Monday, 28 July 2014

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
பகிர்ந்த திரு.அங்கமுத்து கோவிந்தராஜு அவர்களுக்கு நன்றிங்க.

             நீதிமன்றங்கள் அவமதிப்புச் சட்டம் 1971-ன் பிரிவு 3. கள்ளங்கபடமற்ற / அறியாமை வெளியீடு மற்றும் அவமதிப்பு அல்லாத விடயத்தை / பொருட்பாட்டின் பகிர்மானம் -

1) நபரொருவர், ஏதேனும் உரிமையியல் அல்லது குற்றவியல் வழக்கு நடவடிக்கை நிலுவை நேரத்தின் போது, அதன் தொடர்பில் நீதியியல் போக்கினில் தலையீடு / குறுக்கீடு அல்லது தலையிடுதலை நோக்கி அல்லது தடங்கல் அல்லது டங்கலை நோக்கி செல்கிற ஏதேனும் விடயத்தை வெளியிட்டார்    (சொற்களால் அல்லது பேச்சால் அல்லது எழுத்தால் அல்லது சைகைகளினால் அல்லது காண்தகு உருவமைப்பினால் அல்லது பிறவகையில்) என்ற காரணத்தின் பேரில், அந்த சமயத்தில் வழக்கு நடவடிக்கைகள் நிலுவையில் இருப்பது அவர் அறிந்திருக்க நியாயமான தகுந்த காரணங்கள் இல்லையெனில், அவர் நீதிமன்ற அவமதிப்பு குற்றமிழைத்தவராக மாட்டார்.

2) இந்த சட்டத்தில் அல்லது நிகழுறு காலத்தில் செல்லாற்றலில் உள்ள வேறு ஏதேனும் சட்டத்தில் அடங்கியுள்ளதற்கு முரணாக / மாறாக இருப்பினும், உட்பிரிவு (1)-ல் குறிப்பிட்டுள்ளவாறு, வெளியீட்டின் போது நிலுவையில் இல்லாத ஏதேனும் உரிமையியல் அல்லது குற்றவியல் வழக்கு நடவடிக்கை தொடர்பாக அத்தகைய விடயம் வெளியிடுவது நீதிமன்ற அவமதிப்பு அமைத்துருவாக்குவதாகக் கருதப்படுதல் கூடாது

3) உட்பிரிவு (1)-ல் குறிப்பிட்டுள்ளவாறு, நபரொருவர் அத்தகைய ஏதேனும் விடயம் அடங்கியுள்ள வெளியீட்டினை பகிர்மானம் செய்தார் என்ற காரணத்தின் பேரில், பகிர்மானம் செய்யப்படும் நேரத்தில் / சமயத்தில் மேற்சொன்னவாறு ஏதேனும் அத்தகைய விடயம் அதில் அடங்கியுள்ளதாக அல்லது அடங்கியிருப்பதாக அவர் நம்புவதற்கு / அறிந்திருக்க நியாயமான தகுந்த காரணங்கள் இல்லையெனில், அவர் நீதிமன்ற குற்றமிழைத்தவராக மாட்டார்.

No comments:

Post a Comment