Avoid plastic items - save environment
மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை வரவேற்கிறோம்.
''நெகிழி (பிளாஸ்டிக்) பொருட்களை தவிர்ப்போம்
சுற்றுச்சூழலை காப்போம்''
என மூன்று நாட்கள் சமூக சேவை இயக்கத்தின்
(முதல் நாள் நிகழ்வு விவரம் 26-12-2013 தேதியிட்ட முந்தைய பதிவில் காண்க)
இரண்டாவது நாளான 28-12-2013 சனிக்கிழமை அன்று
திரு.C.பரமேஸ்வரன் அவர்கள் செயலாளர்,(நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு) தலைமையில், காமதேனு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் தாளவாடி மலைப்பகுதிக்குட்பட்ட கொங்கள்ளி கோவில் வனப்பகுதியில் வன விலங்குகள் நிறைந்த அடர்ந்த மற்றும் ஆபத்தான வனப்பகுதியில் நெகிழி (பிளாஸ்டிக்) குப்பைகளை அகற்றும் களப்பணிக்காக இரண்டு நாட்கள் முகாமிட்டு சேவை புரிய...............
சத்தியமங்கலம் பேருந்து நிலையத்திலிருந்து காலை 8-05 மணிக்கு தாளவாடிக்கு புறப்பட்ட அரசு பேருந்தில் (தாளவாடி கிளை) சத்தியமங்கலம் - காமதேனு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் பயணித்த காட்சி....
திரு.T.V.ஆனந்த நாராயணன் அவர்கள் - காமதேனு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் அனைவரையும் தாளவாடி பேருந்து நிலையத்தில்வரவேற்றார்.அருகில் திரு.V.பாலமுருகன் அவர்கள்,பொருளாளர்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் தமிழ்நாடு.
திரு.T.V.ஆனந்த நாராயணன் அவர்களும்,மனித உரிமைக்கழக இளைஞர் அணி செயலர் அவர்களும் தாளவாடி ஸ்ரீஅன்னலட்சுமி உணவகத்தில் காமதேனு கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கிய காட்சி........
மரியாதைக்குரிய குமாரசாமி ஐயா அவர்கள்,திரு.A.பாபு அவர்கள் தலைமையில்,திரு.T.V.ஆனந்த நாராயணன் அவர்கள் முன்னிலையில் தாளவாடியில் நடந்த வரவேற்புக் கூட்டத்தில் நெகிழி (Plastic) குப்பைகளை அகற்றும் களப்பணி ஆற்ற வருகை தந்துள்ள காமதேனு கலை அறிவியல் கல்லூரி மாணவர்களின் சேவை மனப்பான்மையை பாராட்டி வரவேற்ற காட்சி...
மரியாதைக்குரிய A.பாபு அவர்கள் தலைமையில்,மரியாதைக்குரிய T.V.ஆனந்த நாராயணன் அவர்களும்,திரு.குமாரசாமி ஐயா அவர்களும் நெகிழி (Plastic) பொருட்களின் தீங்குகள் பற்றிய நோட்டீஸ் பிரச்சாரத்தை துவக்கிய காட்சி ..இடம் தாளவாடி பேருந்து நிலையம்.
மரியாதைக்குரிய A.பாபு அவர்களும்,மரியாதைக்குரிய T.V.ஆனந்த நாராயணன் அவர்களும்,திரு.குமாரசாமி ஐயா அவர்களும் நெகிழி (Plastic) பொருட்களின் தீங்குகள் பற்றிய பிரசுரத்தை படித்தபோது....இடம் தாளவாடி பேருந்து நிலையம்.
மரியாதைக்குரிய,குமாரசாமி ஐயா அவர்கள்,(தன்னார்வலர்) பிளாஸ்டிக் குப்பைகளை அப்புறப்படுத்தும் களப்பணி ஆற்ற உள்ள மாணவர்களுக்கு வரவேற்புரை வழங்கிய காட்சி....
திரு.K.சிவக்குமார் அவர்கள்,துணை தலைவர்,(பையனாபுரம் ஊராட்சி மன்றம் ) கொங்கள்ளி கோவில் வளாகத்தில் மாணவர்கள் முகாமிட்டிருந்த விடுதி முன்பு மாணவர்களுக்கு வாழ்த்துரை மற்றும் வழிகாட்டுரை வழங்கிய காட்சி..அருகில் வனத்துறையை சேர்ந்த திரு.Rதுண்டையன் வனவர்(FORESTER) அவர்கள்,திரு.M.ஜெகநாதன் வனக்காப்பாளர்(FOREST GUARD) அவர்கள்,வேட்டை தடுப்புக் காவலர்களான (FOREST WATCHERS) திரு,D.காளே கவுடா, P. சிவமல்லு ஆகிய வனத்துறையினருடன் மற்றும் தன்னார்வலரும்,வனத்துறையின் ஈப்பு (JEEP) வாகன முன்னாள் ஓட்டுனர் திரு.குமாரசாமி அவர்களும்..
