Sunday 29 December 2013

நெகிழி (பிளாஸ்டிக்) பொருட்களை தவிர்ப்போம் சுற்றுச்சூழலை காப்போம்29-12-2013


Avoid plastic items - save environment
மரியாதைக்குரியவர்களே,
                             வணக்கம்.நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.

  (முதல் நாள் நிகழ்வு விவரம் 26-12-2013 தேதியிட்ட முந்தைய பதிவில் காண்க)
                  "நெகிழி (பிளாஸ்டிக்) பொருட்களை தவிர்ப்போம் 
                                      சுற்றுச்சூழலை காப்போம்" மூன்று நாட்கள் விழிப்புணர்வு இயக்கம் தமிழ்நாடு ,கர்நாடகா ,கேரளா வனப்பகுதிகள் கூடுமிடமான அடர்ந்த வனப்பகுதி சூழ்ந்த தமிழ்நாட்டின் எல்லையோரத்தில் அமைந்துள்ள ஆண்கள் மட்டுமே வருகை புரிந்து வணங்கி வரும் அதாவது ஸ்ரீஐயப்பா சன்னிதானத்திற்கு கூட பெண்கள் சென்று வருவர்.ஆனால் இங்கு குழந்தை முதல் வயதானவர் வரை பெண்களே  வருகை தராத கோவிலான கொங்கள்ளி ஸ்ரீமல்லிகார்ஜூனா கோவில் வளாகத்தில்   
     காமதேனு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் முகாமிட்டிருந்த கோவிலுக்கு சொந்தமான தங்கும் விடுதி.
                    சமூக சேவைக்காக  களப்பணி முகாமிட்டிருந்த காமதேனு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் இரண்டாவது நாளன்று இரவில் யானைகளையும்,காட்டெருமைகளையும்,கரடிகளையும் கண்டு ரசித்தனர். அதன் பிறகு  மூன்றாவது நாளான 29-12-2013 அன்று   அதிகாலை கொங்கள்ளி கோவில் முகாமில்...வனத்தில் வானரங்களுடன் உறவாடியபோது..
        
                        ''பணம் மட்டுமே முதன்மையாக-வஞ்சகம் மட்டுமே உயர்ந்த குணமாக-சுயநலம் மட்டுமே குறிக்கோளாக கொண்ட இன்றைய சமூக நிலை''- யில் அடர்ந்த காட்டுப்பகுதியான வனவிலங்குகள் மிகுதியான கொங்கள்ளி கோவில் வனப்பகுதியில் வானரம் ஒன்றின் மீது அன்பு காட்டி மனிதப்பண்புடன் அதற்கு பிஸ்கட் ஊட்டி மனமகிழ்ந்த காட்சி....இந்த நிலையில் அந்த மாணவரின்  உள்ளூணர்வு எத்தகைய சந்தோசப்பட்டு இருக்கும்?..   சிந்தியுங்க. உயிர்களிடம் அன்பு காட்டுங்க,உலக நன்மையை நினையுங்க.....

     காமதேனு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள், குரங்குகளிடம் நட்புணர்வுடன் உணவூட்டி உறவாடிய காட்சி...
  கொங்கள்ளி கோவில் வாயிலின் முன்பக்கம்,, முகாமிட்டிருந்த  மாணவர்களில் ஒரு பகுதியினர்....
      2013 டிசம்பர் 17 முதல் 23 வரை புலிகள் கணக்கெடுப்பிற்காக கொங்கள்ளி வனப்பகுதியில் தன்னார்வப்பணியாற்ற சென்றபோது '' நெகிழி என்னும் பிளாஸ்டிக் பொருட்களின் தீங்குகளை'' பற்றி விழிப்பு கொடுத்த தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஈரோடு மாவட்டத்தின் செயலாளர் திருமிகு.கார்த்திகேயன் அவர்களுக்கு நன்றி பாராட்டும் விதமாக.தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் பெயர் பலகையுடன் மாணவர்கள்.
          திருமிகு.கார்த்திகேயன் அவர்கள் மாவட்ட செயலாளர் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-ஈரோடு மாவட்டம் மற்றும் திரு.உமாசங்கர் அவர்கள் தலைமை ஆசிரியர் (ஓய்வு)  மாவட்ட முன்னாள் தலைவர் அவர்களுடன்.

