Tuesday 30 April 2013

நுகர்வோர் என்பவர் யார்?

மரியாதைக்குரிய நண்பர்களே,வணக்கம்.

       நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்- தமிழ்நாடு -  வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
         நுகர்வோரைப் பற்றி பல விசயங்களை அறிந்து கொள்ளும் முன்னர், நுகர்வோர் என்பதன் விளக்கத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். நுகர்வோர் என்பதற்கு விளக்கம் 
நுகர்தல் என்பது உயிருள்ளவைகள் ஒவ்வொன்றுக்கும் முக்கியமான ஒன்றாகும்.இயல்பானதானதாகும்.ஆனால் மனிதன் மட்டுமே இயற்கையையும் தனது உழைப்பினால் இயற்கை படைக்கும் பொருட்களையும் நுகரும் ஆற்றல் பெற்றுள்ளான்.
     நுகர்வோர் என்ற சொல்லுக்கு விளக்கம்,
      (1)சமூக நோக்கத்திலிருந்தும்,
    (2) சட்ட நோக்கத்திலிருந்தும் 
     இரண்டு வகைகளாக கூறலாம்.
                 (1)கருவறையில் இருக்கும் சிசு முதல் கல்லறைக்குச் செல்ல எதிர் நோக்கியிருக்கும் கிழவர்கள் வரை சாதாரண குடிமக்களிலிருந்து நாட்டின் முதல் குடிமகனான சனாதிபதி வரை சாதி,மத,இன,மொழி,பாலினம்,கட்சி,பொருளாதாரப் பாகுபாடு இன்றி அனைவரும் நுகர்வோரே.அதாவது கருவறை முதல் கல்லறை வரை  ஒவ்வொரு மனிதனும் நுகர்வோரே.
          (2) சட்டநோக்கில் ஒரு பொருளை அல்லது சேவையை பணம் கொடுத்து சொந்த உபயோகத்திற்காக பெறும் பயனாளிகள் அனைவரும் நுகர்வோரே.
   
          நவீன நுகர்வோரியத்தின் தந்தை "ரால்ப் நாடர்" (Ralph Nader)அவர்கள் 'நுகர்வோர்' என்னும் சொல் 'குடிமகன்' என்னும் சொல்லுடன் சமன்செய்ய வேண்டும். நுகர்வோர் பாதுகாப்புச் சட்டமானது சமூக உரிமைகள் பாதுகாப்பின் ஒரு பகுதியாக  கருதப்படவேண்டும் என்கிறார்.
    அதாவது மனித சமுதாயம் என்பது மறைந்து நுகர்வோர் சமுதாயமாக மலர வேண்டும்.என்று கூறுகிறார். 

   உற்பத்தி பொருட்கள் அனைத்தும் அடையும் இலக்கு நுகர்வோரே.அவர்களை நோக்கில் கொண்டே அவை தயாரிக்கப்படுகின்றன.எனவே உற்பத்தியாளர்களின் நலனிற்கு எப்பொழுது முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனில்,அவர் நுகர்வோரை மேம்படுத்துவதற்கு அவசியமானவற்றை செய்யும்போதுதான் என்பது அறிஞர் ஆடம் ஸ்மித் அவர்களது கூற்று ஆகும்.

         பொருட்களை மீண்டும் விற்பதற்காகவோ,வணிக நோக்கிற்கோ வாங்குபவர் மற்றும் இன்றைய நிலையில் இலவச சேவைகள், ஒப்பந்தத்தின்கீழ் செய்யப்படும் பிரத்யேக தனிநபர் சேவைகள் ஆகியவற்றைப் பெறுபவர் நுகர்வோர் ஆக மாட்டார். 


No comments:

Post a Comment