Sunday 12 July 2015

BEST SOCIAL ACTIVIST AWARD-2015

மரியாதைக்குரியவர்களே,
               வணக்கம். 2015ஜூலை12ந்தேதி இன்று  புன்செய்ப்புளியம்பட்டி நகராட்சி திருமண மண்டபத்தில் 
 புன்செய்ப்புளியம்பட்டி விடியல் சமூக நல இயக்கம் ,ஶ்ரீதேனு சில்க்ஸ்,அம்மா மெட்ரிக் பள்ளி,கல்வித்தந்தை K.V.காளியப்ப கவுண்டர் நற்பணி மன்றம்,SMH ரியல் எஸ்டேட்ஸ் கோவை&புன்செய்ப்புளியம்பட்டி இணைந்து 
 S.S.L.C. மற்றும்  PLUS TWO பொதுத் தேர்வில் ஈரோடு,கோபி,கோவை,திருப்பூர்,நீலகிரி கல்வி மாவட்டங்களில் மாநில அளவில்,மாவட்ட அளவில்,பள்ளியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ,மாணவியருக்கும்,நூறுசதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கும்,மாநில அளவில் சாதனை படைத்த இருபால் ஆசிரியர்களுக்கும்,பலதுறைகளில் சாதனை படைத்தவர்களுக்கும்
 விடியல் மாணவர் விருதுகள் 2014-2015
 ஶ்ரீதேனு சில்க்ஸ் முதல்வன் விருதுகள்,
 அம்மா மெட்ரிக் கலைமகள் விருதுகள்,
 கே.வி. காளியப்ப கவுண்டர் சாதனை விருதுகள்  
                வழங்கும் விழா  நடைபெற்றது.திருமதி.ராணி லக்ஷ்மி அன்பு அவர்கள்,செயலாளர்,அம்மா மெட்ரிக் பள்ளி,பன்செய்ப்புளியம்பட்டி அவர்கள் குத்துவிளக்கேற்றி வைத்து துவக்கி வைத்தார். 
திரு. எஸ்.ஜெயகாந்தன் ,செயலாளர்,விடியல் சமூக நல இயக்கம் அவர்கள்,வரவேற்புரை அளித்தார்.
திரு.R.பழனிச்சாமி அவர்கள்,,நிறுவனத்தலைவர்,S.R.S.குரூப்ஸ்,பு.புளியம்பட்டி அவர்கள் தலைமை ஏற்றார்.
முதன்மை விருந்தினராக டாக்டர்.மா.பத்மநாபன் அவர்கள்,இயக்குநர்,அண்ணா IASபயிற்சி மையம்,பாரதியார் பல்கலைக் கழகம்-கோவை அவர்களும்,
திரு.சண்முக சுந்தரம் அவர்கள், பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி மையத்தின் இயக்குநர் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.












2 comments:

  1. அய்யா தங்கள் பணி சிறப்பு தான்

    ஆனால் தாங்கள் ரியல் எஸ்டேட் நிறுவனத்துடன் இணைந்து நுகர்வோர் விழிப்புணர்வு ஏற்படுத்துவது எந்த வகையில் சரியாக இருக்கும் என புாியவில்லை.

    நுகர்வோர் இயக்கம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் இயக்கமே தவிர விளம்பர படுத்தும் இயக்கம் அல்ல நன்றி

    ReplyDelete
  2. மரியாதைக்குரிய ஐயா,
    நீலகிரி சிட்டிசன் கன்ஸ்யூமர் கிளப் பொறுப்பாளர் அவர்களே,வணக்கம்.
    தாங்கள் தயவு செய்து சற்று துல்லியமாக படித்தறியவும்.நாங்கள் ரியல் எஸ்டேட் நிறுவனத்துடன் இணைந்து நுகர்வோர் விழிப்புணர்வு நடத்தவே இல்லைங்களே? எங்களது பணியினை சிறப்பித்து புன்செய் புளியம்பட்டி விடியல் சமூக நல இயக்கம் பாராட்டு நல்கியது.அதைக்கூட பெறக்கூடாது என்பது சரியில்லைங்களே?அதைவிட முக்கியம் எங்களது இயக்கம் யாரிடமும் நிதி ஏதும் பெறுவதில்லைங்க.எங்க பணத்தையும்,நேரத்தையும்,உழைப்பை
    யும் செலவழித்து நுகர்வோர் விழிப்புணர்வு மற்றும் சாலை பாதுகாப்பு கல்வி வழங்கி வருகிறோம்.
    தற்போதுகூட மாணவர் நூலகம் எங்க தாளவாடி மலைப்பகுதியில் அமைத்து தாளவாடி வட்டத்திற்குட்பட்ட அனைத்து மலைக்கிராமங்களுக்கும் இளைய சமுகத்திற்கு நல்லதொரு வாசிப்புத்திறனை கொடுக்க வேண்டும்,பொது அறிவை வளர்க்க வேண்டும்,உயர் கல்வி வழிகாட்டுதல் நடத்த வேண்டும். என்பதில் தீவிரமாக உள்ளோம்.இதில் அரசியல்,சாதி,மதம்,மொழி,சுயநலனின்றி மனித சமூகத்திற்காக என மட்டுமே என்பதிலும் குறிக்கோளாக இருக்கிறோம்.
    அதற்காக யாரிடமும் சண்டை சச்சரவுக்கெல்லாம் செல்வதில்லைங்க.இதிலும் குறை ஏதும் இருப்பின் இன்னும் கடுமையாக விமர்சனம் செய்யுங்க.தங்களது முகவரி கொடுத்தால் நானே நேரில் வந்து எங்க பணி பற்றிய நிலையை விளக்குகிறேன்.
    நன்றியுடன்,
    C.பரமேஸ்வரன்,
    சத்தியமங்கலம்,
    ஈரோடு மாவட்டம்.

    ReplyDelete