Monday, 29 June 2015

ஹெல்மெட் விழிப்புணர்வு -பதினொன்றாவது நாள்

                                        நம்ம தாளவாடியில் இன்று...
மரியாதைக்குரியவர்களே,
            வணக்கம்.தலைக்கவசம் நமது உயிர்க்கவசம் என்பதை வலியுறுத்தி  பதினொன்றாவது நாளாக இன்று தாளவாடி வட்டாரத்தில் துண்டுப்பிரசுரங்கள் பொதுமக்களுக்கு கொடுத்து பிரச்சாரம் செய்யப்பட்டது.உதவித்தொடக்கக்கல்வி அலுவலகம்,தலைமை தபால் அலுவலகம்,நெடுஞ்சாலை துறை அலுவலகம்,ஊராட்சி மன்றம்,அரசு மருத்துவமனை,டெம்போ ஸ்டேண்டு,கடைகள்,இருசக்கர வாகன பணிமனைகள்,புரொபசனல் கூரியர் அலுவலகம்,சமூக சேவை சங்க அலுவலகம்,உட்பட பொதுமக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது.



 திரு.கல்வி மேற்பார்வையாளர் ஈரோடு அவர்கள் ,தாளவாடியில்
திருமதி.R.ராஜம்மா அவர்கள் உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் தலைமையில்  தலைமையாசிரியர்கள் கூட்டத்தில் தலைக்கவசம் அணிவது பற்றிய விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது.அனைவருக்கும் துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன.
 திரு.C. பரமேஸ்வரன்,அவர்கள் (செயலாளர்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்) தலைமை ஆசிரியப்பெருமக்கள் முன்னிலையில் விழிப்புரை வழங்கியபோது....
மருத்துவர்.பாலசுப்ரமணியம் அவர்கள் அரசு மருத்துவமனை,தாளவாடி தலைக்கவசம் அணிவோம் பற்றிய துண்டறிக்கையினை பார்வையிட்டபோது....




 ஊராட்சி மன்றம் தாளவாடி
  டெம்போ ஸ்டேண்டு ஓட்டுநர்களிடம் தாளவாடி.
 நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் தாளவாடியில்
  இரு சக்கர வாகன பணிமனை தாளவாடி.

புரொபசனல் கூரியர் தாளவாடியில்...



Saturday, 27 June 2015

ஹெல்மெட் விழிப்புணர்வு பிரச்சாரம் ஒன்பதாவது நாள் தொடர்ச்சி...


மரியாதைக்குரியவர்களே,
                   வணக்கம்.இன்று   தலைக்கவசம் உயிர்க்கவசம் என ஒன்பதாவது நாள் தொடர்ச்சியாக  துண்டுப்பிரசுரங்கள் வழங்கி பிரச்சாரம் செய்யப்பட்டது.இன்று மதியம் நுகர்வோர் நல்வாழ்வு மற்றும் மக்கள் பாதுகாப்பு சங்கத்துடன் இணைந்து  பண்ணாரியில் உள்ள  மோட்டார் வாகன சோதனைச்சாவடி,காவல்துறை சோதனைச்சாவடி,வனத்துறை சோதனைச்சாவடி,வணிகவரித்துறை சோதனைச்சாவடிகளில் துண்டுப்பிரசுரங்கள் வழங்கி அந்த வழியாக பயணிக்கும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கும்,பயணிகளுக்கும் துண்டு பிரசுரங்களை கொடுத்து விழிப்புரை கொடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.மற்றும் பண்ணாரியில் இருந்த  பக்தகோடிகளுக்கும்  துண்டுப்பிரசுரங்கள் வழங்கி விழிப்புரை செய்யப்பட்டது.
          Dr.P.வெங்கடாச்சலம்,B.A.,M(ACU).,M(Sidha).,அவர்கள்(கோபி செட்டிபாளையம்)  நுகர்வோர் நல்வாழ்வு மற்றும் மக்கள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர்
               அவர்களும் 'ஹெல்மெட் விழிப்புணர்வு' பிரச்சாரத்தில் தன்னார்வத்துடன் பங்கேற்று  துண்டுப்பிரசுரங்கள் வழங்கி விழிப்புரை செய்தார்.

 ஹெல்மெட் விழிப்புணர்வு-மோட்டார் வாகன சோதனைச்சாவடி - பண்ணாரி (சத்தியமங்கலம்)
 ஹெல்மெட் விழிப்புணர்வு-  வனத்துறை சோதனைச்சாவடி - பண்ணாரி (சத்தியமங்கலம்)


      ஹெல்மெட் விழிப்புணர்வு- காவல்துறை சோதனைச்சாவடி - பண்ணாரி (சத்தியமங்கலம்) 


 ஹெல்மெட் விழிப்புணர்வு- வணிகவரித்துறை சோதனைச்சாவடி - பண்ணாரி (சத்தியமங்கலம்)

 

ஹெல்மெட் விழிப்புணர்வு பிரச்சாரம்!,ஒன்பதாவது நாள்.-காலை......


