Avoid plastic items - save environment
மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
''நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு'' வலைப்பக்கத்திற்கு தங்களை வரவேற்கிறோம்.
நெகிழி (பிளாஸ்டிக்) பொருட்களை தவிர்ப்போம்-சுற்றுச்சூழலை காப்போம் என-
தமிழ்நாடு அரசு வனத்துறை (சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்), அரிமா சங்கம் சத்தியமங்கலம் நகரம், காமதேனு கலை அறிவியல் கல்லூரி சத்தியமங்கலம், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் இணைந்து நடத்தும் பொதுமக்களுக்கான மூன்று நாட்கள் விழிப்புணர்வு இயக்கத்தின்
முதல் நாளான இன்று (27-12-2013) தேசிய நுகர்வோர் தினத்தையும் கடைப்பிடித்து காமதேனு கலை அறிவியல் கல்லூரி மாணவ,மாணவியர்களின் பேரணி நடைபெற்றது.
முன்னதாக சமூக சேவை இயக்கத்தின் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு திருமிகு, S.சண்முகம் அவர்கள்,வனச்சரக அலுவலர் (சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்)- தலைமை வகித்து சிறப்புரை நிகழ்த்தினார்.
மரியாதைக்குரிய ஐயா, அரிமா S.K.பொன்னுசாமி அவர்கள்,தலைவர் அரிமா சங்கம்,சத்தி நகரம்,மற்றும்
திருமிகு P.அருந்ததி B.E.M.S.,அம்மையார் அவர்கள்,செயலர்,காமதேனு கலை அறிவியல் கல்லூரி, சத்தியமங்கலம்,
திருமிகு.A.A.ராமசாமி அவர்கள்,தலைவர், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு. ஆகிய சான்றோர்கள் முன்னிலை வகித்தனர்.
அரிமா K.லோகநாதன் (லோகு ஹெவி டிரைவிங் ஸ்கூல்-சத்தி) அவர்கள் ,ஒருங்கிணைப்பாளர் அனைவரையும் வரவேற்றார்,
மரியாதைக்குரிய ஐயா, அரிமா S.K.பொன்னுசாமி (S.P.S) அவர்கள் ,தலைவர் ,அரிமா சங்கம்,சத்தி நகரம் துவக்கவுரை நிகழ்த்தினார்.
திரு.C.பரமேஸ்வரன் அவர்கள்,செயலாளர்,(நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு) ,இன்று தொடங்கி நடைபெறும் மூன்று நாட்களின் செயல்களின் திட்ட விளக்கவுரை நிகழ்த்தினார்.
( குறிப்பு;மூன்று நாட்கள் இயக்கத்தில் இரண்டாம் நாளன்று
சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
அதாவது ஆசனூர் களப்பணிக்கு பதிலாக தாளவாடி வனச்சரகம் கொங்கள்ளி வனப்பகுதியின் களப்பணிக்கு செல்லும் வண்ணம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.அதேபோல அச்சுப்பிழை பற்றி கூறும்போது, நிகழ்ச்சி நிரல் ''திட்ட அறிக்கை'' பிரசுரத்தில் திருமிகு.P.பாரி அவர்கள் மாவட்ட வன அலுவலர் அவர்கள்-ஆசனூர் மாவட்ட வன அலுவலர் என்பதற்கு பதிலாக சத்தியமங்கலம் மாவட்ட வன அலுவலர் என அச்சுப்பிழை நேர்ந்துள்ளதை சுட்டிக்காட்டி வருத்தம் தெரிவித்தார். )
சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.
அனைவரும் ஒருமித்த கோஷத்துடன் கீழ்கண்டவாறு அதாவது,'' நெகிழி என்னும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்போம்,பாலித்தீன் பைகளை தவிர்ப்போம்,துணிப் பைகளையும்,காகிதப் பைகளையும் பயன்படுத்துவோம். மழைநீர்த்தொட்டி அமைப்போம்,நிலத்தடிநீர் சேமிப்போம், என்று உறுதிமொழி ஏற்றனர்.
திருமிகு.அரிமா S.V.சிவசங்கர் அவர்கள்,செயலாளர்,அரிமா சங்கம் சத்தி நகரம் ,நோட்டீஸ் பிரச்சாரத்தை துவக்கி வைத்தார்.
உதவிப் பேராசிரியர்,T.சரவணன்,M.Com.,M.Phil.,அவர்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் ,குடிமக்கள் நுகர்வோர் மன்றம்,(காமதேனு கலை அறிவியல் கல்லூரி-சத்தியமங்கலம்) நன்றி கூறினார்.
திருமிகு.S.சண்முகம் அவர்கள்,(சத்தியமங்கலம் வனச்சரக அலுவலர்) மற்றும் அரிமா S.K.பொன்னுசாமி அவர்கள்,தலைவர்,(அரிமா சங்கம்,சத்தி நகரம் ) கல்லூரி மாணவ,மாணவியரின் பேரணியை துவக்கி வைத்தனர்.
நுகர்வோர் தின விழிப்புணர்வு பேரணி பேனர்.உதவி பேராசிரியர் .T.சரவணன் அவர்களின் வழிகாட்டுதலில் பின்தொடரும் மாணவர் பேரணி........
''நெகிழி (பிளாஸ்டிக்) பொருட்களை தவிர்ப்போம்
சுற்றுச் சூழலைகாப்போம்''
பேனர் ஏந்திய மாணவர்கள் உற்சாகக் காட்சி.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-ஈரோடு மாவட்டத்தின் பொறுப்பாளர்களில் ஒருவரும்,புகைப்பட வல்லுனருமான ,அறிவியல் வேலுமணி அவர்கள். பேரணியில் கலந்து மாணவ,மாணவியரை ஊக்குவித்த காட்சி.....
பேரணியில் இருநூற்றைம்பது மாணவ,மாணவியர்கள்,துணை முதல்வர் மற்றும் பேராசிரியர்கள்,கல்லூரி நிர்வாகம்,அரிமா சங்கம் , நுகர்வோர் பாதுகாப்பு & சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு கலந்து கொண்டனர்.காவல் துறை நண்பர்கள் சிறப்பான பாதுகாப்பு கொடுத்து உதவியது போற்றத்தக்கது.
விழிப்புணர்வுப் பேரணியானது சத்தியமங்கலம் மாவட்ட வன அலுவலகம் (சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்) முன்பு தொடங்கி மத்திய பேருந்து நிலையம்,வட்டாட்சியர் அலுவலகம்,நகராட்சி அலுவலகம், சத்தி உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்,பவானிஆற்றுப்பாலம்,நெடுஞ்சாலைத்துறை அலுவலகம்,,தினசரிச்சந்தை,வழியாக சத்தியமங்கலம் அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளி முன்பு நிறைவடைந்தது.பேரணியில் நுகர்வோர் விழிப்புணர்வு கோஷங்களும்,நெகிழி தவிர்ப்போம்-சுற்றுச்சூழல் காப்போம் விழிப்புணர்வு கோஷங்களும் வாசக அட்டைகளாகவும்,குரலொலி கொடுத்தும் சென்றனர்.விழிப்புணர்வு பிரசுரமும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
பதிவேற்றம்,
பரமேஸ்வரன் C,
செயலாளர்,
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும்
சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.
No comments:
Post a Comment