       நெகிழி (பிளாஸ்டிக்) பொருட்களை தவிர்ப்போம்,சுற்றுச்சூழலை காப்போம் என மூன்றாவது நாளன்று திரு.V.பாலமுருகன் பொருளாளர் அவர்கள்,திரு.V.ஆனந்தன் அவர்கள்,வனத்துறையினர் மற்றும் காமதேனு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள்.அடர்ந்த வனப்பகுதியில் கொங்கள்ளி கோவில் முன்பு......


            ''நெகிழி (பிளாஸ்டிக்) பொருட்களை தவிர்ப்போம்,சுற்றுச்சூழலை காப்போம்'' என மூன்றாவது நாளான்று திரு.V.பாலமுருகன் பொருளாளர் அவர்கள்,திரு.V.ஆனந்தன் அவர்கள்,வனத்துறையினர் மற்றும் காமதேனு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள்.கொங்கள்ளி கோவில் முன்பு......
                 நெகிழி ( பிளாஸ்டிக்)  குப்பைகளை அகற்றும் களப்பணியில் மாணவர்களுடன் மாணவர்களாக திரு.V. பாலமுருகன் பொருளாளர் அவர்களும்,V.ஆனந்தன் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தாளவாடி அவர்களும்......




             களப்பணி என்ற சமூகப்பணியில் ''கருமமே கண்ணாக''  தன் கடமையில் கவனமாக பிளாஸ்டிக் குப்பைகளை சேகரிக்கும் கல்லூரி மாணவர்.(இதுவும் மனதை ஒருமுகப்படுத்தும் பயிற்சிதாங்க!)...........
திரு.C.பரமேஸ்வரன், மற்றும் கல்லூரி மாணவர்கள் நெகிழி குப்பைகளை அகற்றும் களப்பணியின் காட்சி......
          சமூக சேவை களப்பணி புரியும் மாணவர்களுக்கு குடிநீர் கொடுத்து பாராட்டுகிறார்கள் வனத்துறையை சேர்ந்த வனவர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள்



               வனவிலங்குகள் நிறைந்த அடர்ந்த காட்டுப்பகுதியில் நெகிழி குப்பைகளை அகற்றும் மாணவர்களில் ஒரு பகுதியினர்.

        வனவிலங்குகள் நிறைந்த அடர்ந்த காட்டுப்பகுதியில் நெகிழி குப்பைகளை அகற்றும் மாணவர்களில் ஒரு பகுதியினர்.
'' நெகிழி (PLASTIC) பொருட்களை தவிர்ப்போம்,சுற்றுச்சூழலை காப்போம்''
மூன்று நாட்கள் இயக்கத்தின் நிறைவு நாள் விழா.பனகஹள்ளி கிராமத்தில் நடத்த இருந்த கூட்டம் தவிர்க்க முடியாத காரணம் காரணமாக கொங்கள்ளி கோவிலிலேயே பாராட்டுக்கூட்டமாக நடத்தப்பட்டது.அதன் விவரம் கீழ்கண்டவாறு........

            வரவேற்புரை;சந்தோஷ் குமார்,காமதேனு கலை அறிவியல் கல்லூரி மாணவர் அனைவரையும் வரவேற்ற காட்சி.....
       கொங்கள்ளி கோவில் வளாகத்தில் நிறைவு நாள் பாராட்டுக் கூட்டத்தில் திரு.M.R.சுப்பண்ணன் அவர்கள்,தலைமையேற்று மாணவர்களை பாராட்டிய காட்சி....அருகில் திரு.P.யேசுதாசன் M.Com.,அவர்கள் திட்ட ஒருங்கிணைப்பாளர்-PALM 2 NGO தாளவாடி.மற்றும் திரு.R.மாதேஸ் M.A.B.Ed.,அவர்கள் .தலைமையாசிரியர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி-தாளவாடி,மற்றும் வனவர்,வனக்காப்பாளர்,,வேட்டை தடுப்புக்காவலர்கள்,கோவில் நிர்வாகிகள்,நுகர்வோர் பாதுகாப்பு  மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு, செயலாளர் மற்றும் பொருளாளர் மற்றும் உறுப்பினர்கள்,
                   திரு.C.பரமேஸ்வரன் -அவர்கள் நெகிழியின் தீங்குகளை விளக்கி இன்றைய கூட்டம்< ''நெகிழி(Plastic) பொருட்களை தவிர்ப்போம்,சுற்றுச்சூழலை காப்போம்'' இயக்கத்தின் நிறைவு நாள் கூட்டம் இல்லை!.இதுவே ஆரம்ப கூட்டம்.இனிமேல் வாய்ப்பு கிடைத்த போது அனைத்து கல்வி நிலையங்கள்,சமூக சேவை அமைப்புகள்,தன்னார்வலர்களிடம் பிரச்சாரம்,கருத்தரங்கம்,என பல்வேறு தளங்களில் விழிப்புணர்வு கொடுக்கப்படும் என்றார்.
     திருமிகு.R. மாதேஸ்,M.A.B.Ed., தலைமை ஆசிரியர்,அவர்கள் "நெகிழி (PLASTIC) பொருட்களை தவிர்ப்போம்,சுற்றுச்சூழலை காப்போம்" என விழிப்புணர்வு கொடுக்க ஆதரவு  அளித்த காட்சி....

           திருமிகு.P.யேசுதாசன்,M.Com.,திட்ட ஒருங்கிணைப்பாளர் PALM2NGO அவர்கள், திரு.C.பரமேஸ்வரன் -அவர்களது நோக்கமான சமூக நலனுக்கான, "நெகிழி (PLASTIC) பொருட்களை தவிர்ப்போம்,சுற்றுச்சூழலை காப்போம்" என விழிப்புணர்வு கொடுக்க PALM2NGO சமூக சேவை அமைப்பின் வாயிலாக ஆதரவு கொடுப்பதாக உறுதி அளித்த காட்சி....

             திருமிகு.P.யேசுதாசன் M.Com.,அவர்கள்,PALM2 NGO சமூக சேவை திட்ட ஒருங்கிணைப்பாளர் அவர்கள்  பாராட்டுரை நிகழ்த்திய காட்சி...
                       திரு.R.மாதேஸ்M.A.B.Ed., அவர்கள்.தலைமையாசிரியர்.வாழ்த்துரை வழங்கிய காட்சி.

              திருமிகு.துண்டையன் அவர்கள் வனவர்,பாராட்டுரை வழங்கிய காட்சி...
                              திருமிகு.M.R.சுப்பண்ணன் -தலைவர்-கெட்டவாடி கிராம வனக்குழு,
அவர்களுக்கு கல்லூரி மாணவன் ஒருவர் பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்திய காட்சி..

               திருமிகு.துண்டையன் ,வனவர்,அவர்களுக்கு
கல்லூரி மாணவன் ஒருவர் பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்திய காட்சி..

                       திருமிகு.R. மாதேஸ்,M.A.B.Ed.,தலைமை ஆசிரியர் அவர்களுக்கு கல்லூரி மாணவன் ஒருவர் பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்திய காட்சி.
              திருமிகு.P.யேசுதாசன்,M.Com.,திட்ட ஒருங்கிணைப்பாளர்,  PALM2 NGO அவர்களுக்கு  கல்லூரி மாணவன் ஒருவர் பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்திய காட்சி..