திரு.K.சிவக்குமார் துணை தலைவர் அவர்கள்(பையனா புரம் ஊராட்சி மன்றம்) தலைமையில் மரியாதைக்குரிய M.ஜெகநாதன் வனக்காப்பாளர் அவர்கள் வன விலங்குகள் நிறைந்த அடர்ந்த வனப்பகுதியான இங்கு (கொங்கள்ளி) வசிக்கும் புலிகள்,காட்டு எருமைகள்,யானைகள்,கரடிகள்,மலைப் பாம்புகள்,கொடிய விஷமுள்ள பூச்சிகள் போன்ற வனவிலங்குகளின் குணம் பற்றியும் நம்முடைய பாதுகாப்பு பற்றியும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய காட்சி..அருகில் மரியாதைக்குரிய R.துண்டையன் வனவர்(FORESTER) அவர்களும், மரியாதைக்குரிய, D.காளே கவுடா., P.சிவமல்லு வேட்டை தடுப்புக்காவலர்கள் (FOREST WATCHERS) இருவரும்.....
திரு.K.சிவக்குமார் அவர்கள்,துணை தலைவர்,பையனாபுரம் ஊராட்சி மன்றம் அவர்கள் மற்றும் வனத்துறையை சேர்ந்த திரு.R.துண்டையன் வனவர்(FORESTER) அவர்களும், திரு.M.ஜெகநாதன் வனக்காப்பாளர்(FOREST GUARD) அவர்களும் ,கொங்கள்ளி வனப்பகுதியில் நெகிழி (PLASTIC) குப்பைகளை அப்புறப்படுத்தும் களப்பணியை துவக்கி வைத்த காட்சி...
மரியாதைக்குரிய M.R.சுப்பண்ணன் அவர்கள்,(கிராம வனக்குழு தலைவர்,கெட்டவாடி வனக் கிராமம்) கொங்கள்ளி கோவிலில் முகாமிட்டிருந்த விடுதியில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கி களப்பணியை ஊக்குவித்த காட்சி.
(கவனிக்கவும்;- மரியாதைக்குரிய M.R.சுப்பண்ணன் அவர்கள், தலைவர்,கெட்டவாடி கிராமத்தின் வனக் குழு அவர்கள் -மாணவர்களின் இரண்டு நாட்கள் உணவுக்கான செலவினை ஏற்றுக்கொண்டு உதவி செய்தமை சமூகம் போற்றும் உன்னத நிகழ்வாகும்)
மரியாதைக்குரியR.துண்டையன் வனவர் (FORESTER) அவர்களின் பாதுகாப்பிற்கான அறிவுரைப்படி வன விலங்குகள் நிறைந்த அடர்ந்த கொங்கள்ளி வனப்பகுதியில் மாணவர்கள் தீவிரமாக களப்பணி ஆற்றிய காட்சி....
மரியாதைக்குரிய .R.துண்டையன் ,வனவர் (FORESTER) அவர்களது மேற்பார்வையில்,திரு.M.ஜெகநாதன் வனக்காப்பாளர்(FOREST GUARD) அவர்கள்,வேட்டை தடுப்புக் காவலர்களான (FOREST WATCHERS) திரு,D.காளே கவுடா, P. சிவமல்லு ஆகிய வனத்துறையினரின் பாதுகாப்புடன் கல்லூரி மாணவர்கள் அடர்ந்த விலங்குகள் நிறைந்த வனப்பகுதியிலிருந்து பிளாஸ்டிக் குப்பைகளை அப்புறப்படுத்தும் காட்சி....
திரு.V.ராஜன் அவர்கள் துணை செயலாளர்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு அவர்களும்,பணியாளர் சம்மேளனம்,தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்-ஈரோடு மண்டலம்,நிர்வாகிகளும் காமதேனு கலை அறிவியல் கல்லூரி மாணவர்களின் களப்பணி புரியும் கொங்கள்ளி கோவில் வனப்பகுதிக்கே வேனில் வருகை தந்து கல்லூரி மாணவர்களின் சமூக சேவையினை பாராட்டி ஊக்குவித்த காட்சி....
திரு.V.ராஜன் அவர்கள் துணை செயலாளர்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு அவர்களும்,பணியாளர் சம்மேளனம்,தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்-ஈரோடு மண்டலம்,நிர்வாகிகளும் காமதேனு கலை அறிவியல் கல்லூரி மாணவர்களின் களப்பணியை பாராட்ட வருகை தந்த காட்சி........
பதிவேற்றம்;-
பரமேஸ்வரன்.C
செயலாளர்,
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும்
சாலை பாதுகாப்பு சங்கம்-
தமிழ்நாடு.பதிவு எண்;26/2013
தொடர்புக்கு;-
#9486708475, மற்றும் #9442819031, மற்றும் #9443021196, மற்றும் #9585600733 .
No comments:
Post a Comment