  மரியாதைக்குரியவர்களே,
                   வணக்கம். தலைக்கவசம் நம் உயிர் கவசம் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் பிரச்சாரம் இன்று 27.06.2015 காலை ஏழு மணியளவில் ஒன்பதாவது நாளாக புன்செய் புளியம்பட்டியில் உள்ள...பேருந்து நிலையத்தில் உள்ள அம்மா குடிநீர் விற்பனையகம்,TNSTC நேரக்காப்பாளர் அலுவலகம்,ஆட்டோ நிறுத்தத்திலும்,பயணிகளுக்கும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கும் துண்டுபிரசுரம் கொடுத்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது.மேலும் புன்செய் புளியம்பட்டியிலுள்ள ஶ்ரீபாலாஜி இரு சக்கர வாகன நிறுத்துமிடம்,ஶ்ரீகணபதி இரு சக்கர வாகன நிறுத்துமிடம், ஶ்ரீஅம்மன் இரு சக்கர வாகன நிறுத்துமிடம்,P.K.திம்மைய கவுடர் இரு சக்கர வாகன நிறுத்துமிடம்,ராஜா இரு சக்கர வாகன நிறுத்துமிடம்,உட்பட அனைத்து இரு சக்கர வாகனங்கள் நிறுத்தங்களிலும் துண்டுப்பிரசுரங்களை கொடுத்து அங்கு வரும் அனைத்து இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கும் துண்டுப் பிரசுரம் வழங்கி விழிப்புரை தருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. 



 ஹெல்மெட் விழிப்புணர்வு பிரச்சாரம்... பாலாஜி டூ வீலர் ஸ்டேண்டு, புன்செய் புளியம்பட்டி.


ஹெல்மெட் விழிப்புணர்வு பிரச்சாரம்  
               ஶ்ரீகணபதி டூ வீலர் ஸ்டேண்டு, புன்செய் புளியம்பட்டி.



ஹெல்மெட் விழிப்புணர்வு பிரச்சாரம்
   P.K.திம்மைய கவுடர் டூ வீலர் ஸ்டேண்டு, புன்செய் புளியம்பட்டி.



ஹெல்மெட் விழிப்புணர்வு பிரச்சாரம்
                 ஶ்ரீஅம்மன் சைக்கிள் ஸ்டேண்டு, புன்செய் புளியம்பட்டி.

  இன்றைய சமூகப்பணி இன்னும் தொடரும்......
         என அன்பன் C.பரமேஸ்வரன்.சத்தியமங்கலம். 9585600733

Friday, 26 June 2015

ஹெல்மெட் விழிப்புணர்வு பிரச்சாரம்...எட்டாவது நாள்.

அரசு உத்தரவை கடைப்பிடிப்போம்,
                          தலைக்கவசம் அணிந்து நமது உயிர் காப்போம்,
 மரியாதைக்குரியவர்களே,
                         வணக்கம். எட்டாவது நாளான 2015ஜூன் 26ந் தேதி இன்று
 சத்தியமங்கலம் இருசக்கரவாகனங்கள் நிறுத்துமிடங்களில் இரு சக்கர வாகன ஓட்டிகள் பாதுகாப்புக்கு ISI முத்திரை பெற்ற தரமான தலைக்கவசம் அணியுமாறு விழிப்புணர்வு பிரச்சார  துண்டு பிரசுரங்கள் கொடுத்து  இருசக்கர வாகனங்களை நிறுத்த வரும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டன.




 ஶ்ரீஅபர்ணா பைக் ஸ்டேண்டு சத்தியமங்கலம்.



 பி.வி. லாட்ஜ் பைக் ஸ்டேண்டு சத்தியமங்கலம்.


 ஶ்ரீமாருதி பைக் ஸ்டேண்டு , சத்தியமங்கலம்.


வி.எஸ்.ஆர். பைக் ஸ்டேண்டு, சத்தியமங்கலம்.


நகராட்சி பேருந்து நிலையம்.பைக் ஸ்டேண்டு, சத்தியமங்கலம்.


ஶ்ரீபண்ணாரி அம்மன் பைக் ஸ்டேண்டு, சத்தியமங்கலம்.

CONSUMER WELFARE AND PUBLIC PROTECTION ASSOCIATION

 நுகர்வோர் நலன் மற்றும் 
                                     மக்கள் பாதுகாப்பு சங்கம்                                                  
                                               கோபிசெட்டிபாளையம்.(பதிவு எண்;1/2006
மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.
இன்று பவானிசாகர் ஓட்டுநர் பயிற்சி நிலையத்தில் கோபி நுகர்வோர் நலன் மற்றும் மக்கள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில பொது செயலாளர் திருமிகு.Dr.P.வெங்கடாசலம் B.A., M(Dip)Sidha., M.D(Acu)

 அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.ஐயா அவர்களுடன்
  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்,ஈரோடு மண்டலம்,தாளவாடி கிளை ஓட்டுநர் திரு. T.சரவணன் அவர்கள் உரை நிகழ்த்திய காட்சி..