        திருமிகு.மல்லராஜ் கோவில் நிர்வாகம் எழுத்தர் அவர்களுக்கு கல்லூரி மாணவன் ஒருவர் பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்திய காட்சி..
                  நெகிழி (PLASTIC) பொருட்களை தவிர்ப்போம்,சுற்றுச்சூழலை காப்போம் ,விழிப்புணர்வு நோட்டீஸ் பிரச்சாரம் துவக்கி வைத்த காட்சி....
              திருமிகு. V.ஆனந்தன்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு அவர்கள் அனைவருக்கும் நன்றியுரை வழங்கிய காட்சி..

        

        கடந்த மூன்று நாட்களாக நெகிழி குப்பைகளை அகற்றும் களப்பணியில் கிடைத்த அனுபவங்களை கருத்துக்களாக குறிப்பெடுக்க அனைத்து மாணவர்களுக்கும் நோட்டு மற்றும் பேனா கொடுக்கப்பட்டது. கருத்துக்களையும் ,அனுபவங்களையும் குறிப்புக்களாக சேகரித்து தொகுத்து அறிக்கையாக தயாரித்து அரசுக்கு அனுப்ப முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
                 இந்த மூன்று நாட்கள் இயக்கப் பணியினை ஆரம்பமாக கொண்டு வருங்காலங்களில்  அடிக்கடி மாதந்தோறும்,வாரந்தோறும்,வருடந்தோறும்  வாய்ப்புள்ளபோது அனைத்து பள்ளிகளுக்கும்,கல்லூரிகளுக்கும்,பொதுமக்களுக்கும் அவ்வப்போது பிளாஸ்டிக் என்னும் நெகிழி பொருட்களின் தீமைகள் பற்றி விழிப்புணர்வு கொடுத்து பிளாஸ்டிக் தீங்குகளை உணரச்செய்வோம்.
                 நெகிழிப் பொருட்களை  ''தவிர்ப்போம்'', 
                 அல்லது ''குறைப்போம்''  
                அல்லது ''மீண்டும்பயன்படுத்துவோம்''
                அல்லது ''சேகரித்து மறுசுழற்சிக்குஉட்படுத்துவோம்'' -  
                                  என்ற தாரக மந்திரத்தை ஏற்று செயல்படுத்துவோம்.         என்று உறுதிமொழி ஏற்கப்பட்டது.


                  மளிகை மற்றும் டீக்கடை உரிமையாளர்,பாளையம்(பனகஹள்ளி) திரு.சாந்தப்பா அவர்களுடன்  மாணவர்கள்.இவரது உதவியும் பாராட்டத்தக்கது.கொங்கள்ளி கோவிலுக்கு செல்ல ஆரம்பத்தில்  வழிகாட்டியாக செயல்பட்டு உதவிய தன்னார்வலர்...

                 கொங்கள்ளி கோவில் வனப்பகுதியில் இரண்டு நாட்கள் முகாமிட்டு  பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் களப்பணி ஆற்றிவிட்டு மகிழ்வோடு மற்றும் மன நிறைவோடு சத்தியமங்கலம் திரும்ப பேருந்து வரவுக்காக காத்திருக்கும் கல்லூரி மாணவர்கள்-
இடம்; பனகஹள்ளி பேருந்து நிலையம்.மாலை 4-00மணி.
         பனகஹள்ளி பேருந்து நிலையத்தில் ஈரோடு செல்லும் அரசு பேருந்தில் மாலை 4-30மணிக்கு புறப்பட்டு இரவு 8-00மணிக்கு சத்தியமங்கலம் பேருந்து நிலையம் வந்து சேர்ந்தோம்..
YOU TUBE -இல்  (VIDEO) காணொளி காண kamadenu arts and science college sathyamangalam என முகவரி கொடுத்து, அல்லது paramesdriver.c என்று கொடுத்து  காணொளி காணலாம். 


 பரமேஸ்வரன் C
செயலாளர்,
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் 
சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு,
தொடர்புக்கு....#9585600733,  #9486708475,   #9442819031,  #9443021196.

No comments:

Post a Comment