Thursday 26 December 2013

நெகிழி(பிளாஸ்டிக்)பொருட்களை தவிர்ப்போம்-சுற்றுச்சூழலை காப்போம்.

  
Avoid plastic items - save environment
 மரியாதைக்குரியவர்களே,
                   வணக்கம்.
          நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை வரவேற்கிறோம்.
   நெகிழி தவிர்ப்போம் கோஷங்கள்...
 (1)உலக நன்மையை நினைப்போம்,
(2)இயற்கை வளங்களே தெய்வம்,
(3)வனங்களே பூமியின் நுரையீரல்,
(4)நெகிழி தவிர்ப்போம் கெடுதி தவிர்ப்போம்,
(5)வனம் அழிந்தால் மனித இனம் அழியும்,
(6)சுற்றுச்சூழலுக்கு உற்ற நண்பனாக இருப்போம்,
(7)துணிப் பைகள் மற்றும் காகிதப் பைகளை பயன்படுத்துவோம்,
(8)பிளாஸ்டிக் எனப்படும் நெகிழி பைகளை தவிர்ப்போம்,
(9)சுற்றுச்சூழல் பற்றிய சிந்தனை கொள்வோம்,
(10)தவிர்-குறை-மீண்டும் பயன்படுத்து-மறுசுழற்சிக்கு உட்படுத்து
(11)தாவரங்களே  காற்றை சுத்தம் செய்பவை,
(12)மரம் தன் வாழ்நாளில் ஆயிரம் கிலோ கார்பன்-டை-ஆக்ஸைடு வாயுவை இழுத்துக்கொண்டு அதே அளவு ஆக்ஸிஜன் வாயுவை வெளியிடுகின்றன,
(13)சாக்கடையை குப்பைத்தொட்டி ஆக்காதீர்,
(14)பூமியை மாசு படுத்தாமல் அடுத்த தலைமுறைக்கு விட்டுச்செல்வோம்,
(15)நாகரீகத்திற்கான நெகிழி பயன்பாடு-நீண்டகால கெடுதி வரும் பாரு,
(16)பிளாஸ்டிக் என்பது அழகானது-வீசி எறிந்தால் விஷமாகும்,
(17)துணிப்பை என்பது எளிதானது-தூக்கி எறிந்தால் உரமாகும்,
(18)நெகிழி பொருட்களை எரிக்காதீர் நச்சு(டையாக்சின்) வாயுவை பரப்பாதீர்,
(19)நெகிழி பொருட்களை வீசி எறிந்தால்-காற்று,மண்,நீர் வன வளம் பாதிக்கும்.
(20)துணிப் பை மற்றும் காகிதப் பைகளை பயன்படுத்துவோம்.

No comments:

Post a Comment