Thursday, 25 June 2015

WEAR HELMET AWARNESS -தலைக்கவசம் அணிவோம் நம் உயிர் காப்போம்.

 தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகனத்தில் பயணிப்போம்....

மரியாதைக்குரியவர்களே,
                                  வணக்கம்.
 ஹெல்மெட் விழிப்புணர்வு நோட்டீஸ் விநியோகம்..இரு சக்கர வாகனத்தில் உடன் உதவி செய்த Er.சற்குணன் அவரது இரு சக்கர வாகனத்துடன் கெம்ப நாயக்கன் பாளையம் பா சுந்தரம் செட்டியார் நினைவு அரசு மேல்நிலைப் பள்ளியில்........


               இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து பயணிப்போம் என விழிப்புணர்வு நோட்டீஸ் பத்தாயிரம் எண்ணிக்கையில் விநியோகம்.




         முதல் நாளான ஜூன் 19 ந்தேதி அன்று தாளவாடி மற்றும் அதன்சுற்றுவட்டாரங்களில் பொதுமக்களுக்கும் அரசு அலுவலர்களுக்கும்  கொடுத்து பிரச்சாரம் செய்யப்பட்டது. 

                 இரண்டாம் நாளான ஜூன் 20 ந்தேதி சென்னை கலைமகள் நகர்,ஈக்காட்டுத்தாங்கல்,கோயம்பேடு பேருந்து நிலையம்,புதிய தலைமுறை தொலைக்காட்சி நிலைய வளாகம்,உட்பட பல இடங்களிலும் பேருந்துகளிலும்  இரண்டாயிரம் நோட்டீஸ்கள் விநியோகம் செய்யப்பட்டன.

                    மூன்றாம் நாளான ஜூன் 21 ந்தேதி சத்தியமங்கலம் P.V.லாட்ஜ் கலையரங்கத்தில் நடைபெற்ற அருந்ததிய இன மாணவ,மாணவியருக்கான பாராட்டுவிழாவில் ஐநூறு நோட்டீஸ்களுக்கும் அதிகமாக கொடுத்து விழிப்புரை செய்யப்பட்டது. 
             
          நான்காம் நாளான ஜூன் 22 ந் தேதி தாளவாடிகாவல்நிலையம் உட்பட கோடிபுரம்,பனகஹள்ளி ,திகனாரை,அருள்வாடி உட்பட பல இடங்களில் நோட்டீஸ்கள் வழங்கி விழிப்புரை செய்யப்பட்டன.

              ஐந்தாம் நாளான ஜூன்23 ந் தேதி ஆசனூர் காவல்நிலையம் உட்பட தேவர்நத்தம்,கோட்டாடை,அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி உட்பட பல இடங்களில் நோட்டீஸ் வழங்கி விழிப்புரை செய்யப்பட்டன.

                    ஆறாம் நாளான ஜூன்24ந் தேதி சத்தியமங்கலம் பேருந்து நிலையம்,அரசு போக்குவரத்துக்கழகத்தின் அலுவலகம்,போக்குவரத்துக்காவல்நிலையம்,தாளவாடி பேருந்து நிலையம்,அரசு போக்குவரத்துக்கழகம் தாளவாடி கிளை  உட்பட பல இடங்களில் நோட்டீஸ் வழங்கி விழிப்புரை செய்யப்பட்டன. 

                      ஏழாம் நாளானஜூன் 25ந் தேதி சத்தியமங்கலம் காமதேனு கலை அறிவியல் கல்லூரி,பண்ணாரி அம்மன் பொறியியல் கல்லூரி,அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,மாடல் பள்ளி,தொடக்கக்கல்வி உதவி அலுவலர் அலுவலகம்,ஜான் டி பிரட்டோ பள்ளி ,மற்றும் மகளிர் பள்ளி,அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி,நகராட்சி உயர்நிலை பள்ளி,லிட்டில் பிளவர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,எஸ்ஆர்என் மெட்ரிக் பள்ளி சத்தியமங்கலம்  நூலகம்,பெரிய கொடிவேரி நூலகம்,புனித பிரான்சிஸ் சேவியர் மேல்நிலைப் பள்ளி கொடிவேரி,துவக்கப்பள்ளி கொடிவேரி,DGபுதூர் அரசு உயர்நிலைப்பள்ளி,பாரதி மெட்ரிக் பள்ளி,பா.சுந்தரம் செட்டியார் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி,கெம்பநாயக்கன் பாளையம் என அனைத்து பள்ளிகளுக்கும் இருசக்கர வாகனத்தில் சென்று நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன.