Wednesday 25 September 2013

போதையின் அவமானங்கள் படங்கள்.

மரியாதைக்குரியவர்களே,
             வணக்கம். 
  ''நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்''-
                     தமிழ்நாடு.பதிவு எண்;-26 / 2013.
               வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.



                 













                 இன்றைய சமூகச்சூழலில் இளைய சமூகம் விளையாட்டாகவோ,பொழுதுபோக்காகவோ,நட்பு வட்டங்களாலோ,நாகரீகம் என்ற மாயை காரணமாகவோ,இயந்திரமயமான சிக்கல் நிறைந்த வாழ்க்கைச்சூழலில் தன்னம்பிக்கை இழந்து சரியான வழிகாட்டுதல் இல்லாமல் வாழ்க்கையில் வெறுப்பு,கேளிக்கை விருந்து,விருந்தோம்பல்,திருவிழா காலங்களில்,திருமண நிகழ்வுகளில்,புத்தாண்டு தின நிகழ்வுகளில்,பிறந்த நாள் கொண்டாட்டம்,துக்க அனுசரிப்பு,என எந்த ஒரு நிகழ்வாக இருப்பினும்புகை, மது, போதைப்பொருட்கள்,பயன்பாடு கலாச்சாரமாக ஏற்கப்பட்டு அதன் விளைவாக இந்த சமூகம் குறிப்பாக இளைஞர்கள், இளைஞிகள்,பள்ளி மாணவர்கள்,என நாளைய உலகை ஆளும் இளைஞர்கள் அதிக அளவு குடிபோதையில் ஈடுபாடு கண்டு அடிமைகளாக மாறி,உழைக்கும் வயதை,வாழும் வயதை பாழ்படுத்திக்கொண்டு,பல்வேறு வியாதிகளுக்கு ஆளாகி,குழந்தைப்பேறு குறைபாடு கண்டு சந்ததிகளையே  இழக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.எனவே இந்த சமூகத்திற்கு புகை,மது,போதைப்பொருட்களின் தீமைகளும்,ஆபத்துகளும் பற்றி விழிப்புணர்வு கொடுப்பதற்காக நம் தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் பிறந்த தினமான அக்டோபர் இரண்டாம் தேதியை இளைஞர்கள் தற்பாதுகாப்பு இயக்கமாக வருகிற அக்டோபர் மாதம் 01ம் தேதி முதல் 08ம் தேதி வரை ''போதைப்பொருட்கள் தவிர்ப்போம்-நம்மை நாமே காப்போம்'' என்ற மாபெரும் இயக்கத்தினை ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் உட்கோட்ட காவல்துறை .,கோபி கலை அறிவியல் கல்லூரி-கோபிசெட்டிபாளையம்.,காமதேனு கலை அறிவியல் கல்லூரி-சத்தியமங்கலம்.,நகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.(பதிவு எண்; 26/2013) இணைந்து நடத்துகின்றன.துவக்கவிழா,என துவங்கி பல்வேறு தளங்களில் ஏழு நாட்கள் பிரச்சாரம் செய்து பிறகு எட்டாம் நாள் நிறைவுவிழா கோபி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது.சிறப்புரை ஆற்ற நம்ம ஈரோடு கதிர் ஐயா 

      அவர்கள் ''வாழ்வும்,பொறுப்பும் நம்மிடமே'' என்னும் தலைப்பில் உரை நிகழ்த்துகிறார்.











                                                        
             
              மேலே உள்ள படம்  மூளையை பயன்படுத்த!, உணர்த்துகிறதுங்க!.

                ,இந்த உதாரணப்புகைப்படங்களை பார்வையிட்டதுமே தங்களுக்கு புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.
               

No comments:

Post a Comment