஸாக மாற்றும் வேகத்தைக் குறைக்கின்றன. இதனால் உடலில் அதிக அளவு கொழுப்பு மற்றும் சர்க்கரை சேர்வது குறைக்கப்படுகின்றன.மேலும்,
பித்த உப்புகள் (Bile salt) கொழுப்பு போன்றவற்றை உட்கிரகிக்கவிடாமல் தடுக்கின்றன.இதனால் அஜீரணக் கோளாறு மற்றும் குடல் புண் உருவாகாமல் தடுக்கப்படுகின்றன.
நீரில் கரையாத நார்கள் அதிக அளவு நீரை உட்கிரகிப்பதால் தேவையற்ற நச்சுப்பொருட்களை எளிதாக மலத்துடன் வெளியேற்றுகின்றன.
ஜீரண மாற்றங்கள் அதாவது மாவுப்பொருட்கள் சர்க்கரையாக மாற்றப்பட்டு பிறகு அது புரதம்,அமினோ அமிலங்கள்,கொழுப்பு அமிலம்,கிளிசராக மாற்றம் அடைகின்றன. இத்தகைய மாற்றத்தை சீராக செயலாற்ற உதவுகின்றன.
சராசரியாக ஒரு மனிதனுக்கு தினசரித்தேவை 28கிராமிலிருந்து 35 கிராம் வரை நார்ச்சத்துகள் தேவைப்படுகின்றன.
நார்ச்சத்துகள் உள்ள உணவுப்பொருட்கள்;-
தீட்டப்படாத அரிசி,கோதுமை,பார்லி,கீரைகள்,பழங்கள்,பசுமையான காய்கறிகள்,பச்சை கேரட்,கடலை,பட்டாணி,ஆப்பிள்,ஆரஞ்சு,கொட்டையில்லாத சாறு உள்ள பழங்கள்,பேரீக்காய்,அத்திப்பழம்,கொடிமுந்திரி,வெள்ளரி,வெங்காயம்,தக்காளி இவைகளில் நார்ச்சத்துகள் உள்ளன.
பதிவேற்றம்
C.பரமேஸ்வரன்- அரசுப் பேருந்து ஓட்டுநர்
தாளவாடி - ஈரோடு மாவட்டம்.